கழக முதன்மைச் செயலாளர் அண்ணன் @KN_NEHRU அவர்களின் சகோதரர் திரு.ரவிச்சந்திரன் அவர்களுடைய அன்பு மகன் தம்பி விஷால் நாராயண் - ரிஷா பாட்டீல் இணையரின் திருமணத்தை கழகத்தலைவர் @mkstalin அவர்கள் சென்னையில் இன்று நடத்தி வைத்த நிகழ்வில் பங்கேற்றோம்.
இல்வாழ்வில் அடியெடுத்து வைக்கின்ற மணமக்கள் விஷால் நாராயண் - ரிஷா பாட்டீல் இணையர் கழகமும் - கலைஞரும் போல, தலைவர் அவர்களும் - உழைப்பும் போல பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@ArunNehru_DMK
சென்னை மேற்கு மாவட்டம் - சேப்பாக்கம் பகுதி - 114-வது வட்டக்கழகச் செயலாளர் சகோதரர் கோபி கார்மேகம் அவர்களின் அன்பு மகள் மருத்துவர் காவ்யா - மருத்துவர் சாய் விக்னேஷ் ஆகியோரின் திருமண விழா மதுரவாயலில் இன்று நடைபெற்ற போது பங்கேற்றோம்.
மணமக்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று தமிழ் போல் வாழ்கவென்று வாழ்த்தினோம்!
#ChepaukTriplicane @Avadi_Nasar@nchitrarasu
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு, மாற்றுத்திறனாளி வீரர் – வீராங்கனையர், விளையாட்டுப் போட்டிகளில் சாதிக்க எந்த தடையும் இருக்கக்கூடாது என்று உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.
அதற்கு ஓர் உதாரணமாக, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மற்றும் டெமேனோஸ் மென்பொருள் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியுடன், Tamil Nadu Wheel Chair Basket Ball Association-ஐ சேர்ந்த 17 வீரர் – வீராங்கனையருக்கு, ரூ.18.82 இலட்சம் மதிப்பில் சக்கர நாற்காலிகளாகவும், - பேட்டரியால் இயங்கும் ஸ்கூட்டராகவும் மாற்றத்தக்க வகையிலான பிரத்யேக மூன்று சக்கர ஸ்கூட்டர்களை இன்று வழங்கினோம்.
நம் மாற்றுத்திறன் வீரர்கள், விளையாட்டுப் போட்டிகளிலும் வாழ்விலும் வெற்றிகளை குவிக்க துணை நிற்போம் என்று வாழ்த்தினோம்.
@SportsTN_@Atulyamisraias #JMeghanathaReddyIAS
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் குடிசைகளை ஒழித்து, ஏழை - எளிய மக்களின் தலைக்கு மேலே கான்கிரீட் கூரைகள் அமைந்திட வேண்டும் என்ற பெருங்கனவோடு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை தொடங்கினார்கள்.
நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், அத்திட்டத்திற்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயரிட்டு காலத்திற்கேற்ப அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி எடுத்துச் செல்கிறார்கள்.
இந்நிலையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து சில மாதங்கள் முன்பு ஆய்வு செய்தோம்.
அந்த ஆய்வின் போது பரிமாறிக்கொள்ளப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், புதிய திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் - அவற்றை விரைந்து முடித்து, பயனாளிகளிடம் வீடுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக Follow-Up ஆய்வுக்கூட்டத்தினை இன்று நடத்தி, அதிகாரிகளிடம் விளக்கங்களை கேட்டறிந்தோம்.
மேலும், உரிய காலத்தில் கட்டுமானப்பணிகளை நிறைவு செ���்து, பொதுமக்களிடம் வீடுகளை வழங்கிட ஆலோசனைகளை அளித்தோம்.
@thamoanbarasan
Once again, a resolute voice from the South has echoed across the Indian Union.
Bringing together prominent political leaders from various states to Tamil Nadu’s capital, Chennai, Hon’ble Chief Minister @mkstalin has led a crucial consultation on population-based delimitation.
Key resolutions—like the demand to freeze the delimitation exercise for 25 years—have been passed in the first #JointActionCommittee meeting for #FairDelimitation.
