ரூ 8 கோடி அளவில் மண் திருட்டில் ஈடுபட்டு ஊழல் செய்து தன் குடும்ப நிலத்தில் அந்த மண்ணை கொட்டி நிலத்தை சமப்படுத்தி திமுக இளைஞர் அணி மாநாடு நடத்திய முன்னாள் அமைச்சர் எ வ வேலு, அவர் மகன் குமரன் மற்றும் அதிகாரிகள் மீது அறப்போர் இன்றைய தினம் கொடுத்த ஊழல் புகார் . அறப்போர் திரட்டிய ஆதாரம் என்ன ? முன்னாள் அமைச்சர் ஏரி மண்ணை விழுங்கியது எப்படி.?
பாருங்கள் இந்த வீடியோவை!
பேசிட்டே தான் இருக்கீங்க. ஆனால் தவறு செய்யும் தனியார் கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பயப்படுகிறீர்கள். தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரி நடத்தும் திமுக நிர்வாகி நாராயணன் கட்டுப்பாட்டில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் இருக்கும் வரை எந்த ஒரு தனியார் கல்லூரியும் பல்கலைக்கழக உத்தரவை மதிக்க போவதில்லை. பிரின்டிங் செலவும், போஸ்ட் அனுப்பும் செலவும் சுத்த வேஸ்ட்.
முதல்வரே இல்லாமல் இது வரை இயங்கி வந்த கல்லூரிகளில் அறப்போர் புகாருக்கு பிறகு தான் முதல்வர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அதுவும் எந்த அளவிற்கு உண்மையாக நடைபெறுகிறது என்று தெரியவில்லை. திமுகவின் நாராயணன் உத்தரவிடாமல் பல்கலைக்கழகம் ஆய்வுக்கு கூட செல்ல மாட்டார்கள். அப்புறம் எப்படி உண்மை நிலை தெரியும்? வாரம் ஒரு லெட்டர் எழுதி போஸ்ட் செய்துவிட்டு தூங்குவது தான் பதிவாளரின் பணியாக இருக்கிறது.
மற்ற மாநிலங்களில் இருந்து இந்த கல்லூரிகளில் சேர்ந்துவிட்டு வகுப்புக்கு வராமல் படித்து முடித்த சான்றிதழ் மட்டும் வாங்கிச்செல்லும் வழக்கம் எப்பொழுது தடுக்கப்படும்? அதையும் திமுகவின் நாராயணன் தான் சொல்ல வேண்டுமா?
@Viswanathan_INC@CMOTamilnadu@TVKVijayHQ
சிறிய டெண்டர்களில் டெண்டர் செட்டிங் தவிர்க்க அரசு என்ன செய்ய வேண்டும் ? தற்பொழுது ஊரக வளர்ச்சி துறையில் போடப்பட்டுள்ள ஒரு சிறிய 5 லட்சம் டெண்டரை வைத்து பார்ப்போம். டெண்டர் பதிவேற்றம் செய்ய கொடுக்கப்படும் மொத்த நேரமே வெறும் 30 நிமிடம் மட்டும் தான். சட்டப்படி சிறிய டெண்டர்களுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். இது போன்ற செயல்பாடுகள் பெரிதும் டெண்டர் செட்டிங் செய்யவே வழி வகுக்கும். மாற்றம் வருமா ? @CMOTamilnadu@BussyAnand
சாலை உயரங்கள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? படங்களுடன் இந்த இணைப்பில் https://t.co/CKzdRh1Tqb பதிவு செய்யுங்கள்.
தமிழகத்தில் இனி ஒரு வீடு கூட சாலை உயரத்தால் பாதிக்கப்பட கூடாது என்ற உறுதியை அரசாங்கத்திடமிருந்து உரிமையுடன் கேட்டுப் பெறுவோம்.
திமுக ஆட்சியில் 16 கோடியில் கட்டப்பட்ட பாலம் கட்டி முடித்து மூன்றே மாதத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்த பாலத்திற்கு மேலேயும், கீழேயும் இருக்கும் இரண்டு பழைய பாலங்கள் அதே வெள்ளத்தை தாங்கி நின்ற போது இந்த புதிய பாலம் கட்டி 3 மாதத்தில் உடைந்து போனது ஏன் என்ற கேள்விக்கு விடை தேடிய போது தான் அதிர்ச்சி தரும் பல தகவல்கள் கிடைத்தன.
