https://t.co/R5eSBXiL3o
உலக நாடுகள் எங்கும் நடைபெறவுள்ள தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு 02.08.2025...!
புலிகளின் உத்தியோகபூர்வ அறிவிப்பு.
#ITWingமேதகு
தமிழீழத் தேசியத்தலைவரின் வீரம் செறிந்த உயிரர்ப்பணிப்பை தமிழர் வரலாற்றிலிருந்து அழித்துவிடும் நோக்கோடு திட்டபிட்டு மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா-இந்திய-சர்வதேச பு��னாய்வுச் சதிகளை முறியடித்து வீறுகொண்டு எழுகிறது தமிழினம்.
முள்ளிவாய்க்காலோடும்,
நந்திக்கடலோடும் தலைவரின் வரலாற்றை புதைத்துவிட்டோமென இறுமாப்புக்கொண்டு, சர்வதேச நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின்மீது தொடர் தடையினை நீடித்து, பிரதான சமூக வலைத்தளங்களில் தேசியத்தலைவரின் உருவப்படங்களை திட்டமிட்டு நீக்கி தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றை சிங்களத்துக்குத் துணைபோய் அ���ையாள அழிப்பு செய்துவரும் அதே உலகநாடுகளின் முற்றத்தில் தேசியத் தலைவரை உயிர்ப்பிக்கப் போகிறது தமிழினம்.
இலட்சிய வேங்கைகள் இறப்பதுமில்லை,
விடுதலைப்புலிகள் வீழ்வதுமில்லை.
#தமிழீழத்_தேசியத்தலைவர்
#மேதகு_வே_பிரபாகரன்
தமிழினப் பெருந்தலைவர்
🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾.
தம்மின மக்களின் விடுதலைக்காக படையமைத்து களமாடியவர்களையே ��மது இனத்தின் தலைவர்களாக ஒவ்வொரு இனமும்
வரலாறாக கொண்டுள்ளது.
ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக்கிடந்த தமிழினத்தின் விடுதலைக்காக வீறுகொண்டெழுந்த வேங்கையே எமது தன்னிகரல்லாத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள்.
தேர்தல் காலத்துச் சிரிப்புத் தலைவர்கள் எப்போதும் இனத்தின் தலைவர்களாக முடியாது.அவர்கள் அரசியல்வாதிகளாக நோக்கப்படுவார்களே தவிர
புரட்சிவாதிகளாக வரலாற்றில் பதியப்ப��மாட்டார்கள்.
இந்த நூற்றாண்டில் தமிழினத்துக்காக அதன் விடுதலைக்காக உறுதியோடு களமாடி,தமிழின
விடுதலையின் அவசியத்தை ஒவ்வொரு மானமுள்ள மறத்தமிழர் நெஞ்சங்களிலும் அணையவிடாது பற்றியெரியவைத்த ஒரேயொரு தமிழினத் தலைவர் என்றால் அவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் மட்டுமே…!
#தமிழினத்தலைவர்
#தமிழினத்தின்_பெருந்தலைவர்
#மேதகு_வே_பிரபாகரன்
இறுதி வீரவணக்க நிகழ்வும்
மாவீரர்களை அடையாளப்படுத்தல் தொடர்பானது. இறுதி யுத்தத்தின் போது, கொண்ட லட்சியம் குன்றிடாது, தானை த��ைவன் வழி நின்று, களமாடி வீர காவியமான மாவீரர்களில், 20 மாவீரர்களை, கடந்த காலங்கள் போல் இவ்வாண்டும் உறுதிப்படுத்தி அடையாளப்படுத்தியுள்ளோம்.
Black July carried out 40 yrs ago wasn't triggered by e killing of 13 soldiers. Even be4 July 1983, #Tamils were subjected to violence such as killings & arson carried out by e army in Trinco in June.
BJ was a more widespread & barbaric moment of structural anti-Tamil violence.
1983 கறுப்பு யூலைப் படுகொலையின் 40வது நினைவுகூரல் யூலை 25 பிரித்தானியாவின் மையப்பகுதியில்.
தமிழர் அனைவரும் ஒன்றுதிரளுமாறு அழைப்பு.
1983 கறுப்பு யூலை,ஏறத்தாள 3000 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏ��ாளமான பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். கோடிக்கணக்கான தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இவையனைத்திற்கும் சிங்களக் காவற்படையும் இராணுவமும் துணைபோயின. கண்டனம் செய்த மற்ற நாடுகளுக்கு “எங்கள் வேலை எங்களுக்குத் தெரியும்” என்று அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா பதிலளித்தார். மேலும் மிகப்பிரபல்யமான வாசகமான “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதா��ம்” என்ற அறைகூவல் ஜெயவர்த்தனவால் விடுக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான தமிழர்கள் விரட்டப்பட்டு,கப்பலேற்றி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டனர். அவர்களின் சொத்துக்களனைத்தும் சூறையாடப்பட்டன. வெலிக்கடைச் சிறைப் படுகொலைகளும் நடந்து முடிந்தன. ஏற்கனவே பல இனப்படுகொலைகள் சிங்களவர்களால் நடத்தப்பட்டாலும் அவையெல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் அமைந்தது 83 கறுப்புயூலைப் படுகொலை.