It is time the Union BJP government respects the rights of states and halts its assault on the spirit of federalism.
#FairDelimitation
Tamil Nadu para athletes have once again proven their mettle and spectacular skills by winning the overall champions in both men's and women's categories in Para Badminton at the Khelo India Para Games 2025 held in New Delhi.
With 4 gold medals, 3 silver, and 5 bronze medals, our para champions supported by SDAT have achieved this remarkable feat.
Huge congratulations to Manisha Ramadass (Women's Singles SU5), Nitya Sre (Women's Singles SH6), Naveen Sivakumar (Men's Singles SL4), and Ruthick Ragupathi (Men's Singles SU5) for their gold medal performances.
Also, special mention to Jagadesh Dilli (Men's Singles SL3), Haris.M.S (Men's Singles Wheelchair 2), and Sudarsan.M.S (Men's Singles SH6) for winning silver!
And last but not least, congratulations to Amudha Saravanan (Women's Singles SL3), Dhinagaran Pandurangan (Men's Singles SH6), Sivarajan Solaimalai (Men's Singles SH6), Shanthiya Viswanathan (Women's Singles SU5), and Shobana.J (Women's Singles Wheelchair 1) for their bronze medals!
Your dedication and hard work have made Tamil Nadu proud. I wish you all a continued success in the future games too .
My appreciation to Coaches and support staff.
#KheloIndia #ParaBadminton #TamilNaduChampions
இந்திய ஒன்றிய விளிம்பு நிலைச் சமூகங்களின் விடிவெள்ளி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள் இன்று.
‘கற்பி - ஒன்று சேர் - புரட்சி செய்’ என்று அறிவுப் பரவலின் மகத்துவத்தையும், ஒற்றுமையின் அவசியத்தையும், உரிமைக்கான போர்க் குரலையும் முழக்கமாக தந்த சட்டமேதையின் பணிகளைப் போற்றிடுவோம��.
இந்தியாவில் ஜனநாயகத்தையும் - சமூக நீதியையும் நிலைநாட்டிட அண்ணல் அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியலமைப்புச் சட்டத்தை என்றென்றும் உயர்த்திப் பிடிப்போம்!
ஏற்றத்தாழ்வுகள் நிரம்பிய இந்தியச் சமூகத்தில் அரசியல் சட்டம் தான் அடித்தட்டு மக்களின் ஆறுதல்.
அண்ணல் கொடுத்த அரசியல் சட்டத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதலைத் தடுப்போம், பாசிசவாதிகளிடம் இருந்து இந்தியாவைக் காப்போ���்!
��மூகநீதி, சமத்துவத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் உறுதி செய்த புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம் இன்று.
தான் பிறந்தது முதல் பிற்போக்குக் கொள்கைகளை எதிர்த்துப் போராடி, இந்தியாவின் இறையாண்மைக்குப் பாதுகாவலராக விளங்குவதோடு மட்டுமல்லாமல் நாட்டின் கல்வி முறைக்கும் வழிகாட்டுகிறார்.
"அறிவானது மனிதனுடைய வாழ்வின் அடித்தளம் ஆகும். ஆகவே மாணவர்கள் பகுத்த���ிவைக் கொண்டு தங்கள் வாழ்க்கையை நிர்வகிக்க வேண்டும்” என வலியுறுத்திய கல்விச் சிந்தனையாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் புரட்சிகரமான வாழ்வைப் பின்பற்றுவோம்.
உயிரையும், உடலையும் தந்தது மட்டுமின்றி தமிழ்நாட்டை நேசிக்கும் உணர்வையும் - அயராது உழைப்பதற்கான ஆற்றலையும் தந்து கொண்டிருக்கும் கழகத்தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களிடமும், ஈன்றெடுத்த அன்புத்தாயாரிடமும் பிறந்தநாள் வாழ்த்த���களைப் பெற்றுக் கொண்டோம்.
எந்நாளும் வழிநடத்தும் தாய் - தந்தையின் வாழ்த்தைப் பெற்று நம் பணிகளை தொடர்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.