குப்பையாக இருந்த அடையார் பாடநூல் கிடங்கை மாண்புமிகு முதல்வரின் ஆலோசனையோடு, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அண்ணன் ராஜ் மோகன் அவர்களின் அறிவுறுத்தலின் படி இன்று(20.7.2026, திங்கட்கிழமை) தூய்மைப் படுத்தும் பணியை செய்தோம்.
75,000+ Tickets Sold in Advance for #JanaNayagan in Karnataka! ✨
Advance Gross races past ₹5 Cr 💥
The second-biggest opening for @actorvijay is officially locked!
உலக சதுரங்க நாளை முன்னிட்டு சதுரங்கத்தை நேசிக்கும் அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான இளம் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி தமிழ்நாடு சாதனை படைத்து வருகிறது. 1988 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் திரு. விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி, திரு. குகேஷ், திரு. பிரக்ஞானந்தா, செல்வி வைஷாலி உள்ளிட்ட பல இளம் கிராண்ட் மாஸ்டர்கள் சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டிகளில் வெற்றிபெற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்களுக்கு இந்நாளில் எனது நல்வாழ்த்துகள்.
உலக அரங்கில் சதுரங்கத்தின் தலைநகராக தமிழ்நாடு முன்னேறி வரும் நிலையில், இளைய தலைமுறையினர் சதுரங்க நுட்பங்களைக் கற்றுத்தேர்ந்து, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும். இத்தகைய முயற்சிகளுக்கு நமது அரசு அனைத்து வகையிலும் துணை நின்று எல்லா உதவிகளையும் வழங்கும்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (20.7.2026) தலைமைச் செயலகத்தில், இந்தியாவின் முன்னணி ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் (Coaches), சரக்கு வாகனங்கள் (Wagons), கப்பல் கட்டுமானம் மற்றும் ரயில்வே உபகரண உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டிடாகர் ரெயில் சிஸ்டம்ஸ் லிமிடெட் (Titagarh Rail Systems Ltd.,) நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. உமேஷ் சௌத்ரி, துணை நிர்வாக இயக்குநர் திரு. பிரிதிஷ் சௌத்ரி, பொது மேலாளர் திரு. ஹெச். எஸ். விக்டர் கனகராஜ் ஆகியோர் சந்தித்துப் பேசினர்
#CMJosephVijay