படக்குறிப்பு அல்ல, பாடம்!
ஆர்.முத்துக்குமார்.
பொதுவெளியில் ஒரு கருத்தைச் சொன்னால், அதற்கான ஆதாரத்தைக் கையோடு எடுத்துவந்து காட்டவேண்டும். மாறாக, நாட்டுடைமை ஆக்குங்கள், நீதிமன்றத்தில் காட்டுகிறோம் என வாய்தா வாங்கக்கூடாது. இதற்கென்ன ஆதாரம் என்றால், இந்தப் பெரியார் படம்தான் ஆதாரம்!
வைகை நதியில் அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் இருக்கும் கதவுகள் திறக்கப்பட்டு, நதிக்குள்ளே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. "நதி கார்ப்பார்க்கிங்காகப் பயன்படுத்தப்படுகிறது" என்று நேற்றைய நாளிதழ் ஒன்று புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது.
அதைப் பார்த்ததும் பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளரிடம் பேசினேன். "அந்தக் கதவின் சாவிகள் பொதுப்பணித்துறை, மாநகராட்சி, காவல்துறை ஆகிய மூவரிடமும் இருக்கிறது; நாங்கள் திறந்துவிடவில்லை" என்று கூறிய அவர், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து, உள்ளே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை எல்லாம் வெளியேற்றிவிட்டு எனக்குப் புகைப்படம் ஒன்றையும் அனுப்பியிருந்தார்.
ஆனால், இன்று காலை மீண்டும் அதே இடத்தில், வைகை நதியில் கார்கள் பார்க்கிங் செய்யப்பட்டுள்ளதையும், கதவு முழுமையாகத் திறந்திருப்பதையும் பொதுமக்கள் புகைப்படம் எடுத்து அனுப்புகிறார்கள்.
வைகை நதியைப் பார்க்கிங்காகப் பயன்படுத்தக் காரணமானவர்கள் மீதும், அதற்குத் துணைபோகும் அதிகாரிகள் மீதும் மதுரை மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
@Collector_MDU@Mdu_CityPolice@mdu_corp
#VaigaiRiver #Madurai #MaduraiDistrictCollector #PublicWorksDepartment #MaduraiCorporation #VaigaiRiverProtection
எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எவரைப் பற்றியும் அவதூறாகப் பேசக் கூடாது: அவ்வாறு பேசிய பின்னர், தான் பேசியது சரியா என்பதைத் தங்களது வீட்டுப் பெண்களிடமும், பெற்றோர்களிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
- சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்
நேற்றிரவு அப்படியொரு மழை பெய்ததன் சுவடே தெரியவில்லை. சென்னை சாலைகள் பளிச்சென்று இருக்கின்றன. பரபரவென்று வேலை செய்திருக்கிறது விஜய் அரசு. நல்லது!
#TVKGovt
சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகைக்கு வந்து மழை குறித்து ஆய்வு செய்துள்ளார் முதல்வர் விஜய். அந்த ஆய்வின்போது அமைச்சர்கள் இருந்தார்கள். ஆனால் மேயர், துணை மேயர் தென்படவில்லை.
முதல்வரின் வருகை அவர்களுக்குச் சொல்லப்படவில்லையா? அல்லது சொல்லியும் வரவில்லையா?
பேசாமல் இப்படி
வைத்துக்கொள்ளலாம்.
தேங்கியதற்குக் காரணம்
அந்த ஆட்சி.
வடிந்ததற்குக் காரணம்
இந்த ஆட்சி.
எந்த ஆட்சி என்று
நானும் சொல்லவில்லை.
நீங்களும் கேட்காதீர்கள்!
கவிஞர் புகிலன்.
:-)
ஆரம்பத்தில் போஸ் & தேவா என்றுதான் சந்திரபோஸும் தேவாவும் இணைந்து கச்சேரி செய்துவந்தனர். அப்படியே இணைந்து சினிமாவுக்குள் வந்திருந்தால் விஸ்வநாதன் - ராமமூர்த்தி, சங்கர் - கணேஷ், லட்சுமிகாந்த் - பியாரிலால் போல இரட்டை இசையமைப்பாளர்கள் வரிசையில் போஸ் & தேவா இடம்பெற்றிருப்பார்கள்.
மாட்டுக்கார மன்னாரு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் தேவா. இங்கே கவனிக்கவேண்டிய குறிப்பு, இந்தப் படத்துக்கு முன்னால் தேவா 14 படங்களுக்கு இசையமைத்திருந்தார். ஆனால் அவை எதுவும் வெளியாகவில்லை.
#தேவா
கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவுடன் இரண்டு முறை தொலைபேசியில் பேசினேன். உற்சாகமாக இருக்கிறார். குணமடைந்து வருகிறார். அச்சப்படத் தேவையில்ல. He is Stable. - சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தகவல்.