‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்’ என்று நல்லதொரு நாட்டில் நாம் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழலை வரையறுக்கிறார் நம்முடைய மூதாதை வள்ளுவப் பெரும்பாட்டன்!
நாம் வாழும் பூமி நமக்கானது மட்டுமன்று; வருங்கால நம் தலைமுறைகளுக்குமானது! அதனைப் பாதுகாப்பாக அவர்களிடம் கையளித்து செல்வது ஒன்றே நம் ஒவ்வொருவரின் வாழ்நாள் பெருங்கடமை!
நிலம், நீர், காற்று, மலை, காடு, அருவி, ஆறு, கடல் என்று இயற்கையின் அருங்கொடைகள் அனைத்தையும் நாம் மாசுபடுத்தி, அழித்தொழிக்கக் கூடாது. தொழில் வளர்ச்சி, நாட்டின் முன்னேற்றம் என்ற பெயரில்
நம்மை ஆளும் ஆட்சியாளர்கள் இயற்கை வளங்களை அழிப்பதை நாம் ஒருபோதும் அனுமதிக்கவும் கூடாது.
நம் கண் முன்னே இரசாயன ஆலைக்கழிவுகள் கலந்து நிலமும், நீரும், காற்றும், கடலும் மாசுபடுத்தப்படுவதையும், காடுகள் அழிக்கப்படுவதையும், மலைகள் வெட்டப்படுவதையும், ஆற்று மணல் சுரண்டப்படுவதையும் தடுக்கத்தவறினால், அது வருங்கால தலைமுறைக்கு மட்டுமல்ல, மற்ற உயிரினங்களுக்கும் நாம் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
‘நஞ்சில்லா உணவு அதுவே நம் கனவு!’ என்றார் நம்முடைய பெரிய தகப்பன் வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்கள்.
மண்ணையும், நீரையும், காற்றையும் மாசுபடுத்திவிட்டு எதை நாம் உண்ணப்போகிறோம்?
எப்படி சுவாசிக்க போகிறோம்?
உயிர்கள் வாழவே முடியாத பூமியில் வளம் எதற்கு? வளர்ச்சி எதற்கு?
நீர்வழிப்பாதைகளை அழித்து, மழைநீரை வீணாக்கிவிட்டு, கடல் நீரைக் குடிநீராக்க பல்லாயிரம் கோடிகளைக் கொட்டுவதையும், மரங்களை அழித்து தொழிற்சாலைகளை அமைத்து காற்றை மாசுபடுத்திவிட்டு, அதிக விலை கொடுத்து நல்ல காற்றை வாங்குவதையும் வளர்ச்சி எனக் கட்டமைப்பது அறிவுக்குப் புறம்பானது என்பதை என்றைக்கு நாம் உணரப்போகிறோம்?
வளமாக வாழ்வதை விடவும் நலமாக வாழ்வது முக்கியம்!
வசதியாக வாழ்வதை விடவும்; நிம்மதியாக வாழ்வது முக்கியம்!
நம்மை வாழ வைப்பதாக நாம் நம்பும் சாமிகள் கூட ஆயிரம் உண்டு; ஆனால் நாம் வாழ்வதற்கான பூமி ஒன்றுதான் உண்டு என்ற உண்மையை என்பதை உணர்ந்து..,
நாம் வாழும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்! வருங்காலத் தலைமுறைக்கு வாழ்வளிப்போம் என உலக சுற்றுச்சூழல் நாளில் உறுதியேற்போம்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#WorldEnvironmentDay
#தெருவுக்கடை பகுதியில் வளைவான சாலையில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் ஒரு அரசு பள்ளி மற்றும் ஒரு அரசு உதவி பெறும் பள்ளிக்கூடம் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு அருகில் இருக்கும் மதுக்கடையை மாற்றக் கோரி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னெடுக்கும் தொடர் போராட்டத்தில் கலந்து கொண்டோம்.
#ntk
#ancyshobarani
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
தமிழீழ தாயக விடுதலைப் போராட்டத்தில் தொடக்க நாள் முதல் தன் வாழ்நாளின் இறுதி நொடிவரை அந்த விடுதலைக் களத்தை விட்டு சற்றும் விலகாத தமிழ்த்தேசிய விடுதலைப் போராளி!
