//who gave bribes up to ₹20 lakhs for ordinary jobs like electricians to the ruling party agents.//
எலக்ட்ரீசியன் மாதிரியான ஆர்டனரி வேலைக்காக (வாரே வா....அற்புதம்.... என்ன ஒரு பாஷை) அல்லாமல், எக்ஸ்ட்ரா ஆர்டனரி அர்ச்சகர் வேலைக்கு 2 லட்சம் லஞ்சம் வாங்கினார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் சீனிவாசனுக்கு Executive Officer என்ற பொறுப்பை வழங்கிய அறநிலையத்துறைக்கு தற்போது மட்டும் ஊழல் ஒழிப்பு நோக்கம் இருக்கிறது எப்படி வந்தது...சிறப்பு தரிசன், ஆண்டவன் அருள் ஏதும் கிடைத்ததா?
தவிர, நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அரசு ஆவணத்தில் 20 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குறிப்பிடுவதற்கு மாறாக,
//மேற்படி திருக்கோயிலில் அறங்காவலர் குழு பதவி காலம் முடிவுற்றுள்ளதாலும், நிர்வாக காரணங்களின் அடிப்படையில் ��ேற்படி திருக்கோயிலில் 109 காலிபணியிடங்களை நிரப்ப பார்வை குறிப்பின் மூலம் வழங்கப்பட்ட அனுமதி இதன் மூலம் ரத்து செய்து உத்தரவிடப்படுகிறது.//
என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது.
திருவண்ணாமலை கோவிலுக்கு், ஆந்திர மாநில பக்தர்களின் வருகை காரணமாக, மொத்த திருவண்ணாமலை நகரும் நெருக்கடியை சமாளிக்க திண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில்,
கோவில் நிர்வாகம் நெருக்கடியை சமாளிக்க கூடுதல் பணி���ாளர்களை நியமிக்க எடுக்கப்பட்ட முயற்சி ஊழல்மயமானது என்றால், சீனிவாசனின் நியமனத்தில் மட்டும் ‘தகுதியற்ற நபர்களை, அர்ச்சர்களின் சொந்தக்காரர்கள்’ என்ற முறையில் நியமிப்பது மட்டும் ஊழல் என்ற சட்டகத்திற்குள் வரமாட்டேன் என்கிறது. அதை எப்போ கண்டுபிடிப்பீங்க
காஞ்சிபுரம் கோவிலில் லஞ்சம் கொடுத்து பதவிக்கு வந்த நபர்களின் ஒருவர் பெண் பக்தரை சாதியை சொல்லி வசைபாடிய சம்பவம், அத்திவரதர் வஸ்திரத்தை திருடியது அற்புதம்...காஞ்சிபுரமெல்லாம் செய்தி ��ரவி கிடக்கிறது
அதற்கெல்லாம் ஏன் பல்லி கத்த மாட்டேன் என்கிறது?
இந்த முறைகேடுகள் ஆகம அடிப்படையில் அனுமதிக்கப்பட்டதா என்ன?
உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்!
கோ��ைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி மாண்புமிகு பிரதமர் வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில��லை? கண்ணீர் ஏன் தெரியவில்லை?
கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில், இத்தகைய ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய ஒன்றிய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன்?
கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு எந்தவிதத்தில் நன்மை செய்யும் என நினைக்கிறீர்கள்?
உடனடியாக இவற்றை மறுபரிசீலனை செய்வதோடு, தமிழ்நாட்டின் கோரிக்கைகள் ம��து நல்லதொரு முடிவெடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்யும் என நம்புகிறேன்.