🪔
Some losses have no words. A mother’s love never dies.
Deeply pained by the passing of Mrs. Mohini Mani, beloved mother of Ajith brother
May her soul rest in eternal peace. Sending strength and prayers to AK bro and family in this hour of grief
Om Namashivayam
Deepest condolences on the passing of Actor Ajith Kumar’s mother 💔
Strength and prayers to @Akracingoffl and the entire family during this painful time 🙏
Dear #ajith so sorry to hear of the passing of your mother. Condolences to the family and pray for strength in this sad phase of your life.🙏🙏may she be in peace.
நடிகரும், கார் பந்தய வீரருமான திரு. அஜித் குமார் அவர்களது தாயார், திருமதி. மோகினி அவர்கள், வயது மூப்பின் காரணமாக காலமான செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது.
இந்தத் துயரமான நேரத்தில், திரு. அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தாயார் ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த��து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.
அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்.
அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#CMJosephVijay
திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரும் , கார் பந்தய வீரருமான சகோதரர்
திரு. #AjithKumar அவர்களின்
தாயார் திருமதி. மோகினி மணி அவர்கள் காலமானார் எ���்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
பாசமிகு தாயாரை இழந்து வாடும் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களுக்கும்,
அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திருமதி. மோகினி மணி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial
@SureshChandraa