2009 - seeman
2016 - 4 lakhs people with seeman
2019 - 17 lakhs people with seeman
2021 - 31 lakhs people with seeman
2024 - 36 Lakhs people with Seeman
2026 - Loading........
திமுகவின் கைப்பாவையாக இயங்கும் அண்ணன் திருமாவின் தரக்குறைவான அவதூறு விமர்சனங்களை நேற்று வரைக்கும் எதிர்க்கொண்டாலும், இன்று அவர்களை தமிழினப்பெரியார்கள் வரிசையில் வைத்து கொண்டாடும் பேரன்பாளன் எங்கள் அண்ணன் சீமான்.
@thirumaofficial
எங்க அண்ணன் pure gold sir!
Got 19k rank and I'm extremely satisfied with what I got bcoz i was working in clinic till day before exam due to family situations and i know I gave my 100% effort with whatever time i had during my preparation,In the end happiness is a State of mind #neetpg2025
Interacted with hundreds of students after the NEETPG results.
Many with 2 or 3 digit ranks whom I interviewed, and others who were heartbroken after an unexpected result.
Two conversations stood out:
A student with a rank under 500 was heartbroken, calling himself a failure as he was expecting a single-digit rank.
Another student was ecstatic with an 18K rank because he would get the branch he wanted, and didn’t care about the college.
The parameters of happiness can be so different—it becomes so apparent on the day of results.
#NEETPG
#neetpg25
தெளிந்த நீரோடை போன்ற அரசியல் சித்தாந்தமும், ஒழுங்கும் கட்டுப்பாட்டோடும், இனத்தையும் மண்ணையும் நேசிக்கும் ஒரே கட்சியென மீண்டும் உறுதி படுத்தியுள்ளோம். களப்பணியில் ஈடுபட்ட அன்பு உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.
- செய்திப் பரிவு,
சுற்றுச்சூழல் பாசறை,
நாம் தமிழர் கட்சி.
This can boil anyone’s blood !
A bystander comes to the emergency room of SMHS Hospital of GMC Srinagar and brutally assaulted a Physically handicapped doctor .
Dear @OmarAbdullah sir , i know that you are active on this platform and continuously monitors the issues concerning with Jammu Kashmir and therefore I request you for urgent intervention
If no action is taken against the accused then this will be a sign of collapse healthcare infrastructure and no doctor from JK will be able to work in such life threatening environment .
@GreaterKashmir@ddnews_jammu to report on this issue .
@HAJAMYDEENNKS If private setup can give high level security means why can't govt setup with police force can't do it?lack of security is main reason for violence against hospital workers in govt institutions,don't normalise these things,accept that private gave better infrastructure and care
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத் துறை டிஎஸ்பி திரு. சுந்தரேசன் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனம், எந்தக் காரணமும் கூறப்படாமல் திரும்பப்பெறப்பட்டுள்ளதால், தனது இல்லத்தில் இருந்து, சீருடையுடன் நடந்தே அலுவலகம் செல்லும் காணொளி அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத் துறை டிஎஸ்பியாகப் பொறுப்பேற்றதில் இருந்து, சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும், போதைப் பொருள்கள் விற்பவர்கள் மீதும், கடுமையான நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் பாராட்டுக்களைப் பெற்றவர் திரு. சுந்தரேசன் அவர்கள். அனுமதியின்றிச் செயல்பட்ட 23 டாஸ்மாக் பார்களை மூடியதோடு, சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட 1,200 பேர் மீது வழக்கு தொடர்ந்து, 700 பேரை சிறைக்கு அனுப்பியவர். அவரது நேர்மையான நடவடிக்கைகள் பிடிக்காமல், அவரை அவமானப்படுத்தும் நோக்கத்தோடு, அவரது வாகனத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறது திமுக அரசு.
ஏற்கனவே, கடந்த ஆண்டு, திமுக அரசின் காவல்துறையின் தவறுகளைக் குறித்து, மனித உரிமைகள் ஆணையத்தில் அறிக்கை கொடுத்ததற்குப் பழிவாங்குவதற்காக, அவரை மயிலாடுதுறைக்கு பணிமாற்றம் செய்தது திமுக அரசு. தற்போது, மீண்டும் அவரை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. நேர்மையான அதிகாரிகள், திமுக அரசில் பணியாற்ற முடியாது என்பதையே இது காட்டுகிறது.
