அவிங்க ரெண்டு பேரு பிரிஞ்சது கூட பிரச்சன இல்ல. ஆனா நாடு இப்படி போறதால தான் ஒமைகிரான் வருதுனு கம்பு சுத்துற கும்பல், இன்னைக்கு யூடியூபுல பொரணி பேசுற கும்பல், முக்கிய செய்தியா பேசி தீர்கும் ஊடகம்... இன்னும் என் வாழ்க்கைல என்ன எல்லாம் பாக்க வேண்டி இருக்கோ?
30 நாட்களில் சிகப்பழகு, சோப்பை உபயோகித்தால் நம்பிக்கை கூடும் என்பதை போன்றே இதுவும்.
முந்தைய விளம்பரங்களாவது பெண்ணை வணிக பொருளாக மட்டுமே பார்த்தது. ஆனால் இந்த நகை கடை விளம்பரங்கள், பெற்றோர் பிள்ளை ��ீதான பாசத்தையும் வணிக பொருளாக மாற்றுகிறது.
பெற்றோருக்கு பிள்ளைகள் மீது அன்பும் பிரியமும் இருப்பது இயல்பானதே. பெற்றோர்களின் பார்வையில் பிள்ளைகள் மீதான மகிழ்ச்சி என்பது, அப்பிள்ளை நல்ல தேக நலனோடு, தன் திறமை கொண்டு சுய காலில் நிற்பதாகும்.
இதில் எங்கு இருந்து பிள்ளைகள் மீதான அன்பு நகைகளால் தீர்மானிக்க படுகிறது?