பிரார்த்தனைகளின் நிராகரிப்பில் நாத்திகம் பற்றிய ஒருவரைத் தெரியும், அன்பின் நிராகரிப்பில் பெண்களை வெறுத்த ஒருவரையும் தெரியும். எதேச்சையாக எங்கள் மூவருக்கும் ஒரே பெயர்
இந்தப் பிரிவுணர்த்திய காதலைச் சொல்லவாது உன்னுடன் ஓர் இரவு வேண்டும்
என் குற்றவுணர்ச்சி களைய, யசோதையை பிரிந்த புத்தனை நியாயப்படுத்த, அருகிலமர்ந்து உன் புறங்கையை தொட்டழுத்த, காதலைச் சொல்லி உன்னைக் கொஞ்சம் அழவைக்க
எனக்கு ஓர் இரவு வேண்டும்