59 ஆண்டுகளுக்கு பிறகு
பெருந்தலைவர் காமராஜர் வழியில்
தமிழ்நாட்டிற்கு மீண்டும் அமைச்சர்!
திரு. ராஜேஷ்குமார் அவர்களுக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள். 🇮🇳✋
@RajeshKumarSMLA@INCTamilNadu
“எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு” — திருக்குறள்
இன்றைய அரசியல் சூழலில் நடைபெற்று வரும் சம்பவங்களை மக்கள் ஆழமாக சிந்தித்து பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசியலில் தற்போது அரங்கேறி வரும் சில நிகழ்வுகள் அனைத்தும் சாதாரண அரசியல் விமர்சனங்கள் அல்ல; திட்டமிட்டு உருவாக்கப்படும் குழப்ப அரசியலின் வெளிப்பாடுகளாகவே தெரிகின்றன.
தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்க முடியாமல், எப்படியாவது ஆட்சி அமைக்கும் வாய்ப்பை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சில சக்திகள் இணைந்து செயல்படுகின்றன என்பது நாளுக்கு நாள் வெளிப்படையாகி வருகிறது. குறிப்பாக, நேற்று இரவு ஆளுநர் மாளிகை முன்பு டிடிவி தினகரன் அரங்கேற்றிய அரசியல் நாடகம், அதன் தொடர்ச்சியாக இன்று காலை தேவையில்லாமல் தலையிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் வழக்கறிஞர் வில்சன் அளித்த பேட்டி — இவை அனைத்தும் ஒரே திரைக்கதையின் பகுதிகளாகவே தோன்றுகின்றன.
118 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தாலும் கூட ஆட்சி அமைக்க அழைக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தோடு, போலியான சந்தேகங்களை உருவாக்கி, பொய்யான தகவல்களை பரப்பி, அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி நடைபெறுகிறது. “போலி கடிதம்”, “தூய்மை எங்கே போனது?” போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி விஜய் அவர்களை குறிவைத்து பேசுவது அரசியல் நாகரிகத்திற்கும் ஜனநாயக மரபுகளுக்கும் ஏற்றதல்ல.
தேர்தல் ஆணையத்திற்கே தவறான தகவல்களை வழங்கி வழக்குகளை சந்தித்த பின்னணி கொண்டவர்கள், சட்டப் பிரச்சினைகளில் சிக்கி திகார் சிறையில் இருந்தவர்கள், இன்று தங்களை ஜனநாயகத்தின் காவலர்களாக காட்டிக் கொண்டு பேசுவது அரசியல் நையாண்டியின் உச்சகட்டமாகும். மக்கள் அனைத்தையும் கவனித்து கொண்டிருக்கிறார்கள்.
ஒருபுறம் ஆளுநரிடம் புகார் கொடுத்து அழுத்தம் கொடுக்க முயற்சி; மறுபுறம் அதையே ஆதரிப்பது போல் சிலர் பேட்டிகள் மற்றும் அறிக்கைகள் வெளியிடுவது — இவை அனைத்தும் ஒரே நோக்கத்திற்காக நடத்தப்படும் ஒருங்கிணைந்த அரசியல் நடவடிக்கைகளாகவே தெரிகின்றன. “குதிரை பேரம்” என்ற இல்லாத ஒன்றை உருவாக்கி, மக்கள் மத்தியில் குழப்பத்தை விதைக்க முயல்வது வெற்றி பெறாது.
மேலும், “என் அப்பன் குதிருக்குள் இல்லை” என்பது போல், யாரும் கேட்காத நேரத்தில் காலையிலேயே திமுக சார்பில் வழக்கறிஞர்கள் வந்து விளக்கம் அளிப்பதும், இந்த முழு பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. நேற்று இரவு தொடங்கிய குற்றச்சாட்டு அரசியலை, இன்று காலை சிலர் தாமாக முன்வந்து நியாயப்படுத்த முயன்றதே பல சந்தேகங்களுக்கு பதிலாக அமைந்துள்ளது.
தமிழக மக்கள் உண்மையையும் பொய்யையும் பிரித்தறியும் அறிவு கொண்டவர்கள். திருக்குறள் சொல்வதுபோல், யார் சொன்னாலும் அதன் மெய்ப்பொருளை காண்பதே அறிவு. இன்று நடப்பவற்றின் பின்னணியில் யார் இருக்கிறார்கள், யாருக்காக இந்த நாடகங்கள் நடத்தப்படுகின்றன என்பதெல்லாம் தெள்ளத் தெளிவாக வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.
