🙏 அருள்மிகு தேசமாரியம்மன் ஆலயத்தில் சுவாமி தரிசனம் 🌺
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
கழகத் தலைவர் உயர்திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படியும்,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்
கழகப் பொதுச் செயலாளர் திரு. N. ஆனந்த், MLA அவர்களின் அறிவுறுத்தலின்படியும்,
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி, 86-வது வட்டம், உழைப்பாளர் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு தேசமாரியம்மன் ஆலயத்தின் 33-ஆம் ஆண்டு ஆடி மாத கூழ் வார்த்தல் நிகழ்வில் கலந்து கொண்டு, அம்மனை தரிசித்து அருளாசி பெற்றேன்.
பக்தர்களின் பக்தியும், பொதுமக்களின் ஒற்றுமையும் நிறைந்த இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சி கிடைக்க அம்மனை மனமாரப் பிரார்த்தித்தேன். 🙏🌺
ஓம் சக்தி! பராசக்தி! 🙏❤️
அன்புடன்,
க. பாலமுருகன், MLA
அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்
தொகுதி மக்களின் தேவைகளுக்காக தொடர்ந்து செயல்படுகிறோம்!
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் அடிப்படைத் தேவைகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் குறித்து இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு சபாநாயகர் மற்றும் மாண்புமிகு அமைச்சர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினேன்.
அம்பத்தூர் தொகுதி மக்களின் தேவைகளை உரிய முறையில் எடுத்துரைத்து, அவற்றிற்கு விரைவான தீர்வு கிடைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தினேன்.
மக்களின் தேவைகள் எதுவாக இருந்தாலும், அவற்றை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பதே எனது முதன்மையான கடமை.
மக்களோடு... மக்களுக்காக... என்றும் அம்பத்தூரின் வளர்ச்சிப் பாதையில்! ❤️
க. பாலமுருகன், MLA
அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்
சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர்
இன்று எனது பிறந்தநாளில், நமது அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் G. பாலமுருகன் அண்ணன் அவர்களை சந்தித்து, அன்பான வாழ்த்துகளையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டேன். மனமார்ந்த நன்றிகள் அண்ணா! 🙏❤️ @Ambatturbalatvk
#தளபதி_விஜய்_விலையில்லா_விருந்தகம் 🍽️❤️
இன்று (10.08.2026 - திங்கட்கிழமை),
மாவட்ட வழக்கறிஞர் அணி சார்ந்த பாசத்திற்குரிய அப்துல் ரகுமான் அவர்களின் மகனும், அன்பிற்குரிய அப்துல் அஜீஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,
நமது தளபதி விஜய் விலையில்லா விருந்தகத்தில், உழைக்கும் ஏழை எளிய மக்கள், ஆதரவற்றோர் மற்றும் உணவுத் தேவைப்படும் பொதுமக்களுக்கு அன்புடனும் மனிதநேயத்துடனும் காலை உணவு வழங்கப்பட்டது.
தங்களின் பிறந்தநாள் மகிழ்ச்சியை, பசியாற்றும் உயரிய அறப்பணியாக மாற்றிய அப்துல் அஜீஸ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும், இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். 💐🎂
நல்ல உடல்நலம், நீண்ட ஆயுள், கல்வியில் சிறப்பு, வாழ்க்கையில் அனைத்து வளங்களும் பெற்று, மகிழ்ச்சியுடன் சிறப்பாக வாழ மனமார வாழ்த்துகிறோம்.
பசியாற்றுவோம்... அன்பைப் பகிர்வோம்... மனிதநேயத்தை வளர்ப்போம்! ❤️
#எல்லா_புகழும்_தளபதிக்கே 👑❤️
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் நல்லாசியுடன், வரலாற்றுச் சிறப்புமிக்க 2026 தமிழக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு மனமார்ந்த வாழ்த்துகள். 💐
தமிழகம் வளரட்டும்… மக்கள் வாழ்வு உயரட்டும்… இந்த பட்ஜெட்டின் சாதனைகளை வரலாறு பேசட்டும்! ❤️
தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் எதிர்காலத்திற்கும் புதிய பாதை அமைக்கும் நிதிநிலை அறிக்கையை வழங்கும் மாண்புமிகு நிதியமைச்சர் @MarieWilson_TVK அவர்களுக்கு அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மக்களின் சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களுக்கான பட்ஜெட்!
தமிழகத்தின் வளர்ச்சிக்கான பட்ஜெட்!
வரலாறு படைக்கும் விஜய் அரசு! 👑
மாற்றத்தை நோக்கி... மக்களின் நலனே முதன்மை! ❤️
மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் Dr. அருண்ராஜ் @arunraajkg அவர்களை நேரில் சந்தித்து, அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மருத்துவ வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான கோரிக்கைகள் மற்றும் தேவைகள் அடங்கிய ஆவணங்களை சமர்ப்பித்தேன்.
அம்பத்தூர் மக்களுக்கு தரமான மருத்துவ வசதிகள் எளிதாகவும் விரைவாகவும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், தொகுதியின் சுகாதாரத் தேவைகள் குறித்து அமைச்சர் அவர்களிடம் எடுத்துரைத்தேன்.
மக்களின் ஆரோக்கியம் காப்போம்...
மருத்துவ வசதிகளை மேம்படுத்துவோம்...
மக்கள் நலனையே முதன்மையாகக் கொண்டு தொடர்ந்து பயணிப்போம்! ❤️
அன்புடன்,
க. பாலமுருகன், MLA
அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்
சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர்
மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் 💐
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் நல்லாசியுடனும், கழகப் பொதுச் செயலாளரும் மாண்புமிகு அமைச்சருமான திரு. N. ஆனந்த் அவர்களின் வாழ்த்துகளுடனும்,
இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி C. விஜயலட்சுமி அவர்களை நேரில் சந்தித்து, எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன். 💐
மக்கள் நலப் பணிகளில் தங்களின் சேவை மேலும் சிறக்கவும், நல்ல உடல்நலம், நீண்ட ஆயுள், மகிழ்ச்சி மற்றும் அனைத்து வளங்களும் பெற்று, பொதுவாழ்வில் மேலும் பல உயரங்களை அடைந்து தொடர்ந்து சிறப்புடன் மக்கள் பணியாற்றவும் மனமார வாழ்த்துகிறேன்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 🎂💐
அன்புடன்,
க. பாலமுருகன், MLA
அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்
சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர்
#தளபதி_விஜய்_விலையில்லா_விருந்தகம் 🍽️❤️
இன்று (07.08.2026 - வெள்ளிக்கிழமை),
90-வது வட்ட கழகச் செயலாளர் பாசத்திற்குரிய P. பாலாஜி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,
நமது தளபதி விஜய் விலையில்லா விருந்தகத்தில், உழைக்கும் ஏழை எளிய மக்கள், ஆதரவற்றோர் மற்றும் உணவுத் தேவைப்படும் பொதுமக்களுக்கு அன்புடனும் மனிதநேயத்துடனும் காலை உணவு வழங்கப்பட்டது.
கடந்த 8 ஆண்டுகளாக இடையறாது நடைபெற்று வரும் இந்த விலையில்லா விருந்தகம், பசியைப் போக்குவதோடு மட்டுமல்லாமல், மனிதநேயம், அன்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை மக்களிடையே விதைத்து வரும் உயரிய அறப்பணியாக திகழ்கின்றது.
தங்களின் பிறந்தநாளை, ஏழை எளிய மக்களின் பசியாற்றும் சேவையுடன் அர்த்தமுள்ள நாளாக மாற்றிய P. பாலாஜி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும், இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இறைவன் அருளால் நல்ல உடல்நலம், நீண்ட ஆயுள், அனைத்து வளங்களும் பெற்று மக்கள் சேவையில் தொடர்ந்து சிறந்து விளங்க வாழ்த்துகள். 💐🎂
"மக்களின் புன்னகையே நமது வெற்றி; பசியாற்றும் சேவையே நமது பெருமை." ❤️
#எல்லா_புகழும்_தளபதிக்கே 👑❤️
#தளபதி_விஜய்_விலையில்லா_விருந்தகம் 🍽️❤️
இன்று (08.08.2026 - சனிக்கிழமை),
90-வது வட்ட கழகச் செயலாளர் பாசத்திற்குரிய P. பாலாஜி அவர்களின் மனைவியும், அன்பிற்குரிய பூங்குழலி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,
நமது தளபதி விஜய் விலையில்லா விருந்தகத்தில், உழைக்கும் ஏழை எளிய மக்கள், ஆதரவற்றோர் மற்றும் உணவுத் தேவைப்படும் பொதுமக்களுக்கு அன்புடனும் மனிதநேயத்துடனும் காலை உணவு வழங்கப்பட்டது.
