இரவிலும் தொடரும் மருத்துவக்கல்லூரி மாணவிகள் போராட்டம்..
பனையூர் பண்ணையாருக்கு அதை பற்றியெல்லாம் கவலை இல்லை.
மாலை 6 மணிக்கு வீட்டுக்குள்ள போய் அடைஞ்சுக்குவார்😤
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமி உயிரிழப்பதற்கு முன்பு பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகியிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி மக்களிடையே மேலும் அச்சத்தையும் கோபத்தையும் உருவாக்கியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய இந்த அரசு, இத்தகைய கொடூர சம்பவங்களைத் தடுக்கத் தவறியது வேதனைக்குரியது.
சிறுமி காணாமல் போன சில மணி நேரத்திலேயே புகார் அளிக்கப்பட்டிருந்த போதிலும், துரிதமான நடவடிக்கை எடுக்கப்படாதது சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாக திறனில் உள்ள குறைபாடுகளை வெளிக்காட்டுகிறது.
பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக இருவர் கைது செய்யப்பட்டிருந்தாலும், ஒரு ஏதுமறியா சிறுமியின் உயிரை காப்பாற்ற முடியாத நிலை அரசின் அலட்சியத்தையும் செயல்திறன் குறைவையும் சுட்டிக்காட்டுகிறது.
இந்த அரசு பெண்கள் பாதுகாப்பு குறித்து வெறும் விளம்பர நடவடிக்கைகளில் மட்டும் அல்லாமல், நிலையான மற்றும் பயனுள்ள பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதிலும் தீவிரம் காட்ட வேண்டும். வெறும் ரீல்ஸ் அரசாக அல்லாமல் ரியல் அரசாகவும் நடந்து கொள்ள வேண்டும். இந்த மனிதாபிமானமற்ற குற்றச்செயலை வன்மையாக கண்டிப்பதுடன்,
குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த அரசு உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
ஸ்ரீரங்கம் திமுக MLA பழனியாண்டியின் மகன் விஜயபாரதிக்கு சொந்தமான குவாரி ஒன்றில், திண்டுக்கல் மாவட்டம் சரளைப்பட்டியில் 10 நாட்களுக்கு முன்பு காணாமல் போன இளைஞர் கருப்பசாமி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
ஏற்கனவே, தனக்கு சொந்தமான குவாரியில் சட்டவிரோத நடவடிக்கை இருப்பதாக வந்த குற்றச்சாட்டு குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் மற்றும் கேமராமேன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி, தனது திமுக ஆளுங்கட்சி பலத்தால் மறைக்க முயன்றவர் தான் இந்த குண்டரும், திமுக MLA-வுமான பழனியாண்டி.
மறுபடியும் அவர் மகனுக்கு சொந்தமான குவாரியில் ஒரு சடலம் என்பது பல்வேறு கேள்விகளை மக்களிடையே எழுப்புகிறது.
எந்த பாரபட்சமும் பாராமல், இளைஞர் கருப்பசாமியின் மரணம் குறித்து சட்டப்பூர்வமாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த இரவோடு முடிவடையும் இந்நாள் எப்படி மீண்டும் வராதோ, அதேபோல் உரிய மறுசுழற்சி இன்றி வீண் அடிக்கப்பட்ட நீரும் மீண்டும் நமக்கு கிடைக்காது .
“நீரின்றி அமையாது உலகு” என்ற உலகப் பொதுமறையின் வாக்கின்படி, உலகிற்கே அடிப்படை ஆதாரமாக விலகும் நீரின் முக்கியதுவதைப் போற்றிடும்
“உலக தண்ணீர் நாளான” இன்று,
வானின்று பொழியும் நீரையும் காக்கும் “மழைநீர் சேகரிப்பு” திட்டத்தை மாண்புமிகு அம்மா அவர்கள் செயல்படுத்தியதையும், தமிழ்நாட்டின் நீர்நிலைகளைக் காக்க குடிமராமத்து திட்டத்தை எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு செயல்படுத்தியதையும் பெருமையுடன் நினைவுகூர்வதுடன், விரைவில் அமையவுள்ள கழக ஆட்சியானது தமிழகத்தின் நீர்வளத்தைக் காத்திடும் வகையில் தொடர்ந்து செயல்படும் என்ற உறுதியை அளிக்கிறேன்.
ஒட்டன்சத்திரம் அருகே பட்டியலினத்தை சேர்ந்த பெருமாள் என்ற இளைஞர், கடந்த 30.01.2026 அன்று பிறப்பு உறுப்பு அறுக்கப்பட்டு, உடலில் துளையிடப்படட்டு, மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இப்படி ஒரு செய்தியை வெளியே வரவிடாமல் மிரட்டல்கள் மூலம் தடுக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன.
யார் தடுப்பது என்பது பார்த்தால், சகல குற்றங்களுக்கும் லைசன்சாக இருக்கும் "கருப்பு சிவப்பு" கொடி கொண்ட ஆளுங்கட்சி திமுக தான் என்பதும் தெரியவந்துள்ளது.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் உள்ள @r_sakkarapani , தன் தொகுதியில் நடந்துள்ள இந்த நெஞ்சை உறையவைக்கும் படுகொலைக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
தங்கள் பெயரைச் சொல்லி தான் இந்த வழக்கு திசை திருப்பப் படுவதாக வரும் குற்றச்சாட்டுகளுக்கு என்ன விளக்கம் வைத்துள்ளார் இந்த அமைச்சர்?