ஜனநாயகத்தை மதிக்காமல் மக்கள் தீர்ப்பை திசைதிருப்ப முயலும் எந்த அரசியல் சதியும் இறுதியில் மக்கள் நீதிமன்றத்தில் தோல்வியடையும்.
ப.செந்தமிழ் அரசு @PSenthamizhAra1
துணைத் தலைவர்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
கொள்கை பற்றி காங்கிரஸுக்கும் ராகுல் காந்தியை அவர்களுக்கும் பாடம் எடுக்க டி.ஆர்.பாலு அவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை!
பதவிக்காக கொள்கையை விற்ற அரசியல் வரலாறு யாருக்கு என்பது தமிழகம் நன்றாக அறிவது.
ராஜாஜியை “குலக்கல்வி” என்று விமர்சித்து பின்னர் அவரோடு கூட்டணி வைத்தது யார்?
“கடவுள் இல்லை” என்று மேடைகளில் முழங்கி, பின்னர் ஓட்டுக்காக கோவில் கோவிலாக சுற்றியது யார்?
பெரியாரை பேசிக் கொண்டு, அதிகாரத்திற்காக பெரியாரின் கொள்கையையே கைவிட்டது யார்?
காங்கிரஸ் கட்சி மதவாதத்துக்கு எதிராக இந்த நாட்டின் ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் காக்க போராடுகிறது.
அதற்காக எடுக்கும் அரசியல் முடிவுகளை விமர்சிக்க முன், தங்களின் அரசியல் பச்சோந்தி வரலாற்றை டி.ஆர்.பாலு அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
கொள்கை வேட்டி என்று பேசி, பதவிக்காக அந்த வேட்டியையே தூக்கி எறிந்தவர்கள் இன்று காங்கிரஸுக்கு அறிவுரை சொல்ல வருவது அரசியல் நகைச்சுவை!
எங்கள் தலைவர் ராகுல் காந்தியை அவர்களையோ காங்கிரஸ் சித்தாந்தத்தையோ அவமதிக்க முயன்றால், கடந்த கால அரசியல் முகமூடிகள் அனைத்தையும் மக்கள் முன் கிழித்து காட்ட தயங்க மாட்டோம்.
"யாகாவாராயினும் நாகாக்க என்பதை உணர்ந்து வாய் மூடி மௌனமாக இருக்க வேண்டுமென எச்சரிக்கையோடு உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்"
— செந்தமிழ் அரசு @PSenthamizhAra1
மாநில துணைத்தலைவர்
Tamil Nadu Congress Committee
கொள்கை பற்றி காங்கிரஸ் கட்சியையோ, எங்கள் இளம் தலைவர் Rahul Gandhi அவர்களையோ விமர்சிக்க டி.ஆர்.பாலு அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை.
பதவிக்காக கொள்கையை மாற்றியது யார்?
“கடவுள் இல்லை” என்று பேசி, பின்னர் தேர்தல் அரசியலுக்காக “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என முழங்கியது யார்?
ராஜாஜியை கடுமையாக விமர்சித்து பின்னர் அவருடைய கட்சியோடு கூட்டணி வைத்தது யார்?
பெரியாரின் கொள்கையை பேசிக் கொண்டு, பின்னர் அதிகாரத்திற்காக அதையே மறந்தது யார்?
தமிழகம் அனைத்தையும் நினைவில் வைத்திருக்கிறது.
இன்று மதவாத சக்திகள் தமிழகத்தில் காலூன்ற முயலும் சூழலில், மக்கள் தீர்ப்பை மதித்து, மதச்சார்பின்மையை காக்கும் அரசியல் நிலைப்பாட்டை தான் காங்கிரஸ் எடுத்துள்ளது.
காமராஜரின் பாதை — சமூகநீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகம்.
அதைத்தான் நாங்கள் தொடர்ந்து காக்கிறோம்.
எனவே, காங்கிரஸ் கொள்கையையோ Rahul Gandhi அவர்களையோ விமர்சிப்பதற்கு முன், தங்கள் அரசியல் வரலாற்றை டி.ஆர்.பாலு அவர்கள் திரும்பிப் பார்க்க வேண்டும்.
