எமது விடுதலை இயக்கத்தின்
முதல் வித்து
முதல் மாவீரர்
முதல் சுடர் லெப் சங்கர் அவர்களின்
அன்புத் தந்தையை இன்று தமிழர் தேசம் இழந்து விட்டது.
இற்றைக்கு ஒன்றரை தசாப்தத்திற்கு முந்தைய நினைவுகளைத் திருகி மீளெடுத்துக் கொள்கின்ற��ம். எமது மாபெரும் விடுதலைப் போராட்ட இயக்கமும், எமது போராளிகளின் தன்னிகரற்ற வீரமும் கண் முன்னே விரிகின்றது.
தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் பல்லாயிரக்கணக்கான தியாகங்களோடும், இழப்புகளோடும் முள்ளிவாய்க்காலில் ஆயுத அமைதி அடைந்தது. அந்தமண்ணில் இறுதிப்போர்க்காலத்தில் சிங்களப்பேரினவாதம் மேற்கொண்ட இனப்படுகொலையின் சாட்சியமாக புலம்பெயர்ந்து, தேசவிடுதலைக்காக எமது அரசியற��� செயற்பாடுகளை முன்னகர்த்திய வேளைகளில் எல்லாம் சங்கர் அப்பா அவர்கள்
தனது முதுமையினையும் பொருட்படுத்தாது ஆதரவுக்கரம் தந்து
உறுதியோடு இணைந்திருந்தார்.
தாயகத்தில் சிங்களப் பேரினவாதத்தின் அடைக்குமுறைகளை உடைத்தெறிந்து தன்னெழுச்சிகொள்ளும் போராட்டங்களிலும் சங்கர் அப்பாவின் பங்களிப்பும் ஆதாரமாய் அமைந்து வலிமை சேர்த்துள்ளது.
குடும்பத்திலிருந்தும் விலகிச் சமூகத்தின் பால் அக்கற�� கொண்டு செயலாற்றுகின்ற பெற்றோர்களே சமூகத்தின் எப்போதுமான நம்பிக்கை.
இன்று அந்த வீரப்பெற்றோரின் தந்தையாக அமைதியில் சங்கர் அப்பா அவர்கள் உறங்குகின்றார். இன்று அசைவற்ற இந்த உடல் இவ்வயது வரையும் ஓயாது விடுதலையை வேண்டியது என்பது நிம்மதியாய் உறங்கும் அவரது முகத்தில் தெரிந்தாலும், உறங்காத தமிழீழக்கனவு அவர் விழிகளில் நீண்டு நிலைத்திருந்ததை நாம் அறிவோம்.
மாவீரப் பெற்றோரின் த���யாகங்களில் எழுந்த தமிழீழ வரலாற்றின் பக்கங்களில் எங்கள் சங்கர் அப்பாவின் பெயருக்கும் எப்போதும் ஒரு தனித்துவம் இருக்கும்.
சமர்கள நாயகன்
தமிழர்களின் வீரத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக எழுச்சி சின்னமாக தளபதி பால்ராஜ் அவர்கள் இருப்பார்
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளர்
பொட்டு அம்மான்
கேரளத்தை கலக்கும் தமிழன்
தாய் யாழ்ப்பாண தமிழச்சி
தந்தை கேரளா
கேரளாவில் சக்திமிக்க நபராக வலம்வரும் யாழ்ப்பாணத்தான் ஆகிய "வேடன்" தனது நெஞ்சில் "அ" என்று பச்சை குத்தியுள்ளான், இதற்கு அந்த தமிழ்மகன் கூறும் விளக்கங்களை கேளுங்கள்
அம்மா
அப்பா
அன்பு
அறிவு
அழகு
அரசியல்
அஞ்சாமை
இதுதான் எனது அ என்று மலையாளிகளுக்குக் கூறியுள்ளான்
#வேடன்