விரிவான வீடியோ பார்க்க - https://t.co/IapYM5oBEg
பாலத்தின் வழியாக செல்லும் வெள்ள நீரின் அளவை குறைவாக கணக்கிட்டது.
பாலத்தை கட்ட தேர்வு செய்த இடத்தில் கோட்டை விட்டது.
பாலத்தின் அகலத்தை குறைத்தது.
பாலத்தின் கட்டுமானத்தில் அலட்சியமாக இருந்தது போன்ற பல்வேறு புகார்கள் இருந்தும் திமுக ஆட்சியில் யார் மீதும் வழக்கு தொடுக்கப்படவில்லை. முழுக்க முழுக்க ஒரு அலட்சியமான இந்த செயலால் 16 கோடி வீண். ஆனால் இதற்கு யாரும் காரணமில்லை என்று அத்துடன் பிரச்சனையை முடித்துக் கொண்டார்கள். ஒரு வேளை விசாரணை நடத்தினால் இன்னும் பெரிய விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வந்து விடுமோ என்ற பயம் கூட காரணமாக இருக்கலாம்.
தற்பொழுது இந்த புகாரை வீடியோவில் சொல்லி இருக்கும் அனைத்து ஆதாரங்களுடன் தவெக அரசுக்கு சமர்ப்பித்து இருக்கிறோம். விரைவில் FIR பதியப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
#DVACFiles #DVAC40 #Arappor
@CTR_Nirmalkumar@CMOTamilnadu@TVKVijayHQ@ArunIPSCOP
காணாமல் போன அரசு மருத்துவர்கள் பற்றி எதிர்க்கட்சிகள் பேசுவார்களா? மாட்டார்கள். காரணம், அவர்கள் காணாமல் போனதே திமுக - அதிமுக ஆட்சியில் தான்.
புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கும் தவெக அரசுக்கு அறப்போர் இயக்கத்தின் கோரிக்கைகள்:
1⃣ 229 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் மீது துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு, உரிய சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
2⃣ அனுமதியற்ற விடுப்பு (Unauthorized Absence) காலத்திற்கு வழங்கப்பட்ட ஊதியம், Bond, Stipend, PG/Super Speciality கல்விக்காக அரசு செலவிட்ட தொகை மற்றும் அதற்கான வட்டியுடன் மீட்கப்பட வேண்டும்.
3⃣ அனுமதியற்ற விடுப்பு (Unauthorized Absence) காலத்தில் வெளிநாடு சென்றார்களா? என அறிந்து கடவுச்சீட்டை முடக்குதலுக்கு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
4⃣ தனியார் மருத்துவப் பணியில் ஈடுபட்டார்களா என்பதை அறிந்து, அரசு மற்றும் மக்களின் வரிப்பணத்தில் பயின்று ‘சேவை கடமை’ ஏய்ப்புக்கு உரிய சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
5⃣ Recovery தொகை செலுத்தாதவர்களிடம் Revenue Recovery Act கீழ் நடவடிக்கை தொடங்க வேண்டும்.
6⃣ ஆண்டு தோறும் சேவை கடமை மேற்கொள்ள வேண்டிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்களின் புகைப்படத்துடன், Service Bond, Bond Liability, Recovery Status, Disciplinary Proceedings Status, Revenue Recovery Status ஆகியவற்றை ஆண்டுதோறும் பொதுமக்கள் பார்வைக்கு கூடிய விவரங்களை மருத்துவத்துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
@arunraajkg@TNHealthDept@CMOTamilnadu@TVKVijayHQ
எந்த மோசடியை நாம் வெளியிட்டாலும் திமுக அதிமுக கட்சிகளிடம் இருந்து ஒரே பதில் தான் வரும். இதெல்லாம் எங்க ஆட்சியில் மட்டுமா நடந்தது? அந்த ஆட்சியில் கூட தான் நடந்தது. அவர்களை போய் கேளுங்க என்பார்கள். ஆனால் மாறி மாறி இவர்கள் ஆட்சிகளில் நடக்கும் மோசடிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்விக்கு மட்டும் பதில் வராது.