துளையிட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்டது பெருமாள் மட்டும் அல்ல; திமுக வாய்கிழிய பேசும் சமூக நீதியும் தான்!
பெருமாள் கொலை வழக்கில் எந்த திசைதிருப்பலுக்கும், அரசியல் குறுக்கீடுக்கும் இடமின்றி, உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.
(Disclaimer: Sensitivity கருதி புகைப்படத்தை Blur செய்து வெளியிடுகிறோம்.)
7.5% இடஒதுக்கீட்டை திமுக கொண்டுவர வலியுறுத்தியது என்பது தவறான தகவல்.
7.5% இடஒதுக்கீட்டுக்கு திமுக போராடியதாக ஆதாரத்தை காட்ட முடியுமா?
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு யாரும் கேட்காமல் மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டை வழங்கியது @aiadmkofficial அரசு.
ஆனால் @arivalayam சொந்தம் கொண்டாட முயற்சிப்பதா?
ஆளுநர் மாளிகை முன்பு திமுக போராட்டம் நடத்தியதால் தான் 7.5% இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது என அமைச்சர் @Subramanian_ma கூறியதற்கு,
சட்டப்பேரவையில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்கள் ஆவேச பதில்.
#TNAssembly2026
உதவித்தொகை உயர்வு கோரி
மாற்றுத் திறனாளிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், நள்ளிரவில் கைது நடவடிக்கை என்ற பெயரில் திமுக அரசின் காவல்துறை மாற்றுதிறனாளிகள் என்றும் பாராமல் , சென்னை முழுவதும் அலைகழித்து , வன்முறைத் தாக்குதல் நடத்தி அவர்களை கைது செய்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
காவல்துறையின் ஈவு இரக்கமற்ற தாக்குதலில் மாற்றுத் திறனாளிகள்
சங்கத் தலைவரும், திமுக கூட்டணி கட்சியான @tncpim மூத்த தலைவர் தோழர் கே. பாலகிருஷ்ணன் (@kbcpim) அவர்களின் மனைவியுமான திருமதி. பா. ஜான்சிராணி அவர்கள் படுகாயமைடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
திமுக கூட்டணி கட்சித் தலைவரின் மனைவியே காவல்துறை தாக்குதலுக்கு ஆளாகும் நிலைதான் இன்று ,
@mkstalin அரசு அனைத்து விதமான
"கோரிக்கைக் குரல்களை" ஒடுக்கப் நினைப்பதுதான் திமுக-வினுடைய
Fascist mentality-க்கான Proof!
ஜனநாயக விரோத, பாசிசப் போக்கைக் கொள்கையாகக் கொண்டு, மாற்றுத் திறனாளிகள் மீது கருணையின்றி நள்ளிரவு முழுவதும் அலைகழித்து , அடிப்படை உரிமைகளை கூட மறுத்து , தாக்குதல் நடத்தியுள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
மாற்றுத் திறனாளிகள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளை முழுமையாகக் கைவிட வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
7.5% இடஒதுக்கீட்டை திமுக கொண்டுவர வலியுறுத்தியது என்பது தவறான தகவல்.
7.5% இடஒதுக்கீட்டுக்கு திமுக போராடியதாக ஆதாரத்தை காட்ட முடியுமா?
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு யாரும் கேட்காமல் மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டை வழங்கியது All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) அரசு.
ஆனால் DMK - Dravida Munnetra Kazhagam சொந்தம் கொண்டாட முயற்சிப்பதா?
ஆளுநர் மாளிகை முன்பு திமுக போராட்டம் நடத்தியதால் தான் 7.5% இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது என அமைச்சர் மா. சுப்பிரமணியம் கூறியதற்கு,
சட்டப்பேரவையில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள் ஆவேச பதில்.
#TNAssembly2026
.@mkstalin அவர்களே!
நீங்கள் உங்கள் அப்பா வழியில் முதல்வரானீர்கள்...
நான் அப்படியல்ல,
புரட்சித்தலைவர் பேச்சைக் கேட்டு படிப்படியாக உழைத்து வந்தவன்.
என் பதவி உழைப்பால் பெற்ற பதவி.
ஸ்டாலின் அவர்களின் பதவி உழைப்பால் வந்தது அல்ல,அவரது அப்பாவால் வந்தது.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க,
#விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சி என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கிய
தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு. வேளச்சேரி M. K. அசோக் அவர்கள்.
*#அம்மா* அவர்களே..!
வயிற்றை நிரப்பிய போதும்,
இதயத்தை நெகிழ வைத்த அன்பினால்தான்
அன்னை தமிழகம் உங்களை
*அம்மா* என்று அழைத்தது..! ❤️
என்றும் வணங்குகிறோம் தாயே 🙏
#அன்னமிட்ட_அன்னையே