J J Yatra Travels
எனும் பேருந்தில்
தஞ்சாவூரிலிருந்து சென்னை செல்வதற்கு நேற்று இரவு 10.30 மணி போல @redBus_in ல் பயணச்சீட்டு பதிவு செய்திருந்தேன்.
11.05 மணிக்கு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து கிளம்பும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
11.05 மணி ஆகியும் பேருந்து வரவில்லை; அழைப்பும் வரவில்லை. ஓட்டுநர் எண்ணுக்கு அழைத்துக் கேட்டதற்கு, " கந்தர்வக்கோட்டை அருகே பேருந்து வந்து கொண்டிருக்கிறது. வருவதற்கு 30 முதல் 40 நிமிடம் வரை ஆகும்" என்றார்.
சரியெனக் கூறிவிட்டு, அரை மணிநேரம் கழித்து ஓட்டுநரை அழைத்துக் கேட்டதற்கு, "பேருந்து கிளம்பிவிட்டது" என்றார். "ஏன் அலைபேசியில் அழைக்கவில்லை? அங்குதானே இருந்தேன்" எனக் கேட்டதற்கு, "கடைசிநேரத்தில் பதிவுசெய்ததால் எங்களுக்கு அலைபேசி எண் காட்டவில்லை." எனப் பொறுப்பேற்று பதில் சொன்னார். பிறகு, அலுவலகத்தில் பேசிக் கொள்ளுங்கள் எனக்கூறி, எண்ணைக் கொடுத்தார்.
காலையில் அழைத்துக் கேட்டதற்கு, "கெடுவாய்ப்பாக நிகழ்ந்துவிட்டது. சிரமத்திற்கு வருந்துகிறோம்" என சடங்குக்கு கேட்கும் வார்த்தைகள்கூட வரவில்லை. தங்கள் தவறை மறைத்து மழுப்பினார்கள். இரண்டு முறை அழைத்தும் அதோ இதோ என காரணம் கூறினார்கள்.
இதற்கிடையே Rating என செய்தி வந்தது. அதில் Poor Service எனக் குறிப்பிட்டேன்.
இப்போது, "பயணம் செய்யாமல் எதற்கு Rating கொடுத்தீர்கள்? அப்படியென்றால், முடிந்துவிட்டது" என்றார் மறுமுனையில் பேசியவர். காட்டமாகத் திட்டிவிட்டு, அழைப்பைத் துண்டித்துவிட்டேன்.
1500 ரூபாய் வீண் செலவு ஆனதுகூட ஒரு பொருட்டாய் தெரியவில்லை. பொறுப்பற்று அவர்கள் சொன்ன பதில்தான் கோபத்தைத் தந்தது.
இதெல்லாம் ஒரு பொழப்பாடா? இப்படி எல்லாம் சுரண்டித் திங்கணுமாடா?
ஜெயமோகனின் ‘உலோகம்’ நாவல் படித்தேன். இந்தியாவில் அரசியல் கொலை செய்ய வரும் ஈழப்போராளி ஒருவரைப் பற்றிய த்ரில்லர் நாவல். அதை த்ரில்லர் நாவலாக இல்லாமல் தன் ‘தத்துவ விசாரணை’களை இட்டு நிரப்பி நாவலைக் கொலை செய்திருக்கிறார் ஜெயமோகன்.
இந்த ‘தத்துவ விசாரணைகள்’ பக்கம் பக்கமாக நீண்டு அலுப்பூட்டுகின்றன. தொடர்ச்சியாக வன்முறைகள் நடந்த மண் குறித்த அனுபவமோ அரசியல் பார்வைகளோ இல்லாமல் வெளியிலிருந்து தான் ரெடிமேடாக உருவாக்கிவைத்த ‘தத்துவ விசாரணை’களைக் கொண்டு நீளநீளமாக அலுப்பூட்டுகிறது நாவல். மனிதர்களைப் பற்றி ‘வித்தியாசமாக’ எதையாவது சொல்லியே ஆகவேண்டும் என்ற செயற்கையான முனைப்பு இந்த நாவலில் மட்டுமல்ல, ஜெயமோகனின் எல்லா நாவல்களிலும் துருத்தி நிற்கிறது.
