பொலிவியா, அர்ஜென்டினாவில் நீர்வளத்தைச் சூறையாடி, அம்மக்களின் போராட்டத்தால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்கு சேலம் மாநகராட்சியின் தண்ணீர் விநியோகத்தைத் தாரைவார்ப்பதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
சேலம் மாநகராட்சியின் குடிநீர் வியோகத்தை 25 ஆண்டுகளுக்கு சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்குத் தாரைவார்த்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. அர்ஜென்டினா மற்றும் பொலிவியா நாடுகளுக்குள் குடிநீர் விநியோகம் செய்வதாய் உள்நுழைந்து, தண்ணீரை விற்பனைப் பண்டமாக்கி, அம்மண்ணின் நீர்வளத்தைச் சூறையாடி, அந்நாட்டு மக்களால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு, சேலம் மாநகரத்தின் நீர் விநியோகத்தை வழங்கியிருக்கும் தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
நீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; அது புல், பூண்டு, பூச்சி, ஆடு, மாடு, கரடி, மான், புலி, சிங்கம் என உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்குமான உயிருடைமை. அதனை மனிதர்களுக்கு மட்டுமானதாக்கி, விற்பனைப்பண்டமாக மாற்றி, சந்தைப்படுத்திப் பொருளீட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. நீரை விற்பனை செய்யும் மானுடகுலத்தின் செயல் உலக உயிர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். புட்டிகளிலும், போத்தல்களிலும் அடைக்கப்பட்டுள்ள நீரை மனிதர்கள் விலைகொடுத்து வாங்கிப் பருகிவிட முடியும். காக்கையும், குருவியும், மைனாவும், சிட்டும் தனது தாகத்திற்கு என்ன செய்யும்? எனும் கேள்வியை உளச்சான்றோடு ஒவ்வொரு குடிமகனும் எழுப்ப வேண்டும். தண்ணீர் விநியோகத்தைத் தனியார்மயமாக்குவதும், குடிநீரை சந்தைப்பொருள் ஆக்குவதும் ஏற்கவே முடியாத சனநாயகத் துரோகம். வரிசெலுத்தி, வாக்குச் செலுத்தி ஓர் அரசை நிர்மாணிக்கும் குடிமக்களுக்கு தூய குடிநீரைத் தங்குதடையின்றித் தர வேண்டியது ஒரு அரசின் தலையாயப் பொறுப்பும், முதன்மைக் கடமையுமாகும்.
கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகம் தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிடப்பட்டு, அதற்கெதிராகப் பரப்புரையும், போராட்டமும் செய்து வரும் நிலையில், தற்போது சேலம் மாநகரத்தின் குடிநீர் விநியோகத்தை அதே சூயஸ் நிறுவனத்திடம் தவெக அரசு கையளித்திருப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் விஜய் அவர்கள் குடிநீர் வழங்குவதைத் தனியாருக்குத் தாரைவார்க்க உத்தரவிட்டது ஏன்? பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தால் குடிநீர் விநியோகத்தைச் சிறப்பாகச் செய்ய முடியும்; இவ்வளவு பெரிய நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு அரசு இயந்திரத்தால் செய்ய முடியாதா? பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் இலாபத் தேவைக்குத்தான் வேலைசெய்வார்களே ஒழிய, மக்கள் சேவைக்கு ஒருநாளும் வேலை செய்ய மாட்டார்கள் எனும் அடிப்படைப் புரியாதா? நீர்வளத்தையும், நீராதாரங்களையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் கையளித்தால், நீர் இறையாண்மை முழுக்க முழுக்க அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். அவர்கள் சொல்கிற விலைக்குக் குடிநீரை மக்கள் வாங்க வேண்டியப் பேராபத்துமிக்க சூழல் நாளை உருவாகும். இது வருங்காலத் தலைமுறையின் நலவாழ்வினைப் பன்னாட்டு நிறுவனத்திடம் அடமானம் வைக்கும் பேரபாயம். அர்ஜென்டினாவிலும், பொலிவியாவிலும் சூயஸ் நிறுவனம் செய்த மானுடகுலக் கொடுமைகள் வரலாறாக விரிகையில், கண்முன்னே சாட்சியாக இருக்கையில், அந்நிறுவனத்திடமே சேலம் மாநகரத்தின் நீர்விநியோகத்தை வழங்குவது மக்கள் விரோதப்போக்கின் உச்சமாகும்.