“யாகாவாராயினும் நாகாக்க. என்பதை உணர்ந்து வாய் மூடி மௌனமாக இருக்க வேண்டுமென எச்சரிக்கையோடு உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம் ”
— செந்தமிழ் அரசு @PSenthamizhAra1
மாநில துணைத்தலைவர்
Tamil Nadu Congress Committee
@news7tamil@News18TamilNadu@polimernews@sunnewstamil@INCTamilNadu@INCIndia
முன்னாள் எம்பி கனிமொழி @KanimozhiDMK@DrKanimozhiSomu என் வி என் சோமுவுக்கு
திமுக வரலாறு தெரியாது.
சித்தாந்தத்தில் பிறந்து சித்தாந்தத்தில் வளர்ந்தது காங்கிரஸ் பேரியக்கம் சித்தாந்தவாதிகளுக்கே சித்தாந்தத்தை சொல்லித் தர நினைப்பது கொல்லன் தெருவில் ஊசி விற்பதற்கு சமமாகும் காங்கிரஸ் பேரியக்கம் வளர்ந்த காலத்தில் நீங்கள் தவழும் குழந்தையாக இருந்திருப்பீர்கள் கடந்த கால வரலாறுகளை எண்ணிப் பார்க்க வேண்டும் உங்கள் சித்தாந்தம் எப்படிப்பட்டது என்று மாமியார் உடைத்தால் மண்குடம்
மருமகள் உடைத்தால் பொன் குடம்
என்பது போல் பேசக்கூடாது
கடந்த கால வரலாறுகள் நீங்கள் எப்படி எல்லாம் கொள்கையை மீறி யாரோடெல்லாம் கூட்டணி வைத்தீர்கள் என்பதை பேசலாமா பேசினால் உங்களால் தாங்க முடியுமா காங்கிரஸ் கட்சி கொள்கைக்காக கொள்கை வழி நடக்கின்ற கட்சி நாங்கள் பதவி சுகத்தை விரும்பி அமைச்சர் வேண்டும் என்று நினைத்திருந்தால் சிறுபான்மை அரசாக நீங்கள் தமிழகத்தில் இருந்த பொழுது டெல்லியில் மட்டும் அமைச்சர்களை கேட்டு வாங்கிக்கொண்டு பதவி சுகத்தை நீங்கள் அனுபவித்த போது நாங்கள் எங்கள் தலைமைக்கு கட்டுப்பட்டு நீங்கள் சொன்னீர்களே சித்தாந்தத்திற்கு கட்டுப்பட்டு எந்த அமைச்சரையும் கேட்காமல் சிறுபான்மை அரசான உங்களை வாழ வைத்ததை மறந்து விட்டு இன்றைக்கு நீங்கள் பேசக்கூடாது
கடுமையான விளைவுகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும் நேருக்கு நேர் விவாதிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நீங்கள் தயாரா என்பதை கனிமொழி என் வி என் சோமு தெரிவிக்க வேண்டும் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிகின்ற வேலையை இனி மேலும் விட்டு விடுங்கள்
செந்தமிழ் அரசு @PSenthamizhAra1
மாநில துணைத்தலைவர்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
நம் காங்கிரஸ் பேரியக்கத்தின் இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் வழிகாட்டுதல், தமிழக அரசியலில் புதிய மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் வலுவான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றி கழகத்தோடு இணைந்து பயணிக்க எடுக்கப்பட்ட முடிவு மனதார வரவேற்கத்தக்கது.
தலைவர் ராகுல் காந்தி அவர்களின் தொலைநோக்குப் பார்வையோடு முன்னெடுக்கப்படும் இந்த அரசியல் பயணம், நம் பேரியக்கத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.
இந்த கூட்டணி வெறும் அரசியல் புரிதல் மட்டுமல்ல, தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும் ஊக்கமளிக்கும் ஒரு நல்வாய்ப்பாகும்.
புதிய பாதையில் பயணிக்கும் காங்கிரஸ் பேரியக்கம், தனது செல்வாக்கையும், அடிமட்டத்திலான பலத்தையும் மேலும் வலுவாக நிலைநாட்டும்.