இதையெல்லாம் எடுத்துவிட்டால் ராஜேஸ்குமாரின் சுவாரஸ்யமில்லாத, ஒரு ராஜேஷ்குமார் பாணி நாவல்.
மேலும் இந்திய உளவுத்துறை, ஈழம், வடகிழக்கு மாநிலங்களின் ஆயுத இயக்கங்கள் குறித்து இதைவிட நுட்பமாகவும் சுவாரஸ்யமாகவும் விவரிக்கும் ‘ஃபேமிலி மேன்’, ‘பாதாள் லோக்’ போன்ற வெப்சீரிஸ்கள் வந்துவிட்டன. ஜெயமோகன் பக்கம் பக்கமாக விவரிக்கும் ‘மனித மனதின் நுட்பமான பகுதிகளை’ அவை நெகிழ்வான காட்சிகளாக்கிக் காட்டுகின்றன. இந்திய இறையாண்மையைத் தாண்டாமலே ஆளும் வர்க்கத்தின் வஞ்சகத்தையும் மாற்றுக்குரல்களின் பன்முகத்தையும்கூட அவை நுட்பமாகச் சித்திரிக்கின்றன.
ஷோபாசக்தி, சயந்தன், யதார்த்தன், யோ.கர்ணன் போன்றவர்களின் எழுத்துகளைப் படித்தவர்கள் இது எப்படி ஒரு செயற்கையான நாவல் என்பதை உணரமுடியும். ’எங்கட’, ‘அண்ணை’ என்ற இரண்டு வார்த்தைகளைப் போட்டால் அது ஈழவழக்கு என்று அவரும் ஏமாந்து நம்மையும் ஏமாறச் சொல்கிறார்.
நாவலில் ஏராளமான தர்க்கப்பிழைகள். ஒரே ஒர் உதாரணம் சொல்கிறேன்.
ஜோர்ஜ் என்ற இளைஞன் பத்தாம் வகுப்பு தேறியபின் இந்தியாவுக்கு இரண்டரை வருடங்கள் ஆயுதப்பயிற்சிக்கு வருகிறான். அவன் இலங்கைக்குப் போவதற்குள் அவன் இயக்கம் ‘அழிக்கப்பட்டுவிடுகிறது’. பிறகு ஒரு வருடத்துக்குப் பின் ஆயுதப்பயிற்சி எடுத்த இந்தியாவுக்கு அகதியாகத் திரும்புகிறான். இப்போது அவனுக்கு வயது 23 என்கிறது நாவல்.
இரண்டு பக்கங்கள் தாண்டினால் ஜோர்ஜும் அரசியல் கொலை செய்ய வந்த சார்லஸ் என்ற சாந்தனும் அகதி முகாமுக்கு வெளியே நகரத்துக்குச் செல்கிறார்கள். ‘எங்கு பார்த்தாலும் செல்போன் விளம்பரங்கள்’ என்கிறார் ஜெயமோகன்.
இந்தியாவில் இயக்கங்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கப்பட்ட காலம் 80கள். 1987ல் இந்திய ராணுவம் இலங்கைக்கு அனுப்பப்படுவதற்கு முன்பே அவை முடிவுக்கு வந்துவிட்டன.
‘உலோகம்’ நாவலின்படி ஜோர்ஜ் பத்தாம் வகுப்பு முடித்து ஆயுதப்பயிற்சி முடித்து இலங்கை செல்லும்போது 18 வயதிருக்கலாம். மீண்டும் அவன் அகதியாக திரும்பும்போது 23 வயது. இடைப்பட்ட காலங்கள் 5 ஆண்டுகள்.
ஆனால் தமிழ்நாட்டில் செல்போன் அறிமுகமானதே 2000, 2002 ஆண்டுகளில்தான். அதாவது ஈழ இயக்கங்களுக்கு இந்தியாவில் ஆயுதப்பயிற்சி அளிக்கப்படுவதை நிறுத்தி 15 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் செல்போனே வந்தது.
இப்படி நாவல் முழுவதும் ஏராளமான அபத்தங்கள்.
