கொள்கைப் பணி- கழகப் பணி-மக்கள் பணி எனக் கழகத் தலைவர் @mkstalin அவர்கள் வழிகாட்டுதலில் தொடர்ந்து களமாடும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @udhaystalin அவர்கள், கழக இளைஞர் அணிச் செயலாளராக 7-ஆண்டுகளை நிறைவுசெய்து 8-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.
கழக இளைஞர் அணியை வலுப்படுத்த மாவட்ட-மாநகர-ஒன்றிய-நகர-பகுதி-
பேரூர்-கிளை-வார்டு-பாகம் வரை 5 லட்சம் நிர்வாகிகள், அவர்களுக்குக் கொள்கை உரமூட்ட முரசொலி பாசறை பக்கம் - முத்தமிழறிஞர் பதிப்பகம்- அறிவுத் திருவிழா, இளம் தலைமுறையினர் பயன்பெறும் வகையில் சட்டமன்றத்
தொகுதிதோறும் கலைஞர் நூலகம், கழகத்தின் கொள்கைகளைத் திசையெங்கும் பரப்ப, 232 இளம் பேச்சாளர்கள் என அவர் இதுவரை உருவாக்கி இருக்கும் Asset-களே அவரது 7 ஆண்டுப் பணியின் சாட்சியங்களாகத் திகழ்கின்றன.
இளைஞர் அணிச் செயலாளராகப் பொறுப்பேற்று 8ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக இளைஞர் அணிச்செயலாளர் @Udhaystalin தலைமையில் கழகப் பணி தொடர்வோம்!
#Udhay4Youth #DMK4TN
தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும் - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.@GGPonnambalam அவர்களை இன்று நேரில் சந்தித்து உரையாடினோம்.
போருக்குப்பின் இலங்கையில் நிலவும் சூழல் – அங்குள்ள தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் உள்ளிட்டவைக் குறித்து அவர் நம்மிடம் எடுத்துரைத்தார்.
அவரது கருத்துக்களை கழகத்தலைவர் @mkstalin அவர்களிடம் எடுத்துச்சென்று, இலங்கையில் வாழும் தமிழ்மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என்று உறுதியளித்தோம்.
இந்த சந்திப்பின்போது, நம்முடைய இளைஞரணி சார்பில் முத்தமிழறிஞர் பதிப்பகம் வெளியிட்டுள்ள 'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' நூலைப் பரிசளித்தோம்.
அடுத்த கட்சி எம்.எல்.ஏகள் ஒவ்வொருத்தரா இளநீர் புல்லிங் மாதிரி, இன்னைக்கு இருக்கக்கூடிய அரசு, இன்னைக்கு இருக்கக்கூடிய முதலமைச்சர்கள் இழுத்துட்டு இருக்காரு.
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
முதல் முறை வாக்களிக்க இருக்கும் இளையோர்களே..நாள்தோறும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வளமான தமிழ்நாட்டை உருவாக்கிய திமுகவுக்கு வாக்களிப்போம். 🌄
தமிழ்நாடு மேலும் செழிக்கட்டும்; அனைவரது வாழ்வு சிறக்கட்டும்!
#VoteForDMK
நம்முடைய திராவிட மாடல அரசு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது அதன் அடிப்படையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு புதுமைப்பெண் திட்டம்,தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல் திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி போன்ற ஏராளமான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக கல்லூரி மாணவர்களுக்கு உலகம் உங்கள் கையில் எனும் திட்டத்தின் அடிப்படையில்,
சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மண்டலம் 14 மற்றும் 15-ல் உள்ளடங்கிய 23 கல்லூரிகளில் 3657 மாணவ - மாணவிகளுக்கு மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்து துறை அமைச்சர் அண்ணன் மா.சுப்பிரமணியன் அவர்களுடன் இணைந்து மடிக்கணினியை வழங்கிய போது.
@mkstalin@Udhaystalin@Subramanian_ma@ThamizhachiTh@arivalayam@DMK_Chennai
பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற இந்திய மகளிர் கபடி அணியில் சர்வதேச கபடிப் போட்டியில் (ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகள்) இந்திய அணிக்காக விளையாடி தங்கப் பதக்கம் வென்று கண்ணகி நகருக்கு வந்துள்ள செல்வி. கார்த்திகாவை சந்தித்து சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்ற மகிழ்ச்சியான தருணம்.
@mkstalin@Udhaystalin@ThamizhachiTh@arivalayam@DMK_Chennai@SportsTN_
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வணக்கத்திற்குரிய தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க,
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அண்ணன் மா.சுப்பிரமணியன் அவர்களின் தலைமையில் நீலாங்கரை R.K. கன்வென்சன் சென்டரில் 27/10/2025 அன்று சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மண்டலம் 14 மற்றும 15-ல் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரப் பணிகள் சம்மந்தமாக அனைத்து துறை பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது.