தன்னுடைய எழுச்சி மிகுந்த குரலால் இன உணர்வும், மான உணர்வும் ஊட்டி தமிழினப் பிள்ளைகளை எழுப்பிய பாசறைப்பாணர்!
நம்முடைய அப்பா தேனிசை செல்லப்பா அவர்களினுடைய நினைவைப் போற்றுகிற நிகழ்வு!
வைகாசி 23 | 06-06-2026 சனிக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: சர் பி.டி.தியாகராயர் அரங்கம், தியாகராயர் நகர் சென்னை.
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
மதிப்புமிக்க நம்முடைய பாசறைப்பாணருக்கு நம் புகழ் வணக்கத்தைச் சூடுவோம்!
நன்றி! வணக்கம்!
குமரி உரிமை மீட்புப் போராளிகள் தேம்பனூர் பொன்னையன், மேக்கன்கரை ராமையன், மணலி பாலையன், தொடுவெட்டி பப்பு பணிக்கர், புதுக்கடை அருளப்பன், கிள்ளியூர் முத்துசுவாமி, தோட்டவரம் குமாரன், புதுக்கடை செல்லப்ப பிள்ளை, தேங்காய்ப்பட்டணம் பீர்முகம்மது என மொத்தம் 9 பேரை துப்பாக்கியால் சுட்டு இனப்படுகொலை செய்த கேரள காங்கிரசின் பட்டம் தாணு பிள்ளை ஆட்சியை கவிழ்த்து, ஒட்டு மொத்த இந்தியாவையும் திருவிதாங்கூர் நோக்கி திரும்பச் செய்து, வேறு வழியின்றி குமரி மண்ணை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டிய நெருக்கடியை பிரதமர் நேருவுக்கு ஏற்படுத்திய இனமானக் காவலர்..!
திருவிதாங்கூர் சமஸ்தான நீதிமன்றங்களில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே நாற்காலியில் அமர வேண்டும், குறிப்பிட்ட சாதியினர் தண்ணீர் குடிக்க தனித்தனிப் பானைகள் என்றிருந்த தீண்டாமை இழிவுகளை தம் கால்களால் எட்டி உதைத்து உடைத்தெறிந்து வரலாற்றை மாற்றிய புரட்சியாளர்...!
திருவிதாங்கூர் திருமூலம் சட்டசபையில் வரி கட்டுவோருக்கு மட்டுமே இருந்த ஓட்டுரிமையை மாற்றி, எல்லோருக்கும் ஓட்டுரிமை வேண்டுமென்று போர்க்குரல் எழுப்பிப் போராடிப் பெற்றுத் தந்த பெருந்தகை..!
உதட்டளவில் மட்டும் இனப்பற்றும், மொழிப்பற்றும் பேசிப்பேசி, ‘நெல்லை நம்முடைய எல்லை, குமரி நமக்கு தொல்லை’ என்று அடுக்கு மொழி வசனம் பேசி, திராவிடத் திருவாளர்கள் குமரி எல்லை காவு போவதை கைகட்டி வேடிக்கை பார்த்தபோது, தீரத்துடன் போராடி குமரி மண்ணை மீட்டுத் தந்த தெற்கெல்லை காவலர்..!
குமரி மண் தமிழ்நாட்டோடு இணைய எதிர்ப்பு தெரிவித்த கேரள காங்கிரசிற்கு எதிராக ‘திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை’ தொடங்கி தனித்துப் போட்டியிட்டு நாகர்கோயில் நாடாளுமன்றத் தொகுதியையும், 12 சட்டசபை இடங்களையும் வென்று அகில இந்திய காங்கிரசை அதிரச்செய்த பெருந்தமிழர்..!
இடுக்கி, நெல்லூர் மாவட்டங்கள் தமிழருக்கே சொந்தம்’ என 1955ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் நாள் நாடாளுமன்றத்தில் வரலாற்றுப் பேருரை நிகழ்த்திய வீரமறவர்.. நாகர்கோவில் நகரசபை தலைவர், திருவிதாங்கூர் சட்டசபை, கல்குளம், விளவங்கோடு தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர், நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர் என பொது வாழ்வில் தான் ஏற்றப்பொறுப்புகள் அனைத்திலும் மக்கள் வாழ்வு ஏற்றம் பெற வழிவகுத்த தூயவர்...