#கறுப்பு_யூலை
#BlackJuly1983
#TamilGenocide
இறுதி மூச்சு வரை இந்தப் புலிகள் போராடத் திடங்கொண்டனர்.
சுற்றிலும் குவிந்து நிற்கும் சிங்களக் கூலிப்பட்டாளம்! வெளியைத் துளைக்கும் சன்னங்கள். மண் தரையில் புழுதி கிளப்பும் குண்டுகள். சீலனின் எந்திரத் துப்பாக்கி தொடர்ந்து சடசடக்கிறது.!
ஆனால் கூலிப்படையின் துப்பாக்கிச் சன்னம் ஏற்கனவே பெற்றிருந்த சீலனின் வீரத்தழும்புகளைக் கிழித்துக���கொண்டு மார்பில் பாய்கிறது. ரத்தம் பீறிடச் சீலன் தள்ளாடுகிறான்.
இரண்டு முறை முன்னரே களத்தில் குருதி சிந்திய அந்த வீரன், தன்னுயிர் போகவில்லை என்பதை உணர்கிறான்.
உயிரோடு அகப்பட்ட��ல் கடித்துக் குதறக் காத்திருக்கும் வேட்டை நாய்கள் சுற்றிலும்! “என்னைச் சுட்டுக் கொன்றுவிட்டு நீங்கள் பின் வாங்குங்கள்” என்று, சீலன் கட்டளையிடுகிறான்.
படைத்தலைவனின் கட்டளை. பணிக்கப்பட்ட இளம் வீரனோ திகைத்துப்போய் நிற்கிறான்.
பனை வடலிக்குள் வசதியாகப் பதுங்கி நிற்கும் இராணுவ வேட்டை நாய்களின் தொடர் வேட்டு மழை.
சீலனின் கட்டளையை நிறைவேற்றுவதா?
ஒரு பாசம் மிக்க தோழனின், ஒரு வீ���ம் மிக்க போராளியின் மரணம் தன்னால் நிகழ்வதா? அல்லது அவனை உயிருடன் எதிரியின் கையில் பிடிபட விட்டுவிட்டுத் தான் பின்வாங்குவதா? வினாடி நேரத்தில் விடை காணவேண்டிய நிர்ப்பந்தம் அந்த வீரனுக்கு.
“என்னைச் சுடடா சுடு” – சீலனின் கண்டிப்புடன் கூடிய கட்டளை மீண்டும் பிறக்கிறது.
நெஞ்சில் வழியும் ரத்தம்;
முகத்தில் துளிர்க்கும் வியர்வை.
சீலன் தள்ளாடியவாறு கண்டிப்புடன் மீண்டும் கட்டளையிடுகிறான்.
லட்சியத் தணலிலே புடம் போட்ட அந்த வீரனின் நெஞ்சில், உறுதி பிறக்கிறது.
கண நேரத்திற்குள் சீலனின் தலையில் து��்பாக்கிச் சன்னங்கள் பாய்கிறன. புரட்சி வீரன் சீலனின் உடலை மீசாலை மண் அணைத்துப் பெருமை தேடிக்கொள்கிறது.
அதற்குள், குறி பார்த்துச் சுடுவதற்கு வாகான – வாட்ட சாட்டமான தோற்றம் கொண்ட ஆனந்த் குண்டு பட்டுச் சாய்கிறான். ஆனந்த் உயர்ந்தவன் – உயரத்தில், தன்மானத்தில், வீரத்தில்.
“என்னையும் சுட்டு விடு” – ஆனந்தின் வேண்டுகோள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தூய்மைக்கு முத்திரை பத��க்கும் ரத்த சாட்சிகள்.
(நெருப்பாற்று நீச்சலின் பத்தாண்டுகள் நூலிலிருந்து…!சூரியப் புதல்வர்கள்)
இனப்படுகொலையாளி சந்திரிகாவின் ஒற்றைக்கண் போனதற்காய் இன்றும் கண்ணீர் வடிக்கும் மனிதநேயவாதிகளால் சந���திரிகா அரசின் இந்தப் படுகொலைக்கான நீதியை பெற்றுக்கொடுக்க முடியவில்லை.
இனப்படுகொலையாளிகளுக்கு நீங்கள் கொடுத்த முண்டுகளும்,இணக்க அரசியலும் இப்போது கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிவரை நீள்கிறது.
நாளை நவாலிப் படுகொலை போன்றே கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கான நீதி மறுப்புகள் தொடரப்படுவதற்கான பிரயத்தனங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தமிழினம் எதிர்த்துப் போராடுவதைத் ��விர வேறெந்த தெரிவுகளையும் காலம் விட்டுச்செல்லவில்லை.
#நவாலிப்_படுகொலை
#Navali_masacre
#SriLankaMassGraves
It is profoundly worrying that @GGPonnambalam has been arrested. I hope @JamesCleverly will be making urgent demands for his release. Democratically elected representatives of the Tamil community should be able to speak up for their constituents without fear of prison or worse