டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டு தவிக்கும் விவசாயிகளின் குரலாக சட்டமன்றத்தில் நமது மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் @Udhaystalin அவர்கள் 🌄🙏🏾
#DMKinAssembly#மக்களின்_குரல்
#WATCH | "தவெக ஆட்சியில் வெறும் Reels மட்டுமே உள்ளது"
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த தமிழக மீனவர் இயக்கத்தின் தலைவர் அந்தோணி மைக்கேல் சாரத் பேட்டி
#SunNews | #DMK | #MKStalin | #TVKVijay
“நாங்கள் மாற்றத்தை எதிர்பார்த்தோம்.. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது என மக்கள் சொல்கின்றனர்”- மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா
#Jawahirullah | #TVK | #CMVijay
2021 - தி.மு.கழக ஆட்சியின் முதல் 30 நாட்களின் சாதனைகள்!
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 4000 கொரோனா நிவாரண நிதி!
ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு!
பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா விடியல் பயணம்!
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைப் பெறும் மக்களின் கட்டணத்தை காப்பீடு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
மக்களின் புகார்கள் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் & அதற்கென தனித்துறை
முன்களப்பணியாளர்களாக பத்திரிகையாளர்கள் அறிவிப்பு!
கொரோனா சிகிச்சை பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஒருகிணைந்த கட்டளை மையம்.
கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா. வுக்கு சிலை!
இந்த சாதனை பட்டியல் மிக நீளமானது..
https://t.co/CnKB61nEm6
“மாற்றத்தைத் தருகிறேன்” என்று சொல்லி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்ற தவெக அரசு, தனது ஒரு மாத கால ஆட்சியில் வாக்களித்த மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே தந்திருக்கிறது..
6 மணி நேரம், 12 மணி நேரம் மின்வெட்டு என தாங்கமுடியாத துயரத்தில், நள்ளிரவிலும் பொதுமக்கள் நடுத் தெருவிற்கும், சாலைகளுக்கும் வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்..
“சாலை மறியல் இல்லாத இரவுகள் இல்லை” என்ற நிலை, மாநிலத்தின் தலைநகரிலும், மற்ற பகுதிகளிலும், இந்த ஆட்சியின் நிர்வாக அவலத்தை வீதிக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
“பதவியேற்றவுடன் மாற்றத்தைத் தருவேன்” என்ற பஞ்ச் டயலாக் பேசிய மாண்புமிகு முதலமைச்சர் மவுனமாக இருக்கிறார்.. மின்வெட்டுக்குப் பதிலும் சொல்வதில்லை. பத்திரிகையாளர்களையும் சந்திப்பது இல்லை..
பொறுப்பாக பதில் சொல்ல வேண்டிய மின்துறை அமைச்சரோ தினம் ஒரு Conspiracy theory எழுதி அதை ஊடகங்களிடம் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்..
தங்கள் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க “Fake Reels” போடுவது போல், தினமும் திசை திருப்பும் வேலையை மட்டும் செய்கிறார்..
“ஃபியூஸ் கேரியரை திருடுகிறார்கள்” என்று சொல்லி ஒரு சிசிடிவி கேமரா வீடியோவை பதிவிடுகிறார் அமைச்சர்.. பகலில் நடக்கும் திருட்டுக்கு இரவில் எப்படி மின் தடை ஏற்படுகிறது? என்று சாதாரண பாமரனுக்கும் கேள்வி எழும் என்பதை அமைச்சர் யோசிக்கவில்லையா? ஃபியூஸ் திருடு போனால் மொத்தமாக தானே மின்சாரம் போக வேண்டும்? விட்டுவிட்டு போவது எப்படி? பிரச்சினையை தீர்ப்பதற்குப் பதில் அமைச்சர் கதை அளக்கிறார். கஷ்டப்படும் மக்கள் காதில் பூ சுத்துகிறார்.
அடுத்து “ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்” என்றார். காவல்துறையே விசாரித்து அப்படி காணாமல் போன “ஹார்ட் டிஸ்குகளில்” முக்கியத் தகவல்கள் ஏதும் இல்லை என்று கூறிவிட்டது. “ஹார்ட் டிஸ்க்” திருட்டுக்கும் “கரன்ட் கட்டுக்கும்” என்ன சம்பந்தம்?
மூன்றாவதாக “மின்வாரியப்பணியாளர்கள் சதி செய்கிறார்கள்” என்கிறார்.. எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் களத்தில் நிற்கும் தனது பணியாளர்கள் மீதே பழி போட்டார்..
மக்களும் குழந்தைகளும் துன்பத்தில் இருப்பதை ரசிக்க, மின் துறை பணியாளர்கள் என்ன அவர்களின் தலைவர் போன்றவர்கள் என்று நினைக்கிறாரா அமைச்சர்? தன் கையாலாகத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட கரன்ட் கட் காரணம் குறித்து இப்படியா கப்சா விடுவது?