ஆகவே, சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, மாநில அரசே தரமான குடிநீரை மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அரசு செயல் திட்டம் வகுத்து, கள் விற்பனையை அனுமதிக்கலாமே? என்று கேள்வி எழுப்பியுள்ள மாண்பமை நீதியரசருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி!
கடந்த ஏப்ரல் மாதம் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் பனை மரத்திலிருந்து கள் இறக்கிய விவசாயி மணிகண்டன் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கை விசாரித்த மாண்பமை மதுரை உயர்நீதிமன்றக்கிளை நீதியரசர் புகழேந்தி அவர்கள் புதுச்சேரி, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் கள் விற்பனைக்கு அனுமதி உள்ளபோது, தமிழ்நாட்டில் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது ஏன்? எனவும், கேள்வி எழுப்பியதுடன், கள் விற்பனையை அனுமதித்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள் எனும்போது, தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு அரசு ஏன்
அனுமதி வழங்கக்கூடாது? அரசு செயல் திட்டம் வகுத்து, கள் விற்பனைக்கு அனுமதிக்கலாமே? என்றும் கருத்துத் தெரிவித்திருப்பது மகிழ்ச்சியையும், புதிய நம்பிக்கையையும் தருகிறது.
‘கள்’ உணவின் ஒரு பகுதி என்றும், சங்ககாலம் தொட்டே ‘கள்’ தமிழர் பண்பாட்டில் பயன்பாட்டில் உள்ளது என்றும் வலியுறுத்திவரும் நாம் தமிழர் கட்சி, பனை தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் ‘கள்’ விற்பனைக்குத் தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் போராடி வருகிறது. அதற்கு வலுசேர்க்கும் வகையில் ‘கள்ளின் மருத்துவப் பயன் என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ள மாண்பமை நீதியரசர் புகழேந்தி அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் கள் விற்பனையை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்று போராடிவரும் பனை தொழிலாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் நெடுங்காலக் கோரிக்கை விரைவில் நிறைவேறட்டும்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தம்பி மாரிதாஸ் மீதான தவெக அரசின் கைது நடவடிக்கை அப்பட்டமான அரசியல் பழிவாங்கல்! அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறுவோரை அச்சுறுத்தும் பாசிசப்போக்கு!
@CMOTamilnadu@TVKVijayHQ
ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகருமான தம்பி மாரிதாஸ் அவர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடுகளைத் தொடர்ச்சியாகத் தோலுரித்து வரும் மாரிதாசைக் கைதுசெய்திருப்பது அதிகாரத் திமிரின் உச்சமாகும்.
தம்பி மாரிதாசின் கருத்துகள் அவதூறானவை எனக் கருதினால் சட்டப்படியாக வழக்குத் தொடுக்கலாம்; மாறாக, எவ்வித விசாரணையும் இன்றி உடனடி கைது நடவடிக்கை என்பது சனநாயக விரோதமாகும். பட்டப்பகலில் படுகொலை செய்வோர், பாலியல் வன்கொடுமை செய்வோர், போதைப்பொருட்கள் விற்பனை செய்கின்ற கொடுங்குற்றவாளிகள் மீதெல்லாம் பாயாத அதிரடி கைது நடவடிக்கைகள், அரசை விமர்சிப்பவர்கள் மீது மட்டும் பாய்கிறது என்றால் இந்த அரசும் அதிகாரமும் யாருக்கானது? இதுதான் மக்கள் வேண்டிய மாற்றமா? ஆளும் தவெகவைச் சேர்ந்தவர்கள் மாற்றுக்கட்சியினரையும், அரசை விமர்சிப்போரையும் தனிநபர் தாக்குதல் தொடுத்து, இணையவெளியில் அவதூறுகளையும், ஆபாசத்தையும் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடும் நிலையில், அவர்கள் மீதெல்லாம் பாயாத சட்டம் தம்பி மாரிதாஸ் மீது பாய்கிறதென்றால், இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் போக்காகும். தவெகவை மற்றவர்கள் விமர்சிப்பதை கவனிக்கும் காவல்துறை, தவெகவினர் மற்றவர்களை விமர்சிப்பதை கண்டுகொள்ளாதது ஏன்?