மக்கள் வரிப்பணத்தில் படித்துவிட்டு காணாமல் போன இந்த மருத்துவர்கள் குறித்து TVK அரசு என்ன செய்ய போகிறது? இவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்து கண்டுபிடித்து தர சொல்வீர்களா? இவர்களது மருத்துவ அங்கீகார பதிவை நிறுத்தி வைப்பீர்களா? அல்லது திமுக - அதிமுக ஆட்சியாளர்கள் போல கள்ளத்தனமாக கடந்து செல்வீர்களா?
@arunraajkg@CMOTamilnadu
Arappor Chennai Anti-Corruption Volunteer Meet!
பிரிகேட் ராம்சார் ஊழல், திட்ட அனுமதிக்கு ரூ 28 கோடி லஞ்சம் வாங்கிய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஊழல் போன்ற பல ஊழல்களை அறப்போர் வெளிக்கொண்டு வந்தது எப்படி ?
வரும் ஞாயிறு அறப்போர் சென்னை தன்னார்வலர்கள் சந்திப்பு! அறப்போர் இயக்கத்தில் இணைந்து லஞ்சம் ஊழலை எதிர்த்தும் சமூக பிரச்சனைகளை தீர்க்கவும் தன்னார்வலராக வேலை செய்ய விரும்புவோர், இங்கே பதிவு செய்யவும். https://t.co/5ek3IQXsUB
வரும் ஞாயிறு ஜூன் 28, மாலை 5 மணிக்கு அறப்போர் அலுவலகத்தில் நடக்கும் தன்னார்வலர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளுங்கள்!
நாள்: ஜூன் 28, 2026
நேரம்: மாலை 5 மணிக்கு
இடம்: அறப்போர் அலுவலகம், 7, திருமூர்த்தி நகர் பிரதான சாலை, நுங்கம்பாக்கம், சென்னை
Big News: Environmental Clearance cancelled for Rs 2000 Crore Brigade Morgan Heights given within Pallikaranai Ramsar Marsh
Brigade Heights - சுற்றுச்சூழல் அனுமதி ரத்து!
பாதுகாக்கப்பட்ட பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தை அரசாங்கத்திடம் இருந்து பாதுகாக்க அறப்போர் இயக்கத்துடன் துணையாக நின்ற உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது உங்களுக்கு கிடைத்த வெற்றி. சமூக வலைத்தளங்கள் மூலம் நீங்கள் கொடுத்த அழுத்தத்திற்கு கிடைத்த வெற்றி. உங்கள் வருங்கால தலைமுறைக்கு சென்னையின் மிகப்பெரிய இயற்கை சொத்தை நீங்கள் பாதுகாத்து ஒப்படைத்துள்ளீர்கள். தொடர்ந்து கண்காணிப்போம். இயற்கை வளங்களை பாதுகாப்போம்.
பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் பகுதியில் பிரிகேட் மார்கன் ரியல் எஸ்டேட் திட்டத்திற்கு சுற்றுசூழல் அனுமதி ரத்து!
பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் பகுதியில் ரூ 2000 கோடி மதிப்பிலான 1250 வீடுகள் கட்ட பிரிகேட் மார்கன் திட்டத்திற்கு வழங்கப்பட்டு இருந்த சுற்றுசூழல் அனுமதியை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) ரத்து செய்துள்ளது. அறப்போர் இயக்கம் இதை வரவேற்கிறது. இந்த ஊழலை வெளிக்கொண்டு வந்து ராம்சார் நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வந்த நம் அனைவருக்கும் கிடைத்த முக்கியமான வெற்றி இது.
மேலும் இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
DMK Government's top brass which gave the approval illegally to brigade to construct in Pallikaranai Ramsar did not want to revoke the permission even after exposing their illegalities. The officials who had to sign due to the top's pressure felt the heat on the other side where citizens were questioning their illegal actions. But DMK Government did not allow to revoke it until the MCC came into effect.