காவல்துறை என்பது மக்களுக்கானது. மக்களுக்காகப் பணியாற்றும் நேர்மையான அரசு அதிகாரியை, திமுக அரசு அவமானப்படுத்துவதும், அலைக்கழிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உடனடியாக, டி.எஸ்.பி. திரு. சுந்தரேசன் அவர்களது அரசு வாகனம் திரும்ப வழங்கப்பட வேண்டும். திமுக அரசின் அரசியல் அழுத்தங்களுக்குப் பணியாமல், தமிழகக் காவல்துறையின் தலைவர் திரு. சங்கர் ஜிவால் அவர்கள், தமிழகக் காவல்துறையினரின் தன்மானத்தைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@sendil9Oskid@drkrvcvijay Maybe It's not his intention to avoid your doubts online,he must be busy with something else,also medical queries can't be done via text messages bcoz it involves asking lots of questions,if u r interested u can ask him if he is available for online medical consultation services
தமிழ்வழி வினாத்தாளில் குளறுபடிகளுடன் நடைபெற்றுள்ள தொகுதி-4 (GROUP–4) தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டும்!
@CMOTamilnadu@mkstalin
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொகுதி - 4 (GROUP4) தேர்வு வினாத்தாளில் தமிழ்மொழி குறித்த பெரும்பாலான கேள்விகள் தேர்வு பாடத்திட்டத்திற்கு அப்பால், மிகக்கடினமான கேள்விகளாக இடம்பெற்றதால் தேர்வர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொடர்ந்து அலட்சியமாகச் செயல்பட்டு தேர்வர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவது வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழ்நாடு அரசில் 3,395 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தொகுதி-4 தேர்வினை ஏறத்தாழ 11 லட்சம் 50 ஆயிரம் தேர்வர்கள் எழுதியுள்ள நிலையில், வினாத்தாளில் ஆங்கிலமொழிப் பகுதி வினாக்கள் எளிதாகவும், தமிழ்மொழிப்பகுதி வினாக்கள் மிகக்கடினமானவும் இருந்ததால் தேர்வர்கள் பெரும் மனவுளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக தமிழ்மொழிப் பகுதியில் பண்டைய ஓலைச்சுவடிகளில் இருந்தெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டிருப்பது தேர்வர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூடத் தேர்ச்சி அடைய முடியாத அளவிற்கு கடினமான வினாக்கள் தமிழ்மொழி பகுதியில் இடம்பெற்றுள்ள நிலையில், ஆங்கிலப் பகுதி வினாக்கள் எளிதானதாக இடம்பெற்றுள்ளது தேர்வின் சமநிலையை முற்றாகச் சீர்குலைத்துள்ளது. இதனால் அரசு வேலை கனவோடு இராப்பகலாகக் கண்துஞ்சாது படித்து, கடின உழைப்பினை செலுத்திய தமிழிளம் தலைமுறை பிள்ளைகளின் எதிர்காலம் இருளாகி, மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதுதான் திராவிட மாடல் திமுக அரசு, தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கும் முறையா? இதுதான் தமிழ் மொழிக்கு அளிக்கும் முக்கியத்துவமா? இதன் மூலம் தமிழ்வழியில் பயின்ற தேர்வர்களைப் போட்டியிலிருந்தே வெளியேற்றும் சூழ்ச்சி வெட்டவெளிச்சமாகியுள்ளது. அரசுப் பணியாளர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடுகளை செய்வதற்காகவே தொகுதி-4 தேர்வில் பாடத்திட்டத்திற்கு அப்பாலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு, தமிழ்மொழி வினாக்கள் மிகக்கடினமானதாக வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.
ஆகவே, தொகுதி-4 (GROUP-4) தேர்வில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளுக்கு தமிழ்நாடு அரசே பொறுப்பேற்று, தேர்வின் சமநிலை மற்றும் நடுநிலைத்தன்மையைக் காக்கும் பொருட்டு, நடந்து முடிந்த தொகுதி-4 தேர்வினை ரத்து செய்துவிட்டு, விரைவில் மறுதேர்வு நடத்த வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். மேலும், எதிர்காலத்தில் எந்தவொரு அரசுப்பணியாளர் தேர்விலும் இதுபோன்ற குளறுபடிகள் மீண்டும் ஏற்படா வண்ணம் மிகக்கவனமாகச் செயலாற்ற வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி