தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை சீரமைக்க முதலமைச்சர் பிறப்பித்திருக்கும் உத்தரவு வரவேற்புக்குரியது – அம்மா உணவகங்களின் அவசியத்தை உணர்ந்து அத்திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும்.
சென்னை மாநகராட்சி உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள 600க்கும் அதிகமான அம்மா உணவகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும், தேவையான சமையல் உபகரணங்களை உடனடியாக கொள்முதல் செய்து தரமான உணவு தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கிடவும் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் பிறப்பித்திருக்கும் உத்தரவை மனமார வரவேற்கிறேன்.
மனிதர்கள் உயிர்வாழ அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவு அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமானதாக கிடைக்க வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையில் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி லட்சக்கணக்கான தொழிலாளர்களின் பசியைப் போக்கும் அட்சயப்பாத்திரமாக விளங்கியதை எவராலும் மறுக்க முடியாது.
ஏழை, எளிய மக்களுக்கு வரப்பிரசாதமாக திகழ்ந்த அம்மா உணவகங்கள், இதயதெய்வம் அம்மா அவர்களால் தொடங்கப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக, கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் பணியாளர்கள் பற்றாக்குறையாலும், உபகரணங்கள் தட்டுப்பாட்டாலும் சந்திக்காத சிரமங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, அவை தொடங்கப்பட்ட நோக்கத்தையே சிதைக்கும் வகையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முடக்கி வைக்கப்பட்டிருந்தன.
தமிழகத்தில் புதியதாக ஆட்சிப்பொறுப்புக்கு வந்திருக்கும் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் அம்மா உணவகங்களின் அவசியத்தை உணர்ந்து அதனை மேம்படுத்த பிறப்பித்திருக்கும் உத்தரவை மனதார வரவேற்கும் இந்நேரத்தில், தமிழகத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் அம்மா உணவகங்களை திறந்து ஏழைத் தொழிலாளர்களின் பசியைப் போக்கிட உதவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.@CMOTamilnadu
இன்று வெளியாகியிருக்கும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்கள் தங்களின் உயர்ந்த இலக்குகளை நோக்கி தன்னம்பிக்கையுடன் முன்னேறவும், தேர்ச்சி பெறத் தவறிய மாணவர்கள் மனம் தளராமல் அடுத்து வரவிருக்கும் துணைத்தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
தமிழகத்தையும், தமிழக மக்களையும் அரண்போல காத்திட்ட அன்புத் தாய், சிந்தனைகளாலும், நினைவுகளாலும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் இதயதெய்வம், திசையெங்கும் சூழ்ந்து நின்ற சூழ்ச்சிகளைச் சுக்கு நூறாக்கிய இரும்புப் பெண்மணி, ஏழை, எளிய மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தி நீங்கா புகழோடு எந்நாளும் நிலைத்து நிற்கும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த தினம் இன்று.
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரித்திட, உழவர்களுக்கான வேளாண் உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்கிட, தொழில்துறையில் முதலிடத்தை அடைந்திட, தமிழகத்தை இந்திய தேசத்தின் அறிவுசார் தலைநகரமாக உயர்த்திட தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்திட்ட இதயதெய்வம் அம்மா அவர்களையும், மக்கள் நலனுக்காக அவர் நிகழ்த்திட்ட அற்புதங்களையும் எந்நாளும் போற்றிக் கொண்டாடுவோம்.
நெல்லை அருகே கள்ளத்துப்பாக்கிகளை விற்பனை செய்ததாக திமுக நிர்வாகி கைது – சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு முன்னுதாரணமாக திகழும் திமுகவினரின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
நெல்லை மேலப்பாளையம் பகுதியில் வீட்டிற்குள் கள்ளத்துப்பாக்கிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக திமுகவின் பொறியாளர் அணியைச் சார்ந்த நிர்வாகி ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு அரக்கோணத்தில் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாக திமுக கவுன்சிலர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது நெல்லை அருகே கள்ளத்துப்பாக்கிகளை விற்பனை செய்ததாக மற்றொரு திமுக நிர்வாகி கைதாகியிருப்பதன் மூலம் தமிழகத்தில் திமுகவால் தான் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கியிருப்பதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கஞ்சா விற்பனையில் தொடங்கி கொடியவகை போதைப் பொருட்கள் கடத்தல், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள், கள்ளத்துப்பாக்கிகள் விற்பனை என தமிழகத்தில் அரங்கேறும் பல்வேறு சட்டவிரோதச் செயல்களிலும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளிலும் திமுக நிர்வாகிகளுக்கும் தொடர்பிருப்பதை இச்சம்பவம் மேலும் உறுதிபடுத்தியுள்ளது.