During Model Code of Conduct , few officials made this possible. State Wetland Authority sent a letter to SEIAA on 16.04.2026 that NOC has not been issued to Brigade from SWA and after the Model Code was lifted on 07.05.2026, SEIAA committee cancelled the EC on 08.05.2026. This was just before the new Government was formed on 10.05.2026.
The officials were forced to act because the illegal act of approval have been exposed and we all have been questioning their illegalities continuously. Thanks to all citizens who made this possible. Your voice matters. We also hope that the new TVK Government's CMDA will cancel the Planning permission now. We have also submitted a petition seeking cancellation of the same on 13.06.2026.
அறப்போர் இயக்கம் இன்றைய தினம் மின்சாரம், ஊழல் தடுப்பு மற்றும் சட்ட அமைச்சர் திரு R . நிர்மல் குமார் அவர்களை சந்தித்து அறப்போர் இயக்கம் இதுவரை லஞ்ச ஒழிப்பு துறையில் கொடுத்துள்ள 40 புகார்களின் விவரங்களை அளித்துளோம். ஏற்கனவே இதை தபாலில் 11/06/2026 அன்று அமைச்சருக்கு அனுப்பி உள்ளோம். இன்று நேரில் சந்தித்து புகார்கள் குறித்து விவரித்தோம். இதில் கடந்த காலங்களில் 9 புகார்கள் மீது மட்டுமே FIR பதிவு செய்யப்பட்டு விசாரணை துவங்கி உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக திமுக ஆட்சிகளில் நடந்த நிலக்கரி மற்றும் தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கிய ஊழல், ரேஷன் ஊழல், கே பி பார்க் கட்டுமான ஊழல், பத்திரப்பதிவு துறை ஊழல்கள், அரசு நிலம் அபகரிப்பு ஊழல்கள், உயர்கல்வித்துறை ஊழல்கள், உள்ளாட்சி துறை ஊழல்கள், மாநில நெடுஞ்சாலை துறை ஊழல்கள் போன்ற 30 க்கும் மேற்பட்ட ஊழல்கள் மீது உடனடியாக FIR பதிவு செய்து துரிதமாக விசாரணை செய்ய கோரி உள்ளோம். ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவது முக்கியம். இதுவே பொறுப்புடைமையையும் மற்றவர்கள் ஊழல் செய்யாமல் தடுப்பதற்கும், ஊழலை ஒழிக்கவும் உதவும்.
அமைச்சர் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
கண்ணகி நகர் சமுதாய நல வாழ்வு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் மேலும் ஒரு உயிரிழப்பு. இன்று காலை பிரசவ வலியுடன் ஒரு பெண் கண்ணகி நகர் CHC சென்றுள்ளார். அங்கு டாக்டர்கள் இல்லை. ஒரு மணி நேரம் கழித்து அவரை கோஷா ஹாஸ்பிடல் செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்துள்ளனர் அங்குள்ள மருத்துவமனை உதவியாளர் . கோஷா ஹாஸ்பிடல் சென்றதும் குழந்தையின் உயிர் பிரிந்தது. பெண்மணி உயிருக்காக தற்பொழுது போராடிக் கொண்டிருக்கிறார்.
ஓராண்டிற்கு முன்பு இதே போல் இன்னொரு பெண்மணிக்கு நடந்து அவர் உயிர் பிரிந்தது. அன்றும் கண்ணகி நகர் மக்கள் போராடினர். இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மருத்துவமனை தரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை
24 மணி நேர மகப்பேறு பார்க்கும் சமுதாய நல வாழ்வு மருத்துவமனை என்று சொல்லிவிட்டு மருத்துவர்கள் இல்லாமல் ஒவ்வொரு முறையும் இங்குள்ள மக்கள் படும் பாடு மனதிற்கு வேதனை அளிக்கிறது.
அரசு பதில் சொல்லுமா ? நடவடிக்கை எடுக்குமா? கண்ணகி நகர் மக்கள் போராடிக் கொண்டு இருக்கின்றனர். தமிழக அரசும் ஊடகமும் இதில் கவனம் செலுத்த கோருகிறோம் @CMOTamilnadu@chennaicorp@arunraajkg
The youth of this country is holding the Modi Government and Education Minister accountable for the continuous lapses in NEET, CBSE, CUET etc. More power to them! Dharmendar Pradhan must resign!