தெற்கெல்லை காத்த தீரர், நேர்மைமிகு வழக்கறிஞர், ஆகச்சிறந்த பேச்சாளர், தொலைநோக்கு சிந்தனை கொண்ட மக்கள் தலைவர், பொது வாழ்வில் உறுதியும், தூய்மையும் காத்த இலட்சியவாதி, தமிழ் மண்ணையும், மக்களையும் உயிரென நேசித்த போற்றுதற்குரிய பெருந்தமிழர் நம்முடைய தாத்தா ‘குமரித்தந்தை’ மார்ஷல் நேசமணி அவர்களின் பிறந்தநாளில் ஐயாவின் பெரும்புகழ் போற்றுவோம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
சிறப்பு!
விதிமீறலுக்குத் துணைபோன அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட துறைசார்ந்த நடவடிக்கை என்ன?
விதிமீறி கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட சட்டரீதியிலான நடவடிக்கை என்ன?
அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடும் அரசு மருத்துவமனைகளின் அலட்சியப்போக்கு தொடர்வதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
இராமநாதபுரம் மாவட்டம் பால்கரை கிராமத்தைச் சேர்ந்த சகோதரி தமிழ்ச்செல்வி, மூக்கு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது வரை சுயநினைவை இழந்த நிலையில் தள்ளப்பட்டுள்ள செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. மருத்துவக் கல்லூரி நிர்வாகம் எந்த தகவலையும் கூற மறுத்து உண்மையை மூடி மறைப்பது வன்மையான கண்டனதுக்குரியது.
அடுத்தடுத்து அரசு மருத்துவ மனைகளின் அலட்சியப்போக்கும், தவறான மருத்துவமும் தொடர்வது பெரும் கவலை அளிக்கிறது. அரசு மருத்துவமனைகளின் தூய்மையையும், பாதுகாப்பையும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகையையும், மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகளின் இருப்பையும், அளிக்கப்படும் மருத்துவத்தின் தரத்தையும் உறுதிசெய்ய தமிழ்நாடு அரசு இனியாவது தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். அதனை முறையாகச் செய்யத் தவறுவதாலேயே அடுத்தடுத்து இதுபோன்ற துயரங்கள் நிகழ்கின்றன. கடந்த ஆட்சிகாலங்களில் நடைபெற்ற அதே அலட்சிய செயல்பாடு தற்போதைய ஆட்சியிலும் தொடர்வது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருத்துவமும், அரசுப்பள்ளிகளில் தரமற்ற கல்வியும் தொடர்வதை தவெக அரசு வேடிக்கை பார்ப்பது, மாற்றம் வரும் என்று நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றும் பெருந்துரோகமாகும்.
ஆகவே, அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் இது போன்ற கொடுமைகள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் தடுக்க, தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
போதை ராஜ்ஜியமும், பெண்களுக்கு எதிரான தாக்குதல்களும், வன்முறை வெறியாட்டங்களும் முந்தைய திமுக ஆட்சியின் நீட்சியாக தொடரவே செய்கின்றன.
ஆட்சி மாறியும், காட்சிகள் மாறவில்லை.
என்ன செய்கிறார் முதல்வர் ? டர்க்கி டவலை மாற்றினால் தமிழ்நாடே மாறிவிடும் என நினைத்துக்கொண்டு இருக்கிறாரா?
@TVKVijayHQ
நேத்து கட்சி ஆரம்பிச்சு இன்னைக்கு அரசியல் பேசுறவன் எல்லாம் @Saattaidurai ஏதோ ஒரு Youtuber னு நினைச்சிட்டு இருக்கானுங்க
2009 ல இருந்து அரசியல் களத்தில் அவரது உழைப்பு அசாத்தியமானது
மக்களுக்காக கிட்டத்தட்ட 1 வருடம் சிறையில் இருந்த நபர்
அவர் பேசும் விதத்தில் ஆரம்ப கால கட்டங்களில் முரண் பட்டவன் நான், அனால் அவர் தன்னைத் தானே செதுக்கி இன்று இருக்க இடம் அளப்பரியது 🔥💯
*கன்னியாகுமரியில் சர்ச் ரோட்டில் வைக்கப்பட்டிருந்த திருவிழா வாழ்த்து பேனர்களை போலீசார் அகற்றியதால் அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுச் சாலை பாதுகாப்பை காரணமாகக் கூறிய போலீசாரின் நடவடிக்கைக்கு இரு தரப்பும் எதிர்ப்பு தெரிவித்தோம்