தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெறும் - திருமா !
திருமா அவர்களே ! நீங்கள் தவெக அமைச்சரவையில் இடம் பெறுவதில் கூட எங்களுக்கு வருத்தமில்லை . ஆனால் இன்று வரை ஸ்டாலினை தரங்கெட்ட வார்த்தைகளில் பேசி வரும் ஆதவ் அர்ஜூனை ஒரு பேச்சுக்கு கூட நீங்கள் கண்டித்ததைல்லை என்பதை தாண்டி , அவரை உங்கள் கட்சியிலிருந்து விலக்கிய பின்னரும் , திமுகவோடு தோழமையாக இருந்த போதும் அவரோடு நெருக்கமாக உறவில் இருந்து அவரின் வன்மத்துக்கு நீங்கள் இணங்கியே இருந்திருக்கிறீர்கள் . ஸ்டாலினுக்கும் திமுகவுக்கும் நீங்கள் இழைத்த துரோகம் மிகப்பெரியது . சென்ற பாராளுமன்ற தேர்தலில் உங்கள் வெற்றி ஊசலாடிய போது திமுக வெற்றியை மறந்து உங்கள் வெற்றிச் செய்திக்காக காத்திருந்தனர் உடன்பிறப்புக்கள் . பரவாயில்லை ! திமுக இதை விட மிகப்பெரிய துரோகங்களை சந்தித்து உறுதியோடு நிற்கிற இயக்கம் . நிற்கும் .
வாழ்த்துகள் . Bye Bye !
RT @ Suja_75 :
Event organisers மேல நடவடிக்கை எடுக்கலாம், Music Director மேல நடவடிக்கை எடுக்கலாம், ஏன், சம்பந்தப்பட்ட ஏரியா police மேல கூட நடவடிக்கை எடுக்கலாம்..
ஆனா, ஒரு இக்கட்டான சூழ்நிலைய பயன்படுத்தி, பெண்கள் கிட்ட கேவலமா நடந்துக்கிட்டவங்க மேல யாரும் நடவடிக்கை எடுக்க முடியாதில்ல...???! :((
அப்ப்பா .... தோற்றம் பார்த்து , யார் ... எவரிடம் ,... அறிவும் , அறிவுசார் ஆற்றலையும் , இறைவன் படைத்திருக்கிறான் என கண்டுபிடிக்க முடியவில்லை ...... மிக அருமையான பேச்சு....கட்டாயம் கேளுங்கள்...
வித்தியாசமான வரதட்சணை கேட்ட IAS அதிகாரி.. அதிர்ந்த மணமகள்..
பேராவூரணி அருகில் ஒட்டங்காடு கிராமத்தில் பிறந்து பல கஷ்டங்களுக்கு இடையே ஐஏஎஸ் அதிகாரியான பிறகு திருமணம் செய்ய வேண்டிய நிலையில்,பல படித்த பெண்களும் IAS,IPS,IRS,படித்த பெண்களும் மணமகளாய் வர தயாராக இருந்தும்,ஒரு மருத்துவரை தான் திருமணம் செய்வேன் என்று உறுதியாக இருந்தார்..
இதை மனதில் கொண்டு அவர்களுடைய பெற்றோர்கள் மருத்துவம் படித்த பெண்ணை கடந்த ஓராண்டு காலமாக தேடி வந்த நிலையில் பல மருத்துவம் படித்த பெண்கள் கிடைத்தும், இவருடைய நிபந்தனைகளை கேட்டு அனைவரும் ஓட்டம் பிடித்தனர்..
கடைசியாக சென்னை நந்தனம்_கல்லூரியில் கணித பேராசிரியரின் மகள் செல்வி.Dr_கிருஷ்ணபாரதி MBBS அவர் திருமணத்துக்கு ஒப்புதல் அளித்த பின் இன்று திருமணம் நடந்தது.
இதில் என்ன ஆச்சரியம் என்றால், அவருடைய நிபந்தனை தன்னை திருமணம் செய்துகொள்ளும் மருத்துவர் வாரத்தில் இரண்டு நாள்..தான் பிறந்த ஒட்டங்காடு கிராமத்திற்கும் சுற்றியிருக்கும் கிராமத்திற்கும் இலவசமாய் மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதையே நிபந்தனையாகும் வரதட்சனை யாகவும் இவர் கேட்டதே...திருமணம் தள்ளிப் போய்க் கொண்டிருக்க தற்பொழுது இவர் கேட்ட வரதட்சணையை கொடுத்து மணமகள் இன்றுமுதல் திருமதி_கிருஷ்ணபாரதி_சிவகுரு பிரபாகரன் ஆகி உள்ளார்கள்..
இக்காலத்திலும் இப்படி ஒரு அதிகாரி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது,அதுவும் டெல்டா பகுதியில் எம் குல விவசாய குடும்பத்தை சார்ந்த ஒருவர் நேர்மையாய்,மக்கள் மீது அன்பு கொண்டவராய் இருப்பது என்பது பெருமைக்குறியதே.