எல்லோருக்கும் பயனுள்ள
மனிதனாக வாழ நினைப்பவன். தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தொண்டன் உதயநிதிஸ்டாலின் அவர்களின்ரசிகன்.
திருவொற்றியூர்K.P.சங்கர்MLAஅவர்கள்வழியில்
ஒரு திராவிட சகாப்தத்தை காக்க வந்த ஒரே தலைவனின் வரலாறு🔥
M.K.Stalin - The Long Walk to Power
உங்களை நோக்கி...
��ிரைவில்...
#HBDCMMKStalin #OraeThalaivan #ஒரே_தலைவன்
சொன்னதை செய்தோம்... செய்வதைச் சொல்கிறோம்!
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டு பெண்களின் வாழ்வில் ஒளி ஏற்றிய 'திராவிட மாடல்' அரசு. கட்டணமில்லா பேருந்து முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வரை - இது வெறும் திட்டமல்ல, வெல்லும் தமிழ்ப் பெண்களின் சுயமரியாதைக்கான அங்கீகாரம்!
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
ஒன்றிய பாஜக மற்றும் அடிமை NDA கூட்டணி தமிழ்நாட்டுக்கு இழைத்து வரும் அநீதியையும் மக��கள் முன்பு எடுத்துரைக்கும் விதமாகவும் "தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரையானது 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கழகத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
காட்பாடி, காட்டுமன்னார்கோயில், ஒட்டன்சத்திரம், உதகமண்டலம், முசிறி, கீழ்வேளுர், மணப்பாறை, திருச்சி மேற்கு, மதுரை வடக்கு, வந்தவாசி, நன்னிலம், திருமங்கலம், விருதுநகர், ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் மாபெரும் எழுச்சியோ��ு நடைபெற்றது.
#தமிழ்நாடு_தலைகுனியாது
39-க்கு 39! மேற்கில் உதிக்கும் சூரியன் - கோ���்டையைத் தீர்மானிக்கும் கொங்கு மண்டலத்தின் எழுச்சி! நேற்றைய கோவையின் பிரம்மாண்டம், இனி மேற்கு மண்டலம் கழகத்தின் எஃகு கோட்டை என்பதை உலகிற்கு உறுதிசெய்துவிட்டது!
#ஸ்டாலின்_தொடரட்டும்
கும்மி கொட்டி பாட்டுப் பாடி... வீடு வீடாக வாக்கு சேகரிப்பு! ‘ஸ்டாலின் அய்யா தொடரட்டும்.. தமிழ்��ாடு வளரட்டும்’ எனத் தமிழ்நாட்டின் மகளிர் படை உற்சாகமாகப் பரப்புரை! கழகத்தின் சாதனைகளை இல்லங்கள் தோறும் கொண்டு சேர்க்கும் #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்!
போத்தனூர் மகாத்மா காந்தி நினைவிட வளாகத்தை நேரில் பார்வையிட்டு, அங்குள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்
#CMStalinInCoimbatore
பத்திரிகைச் செய்தி
வெல்லும் தமிழ்ப் பெண்கள் – பரப்புரை
பெண்களின் உரிமைகளை உறுதி செய்த திராவிட மாடல் அரசு
சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கழக மகளிரணி சார்பில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் தேர்தல் பரப்புரையானது முன்னெடுக்கப்பட்டுவருகிறது. தமிழ்நாட்டின் அனைத்து வீடுகளுக்கும் ஸ்டாலினின் மகளிர் படை உறுப்பினர்கள் நேரடியாக சென்று திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கி பரப்புரை செய்து வருகின்றனர்.
இன்றைய பரப்புரையின் போது திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்கள் மட்டுமல்லாது, பெண்களின் சம வாய்ப்பு, சம ���ரிமைக்கும் , முன்னேற்றத்திற்கும் திராவிட மாடல் அரசு செய்துள்ள சாதனைகளையும் பட்டியலிட்டு விளக்கினர் ஸ்டாலினின் மகளிர் படையினர்.