எனக்கு ஒன்று புரியவில்லை. ஷோபாசக்தி நடுநாட்டு இலக்கியம் எழுதவில்லை. தமிழ்நதி கரிசல் இலக்கியம் எழுதவில்லை. சயந்தன் கொங்கு இலக்கியம் எழுதப்போவதில்லை. ஏன் ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் ‘ஈழ நாவலை’ எழுத வேண்டும்?
நாரோயில் எழுத்தாளர்கள்தான் ஒரு லைட் கம்பத்தைப் பார்த்தாலே அந்த லைட் கம்பம் இருந்த தெரு முக்கு, அதன் அருகில் இருந்த கோயில், நீலி கதை, கேரள கம்யூனிஸ்ட் சேட்டன், மலையாளத்து கெட்ட வார்த்தைகள், மார்த்தாண்ட வர்மா, சுவாதி திருநாள், ஆறிப்போன பழம்பொறி எல்லாம் சேர்த்து ஒரு நாவலாக்கிவிடுவார்களே, அப்புறம் ஏன் ‘ஈழ நாவல்’?
பண்டைய கில்மாக்கள்
=======================
.
எப்ஸ்டைன் விவகாரத்தில் விவாதம் நாத்திகம் ஆத்திகம் என்ற திசையில் போய்க் கொண்டிருக்கிறது. 'நாத்திகத்தைப் பின்பற்றினால் இந்த மாதிரிதான் ஆகும்!' என்று நம்பிக்கையாளர்கள் பலர் எழுதி வருகின்றனர்.
எனக்கு இந்த வாதம் புரியவில்லை. நாத்திகர்கள் எல்லாரும் சேர்ந்துதான் இந்தக் குற்றங்களைப் புரிந்திருக்கிறார்களா? அல்ல்து நாத்திகர்களுக்கான பூஜை (!) சடங்குகளில் சிறார் பாலியல் வன்புணர்வும் குறிப்பிடப்பட்டுள்ளதா?
எனக்குத் தெரிந்த வரை எப்ஸ்டைன் தன்னை நாத்திகராக அறிவித்துக் கொண்டதாகத் தகவல் இல்லை. வெளியான கோப்புகளில் உள்ள பெயர்களில் நிறைய நம்பிக்கையாளர்களின் பெயர்கள்தான். ஜார்ஜ் புஷ் ஜூனியர் தன்னைத் தீவிர கிறித்துவராக அடையாளப்படுத்திக் கொண்டவர். ஈராக் ஆக்கிரமிப்புக்கு முன் இறைவன் தன் கனவில் வந்து 'ஈராக்குப் போ ஜார்ஜ். அங்கே போய் ஜனநாயகத்தை நிலைநாட்டு!' என்று ஆணையிட்டதாக அறிவித்தவர். உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட சில தினங்களிலேயே 'இது ஒரு சிலுவைப் போர்' என்று சொன்னவர் (Crusades)
பில் கிளிண்டன் கிறித்துவத்தைப் பின்பற்றி வந்தவர். அவரது மேடைப் பேச்சுகளில் எல்லாம் கிறித்துவ பிரச்சார நெடி பலமாக அடிக்கும். எப்ஸ்டைன் அறிவுரைகளைப் பின்பற்றி நடந்ததாக சொல்லப்படும் பிரதமர் மோடி பற்றி சொல்லவே வேண்டாம்.
இங்கே நாத்திகம் எங்கிருந்து வந்தது? மனிதர்கள் சிறார் பாலியலில் ஈடுபடலாம்; பெண்களை வலுக்கட்டாயமாக புணரலாம் என்றெல்லாம் நாத்திகம் அல்லது செக்யூலரிசம் பேசும் எந்த நூலாவது அறிவுறைக்கிறதா? நான் படித்தவரை எந்த நூலிலும் அப்படி இல்லை.
சரி, இந்த எப்ஸ்டைன் குற்றங்களைக் கண்டு நமக்குக் கோபம் வருகிறதல்லவா? ஏன் அப்படி வருகிறது?
