மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீதான கைது நடவடிக்கை,கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல்!
மாண்புமிகு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் மீது காவல்துறையால் எடுக்கப்பட்டு வரும் கைது நடவடிக்கை, சனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் என்றும், கருத்து சுதந்திரத்தின் மீதான நேரடி தாக்குதல் என்றும் தமிழர் தேசம் கட்சி சார்பில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்!.
ஒரு பேச்சு இரட்டை அர்த்தத்தில் பேசப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அது குறித்த முறையான மற்றும் நியாயமான விசாரணையை மேற்கொண்ட பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தவெக பெண் நிர்வாகி புகார் அளித்தார் என்பதற்காகவே எதிர்க்கட்சித் தலைவரை அவசர அவசரமாக கைது செய்திருப்பது முற்றிலும் பழிவாங்கும் அரசியலாகும்.
திருச்சியில் நடை��ெற்ற நிகழ்வில் @CMOTamilnadu அவர்கள் பேசும்போது இரட்டை அர்த்தம் தரும் வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவ்வாறு இருக்க, பொதுமக்கள் யாரேனும் புகார் அளித்தால் முதலமைச்சர் மீது இதே காவல்துறை வழக்கு பதிவு செய்யுமா?
முதலமைச்சரின் நண்பர் அல்லது நடிகை த்ரிஷா சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதற்காக மட்டுமே இந்த அளவுக்குக் காவல்துறை விரைந்து செயல்படுகிறதா? அல்லது சாமானிய மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் இதே வேகத்தில் நடவடிக்கை தொடருமா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
நாளை சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், அரசின் மீதான விமர்சனங்களைத் தடுத்து, எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது சனநாயத்திற்கு ஆபத்தான தவறான முன்னுதாரணமாகும்.
அரசியல் விமர்சனங்களையும் கருத்துக்களையும் சட்டரீதியாகவும் சனநாயக ரீதியாகவும் எதிர்கொள்வதே முதிர்ச்சியான அரசுக்கு அழகு. எனவே, எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த பழிவாங்கும் கைது நடவடிக்கைக்கு தமிழர் தேசம் கடும் கண்டனங்களை பதிவு செய்கிறது!..
தமிழக அமைச்சரவையில் தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையர் சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லை..
அரசியல் அதிகாரமற்ற முத்தரையர் சமுதாயத்திற்கு தொடர்ச்சியாக எல்லா கட்சிகளிலும் அங்கீகாரம் மறுக்கப்படு���ிறது..
@TVKVijayHQ
#TNCabinet
தமிழக அரசியல் வரலாற்றில் மாற்றங்கள் என்பது தவிர்க்க முடியாதவை. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக தலைமையில் அமையவுள்ள புதிய அரசுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரி��ித்துக் கொள்கிறேன்.
ஒரு சனநாயக நாட்டில் ஆட்சியதிகாரம் என்பது வெறும் அதிகாரம் மட்டுமல்ல; அது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைச் சுமந்து நிற்கும் ஒரு பெரும் பொறுப்பாகும்.
@arivalayam தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் அங்கமாக, மக்கள் நலனை எப்போதும் உயர்த்திப் பிடிப்பதே எங்களது லட்சியம்.
அந்த வகையில்,அமையவுள்ள புதிய அரசு கீழ்க்கண்ட முக்கிய அம்சங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஒரு தோழமை சக்தியாக நான் வலியுறுத்துகிறேன்!..
அரசு என்பது மேல்தட்டு மக்களுக்கானது மட்டுமல்ல; கடைக்கோடியில் வாழும் பாமர மக்களின் கண்ணீரைத் துடைப்பதே உண்மையான அரசு. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் சிறு, குறு தொழில்களைப் பாதுகாப்பதில் புதிய அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும்.
தமிழகத்தின் தனிப்பெரும் அடையாள��் நமது 'மாநில சுயாட்சி'. நிதிப் பங்கீடு மற்றும் மொழி உரிமை ��கியவற்றில் தமிழகத்தின் நலன்களை விட்டுக் கொடுக்காமல் மத்திய அரசிடம் போராடிப் பெறுவது இந்த அரசின் முதன்மைக் கடமையாக இருக்க வேண்டும்.
தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் கட்டிக்காத்த சமூக நீதிப் பாதையில் தமிழகம் தொடர்ந்து பயணிக்க வேண்டும். இட ஒதுக்கீடு முறையைச் சீர்குலைக்க நினைக்கும் சக்திகளுக்கு இடம் கொடுக்காமல், அனைத்து சமூகத்தினருக்குமான சமமா��� வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து, பாசனத் திட்டங்களை விரைந்து முடிப்பதோடு, காவிரி உள்ளிட்ட நதிநீர் உரிமைகளில் தமிழகத்தின் பங்கினை உறுதி செய்ய வேண்டும். இயற்கை வளங்களைச் சுரண்டுவதைத் தடுத்து, பசுமைத் தமிழகத்தைப் பாதுகாக்க வேண்டும்.
அனைவருக்கும் தரமான கல்வி மற்றும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் இலவசமாகக் கிடைப்பதை உறுதி செய்�� வேண்டும். அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதும், கிராமப்புற சுகாதார மையங்களை மேம்படுத்துவதும் மிக அவசியம்.
தேர்தல்கள் வரும், போகும்; ஆனால் மக்கள் நலன் என்பது நிரந்தரமானது. அமையவுள்ள புதிய அரசு, மக்களின் நம்பிக்கையைச் சிதைக்காமல், வெளிப்படைத்தன்மையுடனும், ஊழலற்ற முறையிலும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு.
மக்களுக்காகப் பணியாற்றும் எந்தவொரு ஆக்கபூர்வமான முயற்சிக்கும் எங்களது தார்மீக ஆதரவு என்றும் உண்டு. அதேவேளையில், மக்கள் நலனுக்கு எதிராகச் செயல்படும் சூழலில், ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சியாக களத்தில் நிற்போம்!..
"கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய்!"
என்ற தாரக மந்திரத்தை உலகிற்குத் தந்த மாமேதை, இந்திய அரசியலமைப்பின் சிற்பி, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய் உத��த்த, இந்திய அரசியலமைப்பின் தந்தை, சமூகத்தில் வேரூன்றிக் கிடந்த தீண்டாமை எனும் இருளைத் தனது அறிவாலும் எழுத்தாலும் துடைத்தெறிந்த மாபெரும் புரட்சியாளர் "அண்ணல் அம்பேத்கர்" அவர்களின் பிறந்தநாளில் அவர் கண்ட சமத்துவக் கனவை நனவாக்கவும், சாதி வேற்றுமையற்ற சமூகத்தைப் படைக்கவும் உறுதியேற்போம்!
மக்களே நம் பலம்! மாற்றமே நம் இலக்கு!
இன்று 07.04.2026,செவ்வாய்க்கிழமை - @arivalayam மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின், மா��்புமிகு தமிழக முதல்வர் @mkstalin பேராதரவு பெற்ற, நத்தம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராகிய நான், நமது நத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 45-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தேன்.
செல்லுமிடமெல்லாம் தாய்மார்கள் எடுத்த ஆரத்தி, பெரியவர்களின் ஆசி, இளைஞர்களின் எழுச்சிமிகு வரவேற்பு என நத்தம் தொகுதி முழுவதும் உதயசூரியன் ஒளியால் நிறைந்திருக்கிறது.
"வெற்று வாக்குறுதிகள் அல்ல... உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்கள் முன்னேற்றத்திற்காக உழைக்கக் காத்திருக்கிறேன்!"
மறக்க முடியாத வரவேற்பளித்த எனது இரத்தத்தின் ரத்தமான உறவுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
நத்தம் தொகுதியின் வளர்ச்சிக்காகவும், தமிழகத்தின் விடியலுக்காகவும் உங்களின் பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் அளித்து பெருவெற்றி பெறச் செய்திட அன்புடன் வேண்டுகிறேன்!....
#வெல்��ோம்_ஒன்றாக
ந��ங்கள் எண்ணிக்கையால் அமைந்த கூட்டணி அல்ல; மதச்சார்பின்மை போற்றி - மாநில உரிமை காக்கும் எண்ணத்தால் இணைந்த கூட்டணி!
தமிழ்நாடு இதுவரை காணாத மாபெரும் வெற்றி பெறப் போகும் நம் “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி” கட்சித் தலைவர்கள் சொல்கிறோம்…
“#வெல்வோம்_ஒன்றாக!”
