வட சென்னை தெற்கு மேற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு இணைச் செயலாளர் - அஇஅதிமுக
மற்றும்
வட சென்னை தெற்கு மேற்கு மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் - அஇஅதிமுக
புதிய கல்விக் கொள்கை திட்டத்தை ஏற்காவிடில், மத்திய அரசின் நிதியான ரூபாய் ஐந்தாயிரம் கோடியை தமிழகம் இழக்க நேரிடும் என்று மத்திய கல்வி அமைச்சர் கூறுவது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
"அதிமுக தலைமையில் சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையும்."
- மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#EPSfor2026#ADMK_KPM
அதிமுக வில் இளைஞர்களின் பங்களிப்பு குறித்து வினா எழுப்பிக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த விடையை கொடுத்திருக்கிறது வேலூரில் கழக இளைஞர் இளம் பெண்கள் பாசறை சார்பாக நடைபெற்ற மண்டல மாநாடும்...
சேலத்தில் கழக மாணவர் அணியின் சார்பாக நடைபெற்ற இளம் பேச்சாளர்களை தேர்வு செய்கிற நிகழ்வும்...
வேலூர் மாநாட்டில் எங்கெங்கு காணினும் இளைஞர்கள் என்கிற வகையில் பல்லாயிரம் இளைஞர்கள் திரண்டு நின்று வெற்றி மாநாடாக வேலூர் மாநாட்டை நிகழ்த்திய விதம் பேரற்புதமாக அமைந்திருந்தது!
அதேபோல் சேலத்தில் இளம் பேச்சாளர்கள் தேர்வு நிகழ்வில் இளைஞர்களும் இளம்பெண்களும் ஆர்வத்தோடு தேர்வில் கலந்து கொண்டு தங்களுடைய பேச்சுத் திறனை வெளிப்படுத்தி, எதிர்கால அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேடைகளில் தரமான பேச்சாளர்கள் வலம் வருவதற்கான உறுதியையும் நம்பிக்கையும் விதைத்தார்கள்!
இந்த இரண்டு இளைஞர் நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதற்கு எனக்கு வாய்ப்பளித்த கழகப் பொதுச்செயலாளர் அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவிக்கின்றேன்!!
வேலூர் மாநாட்டிற்கு என்னுடைய பங்களிப்பையும் தருகிற வகையில் வாய்ப்பு அளித்த கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் VPB பரமசிவம் @DrVpb அவர்களுக்கும்,
பேச்சாளர் தேர்வு நிகழ்வில் ஒரு நடுவராக கலந்து கொள்ள வாய்ப்பு அளித்த சகோதரர் கழக மாணவரணி செயலாளர் @RamaAIADMK சிங்கை ராமச்சந்திரன் அவர்களுக்கும் என்னுடைய அன்பும் நன்றியும் உரித்தாகுக!!
@EPSTamilNadu the most underrated Chief Minister of TN.
He has done so many good things for the state but not got the actual credit &
recognition for his work.
The greatest achievement was handling COVID in the best possible manner.
2026 I am sure people will make him the CM.
சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில், சினிமா காட்சிகளைக் காட்டிலும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைக்க வைக்கிறது.
அவர்களிடம் இருந்து தப்பித்த பெண்களை வீடு வரை துரத்தி வந்த கயவர்கள், வீட்டில் இருந்த உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் கூடியதால் அங்கிருந்து சென்றதாகவும், இது குறித்து புகாரளித்தால் "இரவு நேரத்தில் உங்களை யார் வெளியே போகச்சொன்னது" என்று காவல்துறையினர் கேட்டதாகவும் பாதிக்கப்பட்டோர் தரப்பில் கூறுகின்றனர்.
பெண்கள் இரவு நேரத்தில் நடமாடும் சுதந்திர உரிமை கூட ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் பறிக்கப்பட்டிருக்கிறதா?
பெண்களுக்கு எதிரான குற்றங்களை மேற்கொள்ள திமுக கொடி உள்ளிட்ட ஆளுங்கட்சி அடையாளம் என்பது லைசன்சா?
குற்றம் செய்பவர்கள் திமுகவினர் என்றால் காவல்துறை ஆமை வேகத்தில், காலம் தாழ்ந்து தான் செயல்படுமா?
#யார்_அந்த_SIR என்ற நீதிக்கான கேள்விக்கு எரிச்சல் அடைந்த திரு. ஸ்டாலின், இந்த SIR-கள் பற்றி என்ன சொல்லப் போகிறார்?
மாநிலத்தின் பிரதான சாலையான ECR-ல், பெண்களை இப்படி கொடூரமாக வழிமறித்து தைரியமாக தாக்க முயலும் அளவிற்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை அடியோடு கெடுத்துள்ள இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
இந்த வழக்கில், நேர்மையாக FIR பதிந்து, பாதிக்கப்பட்டோர் விவரம் லீக் ஆகாததை உறுதிசெய்து, அரசியல் தலையீடு இல்லாமல் இக்குற்றத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
#யார்_அந்த_SIRகள்
@CMOTamilnadu@AIADMKOfficial
சென்னை: இரவு நேரத்தில் திமுக கொடி கட்டிய காரில் வந்து அட்டூழியம்... பெண்கள் இருந்த காரை அவர்களின் வீடு வரை பின்தொடர்ந்து, மிரட்டிச் சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு... வெளியான அதிர்ச்சி வீடியோ! #Video#Chennai | #DMKFlag | #ShockingVideo
https://t.co/usy6JKlRaZ
#BREAKING || ஈபிஎஸ்-க்கு விவசாயிகள் நன்றி
சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அரிட்டாப்பட்டி விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்
டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ள நிலையில், விவசாயிகள் சந்திப்பு
#EPS | #EdappadiPalaniswami | #AIADMK | #Tungsten
சென்னை ECR-ல் காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய கார் மறித்து, போதையில் இருந்த பொறுக்கிகள், கொடூரமான முறையில் பாலியல் ரீதியாகவோ, கொலை வெறியுடனோ, இதர நோக்கத்துடனோ தாக்குதல் நடத்த முயற்சித்த காட்சி!
ஸ்டாலின் ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டில்,
சட்டம் இருக்கிறதா?
காவல்துறை இருக்கிறதா?
திமுக கொடியோடு, இப்படியொரு பதைக்க வைக்கும் குற்றத்தை செய்பவர்களை கைது செய்ய வேண்டிய காவல்துறை, "இரவு நேரத்தில் உங்களை யார் வெளியே போகச் சொன்னது" என்று காரில் சென்ற பெண்களைப் பார்த்து கேட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்யும் பொறுக்கிகளின் பின்னணியில் திமுக அடையாளம் இருப்பதும், காவல் துறை மவுனம் காப்பதும் தொடர்வது வெட்கக்கேடு!
இந்த வழக்கில் FIR பதியப்படுமா? பதியப்பட்டாலும் பெயர் வெளியில் லீக் ஆகாமல் இருக்குமா?
இந்த பொறுக்கிகளுக்கு என்ன பெயர் வைக்கப்போகிறீர்கள் @mkstalin? ஆதரவாளர்களா? அனுதாபிகளா?
#SaveOurDaughters
#பாலியல்பொறுக்கிகளை_விரட்டியடிப்போம்
(பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்பு கருதி, அவர்களின் முகம் மற்றும் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளன.)
புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்கள் தலைமையை ஏற்று,
*அ.இ.அ.தி.மு.க நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள் 🌱
திரளான இளைஞர் பட்டாளங்கள் அஇஅதிமுகவில் இணைந்தனர்...💪🏻