ஏனெனில் நாம் பின்வரும் இரண்டு விஷயங்களை நம்புகிறோம்:
- சிறார்களைப் புணருவது குற்றம்.
- வளர்ந்த பெண்களையும் அவர்கள் சம்மதமின்றிப் புணருவது குற்றம்.
இந்த இரண்டு சிந்தனையும் வலியுறுத்தும் மதம் ஏதாவது உலகில் இருக்கிறதா?
சிறுமிகள், சிறுவர்கள்பால் கலவியில் ஈடுபடுவது தவறு என்று எந்த மதமும் சொல்லவில்லை. ஏறக்குறைய அனைத்து மதங்களுமே சிறார் மணத்தை அங்கீகரித்து இயங்கியவைதான். போலவே வயதான ஆண்கள் சிறுமிகளை மணம் கொள்வதும், அவர்களுடன் கலவி கொள்வதும் மிக மிக சகஜமாக இருந்த காலம்தான் முந்தைய காலம். அவற்றுக்கு எதிராக எந்த மதப் புத்தகமும் பேசவில்லை. சொல்லப் போனால் சில மதத் தலைவர்களே கூட சிறுமிகளை மணம் புரிந்து அவர்களுடன் கலவி கொண்டிருக்கிறார்கள். பொட்டுக் கட்டுவதற்கு சில வகை தேவதாசிகளுக்கு 9 வயது, சில வகையினருக்கு 7 வயது என்று சைவ வைணவ ஆகம நூல்கள் வரம்பு நிர்ணயிக்கின்றன.
இது நவீன காலம் வரை கூடத் தொடர்ந்தது. சிறார் மணங்களைத் தடை செய்யும் 'சாரதா சட்டத்தை' பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த போது அதை எதிர்த்து இந்து முஸ்லிம் மதத் தலைவர்கள் கை கோர்த்து காசியில் போராட்டம் நடத்தினார்கள்! 'ஆஹா, காந்தி கனவு கண்ட இந்து-முஸ்லிம் ஒற்றுமை கடைசியாக நடந்தே விட்டது!' என்று அந்தப் போராட்டம் குறித்து நேரு நக்கலாக எழுதினார். இன்று வரை சிறார் மணத்தை நியாயப்படுத்தி உலகெங்கும் உள்ள முல்லாக்கள் பேசும் வீடியோக்கள் இன்ஸ்டா, யூடியூப் முழுக்க காணக் கிடைக்கின்றன. 9 வயதுக்கு மேல் கல்யாணம் செய்யாமல் தவறினால் நாசம் விளையும் என்று சில பிராமண உபன்யாசகர்கள் பேசிய வீடியோக்கள் இணையத்தில் உள்ளன.
இதுதான் மதங்களின் லட்சணம்.
சிறார் மணம், சிறார் கலவி தவறு எனும் கருத்தியல் ஒரு நவீன சிந்தனை. Paedophilia எனும் வார்த்தையே 1880ல் உருவாக்கப்பட்டதுதான். உலகெங்கும் சிறார் மணங்கள் 20ம் நூற்றாண்டில்தான் தடை செய்யப்பட்டன. (அந்தத் தடைகளையும் கடுமையாக எதிர்த்து மதங்கள் போராடின.)
போலவே கலவிக்கு பெண்ணின் சம்மதம் தேவை என்பதும் 20ம் நூற்றாண்டில் வந்த கருத்தியல்தான். 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை கலவிக்கு மட்டுமல்ல, எதற்குமே பெண்ணின் சம்மதம் தேவை என்ற கருத்தியலே கிடையாது. சந்தேகத்தின் அடிப்படையில் காட்டுக்கு அனுப்பும் முன் சீதையின் கருத்தை யாரும் கேட்கவில்லை. பழைய ஏற்பாட்டு பைபிளில், தெரியாமல் கடவுளுக்குக் கொடுத்த வாக்குக்காக தன் சொந்தப் பெண்ணையே கொன்று சமைத்து படையலாக வைக்கிறான் ஒருவன். கணவன் (கலவிக்குக்) கூப்பிட்டு வர மறுத்த பெண்ணை தேவதைகள் இரவு முழுக்க சபித்துக் கொண்டிருப்பார்கள் என்று பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்தவர் இறைத் தூதராக மதித்து பின்பற்றப்படுகிறார்! சிவனடியாருக்கு தன் பெண்டாட்டியை கூட்டிக் கொடுத்தவர் நாயன்மாராக கோயில்களில் வழிபடப்படுகிறார் (இயற்பகை நாயனார்). கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் என்பதுதான் அனைத்து மதங்களும் கொடுக்கும் விதிமுறை. அவ்வளவு ஏன், கடவுளர்களே வன்புணர்வில் ஈடுபட்ட கதைகள் நம்மிடம் உள்ளன. அக்னி, இந்திரன், சூரியன் என்று அக்யூஸ்டுகளின் பட்டியல் நீளுகிறது.
