தவெகவின் கிழக்கு மாவட்டச் செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள், மாமூல் கேட்பதாக, செங்கல் சூளை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் வேலூர், கணியம்பாடியில் பேருந்தை மறித்துப் போராட்டம்!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே
11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில் மற்றுமொரு திமுக ஆட்சியாகவே இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சி இருக்கிறதோ? என்ற அச்சம் தமிழக மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே எழத் தொடங்கிவிட்டது.
இன்றைய முதல்வரின் கூற்றுப்படியே கேட்கப்போனால்,
“தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?”
சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்திடவும்,
தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய வசனங்களை மறந்திருந்தால், அவற்றை மீண்டும் போட்டுப் பார்த்து நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு இவ்வரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@AIADMKOfficial
என்ன அயோக்கியத்தனம் இது? @TVKVijayHQ
கோவையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை அந்தச் சிறுமியின் தாயாருடைய ஒப்புதல் இல்லாமல் எரித்து முடித்திருக்கிறது காவல்துறை.
என்னையும், என் உறவினர்களையும் மருத்துவமனைக்கு உள்ளே விடவில்லை. எனக்கே தெரியாமல் குழந்தையின் உடலை எடுத்துச் சென்றுவிட்டார்கள் எனக் குற்றஞ்சுமத்துகிறார் சிறுமியின் தாயார்.
தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில், வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது.
இதனால் அவரின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுராந்தகம் அருகே, 14 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, இரவு முழுவதும் காட்டுப் பகுதியில் பரிதவித்து, காலையில் 10 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்து காவல் நிலையத்தை அடைந்திருக்கிறார். பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியின் மனநிலையை எண்ணிப் பார்த்தால், மீள முடியாத துயருக்கு ஆளாகும் நிலையே நமக்கு மிஞ்சுகிறது.
சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பெண்குழந்தை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட கொடூர ரணமே இன்னும் ஆறவில்லை.
மேலும்,
நாங்குநேரி, சிவகங்கை, மானாமதுரை பகுதிகளில் நடந்த அரிவாள் வெட்டு. ஒருபாவமும் அறியாதோர் மீதும் நடந்த கண்மூடித்தனமான வெறியாட்டம்.
நாமக்கல்லில் 7 வயது அறியாச் சிறுமி கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமை.
மானாமதுரையில் காவல் துறையால் கைது செய்யப்பட்ட ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, காவல் மரணம்.
சென்னை காசிமேட்டில் இளம்பெண்ணை வயிற்றிலும் சொல்லொணா இடத்திலும் எட்டி உதைத்த திமுக நிர்வாகி.
கிருஷ்ணகிரியில் 70 வயது முதியவரைக் கொன்றுவிட்டு அவரது 60 வயது மனைவிக்கும் பாலியல் வன்கொடுமை.
சென்னை திரிசூலத்தில் இரட்டைக் கொலை.
கோவை அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்டு 43 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி, உணவுப் பாதுகாப்பில் அலட்சியம்.
திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் மற்றும் அக்கட்சியின் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு...
எனக் கடந்த ஒன்றரை வாரத்திற்குள் மட்டும் பாதுகாப்பில் அலட்சியமும், எண்ணற்ற வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
இந்தச் சம்பவங்கள், ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனங்களையும் உலுக்கி எடுத்துக்கொண்டிருக்கின்றன. ஒன்றரை வாரத்திற்கு உள்ளாகவே தமிழகத்தை உலுக்கி எடுக்கும் நிகழ்வுகள் இவ்வளவு என்றால் இந்தத் தி.மு.க. ஆட்சியின் ஐந்தாண்டுகளைக் கணக்கிட்டால் எவ்வளவு இருக்கும்?
பொதுமக்களுக்குப் பாதுகாப்பில்லை. பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை. முதியோர்களுக்குப் பாதுகாப்பில்லை. இளைஞர்களுக்குப் பாதுகாப்பில்லை. இப்படி பாதுகாப்பு என்பதே தமிழ்நாட்டில் எங்கும் இல்லை என்ற நிலை.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு முதலமைச்சரால் எப்படி மௌனமாக இருக்க முடிகிறது?
தமிழகம் முழுவதும் பச்சிளம் குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை அனைத்துத் தரப்புப் பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதும், கொலை செய்யப்படுவதும் தினம் தினம் நடந்து வருகிறது.
தன்னுடைய ஆட்சியில் தமிழகமே பெரும் கொடுமைக்கு உள்ளாகி இருப்பதைக் கண்டுகொள்ளாமல், தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வரும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பில் கவனம் செலுத்தாதது ஏன்?
இப்படி ஒரு ஆட்சி தேவையா? என மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர்.
சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதிலும் கடமை தவறிய, பொறுப்பற்ற, முழுவதுமாகத் தோல்வி அடைந்த திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப, தமிழக மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
மோதிலால் நேரு
ஜவஹர்லால் நேரு
இந்திரா காந்தி
சஞ்சய் காந்தி
ராஜீவ் காந்தி
சோனியா காந்தி
பிரியங்கா காந்தி
ராகுல் காந்தி
இதுவெல்லாம் வாரிசு அரசியலிலும், குடும்ப ஆதிக்கத்திலும் வராதா?
வாரிசு அரசியல் செய்வதில் திமுகவுக்கு முன்னோடி காங்கிரசு.
திமுக செய்வது மூன்று தலைமுறை வாரிசு அரசியல்; ஒரு குடும்ப ஆதிக்கம்!
காங்கிரசு செய்வது ஐந்து தலைமுறை வாரிசு அரசியல்; ஒரு குடும்ப ஆதிக்கம்.
What Bro? @TVKVijayHQ
இலங்கை தமிழர்களுக்கு சீமான் செய்ததை விட காங்கிரஸ் அதிகம் செய்து இருக்கிறது - @KS_Alagiri // கண்டிப்பா சார். நீங்க செஞ்ச செய்கைலதான் பாதி இனமே அழிஞ்சு போச்சு ! நீங்க சொல்லாட்டியும் நாங்க மறக்க மாட்டோம் சார் !!
டெபாசிட் எடுத்தால் தான் அரசியல் பேச முடியும் என்றால் 2016 யில் முதல் முறை போட்டியிட்டு தோற்ற பொழுதே நாங்கள் அமைதியாயிருப்போம்.. ஆனால் அதற்கு பிறகு தான் அதிகமாக பேசத்தொடங்கினோம்..
ஜனநாயகத்தில் வென்றால் தான் டெபாசிட் எடுத்தால் தான் விமர்சிக்க முடியும் பேச முடியும் என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை.. ஜனநாயகன் படத்தை ஆதரித்தால் பத்தாது ஜனநாயகத்தை ஆதரிங்க ப்ரோ…
வாரிசு அரசியல் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இதெல்லாம் பேசுவது திமுககாரனுங்க 10 வருசமா பண்ணிட்டாங்க நீங்கள் வேற ட்ரை பண்ணுங்க…
புதிதாக அரசுப் பொறுப்பேற்க உள்ள விஜய் தலைமையிலான தவெகவினருக்கு வாழ்த்துகள்!
பரந்தூர் வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிராகப் போராடிய மக்களிடம் வாகனப் பரப்புரை செய்தார் விஜய். இப்போது அதிகாரத்தில் அமரப் போகிறார்.
விளை நிலங்களைப் பறித்து வானூர்தி நிலையம் அமைப்பதை ஒருநாளும் அனுமதிக்க முடியாது என அறிவிப்பாரா முதல்வர் விஜய்?
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவாரா?