#WATCH | Delhi: At the Republic TV Summit 2026, Prime Minister Narendra Modi says, "Sridhar Vembu is seated here. When our entrepreneurs operate with a 'Nation First' spirit and set their goals while understanding the country's needs, institutions are built, and the nation prospers. What has Sridhar Vembu achieved? I recently visited VivaTech in France. There must have been around 1.5-2 lakh young people present. The French President and I were visiting various stalls to see the work done by these young innovators. We visited the Zoho stall. I was amazed and felt a sense of pride to see the crowd of European youth gathered there. They were eager to understand this new global phenomenon. Perhaps it hasn't been discussed as much in India as I witnessed in France..."
(Source: DD News)
I think all of us who have some public responsibility need to stand with the students and understand the kind of difficulty and suffering they are going through.
Every paper is leaked, and they are under pressure to perform.
Their parents are taking loans to educate them and are suffering financially to support their education. Yet there is no outcome. So, it's a deep systemic problem.
We all need to work together to resolve it. The issue of paper leaks is not happening in just one exam; it's happening in every single exam.
We all really need to stand with them, show them support, and bring about change.
: Congress General Secretary & MP Smt. @priyankagandhi ji on LoP Shri @RahulGandhi
's campaign to address problems faced by students & his visit to Kota for a student convention.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பத்தின் 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கியுள்ளது. இந்த அநாகரிகமான மற்றும் கொடூரமான குற்றச்செயலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
குழந்தகைள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை தாக்குதல் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளின் பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்யவேண்டும். தீவிர ரோந்து பணியில் காவல்துறை ஈடுபடவேண்டும்.
தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் புலம்பெயர்ந்து வந்து உழைக்கும் எளிய மக்களின் குழந்தைகளுக்குக்; கூட பாதுகாப்பாற்ற சூழல் நிலவுவது மிகுந்த வேதனையளிக்கிறது. பிஞ்சு என்றும் பாராமல் இத்தகைய மிருகத்தனமான செயலில் ஈடுபட்ட குற்றவாளிக்குச் சட்டத்தின் முன் எவ்வித விலக்கும் அளிக்கக் கூடாது.
கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிக்கு, நீதிமன்றத்தின் மூலம் மிக விரைவாக, கடுமையான மற்றும் முன்மாதிரியான தண்டனை பெற்றுத்தரப்பட வேண்டும். மேலும், வழக்கு விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வேண்டும். குழந்தையை இழந்து தவிக்கும் வடமாநிலத் தம்பதியினருக்குத் தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடும், தார்மீக ஆதரவும் வழங்க வேண்டும்.
சிப்காட் போன்ற தொழிலாளர்கள் அதிகம் வாழும் பகுதிகளில், குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் காவல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட வேண்டும். சிசிடிவி கேமராக்களை அதிகரிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சட்டரீதியான நீதி விரைந்து கிடைக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன்.
- தலைவர் திரு @SPK_TNCC
நாட்டின் ஒவ்வொரு இளைஞருக்கும் நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான்:
இன்று இந்த நாட்டில் கடின உழைப்பிற்கான பலன் கிடைப்பதில்லை, மாறாக கனவு காண்பதற்காக தண்டனையே கிடைக்கிறது.
ஒவ்வொரு வினாத்தாள் கசிவும், ரத்து செய்யப்படும் ஒவ்வொரு தேர்வும், முழுமையடையாத ஒவ்வொரு பணி நியமனமும் - இந்த நிர்வாக அமைப்பின் தோல்வி மட்டுமல்ல, லட்சக்கணக்கான கனவுகள் மீதான தாக்குதலாகும்.
நீங்கள் சோர்வடைந்துள்ளீர்கள், கோபத்தில் இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்.
ஆனால் நினைவில் கொள்ளுங்கள்—அரசு செவிசாய்க்கத் தயாராக இல்லாதபோது, நாம் நமது குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும்.
அதனால்தான் உங்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன்:
ஜூன் 17, கோட்டா. சாத்ரோன் கி கூஞ்ச் (மாணவர்களின் முழக்கம்).
வாருங்கள், புறக்கணிக்கவே முடியாத ஒரு பெரும் முழக்கமாக நாம் ஒன்றிணைவோம்.
கோட்டாவில் தொடங்கி, பிறகு நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் இதைக் கொண்டு செல்வோம்.
இது உங்கள் எதிர்காலத்திற்கான போராட்டம்.
நான் உங்களுடன் துணை நிற்கிறேன்.
ஜூன் 17 | சாத்ரோன் கி கூஞ்ச் | கோட்டா மாபெரும் பேரணி
திரு @RahulGandhi
இந்தக் காணொளி என்னை உலுக்கி விட்டது.
இவர்கள் தான் இந்தியாவின் ஆதரவற்ற இளைஞர்கள்.
பெருநிறுவன நண்பர்களுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை வாரி வழங்கும் அரசு, இந்தியாவின் மாணவர்களுக்கு பாதுகாப்பான ஒரு பயணத்தைக் கூட ஏற்பாடு செய்து தர முடியாத நிலை.
தேர்தல் வந்தால், இதே அரசு முழு ரயில்களையே ஏற்பாடு செய்ய எல்லா வளங்களையும் பயன்படுத்துகிறது.
ஆனால் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு கிடைப்பது என்ன?
நெரிசல்...
மூச்சுத்திணறல்...
மற்றும் முழுமையான ஆதரவற்ற நிலை.
மோடி அரசுக்கு மாணவர்களின் குரலைக் கேட்கும் எண்ணமே இல்லை என்பதற்கு இதைவிட பெரிய சான்று வேறு என்ன இருக்க முடியும்?
ஆனால் நான் உங்களுக்கு ஒரு உறுதி அளிக்கிறேன்.
இந்த மாணவர்களின் குரலை, கேட்க மறுக்கும் அந்த செவிடான காதுகளுக்கு நிச்சயமாக கொண்டு சேர்ப்போம்.
ஒவ்வொரு மாணவருக்கும் உரிய நீதி கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம்.
ஜூன் 17, கோட்டா.
இனி இந்த எதிரொலி வெறும் குரலாக இருக்காது.
இது ஒரு போராட்ட முழக்கமாக மாறும்.
- திரு @RahulGandhi
#மாணவர்களின்_குரல்
#ChhatronKiGoonj ✊🏻🇮🇳
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு. கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திரு. நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. எஸ். ராஜேஷ்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் நிர்வாகிகளை சந்தித்தார்.
@girishgoaINC@nivedithalva@SurajMNHegde
I came to know about it yesterday, and I also discussed it at night. This is happening repeatedly. I do not understand why the government is not paying attention to it. This has been occurring in states like Madhya Pradesh, Uttar Pradesh, Bihar, and others.
Strict action should be taken against those involved in paper leaks, and they should be punished. This is not something limited to just one year; it has been happening for the past two to three years. They should be given the strictest punishment.
Those responsible for conducting examinations and setting question papers must be properly monitored and held accountable.
Congress President Thiru @kharge
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகம் சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்து, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
@girishgoaINC@nivedithalva
தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்களுக்கும், துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ரவிசங்கர் அவர்களுக்கும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு. @RajeshKumarSMLA அவர்களின் வாழ்த்துரை.