தவெக ஆட்சியில் ஏற்பட்டுள்ள மாற்றம் “மின்வெட்டால் பள்ளிக்கு விடுமுறை விடும்”அவலம் தான்! தங்கள் பயிர்கள் தண்ணீர் இன்றி காய்வதால் விவசாயிகள் போராடும் துயரம்தான்! பத்திரிக்கையாளர்களை பார்த்தவுடன் பவர் கட்குறித்து அமைச்சர் சொல்லும் காரணங்கள் எல்லாமே இந்த தவெக அரசு சீரான மின்சாரத்தை அளிக்க முடியாமல் திணருகிறது என்பதுதான்!
ஆனால் எதனால் மின்வெட்டு நடக்கிறது? என்பதுபற்றி அதிகாரிகளை வைத்து அமைச்சரோ, அமைச்சரை வைத்து முதலமைச்சரோ ஒரு ரிவ்யூ மீட்டிங்காவது நடத்தியிருக்கிறார்களா? இல்லை! எதுவுமே இல்லை!
இதுவும் தவெக ஆட்சியில் நடத்துள்ள மாற்றம்தான்! ஒரே மாதத்தில் மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள படு மோசமான நிர்வாக தோல்வி இந்த ஆட்சியின் மாற்றம்தான்!
தமிழ்நாட்டின் மின் தேவை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது என்பது எந்த அரசும் உணர வேண்டிய உண்மை.. அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப திறமையாக நிர்வகித்து- மக்களை இன்னலுக்கு உட்படாமல் காப்பது தான் ஆட்சியின் நிர்வாகத் திறமை. அதைத்தான் எங்கள் கழகத் தலைவர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு செய்தது..
புள்ளி விவரங்களுடன் சொல்ல வேண்டுமென்றால், 2021ல் அதிகபட்ச உச்சமாக 16,481 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டது. 2022ல் 17,196 மெகாவாட், 2023ல் 18,053 மெகாவாட், 2024ல் 19,049, 2025ல் 20,148 மெகாவாட், 2026 ஏப்ரலில் 20,974 மெகாவாட் உச்சத்தைத் தொட்டிருக்கிறது.. ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை அதிகரித்தாலும், திராவிட மாடல் ஆட்சி இருந்தவரை சீரான மின்சாரத்தை பொது மக்களுக்கு வழங்கியிருக்கிறோம்..
சென்னையைப் பொருத்தவரை கடந்த ஆண்டு மின்தேவை 4,663 மெகாவாட் உச்சத்தைத் தொட்டது. 2024ல் 4,769 மெகாவாட் உச்சத்தைத் தொட்டது. அப்படி இருந்தாலும் மின்வெட்டு எங்குமே நடக்கவில்லை. பொதுமக்கள் நள்ளிரவில் கைக் குழந்தைகளுடன், வயதானவர்களுடன், நோயாளிகளுடன் தெருவுக்கு வந்து போராடும் நிலை ஏற்படவில்லை.. அது மட்டுமா?
இந்தியாவிலேயே மிக குறைவான மின்வெட்டு கொண்ட மாநிலம் தமிழ்நாடு. வளர்ந்த நாடுகளுக்கு இணையான சேவையை வழங்குகிறது என்று ஒன்றிய அமைச்சரே தமிழ்நாட்டைப் பாராட்டினார்..
(1/2)
திமுக ஆட்சியில, நாலு மாசத்துக்கு முன்னாடியே மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கி, அவங்ககிட்ட வழங்கப்பட்டு, அவங்க பயன்படுத்தி வந்த வாகனங்களை எல்லாம் இப்ப திரும்பவும் வாங்கிட்டு. அதுல இந்த தவெக அரசோட ஸ்டிக்கரை ஒட்டி, 'ஏதோ நாங்கதான் புதுசா தர்றோம்' அப்படின்னு அமைச்சர் விஜய் பாலாஜி திரும்பவும் மக்களுக்கு வழங்குறார். என்ன ஒரு கூத்து இது!
ஒரு பக்கம் பார்த்தா, அந்த டம்மி CM டெல்லிக்கு போயி, திராவிட மாடல் ஆட்சியோட சாதனைகளை எல்லாம் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம தன் பேர்ல எழுதிட்டு இருக்கார். இங்க இருக்கிற அவரோட அமைச்சர்களும் தலைவனை போலவே எந்த ஒரு சூடு, சுரணையும் இல்லாம, திராவிட மாடல் ஆட்சியில மக்களுக்கு கொடுத்த வாகனத்தையே திரும்ப வாங்கி ஸ்டிக்கர் ஒட்டி நாடகம் ஆடுறாங்க!
