தமிழ்நாட்டின் ஒவ்வொரு தனிமனிதரின் தேவைகளை, வலிகளை உணர்ந்து, அவர்களின் எண்ணங்கள் அனைத்தையும் ஈடேற்றும் அடுத்த 5 ஆண்டிற்கான “பாதுகாப்பான தமிழகம்-
பார்போற்றும் வளர்ச்சி”க்கான செயல்திட்டத்தை #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை-யாக இன்று வெளியிட்டுள்ளேன்.
https://t.co/K03XfVXwKL
ஒவ்வொரு வாக்குறுதியும் தீர ஆராய்ந்து, அவற்றிற்க்கான நிதி ஆதாரங்களை உறுதி செய்வதற்கான திட்டங்களை வகுத்த பிறகே, செயல்படுத்தப்படும் என்ற உறுதியோடு அறிவித்துள்ளோம். நிச்சயமாக அளித்துள்ள அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்!
மக்கள் நலமுடன் வாழ,
மகளிர் வாழ்வு உயர,
தமிழகம் செழித்து வளர,
உங்களின் நல்லாட்சி மலர,
வாக்களிப்பீர் - இரட்டை இலை! 🌱
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளி.
ஒரு சிறுமி தன்னுடைய வீட்டின் அருகிலேயே கூட நிம்மதியாக பாதுகாப்பாக விளையாட முடியாத சூழ்நிலையை உருவாக்கியது தான் ஐந்தாண்டு கால திமுக ஆட்சியின் சாதனையா?
உங்கள் ஆட்சியில் குழந்தைகள் நிம்மதியாக விளையாட கூட முடியவில்லை, இப்படியிருக்கும் நிலையில் வெல்லும் பெண்கள் மாநாடு நடந்த உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது பொம்மை முதல்வர் @mkstalin அவர்களே!
குழந்தைகள் முதல் முதியோர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத இந்த கொடிய ஆட்சி இனியும் வேண்டுமா?
சிந்திப்பீர்!
#DMKFailsTN
கடந்த நாலரை ஆண்டுகளாக பட்ஜெட் என்னும் பெயரில் தமிழ்நாடு மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்தும் விழா இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
நாள்: பிப்ரவரி 17, 2026
இடம்: தமிழக சட்டமன்றம்
நேரம்: காலை 10 மணி முதல்
இவ்விழாவிற்கு தலைமை தாங்குபவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க. ஸ்டாலின்
மாண்புமிகு நிதியமைச்சர்
திரு. தங்கம் தென்னரசு அவர்கள்
முன்னின்று காது குத்துவார்.
#மாபெரும்_காதுகுத்தும்_விழா
7.5% இடஒதுக்கீட்டை திமுக கொண்டுவர வலியுறுத்தியது என்பது தவறான தகவல்.
7.5% இடஒதுக்கீட்டுக்கு திமுக போராடியதாக ஆதாரத்தை காட்ட முடியுமா?
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு யாரும் கேட்காமல் மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டை வழங்கியது @aiadmkofficial அரசு.
ஆனால் @arivalayam சொந்தம் கொண்டாட முயற்சிப்பதா?
ஆளுநர் மாளிகை முன்பு திமுக போராட்டம் நடத்தியதால் தான் 7.5% இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது என அமைச்சர் @Subramanian_ma கூறியதற்கு,
சட்டப்பேரவையில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்கள் ஆவேச பதில்.
#TNAssembly2026
நம்பி வந்த யாவருக்கும் கொடுத்தது கோவை என்பதே உண்மை வரலாறு!
"கோவை மக்கள் கெடுத்தார்கள்" என்று சொல்ல திரு. தயாநிதி மாறனுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்?
உழைக்கும் மக்களான கோவை மக்களை, அதிகார மமதையில் இழிவாகப் பேசிய அவருக்கு எனது வன்மையானக் கண்டனம்!
#கோவை மக்களை இழிவுபடுத்துவதை ரசித்துக்கொண்டு சிரிக்கிறார் திரு. செந்தில் பாலாஜி. கோவை மாவட்ட மக்கள் மீது அவர் கொண்டிருக்கும் அக்கறை இதுதான்.
தனது பேச்சுக்கு தயாநிதிமாறன், கோவை மக்களிடம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
திமுக-வின் கோவை வெறுப்பு என்பது புதிது அல்ல.
கோவைக்கு திமுக எதையும் கொடுத்ததாக வரலாறு இல்லை. வருவதாக இருந்ததை எல்லாம் கெடுத்ததாக மட்டுமே வரலாறு உள்ளது!
இந்த தீய எண்ணம் கொண்ட தீயசக்தி திமுக-விற்கு மீண்டும் ஒருமுறை தக்க தண்டனையைக் கொடுக்க கோவை மக்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்!
@EPSTamilNadu@AIADMKOfficial
கரூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசையும்; மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து, கரூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
5 லட்சம் கோடி கடன் பெற்று இந்தியாவில் கடன் பெறுவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு என்கின்ற நிலை இன்று திமுக அரசால் கிடைக்கப் பெற்றுள்ளது.
நிதிநிலைமையை சீர்செய்ய ரகுராம் ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு மாநில வருவாயை பெருக்க தெரிவித்த யோசனை என்ன?
அந்த குழு கண்ணை மூடிக் கொண்டு கடன் வாங்க மட்டும் யோசனை தெரிவித்ததா?