எனவே, கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்ததாக கைதாகியிருக்கும் திமுக நிர்வாகியை தீர விசாரித்து இதன் பின்னணியில் செயல்படுவோரையும் எந்தவித பாரபட்சமுமின்றி கைது செய்து அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன். @CMOTamilnadu
தென் தமிழகத்தின் நீர் ஆதாரமான முல்லைப் பெரியாறு அணையை கட்டி வறண்டு கிடந்த பூமியை வளமான விளைநிலங்களாக மாற்றியதோடு, மக்கள் மத்தியில் நிலவிய உணவுப் பஞ்சத்தையும் போக்கிய மாமனிதர் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்த தினம் இன்று..
கடுமையான மழை, காட்டாற்று வெள்ளம் என பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் தன் சொந்த நிதியை செலவழித்து அணையை கட்டி முடித்து தென் தமிழக மக்களின் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும் ஜான் பென்னிகுவிக் அவர்களை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்
பணிநிரந்தர கோரிக்கை நிறைவேறாத விரக்தியில் விஷம் அருந்திய பகுதிநேர ஆசிரியர் உயிரிழப்பு - தேர்தல் வாக்குறுதி எண் 181ஐ நிறைவேற்றத் தவறிய திமுக அரசின் அலட்சியப் போக்கு கண்டனத்திற்குரியது.
பணிநிரந்தர கோரிக்கை நிறைவேறாத விரக்தியில் விஷம் அருந்திய பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் திரு.கண்ணன் அவர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
தேர்தலுக்கு முன்பாக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 181வதாக இடம்பெற்றிருந்த பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு அரசு செவி சாய்க்காததன் விளைவே ஆசிரியர் ஒருவரின் உயிர் பறிபோயிருப்பதாக சக ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வாழ்வாதார பிரச்னைகளுக்கு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்வதும், அடிப்படை வசதிகள் கூட இல்லாத மண்டபங்களில் அடைத்து வைப்பதும், அவர்களின் நீண்டகால போராட்டத்திற்கான தீர்வை ஒருபோதும் ஏற்படுத்தாது.
எனவே, உயிரிழந்த திரு. கண்ணன் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்கிடுவதோடு, பணிநிரந்தரம் என்ற பகுதிநேர ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றித் தந்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
@ThanthiTV press meet பெயரில் எழுதி கொடுத்த கேன்விக்கு பதில் சொல்வது தான் @SeemanOfficial அரசியல் பதிலா இல்லை ஏற்கனவே எழுதிக் கொடுக்கப்பட்டதா..?
கருவறையை கட்டியது நான் ஆனால் உள்ளே செல்ல முடியாது என்று பேசிய நீங்கள் அதற்காக எத்தனை போராட்டங்கள் நடத்தினீர்கள்.
போராடிவர் பெரியார்.
@cmotamilnadu and karur CM Mr. V. Senthil Balaji should also be held responsible for this disaster situation in karur.. Sir please may be your responsibility to order CBI enquiry in to this... @AmitShah@narendramodi@PMOIndia
karur disaster is @mkstalin@CMOTamilnadu failure... please sir we as the people of tamil nadu don't believe in one man commission and omission by mkstalin.. please order CBI probe... @AmitShah@TTVDhinakaran
கரூர் நிகழ்வு மிக வருத்தம் அளிக்கிறது.. நீங்கள் மறுமுடியும் மக்களை காக்க தவிரிவிட்டீர்கள்.. பிறகு எதற்கு மக்கள் முதல்வன் பதவி.. @CMOTamilnadu@TTVDhinakaran
நேர்மையாகப் பணியாற்றுவதால் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாவதாக மயிலாடுதுறை காவல் துணைக் கண்காணிப்பாளர் புகார் - காவல்துறையில் நேர்மையாகவும், உண்மையாகவும் பணியாற்றும் அதிகாரிகளுக்கு திமுக அரசு கொடுக்கும் பரிசுதான் இந்த நெருக்கடியா?
