சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக கூடுதல் படுக்கைகள் வேண்டுமென்ற நிலையில், சட்டமன்ற உறுப்பினர் முன்னெடுப்பாக மருத்துவமனையின் மூன்று தளங்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 97 படுக்கைகளை ஏற்படுத்தி அதை இன்று திறந்து வைத்தோம்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி,ராயப்பேட்டை வெஸ்லி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொரோனா சிகிச்சை மையத்தை மாண்புமிகு முதல்வர் அவர்கள் இன்று திறந்து வைத்தார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின்கீழ் செயல்படும் இம்மையத்தில் ஆக்சிஜன் செறிவூட்டியோடு கூடிய 133படுக்கைகள் உள்ளன.