தலைவரின் இந்த முடிவால் ஈர்க்கப்பட்டு, ஏராளமான இளைஞர்கள் உற்சாகத்துடன் நம் பேரியக்கத்தில் இணையத் தொடங்குவார்கள் என்பது உறுதி.
இளைஞர்களின் ஆற்றலும், இயக்கத்தின் அனுபவமும் இணையும்போது, தமிழக அரசியல் வானில் புதிய விடியல் பிறக்கும் என்பதில் ஐயமில்லை.
எத்தகைய சவால்களையும் முறியடித்து, மக்களுக்கான குரலாக நம் இயக்கம் வீறுநடை போடும் என்பதை இத்தருணத்தில் உறுதிபடக் கூறுகிறேன்.
இந்த அரசியல் கூட்டணி, வெற்றியை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் ஒரு வலுவான அஸ்திவாரமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
வாருங்கள், ராகுல் காந்தி அவர்களின் கரங்களை வலுப்படுத்துவோம்; தமிழகத்தின் எழுச்சிக்காகவும், இயக்கத்தின் வளர்ச்சிக்காகவும் ஒன்றிணைந்து உழைப்போம்
@RahulGandhi@TVKVijayHQ@RajeshKumarSMLA@s_kanth
தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள
திரு. ராஜேஷ் குமார் MLA அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
இன்றைய அரசியல் சூழலில், கொள்கை பிடிப்புக்கும், இயக்கத்தின் மீதான அசைக்க முடியாத விசுவாசத்திற்கும், நேர்மைக்கும் கிடைத்துள்ள தகுதியான அங்கீகாரம் இது.
அதிகாரத்திற்கும் வசதிகளுக்கும்
முக்கியத்துவம் அளிக்கப்படும் காலகட்டத்தில், காங்கிரஸ் பேரியக்கத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள பற்று போற்றத்தக்கது.
சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி, காங்கிரஸ் கட்சியின் குரலை நீங்கள் இன்னும் உரக்க ஒலிப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
உங்கள் தலைமையின் கீழ் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தில் புதிய பரிமாணத்தை எட்டும்.
எங்களின் முழுமையான ஆதரவும், ஒத்துழைப்பும் எப்போதும் உங்களுக்கு உண்டு. உங்களின் இந்த புதிய பொறுப்பு தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கம் மேலும் வலுப்பெற வழிவகுக்கட்டும்.
வலிமையுடன் முன்னேறுவோம்!
என்றும் இயக்கப் பணியில் ,
@PSenthamizhAra1
மாநில துணைத்தலைவர்,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.
மக்கள் ஆட்சியர் தோழர் சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியில் வாக்கு சேகரித்த போது திருப்பாச்சூர் காரணி வசந்தம் நகர் இருளர் சமுதாய மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்த போது
பொது ஒழுக்கம் கிடையாது!
பொது சிந்தனை கிடையாது!
குப்பைகளை ரோட்டில்
வீசுவதற்கு வெட்கமே கிடையாது!
ஆனால் மழை நீர் வடியவில்லை
என்றால் ஆயிரம் புகார்கள்,
கேலிகள், கிண்டல்கள்...
தோழர் என்.எஸ். மறைவு!
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், விடுதலைப் போராட்ட காலத்திலேயே மாணவர் இயக்க போராட்டங்களுக்கு தலைமையேற்றவரும், #CPIM தமிழ்நாடு முன்னாள் மாநிலச் செயலாளராக பணியாற்றியவரும், 2 முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவரும், விடுதலைப் போராட்ட வீரரும்,
Match will be shifted tomorrow..
Another sleepless night 🌉 uff 🥵 to See MS Dhoni hitting winning runs with CSK lifting their 5th 🏆 Trophy.
#IPL2023Final#IPLFinal#MSDhoni𓃵
𝗡𝗲𝘅𝘁 𝗗𝗲𝘀𝘁𝗶𝗻𝗮𝘁𝗶𝗼𝗻: 𝗙𝗜𝗡𝗔𝗟 ✈️😉
Congratulations 🥳 to 𝗖𝗛𝗘𝗡𝗡𝗔𝗜 𝗦𝗨𝗣𝗘𝗥 𝗞𝗜𝗡𝗚𝗦, the first team to qualify for #TATAIPL 2023 Final 💛
#Qualifier1 | #GTvCSK | @ChennaiIPL