படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே,
இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள்.
அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?
வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்?
அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?
கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?
“தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்”- என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா?
உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே!
நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம்,
வெற்றி அரிவாள் வெட்டு திட்டம்,
வெற்றி விலைவாசி உயர்வு திட்டம்,
வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம்,
வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம்
இவ்வளவுதான்!
பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள்.
“ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!
இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை?
கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை.
ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்.
அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.
“எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.
அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது.
ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.
மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்!
தமிழ்நாடு அரசியல் வரலாற்றின் அருவருப்பான அசிங்கங்கள் இரண்டு நாட்களாக நடந்து கொண்டிருக்கின்றன.
வரலாற்றில் இடம் இருப்பவர்கள், வரலாற்றைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வரலாற்றில் இடம் இல்லாதவர்கள் அதனை அசிங்கப்படுத்தும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.
நெருக்கடி நிலை எதிர்ப்பென்பது ஒரு Political Willன் வெளிப்பாடு. ஒன்றிய அரசின் செயல்பாடுகளை, பிரதமரின் பெயரை உச்சரித்த உடன் பாய்ந்து வந்து தடுப்பவர்களுக்கு அந்த Political Willஐப் பற்றி தெரிந்திருக்க நியாயமில்லைதான்.
1975 ஜூன் 25 அன்று நள்ளிரவு நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. ஜூன் 27 அன்று திமுகவின் செயற்குழு கூடி அதனைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது.
இப்போது தவெக அரசின் Sappers and Miners ஆக இருக்கும் வைகோ Magna Carta of DMK என அந்தத் தீர்மானத்தைக் குறிப்பிடுவார். Magna Carta என்றால் என்ன என்பதை படிக்க முயலுங்கள், அந்த தீர்மானத்தின் வீச்சு புரியும்.
இந்தியா முழுக்க நெருக்கடி நிலைக் காலகட்டத்தை எதிர்த்தவர்கள் தலைமறைவாக இருக்கும் இடமாக தமிழ்நாடு இருந்தது. ஜார்ஜ் பெர்ணாண்டஸ் போன்ற தலைவர்கள் தமிழ்நாட்டில் தங்கியிருந்தனர். தமிழ்நாட்டில் மட்டுமே சுதந்திரக்காற்று வீசுகிறது என இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் பதிவு செய்திருக்கிறார்.
நெருக்கடி நிலைக்காலகட்டத்தில் இந்திரா காந்தியின் முதல் எதிரியாக கருதப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணனோடு கலைஞர் கொண்டிருந்த உறவும், காமராஜரைக் கைது செய்ய மறுத்ததையும், கலைஞரோடு இணைந்து நெருக்கடி நிலையை எதிர்த்து போராடுமாறு காமராஜரிடம் சொல்லவிருப்பதாக ஜெயப்பிரகாஷ் நாராயணன் பகிர்ந்ததையும் தேவசகாயம் ஐ.ஏ.எஸ் பதிவு செய்திருக்கிறார். நெருக்கடி நிலைக் காலகட்டத்தில் ஜெ.பி அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையை உள்ளடக்கிய சண்டிகர் மாவட்ட ஆட்சியராக இருந்தவர் தேவசகாயம்.
நீங்கள் நெருக்கடி நிலையை எதிர்க்காதீர்கள்; பதவிக்காலத்திற்குப் பின்னரும் தேர்தலின்றி உங்கள் ஆட்சி நீடிக்கும் என இந்திரா காந்தி கொடுத்த ஆஃபரை மறுதலித்து நெருக்கடி நிலையைக் கடுமையாக எதிர்த்தார் கலைஞர்.
அதன் பரிசுதான் ஆட்சிக் கலைப்பு, தொடர்ந்து கட்சியினர் கைது.
மிசா காலத்தில் ஸ்டாலின் கைது பற்றி, ஏற்கனவே பிரச்னை கிளப்பியவர் மாஃபா பாண்டியராஜன். இப்போது அதனை பிரச்னையாக்கியிருப்பவர் நிர்மல்குமார்.