இந்நிகழ்வில்,
சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையர் திரு.அப்தாப் ரசூல் இ.ஆ.ப மாவட்ட மழைக்கால கண்காணிப்பு அலுவலர்கள் (Monitoring Officers) மற்றும் மண்டல குழு தலைவர்கள்,கல்வி நிலை குழு தலைவர், மாமன்ற உறுப்பினர்கள், அனைத்து துறை அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் உடனிருந்தனர்.
@mkstalin@Udhaystalin@Subramanian_ma@ThamizhachiTh@arivalayam@DMK_Chennai@chennaicorp
"என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி"
இந்திய அரசியலமைப்பு சட்டம் எல்லோருக்கும் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்று வாக்குரிமை; ஆனால் இதனை எளிய மக்களிடமிருந்து பறிக்க, குறுக்கு வழியில் வெற்றிபெற இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் மூலம் S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கையில் எடுத்திருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
பீகார் மாநிலத்தில் ஏறத்தாழ 65 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாக்குரிமையை S.I.R. மூலம் நீக்கிய தேர்தல் ஆணையம் தற்போது அதனை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
ஆனால், தமிழர்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கும் பெருங்கடமையும், பொறுப்பும் தி.மு.கழகத்திற்கு என்றும் உண்டு.
எனவே, S.I.R. எனும் அநீதியிலிருந்து தமிழ்நாட்டைக் காத்திட - ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழகத்தின் வெற்றியை உறுதி செய்திட - என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும், அவற்றை எப்படி மேற்கொள்ள வேண்டும், கழகத் தலைமை முதல் கடைக்கோடியில் உள்ள தொண்டர் வரை அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவது எப்படி என்பது உள்ளிட்ட அனைத்தையும் விவாதித்து, அவற்றைக் களத்தில்
செயல்படுத்துவதற்காக நாளை (28.10.2025) செவ்வாய்கிழமை, காலை 9.00 மணி அளவில் மாமல்லபுரம், ஈ.சி.ஆர்.சாலையில் உள்ள கான்ஃப்ளூயன்ஸ் அரங்கில் (Confluence Hall)ல் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" என்ற பயிற்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.
மக்களின் வாக்குரிமையைக் காப்போம் - எதேச்சதிகாரத்தில் இருந்து தமிழ்நாட்டைக் காப்போம்!
#என்வாக்குச்சாவடி_வெற்றிவாக்குச்சாவடி
#தமிழ்நாடு_தலைகுனியாது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வணக்கத்திற்குரிய தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க,
சோழிங்கநல்லூர் தொகுதிக்குபட்ட சென்னை மாநகராட்சி மண்டலம் 14 வார்டு எண் 182 கந்தன்சாவடி எம்.ஜி.ஆர் சாலையில் நெடுஞ்சாலை துறையின் பராமரிப்பில் உள்ள
மழைநீர் வடிகால்வாயில் உள்ள அடைப்புகளை அகற்றும் பணியினை மாநகராட்சி ஆணையர் திரு.ஜெ. குமரகுருபரன் இ.ஆ.ப அவர்களுடன் ஆய்வு செய்த போது.
இவ் ஆய்வின் போது,
பகுதி கழக செயலாளர்/ மண்டலக்குழு தலைவர்
S.V ரவிச்சந்திரன்,வட்ட செயலாளர் ம. ஆறுமுகம், உள்ளிட்ட அனைவரும் உடனிருந்தனர்.
@mkstalin@Udhaystalin@mkstalin@ThamizhachiTh@arivalayam@DMK_Chennai@chennaicorp@otchengalpattu
S.I.R. விவகாரத்தில் முன்னெடுக்கப்படும் ஜனநாயக விரோத செயல்பாடுகளை, சட்டரீதியாக எதிர்கொள்வது மட்டுமல்ல, மக்களுடன் நின்று களத்திலும் எதிர்கொள்ளும் வலிமை திமுகவுக்கு உண்டு. மக்கள் நலனையும் மாநில உரிமைகளையும் காக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் 'தமிழ்நாடு தலைகுனியாது' என உறுதி ஏற்போம்.
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய கழக உடன்பிறப்புகள் அனைவரும் களப்பணி ஆற்றுவோம்!
#என்வாக்குச்சாவடி_வெற்றிவாக்குச்சாவடி
#தமிழ்நாடு_தலைகுனியாது
இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே திரு. @narendramodi அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஒடிசா - பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.க.,வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.