இனியும் ஏமாற்றி விடாதே..
இனியாவது நீ வா!
நாளைய பொழுதின் விடியல்கள், நமது தலைவனின் தோள்களிலிருந்து எழும்பட்டும்.
ஏனெனில், அவன் அடைபட்டுக் கிடந்த நாட்களின் பொழுதுகளெல்லாம், நமது ஆற்றாமைகளைச் சுமந்துதான் வருகின்றன.
நாலுமறிந்த நீதானே, எங்கள் தலைவரது நல்லது, கெட்டதை அறிந்தவனாக அகிலமாள்கிறாய் ஆண்டவனே!
எனவே, எங்கள் அபலம் போக்கிவிடு! எங்கள் தலைவரைத் தந்துவிடு ரஹ்மானே!.
சந்தோசத்தால் எங்கள்
நெஞ்சங்களை நிரப்பிவிடு நாயனே!
மக்கள் தலைவனின் இதயத் துடிப்புக்கள், விடுதலைக் கதவுகளின் வாசலைத் தட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. கட்டுக்கள்தான் இன்னும் களராது கெட்டியாக இருக்கின்றன. காவலாளிகள் களைத்துப் போயும் கூட, ஏவலாளிகளின் இதயங்கள் இன்னும் இளகியதாக இல்லையே!
நாளை வியாழக்கிழமை, நீதிமன்றத் தீர்ப்புக்களால் எங்கள் நெஞ்சங்களை நீ சந்தோசத்தால் நிரப்பிவிடு நாயனே! ஏனென்றால், எங்கள் தலைவரை அநீதி தீண்டிக்கொண்ட நாட்களிலிருந்து, நாம் நாதியற்றோராகிவிட்டோம் நாயனே!
ரவூப் ஹக்கீம் எம்.பி யின் இந்த கோரிக்கையை நியாயப்படுத்தி, எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷமன் கிரியல்லவும் சபையில் பேசினார்.
இந்த விடயம் தொடர்பில் நீதியமைச்சர் அலி சப்ரியும் சபையில் பதிலளித்தார். @Rauff_Hakeem@LKiriella
”73 நாட்களாக தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின், அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் சமயங்களின் போதெல்லாம், அந்த மனு விசாரணை நடைபெறவுள்ள தினத்தில் உச்ச நீதிமன்ற நீதியரசர்களில் எவராவது ஒருவர் தனிப்பட்ட...
பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது நீதியும் மறுக்கப்படுகின்றது. எனவே, பிரதம நீதியரசர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென சபையில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.” என்று முன்னாள் நீதியமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
தீர்ப்பு நாளின் அதிபதியான நாயனே!எங்கள் தலைவன் விடயத்திலும் நல்லதொரு தீர்ப்பைத் தா நாயனே! இல்லாத எம்போன்ற நல்லுள்ளங்களை, நீ நாதியற்றுச் செய்திடாதே! இறைவனே! #Justice4RishadBathiudeen#RB#SriLanka#lka
எங்கள் தலைவனின் விடுதலைதான், எங்களை ஏதிலிகளாவதிலிருந்து விடுவிக்கும் வல்லவா! போதிய சாட்சிகளில்லாமல் சமாளிக்கப் பார்க்கும் சந்தர்ப்பவாதம், எவர் மீதும் இப்படிப் பாயக்கூடாது ஏக நாயனே!