இன்றளவும் மண வன்புணர்வுக்கு எதிரான சட்டம் வராமல் இந்தியாவில் தடுத்துக் கொண்டிருப்பது மதங்கள்தான். இது சார்ந்த வழக்கில் இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் மற்றும் மத்திய அரசு இணைந்து ஒரே மாதிரியான அஃபிடவிட்டை தாக்கல் செய்தன. அதாவது பெண்களை ஒடுக்கும் விஷயத்தில் மட்டும் இந்து-இஸ்லாம் இரண்டுமே கை கோர்த்து விடும் என்பதற்கு இன்னொரு உதாரணம்.
Consent என்பதன் ஸ்பெல்லிங்கே மதங்களுக்குத் தெரியாது. அது நவீன செக்யூலரிசம், பெண்ணியம், ஜனநாயகம் எல்லாம் சேர்ந்து கொண்டு வந்தது. அதாவது மதங்களுக்கு, அவற்றின் பிற்போக்குவாதத்துக்கு எதிராக வந்தது. 'No means no' என்பது நவீன பெண்ணிய, மனித உரிமை சார்ந்த முழக்கம்.
இந்த எப்ஸ்டைன் விவகாரத்தில் விஷயம் வெளியே வருவதற்கும், சம்பந்தப்பட்ட ஆட்கள் மேல் வழக்கு, கைது, சிறை என்றெல்லாம் நடப்பதற்குமே கூட நவீன சட்டங்களும் சிந்தனாவாதங்களும்தான் காரணம். 100 வருடத்துக்கு முன் சிறார் மணம் புரிந்து கொண்டவர்களோ அல்லது பல பெண்களை அந்தப்புரத்தில் அடைத்து வைத்து ஜல்சா செய்து கொண்டிருந்த எந்த அரசர்களுமோ சிறைக்குச் சென்றதாக தகவல் இல்லை. அப்படி செய்தவர்களில் பலர் பெரும் ஹீரோவாக வழிபடப்பட்டுள்ளார்கள். சிலர் இறைவனுக்கு நிகராகவும் வைத்து கொண்டாடப்பட்டுள்ளார்கள்.
அந்த வழிபாடுகள் இன்று வரை தொடர்கின்றன.
எனவே, இந்த விஷயத்தில் உங்கள் மதத்தைக் கொண்டு வந்து திணிக்க முயலாதீர்கள். யாருக்கும் அட்வைஸ் செய்யும் தகுதி எந்த மதத்துக்கும் அறவே கிடையாது.
நவீன உலகம் பிழைகளால் நிறைந்தது. அந்தப் பிழைகளை சரி செய்வதும் கூட நவீன உலகமும் நவீன சிந்தனைகளும்தான். இன்றைக்கு வாழும் முக்கால்வாசி ஆண்கள் எப்ஸ்டைன்களாக ஆகாமல் ஒருவனுக்கு ஒருத்தி என்று இருப்பதற்குக் காரணம் நவீன மனித உரிமைகள், செக்யூலரிசம் சார்ந்த வாழ்வியல்தான். மதங்கள் அல்ல.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வாயை மூடிக்கொண்டு இருப்பதுதான். கூடவே உங்கள் புனித நூல்களை முடிந்த அளவு ஒளித்து வைத்துக் கொள்ளுங்கள். நவீன தலைமுறை தப்பித் தவறி படித்து விட்டால் எப்ஸ்டைன் ஃபைல்களை விட அதிக கில்மா பண்டைய உலகில் நடந்திருக்கிறது என்பதும் அவற்றுக்கு இறைவனே ஆசீர்வாதம் கொடுத்து முன்நின்று நடத்தி இருந்திருக்கிறார் என்பதும் தெரிய வந்து ரொம்பவும் உற்சாகம் கொள்ளப் போகிறார்கள்!