கடந்த ஜூன் மாதம் திறந்து வைத்து தண்ணீர் குடித்த அதே இயந்திரத்தில், முன்னாள் முதல்வர், முன்னாள் துணை முதல்வர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆகிய மூவரும் இன்று மீண்டும் தண்ணீர் பிடித்து அருந்துவார்களா? திறந்து வைத்து ஒரு வருடம் கூட தாங்காத திட்டத்தை போட்டு மக்கள் பணத்தை வீணடித்த குற்றத்திற்கு என்ன தண்டனை?
@CMOTamilnadu@tnmaws@TVKVijayHQ@CHN_Metro_Water
இந்த வாட்டர் ATMகள் இருப்பதாக சொல்லப்படும் இடங்களை இந்த இணைப்பில் காணலாம். https://t.co/GsZ6uxRpRY
யாரு அந்த கலைச்சத்திரன் & Co?
சென்னை குடிநீர் வாரியம்(CMWSSB)2025 ஜூன்,சென்னை முழுவதும் 53இடங்களில் Water ATM எனும் 24 மணிநேரமும் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் நிறுவியது.RTI பெற்றதகவலை நேரில் ஆய்வு செய்தபோது.இல்லாத WaterATM இக்கு Water Test Report?@CHN_Metro_Water 👌
கனிமவளத்துறை அமைச்சர் பிரபு அவர்கள் குவாரிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். ஆனால் ஏற்கனவே அரசாங்கம் செய்த ஆய்வுகள் அடிப்படையில் மூடப்பட்டு பிறகு அரசியல்வாதிகளின் அழுத்தத்தால் மீண்டும் திறக்கப்பட்ட 52 குவாரிகள், தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை ஜெயகாந்தன் IAS மூலம் குறைத்து, அதையும் தவணை முறையில் கட்ட அனுமதி பெற்று, சட்ட விரோத குவாரிகளை தொடர்ந்து இயக்கி வருகிறார்கள்.
இந்த குவாரிகளை நிரந்தரமாக மூடி, அமைச்சர் தனது நடவடிக்கைகளை துவங்க கேட்டுக் கொள்கிறோம். மேலும் இந்த மோசடிக்கு துணை போன ஜெயகாந்தன் ஐஏஎஸ் மற்றும் முன்னாள் திமுக MLA துரைமுருகன் ஆகியோர் மீதும் விசாரணைக்கு உத்தரவிட அறப்போர் கோரிக்கை வைக்கிறது.
@drtkprabhu_TVK@CMOTamilnadu@TVKVijayHQ
ரூ 400 கோடி ஊழல் அதிகாரி காசி சஸ்பெண்ட் !
அப்போதைய மின்சார வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் உட்கார்ந்து டெண்டர் செட்டிங் செய்து ரூ 397 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழலில் ஈடுபட்ட காசி பணி இடை நீக்கம் ! சிறைக்கு எப்பொழுது செல்வார்கள் ? 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்சார வாரிய டெண்டர்கள் ரத்து.
ஊழலை ஒழிக்க முதலவர் விஜய் என்ன செய்ய வேண்டும் ?
Received letter today from MAWS Dy. Secretary Dated 30/04/2026 directing @Tambaram_Corp to initiate action on my complaint Dated 10/01/2025. Think this letter comes after election and sensing a change in Govt. by officials. @CMOTamilnadu@Chief_Secy_TN@tnmaws@GSBediIAS
கல் குவாரிகளில் எப்படி முறைகேடு நடைபெறுகிறது?
இந்த முறைகேடுகள் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது?
இந்த முறைகேடுகளை செய்தவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது?
இந்த தண்டனையில் இருந்து கல் குவாரி கொள்ளையர்கள் எப்படி தப்பித்தார்கள்?
திமுக ஆட்சியில் நடந்தது என்ன?
விரிவான காணொளி - https://t.co/cNKhGHOHJl