நிதிப் பற்றாக் குறை இருக்கலாம் ஆனால் வருவாய் பற்றாக்குறை கூடாது.
-சட்டப்பேரவையில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பல்வேறு வகைகளில் வரலாற்றுச் சிறப்புகளைப் பெற்றுத் தந்து, மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்திட்ட இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 78-ஆவது பிறந்த நாள் விழா!!
அம்பலமான தந்தை - மகன் கமிஷன் கூட்டணி
அமைச்சர் நேரு மீதான @dir_ed அனுப்பிய ஊழல் விவரங்கள் குறித்து வழக்கு பதியக் கோரி @AIADMKOfficial தொடர்ந்த வழக்கில், வழக்கு பதிய சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில்,
03.12.2025 அன்று @dir_ed தமிழக "பொறுப்பு" டிஜிபி-க்கு அனுப்பிய ஆவணத் தொகுப்பில் (Dossier), பக்கம் 51-ல்,
"டெண்டர்களுக்கான 7.5% முதல் 10% வரையிலான கமிஷன், "Party Fund" (கட்சி நிதி) என்ற பெயரில் வசூலிக்கப்பட்டுள்ளது" பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
தனது அமைச்சரைக் காப்பாற்ற தான் வழக்கு பதியாமல் ஸ்டாலின் அரசு இருந்தது என்று நினைத்தால்,
தன்னையும், தன் மகனையும் காப்பாற்ற தான் இத்தனை நாட்கள் வழக்கு பதியாமல் இருந்திருக்கிறார்கள்!
"தியாகி" பாலாஜிக்காக வந்த "தொட்டுப் பார், சீண்டிப் பார்" வீடியோ, நேருவுக்கு வராமல் போனதற்கு காரணம் இது தானா?
செந்தில் பாலாஜி வழக்கில் சுத்தி சுத்தி தான் குடும்பம் மாட்டும் என்றால், நேரு வழக்கில் தொட்டாலே முதலில் மாட்டுவது ஸ்டாலினும், அவர் மகனும் தான் போலயே ?!
நகராட்சி நிர்வாகம் எனும் ஒரு துறையில் ரூ. 1020 கோடி மதிப்பில் ஊழல் என்றால், இன்னும் எத்தனை துறைகள், எத்தனை ஊழல்கள், இதில் எவ்வளவு பங்கு இந்த தந்தை, மகன் கூட்டணிக்கு என கணக்கிட்டால், தமிழ்நாட்டுக்கு ஓராண்டு பட்ஜெட்டே போட்டுவிடலாம்!
இன்னும் இரண்டே மாதங்கள் தான்... @AIADMKOfficial ஆட்சி அமைந்ததும், எல்லா Files-ம் திறக்கப்படும்! முகத்திரைகள் கிழிக்கப்படும்! இது உறுதி!
The manner in which members of the @INCIndia's Indian Youth Congress (@IYC) disrupted the prestigious #AISummit in #NewDelhi is highly condemnable and deeply irresponsible.
An international platform meant to showcase India’s technological progress and innovation was reduced to a stage for political theatrics. Such conduct not only disrespects the spirit of democratic dissent but also tarnishes the image of our nation before global delegates and investors.
Political differences must be expressed through dignified and lawful means. Resorting to disruptive protests at a global summit reflects poor judgment and undermines India’s credibility as a serious, forward-looking country in the field of artificial intelligence and emerging technologies.
The @AIADMKOfficial firmly believes that democratic expression should never come at the cost of national interest or international reputation.
#India’s growth in #AI and innovation is larger than partisan politics. It deserves responsibility, maturity, and respect from all political stakeholders.
இதய தெய்வம் அம்மா அவர்களின் 78-ஆவது பிறந்த நாள் விழா!
இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சூளுரையை நம் மனதிலே தாங்கி, கழக ஆட்சியை மீண்டும் மலரச் செய்வோம்; தமிழ் நாட்டின் பெருமைகளை நிலைநாட்டி, நல்லாட்சி வழங்கிட உறுதி ஏற்போம்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" @EPSTamilNadu அவர்களின் மடல்
ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் மமதையில் திமுக-வினர் போடும் வெறியாட்டம்; நடவடிக்கை எடுக்காத பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கண்டனம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" @EPSTamilNadu அவர்கள்
#எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்
●திமுக ஆட்சியில் சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டண உயர்வால் பன்மடங்கு அதிகரித்துள்ள மக்களின் அன்றாட குடும்பச் சுமையைக் குறைத்திடும் வகையில், அஇஅதிமுக ஆட்சி அமைந்தவுடன், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக ரூ.10,000/- வழங்கப்படும்!
●வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும், பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.2000/-, +2 வரை படித்த இளைஞர்களுக்கு ரூ. 1000/- மாதாந்திர உதவித்தொகையாக வழங்கப்படும்.
●மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரணத் தொகை ரூ. 8000/- -ல் இருந்து ரூ. 12000/- ஆக உயர்த்தி வழங்கப்படும்
●ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கலன்று வழங்கப்படும் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ரூ. 1000/- பொங்கல் பரிசாக வழங்கப்படும்
●நெசவாளர்களுக்கான விலையில்லா மின்சாரம், கைத்தறி நெசவாளர்களுக்கு
300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு
1000 யூனிட்டில் இருந்து 1400 யூனிட்டாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
●நகரப்பகுதியில் நடைபாதை ஓரமாக கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.
#EPSfor2026