தமிழர் தேசம் கட்சி முத்திரையர்களின் அரசியல் அதிகாரம் மீட்பு மாநாடு, தீர்மானங்கள் விளக்கும் பொதுக்கூட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியில் நடைபெற்றது; இதில் திமுக மாநில மருத்துவரணி இணைச்செயலாளர் அண்ணாமலை ரகுபதிக்கு தமிழர் தேசம் கட்சியின் சார்பாக அக்கட்சியின் நிர்வாகிகள் மாலை அணிவி���்து வரவேற்றனர்!
#TamilarDesamKatchi | #AnnamalaiRagupathi | #DMK | #TNNews | #LatestNews
இன்றைய தினம் 18.03.2026,புதன்கிழமை - மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்களை தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத்தலைவர் @KKSelvakumaroff அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்!
#சமநீதியார்#tdk_it_wing#தமிழர்_தேசம்_கட்சி
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிமட்டத் தொண்டனாகத் தொடங்கி, இன்று தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்ற உழைக்கும் அயராத உழைப்பாளி.
"மக்களைத் தேட��� மருத்துவம்" முதல் "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" வரை, ஒவ��வொரு குடும்பத்திலும் ஒருவராக நின்று நலன் காக்கும் தலைவர்.
சமூக நீதியையும், சமத்துவத்தையும் இரு கண்களாகக் கொண்டு, மாநில உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கும் தளபதி.
"சமூக நீதிப் பாதையில் சளைக்காமல் நடக்கும் சரித்திர நாயகர்.
"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..."
என்று உறுதியேற்று, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திச் செல்லும் நமது மாண்புமிகு தமிழக முதலம��ச்சர் @mkstalin அவர்களுக்கு இனிய பிறந்ததின நல்வாழ்த்துக்கள்!
"தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தோள் கொடுப்போம்!
வன்மையாக கண்டிக்கின்றோம்.
மதரீதியாக கூர்உணர்வுள்ள பகுதியான முத்துப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது கெட்டுவிடாத சட்டம் ஒழுங்கு மாவ���ரன் ராஜேஷ் அவர்களின் நினைவேந்தலின் போது கெட்டுவிடும் என்பது எவ்வளவு பெரிய முரண்?வன்மையான கண்டனங்கள்!(2/2)
பிப்ரவரி 22 முத்துப்பேட்டை முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், மாவீரன் கோவிலூர் ராஜேஷ் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவுநாளில்,அவரது நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்துவதற்காக சென்ற,தமிழர் தேசம் கட்சி மற்றும் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் சமநீதிபோராளி@KKSelvakumaroff (1/2)
இன்றைய தினம் 21.02.2026, சனிக்கிழமை - புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1351 வது சதய விழாவை முன்னிட்டு, வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பாக 3-ம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வை, மாண்புமிகு தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் @SMeyyanathan அவர்களோடு இணைந்து, கொடியசைத்து தொடங்கி வைத்தேன்!
#NewsUpdate | திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தமிழர் தேசம் கட்சியின் தலைவர் செல்வகுமார் சந்திப்பு
அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் இருக்கும் ‘வலையர் புனரமைப்பு வாரியத்தை’ திருத்தி, அதனை ‘முத்தரையர் மறுவாழ்வு திட்டம்’ என அறிவித்திட வேண்டும் எனக் கோரிக்கை
#SunNews | #CMMKStalin | #Trichy
கடந்த அதிமுக ஆட்சியில், அரசாணை நிலை எண்:21 நாள்: 26.02.2021 ல் வெளியிடப்பட்டு, செயல்படுத்தப்படாமலும், நிதி ஒதுக்கீடு செய்யாமலும், காலாவதியாக���விட்ட "வலையர் புனரமைப்பு வாரியத்தை" திருத்தி முத்தரையர் சமூகம், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மேம்பட "முத்தரையர் மறுவாழ்வு திட்டமாக"அறிவித்திட வேண்டுமென தமிழக முதல்வர் மாண்புமிகு @mkstalin அவர்களிடம் கோரிக்கை வைத்தேன்!
மேலும்,சனவரி 25,2026 திருச்சியில் பிரமாண்டமாக நடந்து முடிந்த முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 183 தீர்மானங்கள் அடங்கிய தீர்மான ���ுத்தகத்தையும் வழங்கினேன்!