தங்களின் பிறந்தநாளை, பசியாற்றும் உயரிய மனிதநேயப் பணியுடன் கொண்டாடிய பூங்குழலி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும், இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். 💐🎂
நல்ல உடல்நலம், நீண்ட ஆயுள், குடும்ப மகிழ்ச்சி மற்றும் அனைத்து வளங்களும் பெற்று சிறப்புடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
பசியாற்றுவோம்... அன்பைப் பகிர்வோம்... மனிதநேயத்தை வளர்ப்போம்! ❤️
#எல்லா_புகழும்_தளபதிக்கே 👑❤️
🪪 குடும்ப அட்டை eKYC பதிவு – சிறப்பு முகாம்! ❤️
அம்பத்தூர் தொகுதி பொதுமக்களின் வசதிக்காக, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறையின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களின் கைரேகை (eKYC) பதிவினை மேற்கொள்ள சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
📅 ஆகஸ்ட் 08 & 09
⏰ காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
📍 தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில்
குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் eKYC பதிவை மேற்கொண்டு, அரசின் உணவு மற்றும் நலத்திட்டப் பயன்பாடுகள் தடையின்றி கிடைக்க ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
“எந்தத் தாமதமும் இன்றி... மக்களின் தேவைகளுக்கு உடனடி தீர்வு!”
அம்பத்தூர் மக்களின் நலனே எங்களின் முதன்மை! ❤️
G. பாலமுருகன், MLA
அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்
சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர்
⚠️ பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவு செய்யும்போது கவனம்!
தமிழகத்தில் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் பெயரை பதிவு செய்யும்போது, பெயரின் முதல் எழுத்து (Initial) மற்றும் பெயர் வரிசையை சரியாகப் பதிவு செய்வது மிகவும் முக்கியம்.
உதாரணமாக:
❌ தவறு: A AGALYA
✅ சரி: AGALYA A
பிறப்புச் சான்றிதழில் பெயரை பதிவு செய்யும்போதே, எதிர்காலத்தில் கல்விச் சான்றிதழ்கள், ஆதார், PAN, வங்கி மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களில் ஒரே பெயர் வடிவம் தொடரும் வகையில் கவனமாகப் பதிவு செய்யுங்கள்.
ஒரே பெயர் வடிவம் — அனைத்து ஆவணங்களிலும் ஒரே அடையாளம்!
பெயர் பதிவு செய்யும் போது ஏற்படும் சிறிய தவறுகள் எதிர்காலத்தில் ஆவணத் திருத்தம் உள்ளிட்ட சிரமங்களை ஏற்படுத்தக்கூடும். எனவே பெற்றோர்கள் அனைவரும் கவனமாக செயல்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
எந்தத் தாமதமும் இன்றி...
அம்பத்தூர் மக்களின் நலனுக்காக!
G. பாலமுருகன், MLA
அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்
சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர்
#தளபதி_விஜய்_விலையில்லா_விருந்தகம் 🍽️
இன்று (29.07.2026 - புதன்கிழமை),
86-வது வட்டம், அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பாசத்திற்குரிய N.H. செய்யது அவர்களின் சார்பாக, "ஜனநாயகம்" திரைப்படம் வெள்ளிவிழா காண இறைவனை வேண்டி,
நமது தளபதி விஜய் விலையில்லா விருந்தகத்தில் உழைக்கும் ஏழை எளிய மக்கள், ஆதரவற்றோர் மற்றும் உணவுத் தேவைப்படும் பொதுமக்களுக்கு அன்புடன் காலை உணவு வழங்கப்பட்டது.
கடந்த 8 ஆண்டுகளாக எந்தவித இடையூறும் இன்றி தொடர்ந்து செயல்பட்டு வரும் இந்த விலையில்லா விருந்தகம், பசியால் வாடும் மக்களுக்கு உணவை மட்டுமல்லாது, அன்பு, மனிதநேயம் மற்றும் நம்பிக்கையையும் வழங்கிவரும் உயரிய அறப்பணியாக திகழ்கின்றது.
"ஜனநாயகம்" திரைப்படம் வெள்ளிவிழா காண என்ற நல்லெண்ணத்துடன் இந்த மனிதநேயப் பணிக்கு பங்களிப்பு வழங்கிய N.H. செய்யது அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். மக்களின் பேராதரவுடன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வெள்ளிவிழா காண மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். 🎉❤️
#எல்லா_புகழும்_தளபதிக்கே 👑❤️