அரசுப்பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 40% ஆக அதிகரிக்கப்பட்டது. உள்ளாட்சியில் பெண்களுக்கான 50% இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்தியது, பெண்கள் வாங்கும் பத்துலட்சம் வரையிலான சொத்துக்கு 1% பத்திரப்பதிவு கட்டணவிலக்கு, பெண் ஓதுவார்கள் நியமனம் என பல்���ேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு மகளிருக்கான அரசியல் அதிகாரத்தையும், நியாயமான உரிமைகளையும் உறுதி செய்துள்ளது திராவிட மாடல் அரசு என்பதை ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்து சென்று சேரக்கப்பட்டது.
உள்ளாட்சியில் பெண்களுக்கான 50% இட ஒதுக்கீட்டினை அமல்படுத்தியதன் மூலம் 11 பெண்கள் முதன்முறையாக அரசியல் அதிகாரமிக்க மேயர் பதிவியைப் பெற்றுள்ளனர். அதேபோல கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பெண்களுக்கான அரசியல் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையின் முதல் பெண் மேயரான திருமதி.பிரியா ராஜன் அவர்கள் வீடு வீடாக சென்று திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கி பரப்புரை செய்தார். அதேபோல காஞ்சிபுரம் மேயர் திருமதி. மகாலட்சுமி அவர்களும் ஒவ்வொரு வீடாக சென்று ஆதரவு திரட்டினார். வீட்டு மகளிர்களோடு இயல்பாக அமர்ந்தும் , அவர்களின் வேலைகளை பகிர்ந்து கொண்டும் பரப்புரை மேற்கொண்டனர் ஸ்டாலினின் மகளிர் படை உறுப்பினர்கள்.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
மேற்கு மண்டலத்துக்கான அறிவுச்சுரங்கமாக நமது #DravidianModel அரசு கோவையில் அமைத்து வரும் 'பெரியார் அறிவுல���ம்' கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டேன். தங்கள் ஊருக்கு யார் வந்தாலும் கோவை மக்கள் பெருமிதத்தோடு அழைத்துச் சென்று காண்பிக்கும் சிறப்புக்குரிய அறிவுக்கோயிலாக இதனைக் கூடிய விரைவில் திறந்து வைப்பேன்!
மேலும், "என் வாழ்வே எனது செய்தி" என வாழ்ந்து இந்தியர்களின் இதயங்களில் நிறைந்த அண்ணல் காந்தி அவர்களின் நினைவகத்தையும் பார்வையிட்டேன்.
முன்னாள் முதலமைச்சரும் அருமைச் சகோதரருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன்.
திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கு��் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
#வெல்வோம்_ஒன்றாக!
@OfficeOfOPS
மேற்கு மண்டலமே அதிரும் வகையில் கோவையில் திரண்டிருக்கிறது கொள்கைப் படை! The OG Dravidian Stock! பெரியார், அண்ணா, கலைஞரின் வழியில் களமிறங்கும் கருப்பு-சிவப்புப் படை.
இன்று கோவையில் சந்திப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும்
மேற்கு மண்டலமே அதிரும் வகையில் கோவையில் திரண்டிருக்கிறது கொள்கைப் படை! The OG Dravidian Stock! பெரியார், அண்ணா, கலைஞரின் வழியில் களமிறங்கும் கருப்பு-சிவப்புப் படை.
இன்று கோவையில் சந்திப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும்
ஒன்றிய பாஜக மற்றும் அடிமை NDA கூட்டணி தமிழ்நாட்டுக்கு இழைத்து வரும் அநீதியையும் மக்கள் முன்பு எடுத்துரைக்கும் விதமாகவும் "தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரையானது 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கழகத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அருப்புக்கோட்டை, பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பத்தூர், கே.வி.குப்பம், ஆற்காடு, திருநெல்வேலி, அந்தியூர், அரவக்குறிச்சி, தொண்டாமுத்தூர், லால்குடி, காங்கேயம், திருப்பரங்குன்றம், செங்கம், நெய்வேலி, திருத்துறைப்பூண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் மாபெரும் எழுச்சியோடு நடைபெற்றது.
#தமிழ்நாடு_தலைகுனியாது
திராவிட மாடல் அரசின் சாதனைகளை ஊர் ஊராகக் கொண்டு சேர்த்து, எங்களின் பணிச்சுமையைக் குறைக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாயுள்ளத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🤗🤗🤗