திருச்சியில் பேசிய முதல்வர் விஜய், ‘என்னை விமர்சிப்பவர்கள் நிறுத்திவிட வேண்டாம், தொடர்ந்து விமர்சியுங்கள்’ என்று மேடையில் வீரவசனம் பேசிவிட்டு, இப்போது அற்ப விமர்சனத்திற்கு அதிரடி கைது நடவடிக்கை எடுப்பதற்கு பெயரென்ன? முந்தைய திமுக அரசு செய்த கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் அதே கொடுஞ்செயலை தவெக அரசும் தொடர்வதற்கு பெயர்தான் தூய சக்தியா? வெட்கக்கேடு! ஆளும் அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறுவோரை அச்சுறுத்த முனையும் இத்தகைய மிரட்டல்கள் அப்பட்டமான பாசிசப்போக்காகும். பந்து எப்போதுமே ஒருவரிடம் மட்டுமே இருந்துவிடுவதில்லை. இன்று உங்கள் கைகளில் இருக்கும் பந்து நாளை மற்றவர்கள் கைகளுக்கும் இடம்மாறும்; பார்த்து விளையாடுங்கள்.
ஆகவே, தவெக அரசு பழிவாங்கும் போக்கோடு நடந்துகொள்ளாமல் சனநாயகத் தன்மையோடு இயங்க வேண்டுமெனவும், தம்பி மாரிதாசை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
#ReleaseMaridhas
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அதிமுகவின் பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர், சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்.
உங்களுடைய பொதுவாழ்க்கைக்கானச் செயல்பாடுகள் சிறக்கட்டும்!
@EPSTamilNadu
மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் விஜய் அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு வருகைப் புரிந்தார். அவரை வரவேற்று, என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்தேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மொழிக்கும், நிலத்துக்கும், வாழ்வுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்த தமிழ்ப்பேரினத்தின் அறிவுசார் சொத்தாகத் திகழும் ஒப்பற்றப் பேராளுமை!
தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டுக்குமான கருத்தியல் காப்பரணாகத் திகழும் தமிழ்த்தேசியம் எனும் தன்னிகரற்ற தத்துவத்தைப் பன்னெடுங்காலமாகத் தூக்கிச் சுமந்து, சமகாலத் தமிழ்ப்பிள்ளைகளுடைய தோள்களுக்கு மாற்றிவிட்டிருக்கிற போற்றுதற்குரிய பெருந்தகை! இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டி, நெறிப்படுத்தும் முன்னத்திஏர்!
தனது கருத்தியல் வலிமையால் வரலாற்றுப்புரட்டுகளையும், பொருந்தா திரிபுவாதங்களையும் முற்றாக உடைத்தெறிந்து, தமிழ்த்தேசிய இனத்தின் தனித்துவத்தையும், தமிழ்த்தேசியத் தத்துவத்தின் தனிச்சிறப்பையும் பறைசாற்றும் பேராசான்!
திருக்குறள் எனும் பொதுமறையை அறிவுக்கொடையாக உலகுக்கருளிய தமிழ்ப்பேரினத்தின் அறிவுமரபின் தொடர்ச்சியாகவும், அறம்சார்ந்த பொதுவாழ்வுக்கு இலக்கணமாகவும் திகழும் போற்றுதற்குரிய பெருந்தமிழர்!
தமிழினத்தின் உயர்வுக்காகவும், மேம்பாட்டுக்காகவும், நலனுக்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டு போராடிய மகத்தான மக்கள் போராளி! எங்களுக்கு உளவியல் பலமாக இருந்து எங்களை உத்வேகப்படுத்தி இன்னும் இன்னும் வேகமாக ஓடச் செய்திடும் எங்களின் முன்னோடி!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர்!
தமிழ்த்தேசியப் பேராசான்!
தமிழ்த்தேசிய இனத்தின் பெரியார்
அப்பா
பெ.மணியரசன்
அவர்களுக்கு
நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள்
நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் தமிழ்த்தேசிய இனம் பெருமிதம் கொள்கிறது.
தமிழ்த்தேசியப் பிள்ளைகள் நாங்கள் புத்துணர்ச்சியும், பூரிப்பும் அடைகிறோம்! இன்னும் பல்லாண்டு காலம் பெருவாழ்வு வாழ வேண்டுமென வாழ்த்துவதில் உளம் மகிழ்கிறேன்!
அன்னையர் நாள் வாழ்த்துகள்!
'சொர்க்கம் என்பது தாயின் காலடியில் இருக்கிறது!' என்கிறார் இறைதூதர் நபிகள் நாயகம்!
'என் வாழ்க்கையில் நான் கற்ற மிகப்பெரிய பாடங்கள் என் தாயிடமிருந்தே வந்தவை!' என்கிறார் அண்ணல் காந்தியடிகள்.
