@Saattaidurai கள்ளபட்டி ,பள்ளபட்டி ,மறவபட்டி ,சாணார்பட்டி ,
அய்யம்பட்டி ,சேர்வாரன்பட்டி ,வலையபட்டி ,கவுண்டம்பாளையம் ,சக்கிலியங்குளம்
இப்படி எல்லா சாதியிலும் ஊர் பெயர் உள்ளது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் கூடவே மக்களின் அடையாள ஆவணங்களிலும் ! நடைமுறைச் சிக்கல் உள்ளது
@TVKVijayHQ தினம் தினம் ஏதாவது ஒரு செய்தியை மக்களுக்கும் தொண்டர்களுக்கும் தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும், அதிலும் இதுபோன்ற இக்கட்டான தருணங்களில் உங்களின் செய்தியே தொண்டர்களைத் துடிப்புடன் செயலாற்றத் தூண்டும் .
கட்டுக்கடங்காத கூட்டத்தை காலாண்டுத் தேர்வு விடுமுறைக் கூட்டம் என்று உதயநிதி அடிவருடிகள் நினைப்பார்கள் எனில் அவர்களுக்கு மேலும் ஒரு திகிலூட்டும் செய்தி ,
2026 சட்டப்பேரவைத் தேர்தல் முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையில் தான் வரும் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன் 😊😊
@TVKVijayHQ
தேனி மாவட்டம்
கெங்குவார்பட்டி பேரூராட்சி வடக்குத்தெரு கோம்பை ரோட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றுவதால் சிறுவர் சிறுமியர் வயதானோர் சாலையில் பட்டப்பகலில் கூட நடக்கமுடியாத கொடுஞ் சூழல் நிலவுகிறது
உயிர்ச் சேதாரம் ஆகும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ! @CMOTamilnadu
குழாய் உடைந்து குடிதண்ணீர் வீணாகும் அவலம் !
தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி பேரூராட்சி 2 வது வார்டு வடக்குத்தெரு கோம்பை ரோட்டில் குடிதண்ணீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிதண்ணீர் சாலையில் வீணாக செல்கிறது.
@TNDIPRNEWS@CMOTamilnadu@tvkvijayhq
இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அய்யா பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
1956இல் மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்டதன் மூலம், நம்முடைய மாநிலம் நிலப்பரப்பு அளவில், தனி மாநிலமாக உருவெடுத்த தினமே நவம்பர் 1.
மதராஸ் மாகாணமாக இருந்த நமது மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி, தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிரும் துறந்தார். இதைத் தன் இதயத்தில் தாங்கிய, கனிவின் திருவுருவம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா, தான் ஆட்சிக்கு வந்ததும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி, தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராட்டம் நடத்திய எல்லைப் போராளிகளின் தியாகங்களையும் இன்னாளில் நினைவு கூருவோம்.
தியாகப் பெரும் பின்னணியில்
தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம் பிறந்த இந்த நாளை (நவம்பர் 1) வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினமாகப் போற்றி மகிழ்வோம்.