நெருக்கடி நிலைக் காலகட்டத்தில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தில் தனது அரசியலைத் தொடங்கியவர் நிர்மல்குமார். முதலில் நெருக்கடி நிலையை எதிர்த்த அந்த இயக்கம் பிறகு இந்திரா காந்தியிடம் சரணடைந்து, 20 அம்சத் திட்டம் பற்றி பரப்புரை செய்யத் தொடங்கியது. அந்தப் பாரம்பரியத்தில் வந்தவர்களுக்கு போராட்டக்காரர்கள் விசித்திரமாகத்தான் தெரிவார்கள்.
நெருக்கடி நிலை காலகட்டத்தில், பிரிவினைவாதம் பேசி தமிழ்நாட்டில் புரட்சி உண்டாக்க முனைந்த காரணத்தால், மிசா சட்டத்தின் கீழ் ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று சொல்லும் ஆவணத்தை ஆதாரமாகத் தர முடியும். சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் பேசியதற்கு ஆதாரம் ஏதாவது இருக்கிறதா?
தவெகவின் இந்தக் கருத்துருவாக்கம் நேற்றோ இன்றோ தொடங்கியதில்லை. சில நாட்களுக்கு முன்பு நான் நெறியாள்கை செய்த நிகழ்ச்சியில் தவெகவைச் சேர்ந்த ஒருவர் இதனை பேச முயன்றார். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை; வேண்டுமானால் இஸ்மாயில் கமிஷன் அறிக்கையை தருகிறேன் படிக்கிறீர்களா என்றேன். இல்லை அதனை விட்டு விடலாம் என்றார். அந்த அசிங்கமான கருத்துருவாக்கம் இன்று சட்டப்பேரவைக்குச் சென்றிருக்கிறது.
நெருக்கடி நிலை காலகட்டத்தில் ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதானதற்கு இஸ்மாயில் கமிஷனில் ஆதாரம் இருக்கிறது. அந்த இஸ்மாயில் கமிஷன் அறிக்கை சட்டப்பேரவையில், வைத்து விவாதிக்கப்பட்டது.
சட்டப்பேரவையில் ஏற்கனவே வைத்து விவாதிக்கப்பட்ட ஒன்றிலிருந்து மாற்றமாக வேறொன்றை, ஆதாரமில்லாமல் பேரவையில் பேச நடுநிலை சபாநாயகர் எப்படி அனுமதித்தார் என்று தெரியவில்லை.
பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என்பதை நிறுவுவதற்காக எல்லா அழிச்சாட்டியங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.
வரலாறு என்பது நடந்தது. ஆவணங்களிலும், ஆதாரங்களிலும் அது நிறைந்திருக்கிறது. பொதுக் கழிப்பறையில் கிறுக்கப்படும் அசிங்கமான கிசுகிசுக்களில் அதனைத் தேடாதீர்கள்.
கடந்த 2021 முதல் 2026 வரையிலான கல்வியாண்டுகளில், தமிழக அரசுப் பள்ளிகளில் படித்த 1,912 மாணவர்கள் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், என்.ஐ.டி உள்ளிட்ட நாட்டின் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து சாதனை படைத்துள்ளனர். இது தமிழ்நாட்டின் சிறந்த கல்வித் தரத்திற்குச் சான்றாகும்: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்
அமிழ்தம் கடைந்து தந்துவிட்டு அதற்கு விலையாக காலமெல்லாம் நஞ்சையே பெற்றுக்கொண்ட பேரரக்கர் அவர்.
இந்திய வரலாற்றில் பேரரக்கரகராகவும்,
பேரருளாளனாகவும் வாழ்கிறார் கலைஞர் .
வாழ்வபனுக்கு அஞ்சலி எதற்கு?
கலைஞர் வாழ்கிறார். வயது எட்டு.
திமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை, நெருக்கடி நிலைக்காலத்தில் குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்.
வள்ளுவனுக்கு கோட்டம் வேண்டுமென அடிக்கல் நாட்டி, வடிவமைத்த கலைஞர் இன்றி வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்டது. அதைப் பற்றி நெஞ்சுக்கு நீதியில்,
”சரித்திரத்தில் நமக்கான இடம் சலுகையால் பெறக்கூடியது அல்ல; என்ன நேர்ந்தாலும், எது நேர்ந்தாலும் எனக்குரிய இடம் இருக்கிறது”
என்று எழுதினார் கலைஞர்.
