@DRMTPJ@GMSRailway@RailMinIndia@pibchennai@CPRONCR 76803, 66068,76826 all are connected in TVR, 76803& 26 both always delayed to reach TVR, why no action taken by TPJ division i travel 2+ years 100+ rail madad 5+ Cpgrams complaint, zero action. As a common man what i will do, why rail madad complaints not reviewed, worst division
@RailwaySeva@DRMTPJ@GMSRailway@AshwiniVaishnaw Daily 76803 train delayed arrival at TVR, fue to this delay all other passenger train halted at tvr. This issue happens last two years, 100+ complaints raised nobody cares. Worst TPJ division. 66068 train always delayed at TVR
முதலமைச்சர் உங்க பிள்ளை.. உங்க அண்ணன்.. மக்களுக்கு தேவையானதை செய்யச்சொல்லி முதல்வர் தான் அனுப்பியிருக்காரு..' - அமைச்சர் டி.கே.பிரபு பொதுமக்களிடையே பேச்சு
மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைத்துள்ள மக்கள் அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம், இன்று சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. மக்கள் நம்பிக்கை மூலம் அமைக்கப்பட்ட நமது அரசுக்கு ஆதரவு அளிக்கப்பட்டும் வாக்களிக்கப்பட்டும் நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றிக்குக் காரணமான, நம்மை ஆதரிக்கும் மதிப்பிற்குரிய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், அக்���ட்சிகளைச் சேர்ந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதே வேளையில், என்றும் நம்முடன் நிற்கும் நம் கழகச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நமது அன்பினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த வேளையில், தேர்தலில் நம்மை நம்பிய மக்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவிக்க வேண்டியது நமது கடமை. தமிழக மக்கள் அனைவருக்கும் ��ன்றி.
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
கழகத் தோழர்கள் அனைவருக்கு��் வணக்கம்.
தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும்.
எனவே கழகத் தோழர்கள் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது.
பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
என்.ஆனந்த்,
மாண்புமிகு அமைச்சர்,
பொதுச் செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்
'நீராரும் கடலுடுத்த...' எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு நூற்றாண்டு கடந்த வரலாற்றுப் பெருமிதம் உள்ளது. இந்தப் பாடல் 'உலகெங்கும் பரவ வேண்டும்...' என்ற இலட்சியத்தின் தொடர்ச்சியாகவே, தமிழ்நாடு அரசு மாநிலப் பாடலாக அதை அறிவித்தது. இத்தகைய பெருமைமிக்க தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே, தமிழ்நாட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்���ிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலில் ஒலிக்கப்படும்.
நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். அதுதான் வழக்கமான நடைமுறை; பொருத்தமான நடைமுறை.
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசுக்கும் வழக்கமாக உள்ள இந்த நடைமுறையில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. இப்படியான சூழலில், இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநா���் அர்லேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், முதலில், வந்தே மாதரமும், பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. ��ந்தப் புதிய நடைமுறை தமிழ்நாட்டிற்கு ஒவ்வாதது. தாய்த் தமிழ்நாட்டில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்படுவதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடில்லை.
இதுகுறித்து நாங்கள் ஆளுநர் தரப்பிடம் வலியுறுத்தியபோது, ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்படவேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி தவிர்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது பாடலாக ஒலிக்கப்பட்டது. ஆனால், இனிவரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது. மாறாக, இதற்கு முன்பிருந்த நடைமுறைப்படியே, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும்!
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங��களிலும், அந்தந்த மாநில மொழி வாழ்த்துப் பாடலே நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கப்பட வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வும் ஒருமித்த எண்ணமும் அதுதான். எங்களுடைய உறுதியான நிலைப்பாடும் அதுதான்.
வாய்மையே வெல்லும்!
வாழ்க தமிழ்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை, வேப்பேரி பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் திரு. கி.வீரமணி அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை, வேப்பேரி பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (10.5.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
Have any CM spoke like this before?
In his very first speech after becoming the CM, he issues warning to those close to him not to misuse their office and this victory. 🔥