தலைமைச் செயலாளர் ஐயா இறையன்பு அவர்கள் இந்த மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமல்ல, அவர் பணிக்காலம் முழுவதும் அவர் ஆற்றிய பணிகள் அளவிட முடியாதவை. அதைக் கொண்டு அவர் ஒரு போதும் விளம்பரம் தேடியதும் இல்லை. ஐயாவிற்கு நம் வாழ்த்துகளும் நன்றியும்.. அதேபோல் அவரின் சகோதரர் திருப்புகழ் IAS அவர்கள் ஓய்வு பெற்ற பின்னரும் சென்னை மழை நீர் வடிகால் பணிகளில் தமது சீரிய பங்களிப்பைத் தந்தவர். ஆணவமில்லாத அறம் செறிந்த இவர்களின் பணி தொடரட்டும்