காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் (Cauvery Technical Cell-cum-Inter-State Waters Wing) துணைத் தலைவராக இருந்த திரு. எம். செல்வராஜ் அவர்களின் ராஜினாமா கடந்த 2026 ஜூன் 28-ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த மிக முக்கியமான பதவியை மீண்டும் நிரப்புவதற்கான அரசா��ை, சுமார் மூன்றரை மாதங்களுக்குப் பிறகு, அக்டோபர் 9-ஆம் தேதிதான் வெளியிடப்பட்டிருக்கிறது. அரசாணை வெளியிடப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகியும், இன்றுவரை புதிய துணைத் தலைவர் நியமிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.
தமிழ்நாட்டின் நீராதார உரிமைகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகளைக் கையாள்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு பொறுப்பான பதவியை நிரப்புவதிலேயே இத்தகைய காலதாமதம் ஏற்படுவது அரசின் நிர்வாகத் திறன் மற்றும் பொறுப்புணர்வு குறித்த கேள்விகளை எழுப்புகிறது. இது சாதாரணமான ஒரு நிர்வாகப் பதவி அல்ல, தமிழ்நாட்டின் நீர் உரிமைகளைப் பாதுகாப்பதில் முக்கியமான தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான பணிகளுடன் தொடர்புடைய பொறுப்பு.
ஒருபுறம் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் கவலையில் உள���ளனர். மறுபுறம் காவிரி ��ீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கர்நாடகத்தின் மேகதாது அணைத் திட்ட விவகாரமும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்குச் சவாலாக நீடிக்கிறது. இத்தனை முக்கியமான பிரச்சினைகள் ஒருபுறம் இருக்கும்போது, அவற்றைக் கையாள வேண்டிய காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் (Cauvery Technical Cell-cum-Inter-State Waters Wing) மிக முக்கியமான துணைத் தலைவர் பதவி காலியாக இரு��்பது எவ்வளவு பெரிய நிர்வாகக் குறைபாடு?
தமிழக அமைச்சர்கள் திரு. N. ஆனந்த் மற்றும் திரு. ஆதவ் அர்ஜுனா ஆகியோர், மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மனு அளிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தின் சொந்த நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தி, முக்கியப் பொறுப்புகளுக்கான நியமனங்களை உரிய நேரத்தில் மேற்கொள்ளாமல், மத்திய அமைச்சரைச் சந்தித்���ு மனு அளிப்பது மட்டுமே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிடும் என்று தவெக அரசு நினைக்கிறதா?
விவசாயிகளின் வாழ்வாதாரமும், தமிழ்நாட்டின் நீர் உரிமையும் தொடர்புடைய இவ்வளவு முக்கியமான விவகாரங்களில் தவெக அரசின் இத்தகைய நிர்வாகத் தாமதமும் பொறுப்பின்மையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
@Udhaystalin திரு தமிழக துணை முதலமைச்சர் அவர்களுக்கு சேலம் மாநகரம் வசித்து வரும் ரவீந்திரன் என்னுடைய ம��ன் படித்து முடித்து வேலை இல்லாமல் ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறான் உங்களால் முடிந்த உதவி கவர்மெண்ட் ஜாப் ஒரு வேலை வாங்கித் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்னுடைய மகன் அருண்
@Udhaystalin திரு மாண்புமிகு தமிழக துணை முதல் அமைச்சர் அவர்களுக்கு அன்பார்ந்த என் வாழ்த்துக்கள் என் மகன் படித்து முடித்து வேலை இல்லாமல் உங்களால் ஒரு சிறிய உதவி நாங்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் SC. கவர்மெண்ட் உத்தியோகம் தேவைப்படுகிறது