பள்ளிக்கூடம் தொடங்கி, அடக்கம் செய்வது வரை எல்லா இடத்தையும் அவர் போராடியே பெற்றார்.
இன்று சட்டப்பேரவையில் பேசிய துணை சபாநாயகர் ரவிசங்கர், கலைஞர் டிவி என்று திட்டத்திற்கு பெயர் வைத்ததாக திமுகவை குற்றம்சாட்டினார். அந்த திட்டத்தின் உண்மையான பெயர் தமிழ்நாடு அரசு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டித் திட்டம். அதை வாங்கிப் பயன்படுத்திய மக்கள்தான் கலைஞர் டிவி என்று அதனை அடையாளப்படுத்தினார்கள். வரலாற்றில் அது அப்படியாகவே நிலைத்தது.
திட்டங்களில் இருந்து அவர் பெயரை நீக்கலாம் ஆனால் அவர் கொண்டு வந்த திட்டங்களில், அதன் பயன்களில் கலைஞர் என்றும் வாழ்வார்.
சரித்திரத்தில் கலைஞருக்கான இடம் சலுகையால் கிடைத்தது அல்ல✨
கல்விக்கூடங்கள் காட்சிக்கூடங்கள் அல்ல...
அரசியலின் மேடை அல்ல...
அடுத்த தலைமுறைகளை உருவாக்கும் அறிவுப்பண்ணையாகும் !
இனிவரும் காலங்களில் பள்ளி வளாகங்களில் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதியில்லை.
அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளைத் தவிர்த்து, பிறந்தநாள் விழாக்களோ அரசு சாராத நிகழ்வுகளோ நடத்தக் கூடாது.
எந்த அரசியல் கட்சியினரும்,
எந்தத் தனியார் அமைப்பினரும்
நேரடியாக மாணவர்களைச் சந்திக்க அனுமதியில்லை.
மாணவச் செல்வங்கள் வகுப்பறையில் அமர்ந்து கற்கும் ஒவ்வொரு நொடியும், அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல,
இந்த நாட்டின் வருங்காலத்தை வடிவமைக்கும் பொன்னான நேரமாகக் கருதப்படுகிறது.
அந்த நேரம் வெறும் பாட நேரமல்ல;
கனவுகள் விதைக்கப்படும் நேரம்,
சிந்தனைகள் செழுமையாக்கும் நேரம்,
அறிவு பெருகும் நேரம்,
வருங்காலத் தமிழகம் தன் எண்ணங்களை வண்ணமயமாக செதுக்கும் நேரம்.
எனவே, வகுப்பு நடைபெறும் நேரத்தில் எந்தக் காரணத்திற்காகவும் யாரும் பள்ளிக்குள் நுழைவதோ, மாணவ, மாணவியரை நேரடியாகச் சந்திப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
மாணவர்களின் கவனமும், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியும் எவ்வித இடையூறுமின்றித் தொடர்வதே நம் முதன்மைப் பொறுப்பு.
பள்ளி வளாகங்கள் விழாக்களின் கூடாரமாக அல்ல, அறிவுத் தெளிவின் விழிப்புணர்வின் சிந்தனை மண்டபமாக மிளிர வேண்டும்.
புகழ் பரப்பும் இடமாக அல்ல, எதிர்காலத்தைப் படைக்கும் இடமாகத் திகழ வேண்டும்.
எண்ணங்களைத் துளிர்விட்டு,
கனவுகளுக்கு இறக்கை கட்டி,
எண்ணுவதையெல்லாம் நனவாக்கும் ஆற்றலைப் பெறும் நம் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் இன்னும் இன்னும் உயரப் பறக்கட்டும்!
அறிவிலும், பண்பிலும், சாதனைகளிலும் உலகம் வியக்கும் உயரங்களை எட்டட்டும்!
அரசுப் பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் உரிய ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் கல்விச் சூழலை உறுதிசெய்யும் வகையில் விரிவான நெறிமுறைகள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விரைவில் வெளியிடப்படும்.
அன்பு மாணவச் செல்வங்களே...
நல்லதைப் படியுங்கள்!
நன்றாகப் படியுங்கள்!
#MadrasMatinee deserves the Best film, Best Editing, Best Music, Best Film, Best Director of 2025 awards!
More than anything else, any award which chooses any name except Madras Matinee Kaali venkat for Best Actor, That award show is a clownery.
Please do watch it if u haven’t.
Onnnu mattum Enaku nalla puriyuthu
The Vijay I admired was never real.. when he opens his mouth u can understand what a narcissistic megalomaniac he is..😵💫🚶🏾♂️
Dmkians are known to create ..
Reels to reality series - 6
நம்ம குழந்தைகளை class room சினிமா பாடல்கள் மனப்பாடம் போல் பாட விட்டீர்களே..
நாங்கள் - stem lab
நீங்கள் - beast பாடல் class
நீங்கள் #நான்_முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம்.
ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் #நான்_முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்!
நீங்கள் #நான்_முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம்.
ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் #நான்_முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்!
EWSங்கறது SC, ST, OBC அல்லத 'குறிப்பிட்ட வகுப்பினருக்கு'ங்கறதே இன்னும் பெரும்பான்மை மக்கள்கிட்ட ரீச் ஆகல.
இதுல 8 லட்சம்ங்கறது 'எப்படி பொருளாதாரத்தில் பின் தங்கிய' ஆகும்ங்கறது ரெண்டாவது கேள்வி.
Express கட்டுரை என்ன சொல்லதுன்னா, 2025ல 104 பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழைகள், EWS மூலமா UPSCல வந்து இருக்காங்க.
- குறைந்தது 84 பேர் கோச்சிங் போயிருக்காங்க
- குறைந்தது 67 பேர் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து இந்தியாவின் தலைசிறந்த கோச்சிங் மையங்களில் படித்திருக்கிறார்கள்.
- குறைந்தது 10 பேருக்கு காப்பரேட் துறையில் அனுபவம் இருந்தது.
- குறைந்தது 14 பேர் ஐஐடி பட்டதாரிகள்
- குறைந்தது 28 பேர் பல தொழில் செய்யும் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள்.
EWSக்கு காம்ரேட்கள் சிவப்பு கம்பளம் வீசி பாராட்டுப் பத்திரம் வீசினப்போ, கனிமொழி திட்டின வீடியோ எல்லாம் கண்ணு முன்னாடி வந்து போகுது.
அதுலயும் நகைமுரண் என்னன்ன EWSஇருந்தாத்தான் என்னவாம் OBC தற்குறிக தான் விவாதம் பண்ணும். அதைய அனுபவிக்கற EWS கமுக்கமா அனுபவிச்சுக்கும்.
சமச்சீர் திட்டம் கொண்டுவந்தப்போ, இந்தக் கருமத்த பாடத்திட்டமா வச்சா அரசுப்பள்ளிக்கும் எங்களுக்கும் வித்தியாசம் இல்லாம போயிடும்னு மெட்ரிக் கும்பல் வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சுட்டு இருந்துச்சு. நாங்க உசத்தி இல்லாம ஆகிடுவோம் அப்புறம் எப்படி மிடில் கிளாஸ் எங்ககிட்ட பிள்ளைகள சேர்ப்பாங்கன்னு அழுதுட்டு இருந்தாங்க.
அப்புறம் அப்ப இருந்து நிறைய மெட்ரிக் 'நாங்க வேற வர்ணம்'டான்னு காட்டிக்க CBSEனு புது போர்டு மாட்டினாங்க.
இப்படியாப்பட்ட தனியார் பள்ளிகளுக்குத்தான் புண்ணியம் சேர்க்கறவங்க; நகைய வித்து நடத்தறவங்கன்னு போன வாரம் கல்வி அமைச்சர் பாராட்டு பத்திரம் வீசிட்டு இருந்தாப்ல.
நம்ம நாட்டுல மட்டும் தான் ஒன்னு மோசம்னு சொல்லி தடுத்தா பாராட்டு கிடைக்காது. அதைய மறுபடியும் நடைமுறைப்படுத்தறவங்கள பாராட்டித் தள்ளுவாங்க.