மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
மகுடஞ்சாவடி வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. P. செல்வகுமார் (எ) மணிகண்டன் அவர்களால், இளம்பிள்ளையில் புதியதாக கட்டப்பட்டுள்ள ‘ஸ்ரீ குமரன் சில்க்ஸ்'-ஐ ரிப்பன் வெட்டி. குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். தொடர்ந்து, நிறுவன உரிமையாளர்களுக்கு தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
காவலர் வீரவணக்க நாளான இன்று, மக்களின் பாதுகாப்பிற்காகவும், நாட்டின் அமைதிக்காகவும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த காவல்துறை வீரர்களின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் போற்றுவோம்.
கடமையே உயிர்மூச்சாகக் கொண்டு, பொதுமக்களின் நலனுக்காகத் தங்கள் உயிரையும் துச்சமெனக் கருதி பணியாற்றும் காவலர்களின் வீரமும் தியாகமும் என்றும் போற்றுதலுக்குரியது.
@AIADMKOfficial
நாம் தமிழர் கட்சியின் சார்பில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் திருமதி. கார்த்திகா அவர்களை இன்றைய தவெக அரசு அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தேர்தல் நேரத்தில் போடப்படும் வழக்குகளை எல்லாம் காட்டி, தங்களின் வன்மத்தை தீர்த்துக் கொள்ள இன்றைய வன்ம குடோன் ஆட்சியாளர்கள் இப்படிப்பட்ட பாசிசப் போக்கை கையாள்வது வெட்கக்கேடானது.
ஒரு அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை கைது செய்ததன் மூலம், நாங்கள் எப்போதும் இவர்களைப் பார்த்து சொல்லக் கூடிய “Narcissistic Behaviour”- அதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து உள்ளது திரு. ஜோசப் விஜய் தலைமையிலான ஆச்சரியக்குறி அரசு.
“ஒருவேளை உங்கள் Convoy செல்லும் போது மக்கள் யாராவது மனு கொடுக்க வந்தால், வண்டியை நிறுத்தி மனுவை வாங்குவீர்களா? அல்லது, உங்கள் கான்வாய்-க்கு குறுக்கே வந்தார்கள் என்று வழக்கு பதிந்து கைது செய்வீர்களா?” என்ற சந்தேகம் இப்படிப்பட்ட கைதுகளால் தமிழக மக்களுக்கு எழுந்துள்ளது.
@NaamTamilarOrg சேர்ந்த திருமதி. கார்த்திகா உள்ளிட்ட அக்கட்சியினர் மீதான கைது நடவடிக்கையினை கைவிட வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறோம்.
தவெக நாகை மாவட்ட நிர்வாகி பூபாலன் தொடர்பான மாபெரும் போதைப்பொருள் வழக்கு பற்றி மத்திய நிதி அமைச்சகம் செய்தி வெளியிட்டும் இன்று வரை தமிழக முதல்வர் பதில் சொல்லாமல் மவுனம் காப்பது ஏன்?
18.10.2026 அன்று @FinMinIndia வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில், “one of the biggest narcotics seizures in Tamil Nadu’s coastal region in recent years” என்று கூறியுள்ளது.
இது எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா @CMOTamilNadu ?
இது ஒரு மிகப்பெரிய போதைப்பொருள் Network-ஆக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரு பொறுப்பில் இருக்கின்ற முதல்வராக, Atleast ஒரு கட்சித் தலைவராக, தன் கட்சிக்காரரின் இந்த Walter White Behaviour குறித்து திரு. ஜோசப் விஜய் அவர்கள் வாய் திறப்பார் என்று காத்திருந்து பார்த்தால், சட்டசபையில் எதிர்கட்சி பேசும் பொது எப்படி இருப்பாரோ, அதேபோல் மவுன சாமியாராகவே இருக்கிறார்.
கடந்த ஆட்சியில், ஜாபர் சாதிக் வழக்கில் மெத் போதைப் பொருளுக்கான Pseudoephederine என்ற மூலப்பொருள் சிக்கிய வழக்கே மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தவெக நிர்வாகி பூபாலன் வழக்கிலோ, Fully processed Meth Crystal-களே, அதுவும் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள 137 கிலோ சிக்கி இருக்கிறது.
ஆளுங்கட்சி பின்னணியில் இவ்வளவு பெரிய International Drug Mafia நடந்திருக்கும் போது, யாருக்காக Anti Drug Marathon ஓடிக்கொண்டு இருந்தார் ரீல்ஸ் முதல்வர் ?
இந்த லட்சணத்தில், இதுகுறித்து செய்தி வெளியிடும் ஊடகங்களை தவெக நாகை நகரச் செயலாளர் பால்ராஜ் என்பவர் மிரட்டல் வேறு விடுக்கிறாராம்.
அப்படியென்றால், இந்த போதைப்பொருள் விவகாரம் ஆளுங்கட்சி தலைமைக்கு தெரிந்து, அவர்கள் துணையோடு தான் நடக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? உங்கள் கட்சிக்காரர் குற்றத்திற்கு பொறுப்பேற்று பதில் சொல்ல முடியாமல், ஊடகங்களை மிரட்டினால் மட்டும் செய்தி மறைந்து விடுமா?