காவல்துறையில் நேர்மையாகப் பணியாற்றுவதால் தாங்க முடியாத அளவிற்கு நெருக்கடிக் கொடுப்பதாக உயர் அதிகாரிகள் மீது மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத்துறை துணைக் கண்காணிப்பாளர் திரு.சுந்தரேசன் அவர்கள் தெரிவித்திருக்கும் புகார் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத்துறையின் துணைக் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்ற நாள் முதல் அங்கு நடைபெற்ற சட்டவிரோத மதுவிற்பனைகளைத் தடுத்து நிறுத்தியதோடு, அச்செயல்களில் ஈடுபடுவோரைக் கைது செய்து சிறையில் அடைத்த நேர்மையான அதிகாரியின் வாகனத்தைப் பறித்து அவருக்கு பல்வேறு விதமான நெருக்கடிகளைக் கொடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
பந்தோபஸ்து எனும் பெயரில் அடுத்தடுத்து பல்வேறு மாவட்டங்களுக்கு அலைக்கழித்திருப்பதோடு, தான் பயன்படுத்தி வந்த வாகனத்தையும் திட்டமிட்டுப் பறித்ததில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி அரசின் உளவுத்துறை உயர் அதிகாரிகள் வரை தொடர்பிருப்பதாகத் திரு.சுந்தரேசன் அவர்கள் தனக்கு துறைரீதியாக ஏற்பட்ட அழுத்தங்களை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் மகத்தான பணியைச் செய்யும் காவல்துறையில் உண்மையாகவும், நேர்மையாகவும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயல்படும் அதிகாரிகளை ஊக்குவிக்க வேண்டிய பொறுப்பு திமுக அரசுக்கு இருந்தும், அதற்கு நேர்மாறாக பாலியல் வன்கொடுமை உட்பட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை ஊக்குவித்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயலும் அதிகாரிகளையும் உயர் அதிகாரிகளின் வழியாக நெருக்கடி கொடுப்பதன் மூலம் திமுக அரசு சமூக விரோதிகளுக்கான அரசு என்பதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
எனவே, மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகளை விரிவான விசாரணைக்கு உட்படுத்தி அவருக்கு நெருக்கடி கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தில் குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் வகையில், காவல்துறையினர் சுதந்திரமாகச் செயல்படுவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
பத்தாண்டு பணி காலத்துக்கு முன்பாகவே உச்சபட்ச சம்பள உயர்வை முடிப்பதா? – ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்களை வஞ்சிக்கும் திமுக அரசின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது.
தமிழக அரசின் ஊதியக்குழுக்களின் தவறான நிர்ணயத்தால் பணியில் இருந்து ஓய்வு பெற பத்தாண்டு காலம் மீதமிருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஊதிய உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு கட்ட தொடர் போரட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் அவர்களுக்கான ஊதிய உயர்வை நிறுத்தி வைக்க முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இடைநிலை ஆசிரியர்களின் ஒவ்வொரு போராட்டத்தின் போதும், அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதும், பின்னர் ஊதிய முரண்பாடுகளை களைய குழு அமைப்பதும் என எந்தவித தீர்வையும் காணாமல் தொடர்ந்து ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருவது ஒட்டுமொத்த இடைநிலை ஆசிரியர்களுக்கும் திமுக அரசு இழைக்கும் அநீதி ஆகும்.
எனவே, ஆண்டு ஊதிய உயர்வில் இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, ஆண்டுக்கணக்காக போராடி வரும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu@tnschoolsedu
திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து சேலத்திலும் வயதான தம்பதியினர் படுகொலை – கொலைக் குற்றவாளிகளை கண்டறிவதில் அலட்சியமாக செயல்படும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் வீட்டில் தனியாக வசித்துவந்த வயதான தம்பதியினர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் அண்மைக்காலமாகவே தனியாக வசித்து வரும் முதியவர்களை நோட்டமிட்டு கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத திமுக அரசால் தற்போது மேலும் ஒரு இரட்டைக் கொலை அரங்கேறியுள்ளது.
