Die heart Fan of @TVKVIJAYHQ
Unofficial Fan Account | Vijay & TVK Updates | Not Affiliated with Vijay or TVK
சமூக ஊடக அணி வேலூர் மண்டல இணை ஒருங்கிணைப்பாளர்.
இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த தோழர்களான மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் அழைத்து அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்ட மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள், அவை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (23.11.2026) தலைமைச் செயலகத்தில், புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட மாநில தலைமை தகவல் ஆணையர் முனைவர் ச.நடராஜன், இ.ஆ.ப. (ஓய்வு) மற்றும் மாநில தகவல் ஆணையர்கள் செல்வி எஸ். மகாலட்சுமி, முனைவர் டி.கே. ஷபீர், திருமதி சி.பி. மீனா, திரு.பி. மகாலிங்கம் ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by the newly appointed State Chief Information Commissioner Dr. S. Natarajan, I.A.S (Retd.), and State Information Commissioners Ms.S.Mahalakshmi, Dr. T. K. Shabeer, Tmt. C. B. Meena and Thiru. P. Mahalingam, who received his greetings, at the Secretariat today (23.11.2026).
#CMJosephVijay
#BREAKING State Public Prosecutor R. John Sathyan tells Justice V. Lakshminarayanan of #MadrasHighCourt that a woman IAS officer had not lodged any complaint either to the Chief Secretary or any other authority with respect to alleged misbehaviour by Kallakurichi TVK MLA C. Arul Vignesh. Makes the submission during the hearing of a writ petition (criminal) filed by advocate R. Thrishuli seeking a direction to the Tamil Nadu police to register a case against the MLA on the basis of the petitioner's complaint. How do you know that the MLA had sent obscene messages to the woman IAS officer? What is the tangible material available with you? You may act on newspaper reports, I cannot. Do you think a IAS officer cannot protect herself? If the Collector has not lodged a complaint, how do you expect the police to take action? the judge asked the petitioner's counsel. Justice V. Lakshminarayanan thereafter requested the SPP to recheck once again with the woman IAS officer as well as the Chief Secretary and inform the court by tomorrow. Hearing adjourned to tomorrow.
@THChennai@the_hindu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் வாழ்த்துக்களுடன்,
இன்று (23.11.2026) திங்கட்கிழமை,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.@BussyAnand MLA அவர்கள், காஞ்சிபுரம், ஒரகடத்தில் உள்ள PSP மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2026–27 ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்காக நடைபெற்ற White Coat Ceremony விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.!
மருத்துவப் பணியில் அடியெடுத்து வைக்கும் முதலாமாண்டு மாணவர்கள் அனைவருக்கும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.J.முனிரத்தினம் அவர்கள், மருத்துவக் கல்லூரியின் நிறுவனர் தலைவர் திரு.P.சுப்பிரமணி அவர்கள், துணைத் தலைவர் திரு.S.பிரியதர்ஷன் அவர்கள் மற்றும் கல்லூரியின் முதல்வர் டாக்டர் S.ஸ்ரீனிவாசன் அவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
🚩 பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் வளர்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று பெரம்பூர் தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.
மேலும், 34, 35, 36, 37 மற்றும் 44-வது வார்டுகளில் உள்ள அங்கன்வாடி மையங்களைப் பழுதுபார்த்து மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அதுமட்டுமின்றி, தொகுதியில் உள்ள 25 அங்கன்வாடி மையங்களுக்கும் தேவையான அடிப்படை உபகரணங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் திட்டமிட்டு, அதற்கான அடுத்தகட்டப் பணிகளையும் தயார்படுத்தி வருகிறோம்.
இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
குழந்தைகளின் மகிழ்ச்சி, தாய்மார்களின் நலன், அங்கன்வாடிகளின் மேம்பாடு என அனைத்திலும் பெரம்பூரின் வளர்ச்சியை முன்னெடுப்பதே எங்களின் நோக்கம்!
வளர்ச்சி என்பது வெறும் அறிவிப்பில் அல்ல; மக்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றத்தில்தான் இருக்கிறது!
பெரம்பூர் வளர்கிறது… பெரம்பூர் முன்னேறுகிறது! ❤️
#Perambur #DevelopmentWorks #WardDevelopment #ICDS #Anganwadi #PublicWelfare #PeopleFirst #TamilNadu
பெரியார் பெயரையும் அவரின் கொள்கைகளையும் பெயரளவில் மட்டுமே வைத்துக்கொண்டதோடு, அவர் பெயரை வைத்தே கொள்ளை அடித்தது யார்?.
பெரியாரின் கொள்கைகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொண்டே, வீட்டுக்குள் யாருக்கும் தெரியாமல் புகைமண்டலப் பூசைகளை நடத்திவிட்டு, வெளியில் கடவுள் மறுப்பாளர் என்றும் பகுத்தறிவாளர் என்றும் பொய் வேடம் போடுவது யார்?.
பெரியாரை அந்தக் காலத்திலேயே சட்டமன்றத்திலேயே கிண்டலாகக் கேலியாகப் பேசியது யார்?.
சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சொந்தக்காரர் என்ற போலி வேடம் ஒரு பக்கம், அதற்கு எதிராக இன்னொரு வேடம் மறுபக்கம் என்று பலவேடங்கள் போட்டு ஏமாற்றுவது யார்?.
அறிவாசான் தந்தை பெரியார் பெயரில் அறிவுலகம் அமைத்ததாக மார்தட்டிக்கொண்டே அதை ஊழல் உலகமாக மாற்றிய உத்தமர்கள் யார்?.
பெரியாரின் பெயரையும் கொள்கைகளையும் பேருக்குச் சொல்லிக்கொண்டே, ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க, பெரியார் கொள்கைகளுக்கு எதிராக யாரிடமோ மறைமுகமாக மண்டியிட்டு சரணடைந்து கிடப்பவர்கள் யார்?.
இதுவரை மூன்று மாதம், ஆறு மாதம் என்று ஜோதிடம் கூறி கல்யாண வீடுகளில் ஒப்பாரி வைத்தவர்கள் யார்?.
இப்போது மாசம்-நாசம் என்று கல்யாண வீடுகளை இடம் மாற்றித் தற்போது பெரியார் மேடைகளிலும் ஒப்பாரி கோஷம் போட ஆரம்பித்துள்ளது யார்?
இப்படிப்பட்டவர்கள்தான் பெரியாரின் பெயருக்குப் பிடித்த பிணி.
இப்படிப்பட்டவர்கள்தான் பெரியாரின் கொள்கைகளுக்குப் பிடித்த சனி.
இந்தப் பிணியும் சனியும் இனியும் எத்தனை வேடங்கள் போட்டு எத்தனை ஒப்பாரிகளை இடம் பொருள் ஏவல் அறியாமல் எங்கே வைத்தாலும் மக்கள் மன்றத்தில் அவர்களின் வேடம் கலையப் போவதும் சாயம் வெளுக்கப் போவதும் உறுதி.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் - முசிறி நெடுஞ்சாலையில் கொத்தூர்பட்டி நால்ரோடு அருகில் இன்று (22.11.2026) மாலை கார் மரத்தில் மோதிய விபத்தில், அக்காரில் பயணம் செய்த தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, மகாராஜபுரத்தைச் சேர்ந்த திரு.ஆ.சக்திவேல் (வயது 45) உள்ளிட்ட ஐந்து நபர்கள் நிகழ்விடத்திலேயும், படுகாயங்களுடன் முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மூன்று நபர்களும் என மொத்தம் எட்டு நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு நபர்களுக்கு உயரிய சிகிச்சை வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.