'என்னுடைய எல்லா சாதனைகளுக்கும் காரணம் என் தாய்தான்!' என்கிறார் அபிரகாம் லிங்கன்.
'தாயின் அன்பை விட உயர்ந்தது உலகில் எதுவுமில்லை!' என்கிறார் வில்லியம் ஷேக்ஸ்பியர்.
'அம்மாவின் அன்பும் தியாகமும் குழந்தையின் வெற்றிக்கான முதல் விதை!' என்கிறார் நம்முடைய ஐயா அப்துல்கலாம்.
ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் தாய்தான்!
ஈன்ற தாய்க்கு ஒப்பாக இவ்வுலகில் எதுவுமே இல்லை!
எல்லோருடைய இடத்தையும் தாய் நிரப்பிவிடுகிறாள்! ஆனால், தாயின் இடத்தை எவராலும் நிரப்பிவிட முடியாது!
மனிதனுக்கு மட்டுமல்லாது, உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானதாக இருக்கும் புனித உறவு தாய் மட்டும்தான்!
வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்!
கண்கள் இல்லாமல் பார்த்தேன்!
காற்று இல்லாமல் சுவாசித்தேன்!
கவலையில்லாமல் வாழ்ந்தேன்!
என் தாயின் கருவறையில்!
கோயிலில் ஒரு கருவறை இருக்கிறது அது நாம் உருவாக்கியது; தாயிடம் ஒரு கருவறை இருக்கிறது, அது நம்மையே உருவாக்கியது!
நாம் எவ்வளவு பெரிய உயரத்திற்குப் போனாலும் நம்மைப் பார்த்து பொறாமைப்படாத ஒரே உயிர் உலகத்தில் உண்டென்றால், அது நம்மைப் பெற்றெடுத்த அன்னையே!
உலகத்தில் உள்ள செல்வங்கள் அனைத்தையும் ஒரு தட்டிலும், தாயின் பேரன்பை மற்றொரு தட்டிலும் வைத்தால்; தாயின் பேரன்பு இருக்கும் தட்டுதான் தாழ்ந்து இருக்கும்!
தாய்மையைப் போற்றுவோம்!
தாய்மையை வணங்குவோம்!
நம் தாய்மார்கள் அனைவருக்கும் அன்பு நிறைந்த அன்னையர் நாள் வாழ்த்துகள்!
தமிழ்நாட்டு முதல்வராகப் பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கும், அவரது அமைச்சரவையினருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துகள்!
திமுக-அதிமுக அல்லாத ஒரு கட்சி பல்லாண்டுகள் கழித்து தமிழகத்தை ஆளவிருப்பதில் மகிழ்கிறேன்.
@TVKVijayHQ
நாம் தமிழர் கட்சி தன்னோட சமூக வலைதள ஊடகத்தை பலப்படுத்த ஒருத்தரை ஒருத்தர் ஃபாலோ பண்ணுங்க. என்னைய ஃபாலோ பண்ணுங்க நானும் ஃபாலோ பேக் பண்றேன்..
🔄⬆️⬆️Retweet⬆️⬆️🔄
நாம் தமிழர் அதிகாரப்பூர்வ @NaamTamilarOrg 196 பேரை பின்தொடர் செய்கிறது அந்த 196 கணக்கில் சில கணக்குகள் முகப்பு படங்கள் கரும்பு விவசாயி, மைக் சின்னம் உள்ளது... இதையும் கூட கவனிக்கவில்லையா
@Sunandha_TS@_ITWingNTK
நாம் தமிழர்கட்சி உறவுகள் அனைவரும் ஒருவரை ஒருவர் follow செய்து, follow back செய்து, நமது கருத்துகளையும் குரலையும் ஒன்றாக வளர்ப்போம். 🤝
Retweet செய்து என்னை follow பண்ணுங்க…
நான் உங்களை follow back பண்ணுறேன். ✨
#நாம்தமிழர்கட்சி#NTK#Seeman#தமிழர்ஒற்றுமை#தமிழர்குரல்
#நாம்தமிழர்கட்சி உறவுகள் அனைவரும் ஒருவரை ஒருவர் follow - follow back செய்யுங்கள். ✊
நமது கரங்களை நாமே வழுபடுத்துவோம்... 🤝
🔁 Retweet 🔁
பின் குறிப்பு - போலி தமிழ்தேசியவாதி modern day கருணா பாரிசாலன் ஆதரவாளர்கள் பூட்டை ஆட்ட வேண்டாம் ..வண்ட வண்டையா கேப்பேன் 🚶