‘பத்திரிகையாளர் விஜயனை விசாரணை என்ற பெயரில் உடனடியாக அழைத்துச் சென்றது, வீட்டிற்கு சென்றவரை மீண்டும் அழைத்து எந்தவித விதிகளையும் பின்பற்றாமல் செல்போனை பறித்துள்ளது, மறுநாளும் விசாரணை என்ற பெயரில்...
#journalist#chennaipressclub#TVK#Nakkheeran
https://t.co/7ZjFcRwO7z
பத்திரிகையாளர் திரு. விஜயன் அவர்களை விசாரணை என்னும் பெயரில் அராஜகமான முறையில், அவரது தொலைப்பேசியைப் பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் அடைத்து வைத்திருக்கும் தவெக அரசின் காவல்துறையின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஜனநாயக அடிப்படையில் விமர்சிக்கும் மாற்றுக் கட்சியினரைப் பழிவாங்கும் கீழ்மையான அரசியலை, தற்போது பத்திரிகையாளர்கள் மீதும் செய்யத் தொடங்கிவிட்டது தவெக அரசு.
உடனடியாக பத்திரிகையாளர் விஜயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
இந்த பதிவிற்காக அவசர அவசரமாக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் ...
சென்னையில் தன் மனைவியுடன் தனியாக வசித்து வந்த வினோத்
அவசர அவசரமாக விசாரணை என்ற பெயரில் சில மணி நேரத்துக்குள்ளாக கைது.
மோடி அரசைவிட விட பல மடங்கு பயந்து தடுங்கும் அரசாக இந்த அரசு இருக்கிறது...
தேர்தலுக்கு முன்பு அஜித்குமார் வீட்டுக்குச் சென்ற விஜய்க்கு, இன்று சபரிவர்மன் வீடு ஏன் இவ்வளவு தூரமாகத் தெரிகிறது?
காவல்துறை சித்திரவதையால் உயிரிழந்த சபரிவர்மன் குடும்பத்தின் கதறல் கண்ணுக்குத் தெரியவில்லையா?
இல்லை, உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையே உங்களுக்கு இன்னும் அனுமதி வழங்கவில்லையா?
அஜித்குமார் வீட்டிற்குச் சென்றது வெறும் தேர்தல் நாடகமா?
சபரிவர்மன் மரணத்திற்கு நீதி பெற்றுத் தருவதாக ஒரு வார்த்தை சொல்லக்கூட உங்களுக்குத் திராணியில்லையா?
நாகர்கோயில் சபரிவர்மன் காவல் மரணத்திற்குத் தவெக அரசு தான் முழுப்பொறுப்பேற்க வேண்டும்.
மேலும், உயிரிழந்த சபரிவர்மனின் குடும்பத்திற்கு உரிய நீதியும், நியாயமும் விரைந்து கிடைக்க வேண்டும்!
- கழக துணைப் பொதுச் செயலாளர் திருமிகு. @KanimozhiDMK எம்.பி அவர்கள்
முதலமைச்சரின் கீழ் இயங்க வேண்டிய காவல்துறை, இப்போது தன் இஷ்டத்துக்கு இயங்குகிறது.
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற ஒரு சூழ்நிலையை இந்த அரசு சரிசெய்ய வேண்டும்.
- கழக துணைப் பொதுச் செயலாளர் திருமிகு. @KanimozhiDMK எம்.பி அவர்கள்
நாகர்கோவில் கிளை சிறையில் காவல்துறையினரின் வன்முறையால் உயிரிழந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் அவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினேன்.
இந்த காவல் மரணம் நிகழ்ந்து மூன்று நாட்கள் கடந்த பின்னும், முதலமைச்சர் அவர்களிடமிருந்து எந்தவொரு விளக்கமோ அறிக்கையோ இன்னும் வரவில்லை. எந்தவொரு அமைச்சரும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்க்கவில்லை. பாதிக்கப்பட்டிருக்கும் அக்குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கூட இந்த அரசு முன்வரவில்லை. மொத்தத்தில், எப்போதும் போல இப்பிரச்சனையிலும் பொறுப்பேற்காமல் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறது தவெக அரசு.
1. ஒரு பொறுப்பில் உள்ளவரை விடுமுறைக்கு அனுப்பி, அதுக்கு பதிலா ஒரே ஒரு நாள் duty க்கு வந்தவரை வச்சு இந்த பத்திரம் பதிவு எப்படி நடக்கும்? யார் சொல்லி இந்த ஒரு நாள் duty போடப்பட்டது?
2. இப்போ பத்திரப்பதிவு செஞ்சது யாரு, அவரை சஸ்பெண்ட் பண்ணா மட்டும் போதுமா? யாரு வித்தாங்க? யாரு வாங்குனாங்க? அவர்களை அரெஸ்ட் பண்ணிருக்கணும்ல? ஏன் இந்த நிமிஷம் வரை பண்ணல?
3. சரி, அந்த நபரை சஸ்பெண்ட் பண்ணிட்டீங்க.. ஆனா அதை கேள்வி கேட்க வேண்டிய ஆளுக்கு ஏன் பதவி உயர்வு உடனே கொடுத்து, பழநில இருந்து சென்னைக்கு மாத்துனீங்க?
4. நிலம் வாங்கியது உங்கள் உறவினர்கள்னு சிலர் பேசியது பொய், அப்படிதான் நானும் நம்புறேன்.. ஆனா இப்போ இந்த பதவி உயர்வு உங்க துறையில் நடந்த உத்தரவுதான். இதுவும் உங்களுக்கு தெரியாம நடந்துடுச்சா?
5. சரி எல்லாம் விடுங்க, இப்போ நீதிமன்றம் தலையிட்டு அந்த பத்திரப்பதிவு ரத்து செஞ்சிடுச்சு, இப்பவாச்சும், வாங்குனவங்க யாரு, வித்தவங்க யாரு, அவங்க background என்ன? Money trail எங்க இருந்து வந்துச்சு? இவங்களுக்கு பின்னாடி இருக்க சார் யாரு?
இதெல்லாம் இனியாவது உங்க transparency அரசாங்கம் காட்டுமா?
இது எல்லாமே ஒரு சாமானியனின் logical சந்தேகங்கள். பதில் சொல்லுங்க சார்.
முதலமைச்சர் விஜயின் கீழ் இயங்கும் காவல்துறையினர் வசம் இருந்த விசாரணை கைதியான சபரி வர்மன் லாக் அப் மரணம் அடைந்துள்ளார்
சபரி வர்மனின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து அவர்களுக்கு அரசு வேலை வழங்குவாரா முதல்வர் விஜய்?
தனது கட்சி சார்பில் நிதி உதவியும் அரசு சார்பில் நிதி உதவியும் வழங்குவாரா?
கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் இடதுசாரிகள் விடுதலை சிறுத்தைகள் முதல்வருக்கு அழுத்தம் கொடுப்பார்களா?
"எனக்கு மடியில் கனமில்லை.. வழியில் பயமில்லை.. எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு தயார்” - லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு பிறகு திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
#EVvelu | #DMK | #DVAC