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
#நாத்திகத்தென்றல்பரவட்டும்
#ReligionisPoison
Statutory Warning: Religion is Injurious to Society
🚨⚡️ A Brazilian father attended his daughter's meeting with her boyfriend at a station entrance, under his supervision, lasting no more than 20 seconds.
Deepak Chopra emailed Jeffrey Epstein in 2017 with just two lines:
"God is a construct Cute girls are real"
The man built a billion-dollar brand on spiritual enlightenment and this is how he talks to a convicted sex offender...
பொதுவாக பஞ்சாப் சர்தார் சகோதரர்கள் கோவிலுக்குள் போதை பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது... இது சிக் மத தர்மப்படி குற்றமாகும். இது இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினருக்கும் நன்றாக தெரியும்.. அது தெரிந்திருந்தும் வேண்டுமென்றே ஆர்எஸ்எஸ் தீவிரவாத அமைப்பின் கிளை அமைப்பான பஜ்ரங்தள் அமைப்பு தீவிரவாதி போதை பொருளை சிக் மத குருதுவாரா கோவிலுக்குள் வீசுவதற்காக எடுத்துச் சென்றார்.
வாய் முழுவதும் சிகப்பு நிறத்தில் வந்த சங்கியை பார்த்ததும் யூகித்துக் கொண்ட கோவில் காவலர். அவரை கோவிலுக்குள் செல்வதை தடுத்து நிறுத்தி சோதனை இட்டார். இந்த சோதனையில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட, குஜராத் மாநிலத்தில் மட்டும் கிடைக்கக்கூடிய, அதிபயங்கரமான போதைப்பொருள் ஆர் எஸ் எஸ் தீவிரவாதியிடம் இருந்தது தெரியவந்தது. அவர் காவலரிடம் மேலும் மேலும் பொய் சொல்லிக்கொண்டு தப்பிவோட முயற்சித்தபோது. சங்கித் தீவிரவாதி வருட கணக்கில் குடித்த வந்த மாட்டு மூத்திரம் வெளியே வரும் அளவிற்கு பொளேர் பொளேர் என்று சர்தார் காவலர் விட்ட அரை எட்டு ஊருக்கு கேட்டது.
அவா எல்லாம் டாக்டருக்கு படிச்சிட்டு வெளிநாடு அல்லது கிரிக்கெட் கமென்ட்ரி அரசியல் விமர்சகர்,பவர் ப்ரோக்கர்,ரீல்ஸ் போட்டுட்டுயிருக்க மற்றவர்கள் டாக்டரக்கு படிச்சிட்டு டாக்டர் வேலை பார்த்துட்டு இருக்க.
நான் என் வாழ் நாளில் 300 டாக்டர் வரை பாரத்துயிருக்கேன் அதில் 290+ அவாக்கள் இல்லை .
அதை மாதிரி எனக்கு தெரிஞ்ச மேல் கூறிய பவர் ப்ரோக்கர்,கமென்ட்ரி ,ரீல்ஸ் போடுற பெரும்பாலான அவாக்கள் டாக்டர் படிச்சி இருக்காங்க.
Proud kannadigas🩷🩷🩷🩷🩷
முதலில் இந்தியா அப்புறம் தான் கர்நாடகா ......
உங்க இஷ்ட மயிருக்கு உங்க ஊரை விட்டுட்டு இங்க வந்து பொழப்பு நடத்திக்கிட்டு நீங்க பேசுற மசூர் பாஷையை நாங்க பேசணுமாடா.......
சரியான பாடம் கற்றுக் கொடுத்த கர்நாடகா மக்களுக்கு வாழ்த்துக்கள்