மாற்றுத்திறனாளிகளை இப்படி அலைக்கழிச்சு, அவங்கள வச்சு அரசியல் பண்றதுக்கு உங்களுக்கு வெட்கமா இல்லையா? உருப்படியா நீங்களா சொந்தமா ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து அதைச் செயல்படுத்திப் பாருங்க பார்ப்போம். மத்தவங்க உழைப்புல, மத்தவங்க திட்டத்துல ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடுற வேலையை இதோட நிறுத்திக்கோங்க!
#TVKFails
“விளக்கின் மினுக்களுக்கு விட்டில் பூச்சிகள்தான் செல்லும்; இருளகற்றும் விடியலின் ஒளி சூரியனிடம்தான் உண்டு!”
தமிழ்நாட்டின் அரணாக - தமிழர்களின் வளர்ச்சிக்குத் தூணாக விளங்குவது என்றைக்கும் விளங்குவது திராவிட முன்னேற்றக் கழகம்தான் என ஏராளமானோர் நம்பிக்கையுடன் இணைந்து வருகின்றனர்.
இன்று நமது தலைவர் @mkstalin அவர்களது முன்னிலையில், தமிழக மீனவர் இயக்கத்தின் தலைவர் திரு. அந்தோணி மைக்கேல் சாரத் அவர்கள், தனது தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் சேர்ந்து தனது இயக்கத்தைக் கழகத்துடன் இணைத்துக் கொண்டார்.
#DMK
கழக இலக்கிய அணி துணைத்தலைவர், மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் அண்ணன் கவிச்சுடர் திரு கவிதைபித்தன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று புதுக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டோம்.
மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் சென்னை தெற்கு மாவட்டத்தைச் சார்ந்த மீனவ அமைப்பைச் சார்ந்த 800 மேற்பட்டோர் இன்று கழகத்தில் இணைத்துக் கொண்டனர். @mkstalin#Masubramanian#ChennaisouthDMK
திருப்பூர் தெற்கு மாவட்டம் #உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை புரிந்த கழக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. ஆ.ராசா அவர்களை வரவேற்றபோது.
இந்நிகழ்வின்போது நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் உடன் இருந்தனர்.
@dmk_raja
2026 தேர்தல் முடிவுகள் தொடர்பாக அமைக்கப்பட்ட திமுக கள ஆய்வுக்குழு உறுப்பினராக, புதுக்கோட்டை தெற்கு, மதுரை மாநகர் - மதுரை வடக்கு மற்றும் சிவகங்கை மாவட்ட தொகுதிகளை உள்ளடக்கிய 14 தொகுதிகளுக்கான ஆய்வு அறிக்கையினை,
அன்னைத் தமிழ் மண்ணின் அன்புப் புதல்வர்
கட்டுக்கோப்பான கழக இளைஞர் அணியின்
இதய சிம்மாசனத்தில் எப்போதும் ஒளிர்கின்ற
உதய ஞாயிறு!
புது மழையில் பூத்திருக்கும் காளான்களுக்கும்,
களம் அறியாத கற்றுக் குட்டிகளுக்கும்
பாடம் புகட்டிட
அரசியல் வானில் புதுவரலாறு படைக்க வந்த
எழுச்சிமிகு எதிர்க்கட்சித் தலைவர்
என் ஆருயிர் அண்ணன் இளம் தலைவர் அவர்களிடம் வழங்கி கள நிலவரத்தை விவரமாக எடுத்துரைத்தோம்!
ஆக்கபூர்வமான
அனைத்து அனுபவங்களையும் உள்வாங்கி
இன்னும் உத்வேகமாய், உற்சாகமாய்
களப் பணியாற்றி இளம் தலைவரின் எழுச்சிமிகு வழிகாட்டலில் வெற்றியை நோக்கி விரைந்து செல்வோம்! மீண்டும் வெல்வோம்!🔥💪🌄
@mkstalin@Udhaystalin
#உடன்பிறப்பின்_குரல்
#DMK
ஆதிக்க ஒழிப்பே, தி.மு.க.வின் திட்டம்!
- பேரறிஞர் அண்ணா.
நம் உணர்வையும்-கொள்கையையும் உள்வாங்கி உடன்பிறப்பாய் இணைந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பனையூர் பாபு அவர்களையும், அவரோடு சேர்ந்து வந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோரையும் நம் அறிவியக்கத்துக்கு வரவேற்கிறேன்.
விலகி வரும்போதும் நயத்தகு நாகரிகத்துடன் அதற்கான காரணங்களை தெளிவாக எடுத்து வைத்துவிட்டுக் கழகத்தில் இணைந்திருக்கிறார் @PanaiyurBabu அவர்கள்!
இந்த மாண்பு தொடரட்டும். விலகியதாலேயே யார் மீதும் கசப்புணர்வோடு பேசவேண்டாம்.
நம் எதிர்காலத்திற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன்வைத்து களப்பணியினைத் தொடர்க!