ஒவ்வொரு கொலைச் சம்பவத்தின் போதும் பல்வேறு தனிப்படைகளை அமைத்தும், தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் இதுவரை கொலைக் குற்றவாளிகளை நெருங்க முடியாமல் திணறி வரும் காவல்துறையின் மீதான மக்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
எனவே, சேலத்தில் வயதான தம்பதியினர் கொலை வழக்கை விரிவாக விசாரித்து கொலைக் குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான தண்டனை விதிப்பதோடு, தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி திரு.சத்ய நாராயண பிரசாத் அவர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
வழக்கறிஞராக பல்வேறு வழக்குகளில் திறம்பட வாதாடியதோடு, நீதிபதியாக பொறுப்பேற்று நீதித்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய நீதிபதி திரு.சத்ய நாராயண பிரசாத் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர், வழக்கறிஞர்கள் மற்றும் சக நீதிபதிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழப்பு - பட்டாசு ஆலைகளில் தொடரும் விபத்துகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது எப்போது ?
சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் பலர் இடர்பாடுகளில் சிக்கியிருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
இந்தியாவின் மொத்த பட்டாசுகளில் சரி பாதிக்கும் மேலாக உற்பத்தி செய்யப்படும் சிவகாசியில் தொடரும் பட்டாசு ஆலை விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திமுக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
சிவகாசியில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்துகளில் சிக்கி நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கும் நிலையிலும், பட்டாசு ஆலை தொடர்பான பாதுகாப்பு விதிமுறைகளை திமுக அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தாததே அடுத்தடுத்த உயிரிழப்புகளுக்கு காரணம் என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தி பட்டாசு ஆலை விபத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு, பட்டாசு ஆலைகளில் உரிய ஆய்வை மேற்கொண்டு தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்ட ஒரே மாதத்திற்குள் மருந்துகள் தட்டுப்பாடு - ஏழை, எளிய மக்களை சிரமத்திற்குள்ளாக்கும் திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது.
முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி திறக்கப்பட்ட முதல்வர் மருந்தகங்களில் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சர் அறிவித்துவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுத்து அவசரகதியில் திறக்கப்பட்ட முதல்வர் மருந்தகங்களில் மக்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
ஏழை, எளிய மக்களுக்கு தரமான மருந்துகளை மலிவான விலையில் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதயதெய்வம் அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட அம்மா மருந்தகங்களை முடக்கிவிட்டு, முதல்வர் மருந்தகங்களை திறந்து அதனையும் பயன்பாடற்ற நிலையில் வைத்திருப்பது திமுக அரசின் அப்பட்டமான காழ்ப்புணர்ச்சியையே வெளிப்படுத்துகிறது.
எனவே, இனியும் அவசரகதியிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியிலும் திட்டங்களை தொடங்குவதை நிறுத்திவிட்டு அம்மா மருந்தகங்கள் போன்ற மக்களின் மகத்தான ஆதரவு பெற்ற திட்டங்களை தொடர்ந்து நடத்திட முன்வர வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் படுகொலை - அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைவது எப்போது ?
நெல்லையில் அதிகாலை தொழுகை முடித்து விட்டு வீடு திரும்பிய ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் திரு.ஜாஹீர் உசேன் அவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
காவல்துறையில் இருந்து ஓய்வுபெற்ற பின் பல்வேறு சமூக நலன் சார்ந்த பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்த திரு.ஜாஹீர் உசேன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது திட்டமிட்ட செயலாக இருக்கலாம் என்ற சந்தேகமும் அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் தலைநகர் சென்னையில் தொடங்கி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சர்வ சாதாரணமாக நடைபெறும் இதுபோன்ற படுகொலைச் சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் உச்சமடைந்திருப்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. குறிப்பாக சமூக நலன் சார்ந்து இயங்கி வருவோர்கள் குறிவைத்து கொலை செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
சாதாரண பொதுமக்கள் தொடங்கி, அரசு ஊழியர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் வரை யாருக்குமே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியிருப்பது மட்டுமே திமுக அரசின் நான்காண்டு கால சாதனை என தமிழக மக்கள் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர்.
எனவே, ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் திரு.ஜாஹீர் உசேன் படுகொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்து தகுந்த தண்டனை பெற்றுத் தருவதோடு, இனியாவது அதளபாதாளத்தில் இருக்கும் சட்டம் ஒழுங்கின் மீது கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu