நம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் எனது தலைமையில் இன்று ந���ைபெற்றது.
இந்த கூட்டத்தின் போது, தலைமை கழகத்தின் சார்பில் மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகளை வாழ்த்தி மகிழ்ந்தேன்.
காலத்திற்கேற்ப தம்மை தகவமைத்துக் கொள்வதே நம் கழகத்தின் சிறப்பியல்பு. அதனால், நம் கழகம் மேற்கொண்ட மறு சீரமைப்பு பணிகளால் வயது மூத்தவர்களுக்கு இனி பதவி கிடைக்காது என யாரும் வருத்தப்பட வேண்டாம் என்றும் அனைவருக்கும் பொறுப்புகள் வழ��்க நம் தலைவர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார் என்பதையும் நிர்வாகிகளுக்கு அப்போது தெளிவுபடுத்தினேன்.
நாம் தான் கழகம்; கழகம் தான் நாம் என்பதை மனதில் கொண்டு அனைவரும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் பணியாற்றுவோம்!
உறுதிமிக்க தொண்டர்களால் கட்டமைக்கப்பட்ட நம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு அயராது உழைப்போம்!
#DMKForever
மக்களின் வயிற்றிலடிக்கும் விலைவாசி உயர்வு!
தேசிய சராசரியை விட (4.45%) தமிழ்நாட்டின் பணவீக்கம் 5.44% ஆக உயர்ந்துள்ளது. தவெக அரசின் நிர்வாகச் சீர்கேட்டால் எளிய மக்களின் அத்தியாவசியத் தேவைகளின் விலைகள் விண்ணைத் தொடுகின்றன.
விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்தும் தவெக அரசு, மக்கள் சந்திக்கும் இந்த உண்மையான பொருளாதார நெருக்கடியைக் கண்டுகொள்ளாமல் கண்மூடி மௌனமாக இருக்கிறது!
@MaridhasAnswers கேள்வி கேட்டா பதில் சொல்லலாமா வம்பிழுக்கிறான்க அதுலையும் வளந்தவன் யூடிய���பர் சங்கி இவனுங்க ரொம்ப ஓவரா பன்றான்க .... இதுக்கெல்லாம் காலம் பதில் சொல்லும்
அலட்சியத்தோடும் - ஆணவத்தோடும் விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்து, கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதல்படி, கழக உடன்பிறப்புகள் - தோழமை இயக்கத்தினர் - விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து தஞ்சை மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தினோம்.
ஆடிப்பெருக்கு நாளன்று கூட அகண்ட காவிரி, வறண்ட காவிரியாக காட்சி அளிப்பதற்கு இந்த Dummy ஆட்சியாளர்களே காரணம்.
சோறு போடும் விவசாயிகள் கண்ணீரில் மிதக்கும்போது Reels போடும் முதலமைச்சருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினோம்.
விவசாயக் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்,
மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைத் தடுக்க வேண்டும்,
டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்,
ஆகிய கோரிக்கைகளை இந்த முதலமைச்சர் உடனே நிறைவேற்ற வேண்டும் என உரையாற்றினோம்.
சட்டமன்றம் – நீதிமன்றம் – மக்கள் மன்றம் என அனைத்து இடங்களில��ம் விவசாயிகள் பிரச்னைகளுக்காக தி.மு.கழகத்தின் குரல் என்றைக்கும் ஒலிக்கும்!
#விவசாயவிரோதிவிஜய்
என் மீதுள்ள பாசத்தால், அன்பால், என் கைதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராடிய கழக மூத்த முன்னோடிகளுக்கும், தி.மு.கழக உடன்பிறப்புகளுக்கும் நான் தலை வணங்குகிறேன்!
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @udhaystalin அவர்கள்
#தொடைநடுங்கி_அரசு
இதே கைது நடவடிக்கையை தான் மற்ற பெண்கள் எதிராக நடந்த போதும் செய்தாரா விஜய்? இது திரிஷாவிற்காக நடத்தப்படும் கைது தான் ஒழிய வேறு இல்���ை.
உதயநிதி கைது சரியான நடவடிக்கை அல���ல.
இது முழுக்க "திரிஷாவ" யாராது பேசினால் இதான் பார்த்துக் கொள்ளுங்கள் என்று எல்லாருக்கும் சொல்லும் கேவலமான அதிகார திமிரின் குரல்...
#தொடைநடுங்கி_அரசு
காவிரி, சட்டம்-ஒழுங்கு, சரிந்துவரும் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளில் தனது கையாலாகாத்தனத்தை மறைக்க, கைது நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ள பாசிச தவெக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
அரசின் ���டக்குமுறையையும் அதன் உண்மை முகத்தையும் மக்களிடம் அம்பலப்படுத்தி வரும் நமது மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்களின் குரலை ஒடுக்க, காவல்துறையை ஏவிவிட்டுள்ளது இந்த #தொடைநடுங்கி_அரசு.
ஆனால், மக்களின் குரலை மிரட்டலாலும், கைது நடவடிக்கைகளாலும் ஒருபோதும் நசுக்க முடியாது.