@CMOTamilNadu அவர்களே,
For Your Information,
இந்த போதைப்பொருளைக் கூட உங்கள் அரசின் காவல்துறை பிடிக்கவில்லை. மத்திய அரசின் DRI அமைப்பு தான் பிடித்திருக்கிறது. இதற்கே நீங்களும், உங்கள் தலைமையிலான ஆச்சரியக்குறி அரசும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
மாற்றம் என்று சொல்லி ஆட்சியில் அமர்ந்திருக்கும் உங்களிடம் இருந்து இது பற்றி ஒரு விளக்கமாவது வருமா?
@AIADMKOfficial
நெஞ்சை நிமிர்த்திச் சொல்வோம்
என்றும் நாங்கள் அண்ணாதிமுக..!!
எத்தனையோ எதிரிகளையும், துரோகிகளையும் எதிர்கொண்டு வெற்றிகண்ட மாபெரும் பேரியக்கமாம் @AIADMKOfficial- ன் 55 ஆம் ஆண்டு தொடக்கவிழா!
#55YrsOfAIADMK#என்றென்றும்_அஇஅதிமுக
கொள்கையாலும், தியாகத்தாலும் கட்டமைக்கப்பட்ட இயக்கம்...
அதிகாரத்திற்காக ஒன்றுகூடிய கூட்டமாக இல்லாமல்
இலட்சியத்தால் ஒன்றிணைந்த இயக்கம்!
காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் மக்கள் பேரியக்கம்!
எத்தனை சோதனைகள் வந்தாலும் துவளாத,
எத்தனை சூழ்ச்சிகள் அரங்கேறினாலும் வீழாத வீரியமிக்க தொண்டர்களை கொண்ட இயக்கம்!
எத்தனையோ எதிரிகளையும், துரோகிகளையும் எதிர்கொண்டு வெற்றிகண்ட மாபெரும் பேரியக்கமாம் @AIADMKOfficial- ன் 55 ஆம் ஆண்டு தொடக்கவிழா!
#55YrsOfAIADMK
#என்றென்றும்_அஇஅதிமுக
என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளே!
புரட்சித் தலைவரின் தியாகத்தால் உருவாகி, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தீரத்தால் கட்டிக் காக்கப்பட்ட நம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 54 ஆண்டுகாலப் பெருமைமிகு வரலாற்றை நிறைவு செய்து, 55-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தப் பொன்னான தருணத்தில், என் பேரன்பிற்குரிய கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்!
“இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்!” என்று நம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முழங்கிய வரலாற்றுப் பிரகடனத்தை நனவாக்கும் உறுதியோடு, நமது வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்!
இதற்கு முன்பு எத்தனையோ எதிரிகளையும், துரோகிகளையும் எதிர்கொண்டு வெற்றிகண்ட என் அன்பிற்குரிய கழகத் தோழர்களே! புரட்சித் தலைவரின் இரத்தத்தின் இரத்தங்களே!
இன்றைக்கு நம் முன்னால் எழுந்திருக்கும் புதிய அரசியல் சவால்களையும், ஜனநாயக விரோத சக்திகளையும், மக்கள் விரோத ஆட்சியையும் ஜனநாயக வழியில் எதிர்கொண்டு வீழ்த்திட, ஒற்றுமையோடும், உறுதியோடும் களமிறங்கிட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறேன்!
புரட்சித் தலைவர் காட்டிய பாதையில் ! புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வகுத்துத் தந்த இலட்சிய வழியில்! தமிழகத்தின் உரிமைகளைக் காத்து, மீண்டும் நல்லாட்சி மலர்ந்திட ஒன்றுபட்டு உழைப்போம்!
#55YrsOfAIADMK
#என்றென்றும்_அஇஅதிமுக
@AIADMKOfficial
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் @BJP4TamilNadu மாநிலத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அன்புச் சகோதரர் திரு. @NainarBJP அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல்நலத்துடனும் தொடர்ந்து தாங்கள் மக்கள் பணியாற்றிட என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிய மறுத்து, தாய்நாட்டின் சுதந்திரத்திற்காகத் தன் உயிரையே தியாகம் செய்த பாஞ்சாலங்குறிச்சியின் மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவு நாளில், தாய்த் திருநாடு காக்க மரணக் கயிற்றையே அரவணைத்துக் கொண்ட அவர்தம் தீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial
இந்தியாவின் தென்கோடியில்
எளிய குடும்பத்தில் பிறந்து,
வடகோடியில் தமிழர்களின்
பெருமையை நிலைநாட்டிய
மக்களின் குடியரசுத் தலைவர்!
"சாதிக்க வேண்டும்" என்ற கனவும், "உறுதியாக சாதிப்போம்"
என்ற நம்பிக்கையும்,
அதற்கான ஓயாத உழைப்பும் நிச்சயம் வெற்றியைத் தரும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்த ஏவுகணை நாயகர்!
"கனவு காணுங்கள்" என்ற உன்னத வரிகளால் கோடிக்கணக்கான இளைஞர்களின் இதயங்களில் நம்பிக்கையை விதைத்த பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
அவர்களின் பிறந்தநாளில்...
அவர் வகுத்துத் தந்த லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணித்து,
வலிமையான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்!
@AIADMKOfficial
தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்கள்,
கடந்த 12.10.2026 அன்று மாலத்தீவு கடலோரக் காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இதுகுறித்து தமிழக அரசின் சார்பில்,
மூன்று நாட்களுக்கு பிறகே (15.10.2026),
முதல்வர் ஒரு சம்பிரதாயக் கடிதத்தை சாவகாசமாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதி இருக்கிறார்.
அந்த ஒரு கடிதத்தை தவிர,
எந்த ஒரு அடிப்படை தகவல் பரிமாற்றமோ, அதற்குரிய துறை வாரியான செயல்பாடுகளையோ மீன்வளத்துறையும், ஆட்சியர் அலுவலகமும் இன்று வரை
எடுக்க வில்லை என செய்திகள் வருகின்றன.
மீனவர்களின் வாக்குகளின் மீது காட்டக்கூடிய முனைப்பை,
அவர்களின் வாழ்வில் காட்டாத அக்கறையற்ற இந்த தவெக அரசுக்கு
எனது கடுமையான கண்டனங்கள்.
அந்த பகுதியைச் சார்ந்த அரசு அலுவர்களோ, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரோ நேரில் சென்று மீனவர்களின் உறவினர்களை சந்திக்கவோ, பாதிக்கப்பட்ட மீனவர்கள் எங்கு, எப்படி இருக்கிறார்கள் என்ற தகவலைக் கூட பரிமாறவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க ஒரு செய்தி.
இதுகுறித்து மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் சென்று கேட்டாலும், மாவட்ட மீன்வளத் துறை அலுவலகம் சென்று முறையிட்டாலும் எந்த பதிலையும் அளிக்காமல் அலட்சியப் போக்கில் செயல்படுகிறது இன்றைய தவெக அரசு.
இடைத்தேர்தலில் ஓடி ஓடி வாக்கு கேட்ட, மீன்வளத்துறை அமைச்சர்,
தன் பகுதியைச் சார்ந்தோர் பாதிக்கப்பட்டுள்ள இந்த சம்பவத்தின் போது காணாமல் போயுள்ளாரே? ஏன்?
அங்கு ஏதும் இடைத்தேர்தல் வரப்போவதில்லை என்பதாலா ?
அல்லது வெத்தலை பாக்கு வைத்து அழைத்தால்தான் வருவாரா?
இந்த அரசிடம் நான் அடிப்படையான கேள்வி ஒன்றைக் கேட்கிறேன்-
தவெக அரசிடம் காணாமல் போன மீனவர்களின் விவரங்கள் முதலில் இருக்கிறதா?
3 விசைப்படகுகளில், அதாவது அமல் சங்கர் படகில் 8 பேர், நிக்சன் படகில் 9 பேர் மற்றும் ஆரோன் படகில் 9 பேர் கடலுக்கு சென்றுள்ளனர் என்ற அடிப்படை விவரமாவது இந்த அரசுக்கு தெரியுமா?
காணாமல் போயுள்ள மீனவர்கள் யாரென்று தெரியவில்லை என்றால் சொல்லுங்கள்- என்னிடம் உள்ள விவரங்களை நான் அளிக்கிறேன்.
@AIADMKOfficial ஆட்சி இருந்தபோது மீனவர்களை அரணாகக் காத்து நின்றது அம்மாவின் அரசு. மீனவர்களுக்கு ஒன்றெனில், உடனடியாக களத்தில் நிற்பதை உறுதி செய்தோம். மத்திய அரசுடன் உடனடியாக பேசி, மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுவோம்.
இது தான் அக்கறை உள்ள அரசின் செயல்பாடு.
சுறா படத்தில் வருவது போல் கடலுக்கு நடுவே நீச்சல் அடித்து உங்களை யாரும் மீனவர்களை காப்பாற்றச் சொல்லவில்லை; குறைந்தபட்சமாக ஒரு அரசால் என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்கள் என்று தான் அப்பகுதி மக்கள் கேட்கிறார்கள்.
மீனவர்களை மீட்டு தாயகம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படவும், அவர்களின் உறவினர்களை மாநில அரசின் சார்பில் அரசு அலுவலர்களை, சட்டமன்ற உறுப்பினரை, துறை அமைச்சரை குறைந்தபட்ச அக்கறையோடு அனுப்பி வைத்து அவர்களுக்கான உரிய தகவல் பரிமாற்றத்தை அளிக்குமாறும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
"வெற்றி மெகா ஊழல்"..
ஆந்திர அரசு 1 யூனிட் மின்சாரத்தை ரூ.15க்கு கொள்முதல் செய்யும்போது, தமிழக அரசு ரூ.35 கொடுத்து வாங்க அவசியம் என்ன?
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPStamilnadu அவர்கள்.
இன்று பிறந்தநாள் காணும் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணைத்தலைவர் அன்பிற்குரிய பாவா @GowriSankarD_ அவர்களுக்கு எனது இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!!