நக்கிட்டு போயிருச்சி.. ஹேரா போச்சி... பாகம் - 2.
" சார்.. பார்மட் தெரியாது. இல்லின்னா எழுதியே கொணாந்துருப்பேன்.." என்றோம். "எப்படி எழுதனும் சார்.." என கேட்டதற்கு சரியான பதில் அவரிடத்தில் இல்லை. நாமே ஒரு பேப்பரை தேடி லெட்டரை எழுதி இணைத்து தந்தோம். "விட மாட்டான் போலயே.." என நினைத்து விட்டார் போல. "எழுதினது சரியா இல்ல. வேற லெட்டர் எழுதி குடுங்க.." என்றார். இப்போது நமக்கு உச்சத்திற்கு ஏறி விட்டது. "சார்.. ஃபார்மட் கேட்டா சொல்ல மாட்றிங்க.. இப்போ இதுல என்ன தப்பு னு சொல்லுங்க சார்.. வேற லெட்டர் எழுதி தரேன்.." என்க.. அப்போது தான் லெட்டரை கையில் எடுத்து படித்து விட்டு.. "பேங்க பேரு போட்டுருக்கிங்க.. ப்ராஞ்ச் எதுனு வேணாமா.." என தேவையே இல்லாத வியாக்யானம் ஒன்றை சொன்னார்.
"ஏங்க.. என்ன தா நெனச்சிட்டுருக்கிங்க.. பேங்குக்கு வந்து முக்காமணி நேரத்துக்கு மேல ஆச்சு. அஞ்சி நிமிஷ வேலை. அத செய்ய மொடப்பட்டுகிட்டு 'அங்க போ.. இங்க போ'னு விரட்டுனிங்க.. அது இல்ல.. இது இல்ல..னிங்க. இப்போ திருப்பூர் ப்ராஞ்ச்னு எழுதிருக்கேன்.. அதுல திருப்பூர் மெய்ன் ��்ராஞ்னு பேரு எழுதாதுலாம் தப்புன்றிங்க. என்ன தா சார் ஒங்க பிரச்னை..??" என எகிறினோம். " "எதுக்கு சார் கத்தறிங்க இப்போ.. ஆமா.. அது தப்பு தான்.." என்றே சாதித்தார் அவர். அருகிலிருந்த நகை சம்பந்த அதிகாரியும் தன்னுடைய சகாவிற்கு உதவும் விதமாக நம் மீதே தப்பு என அழுத்தமாக பேசி சப்போர்டுக்கு வந்தார். அவ்வளவுதான். வெடித்து விட்டோம். " நான் இன்னிக்கி எவ்ளோ நேரமானாலும் இங்கிருந்து நகர போறதில்ல சார���. நீங்க சொன்ன படி தான் ��பார்மட்.. அப்படி தான் நார்ம்ஸ்னு அத்தாரைஸ்ட் லெட்டர் அல்லது ஏதாச்சும் அறிவிப்பு இருந்தா அதை காட்டுங்க.. அப்பறமா நீங்க கேக்கறத கேளுங்க.. என்ன தா சார் நெனச்சிட்டுருக்கிங்க.. க்ளையன்டுக்கு நீங்க எஜுகேட் பண்ற அளவுக்குலாம் இப்போ இங்க முட்டாள் யாரும் இல்ல.. மைண்ட் இட்" என கத்தி தீர்த்தோம்.
இதை கேட்ட அனைவரும் திரும்பி நம்மை பார்க்க உள்ளே இருந்து லேடி மேனேஜர் எழுந்து ஓடி வந்து விட்டார���. " சார்.. சார்.. என்னாச்சு சார்.." என்றார். நம் குரலின் கடுமை குறையாதே நடந்த யாவற்றையும் விளக்கி "சும்மா அலைகழிக்கவே பாக்கறார் மேடம்.. இவர் கேட்கறது தான் ஃபார்மெட்னா அத காட்ட சொல்லுங்க.. ஏத்துக்கறேன்.." என்றோம். நிலைமையை உணர்ந்த அந்த லேடி.. " சார்.. நீங்க உள்ள வாங்க சார்.. நா பொறுப்பேத்தி பண்ணி தரேன் உங்க வேலைய. ப்ளீஸ் கத்தாதீங்க.." என கெஞ்சல் தொனியில் சொன்னார். நாம் சட்டென நார்மல் மோடுக்கு திரும்பி அமைதியாகி அவரிடமே அனைத்து டாகுமென்ட்களையும் சமர்ப்பித்து விட்டு வெளியேறி நடையை கட்டினோம்.
வாடிக்கையாளர்களை துச்சமாக மதிக்கும் வங்கி அலுவலர்கள். காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.
1. வங்கி அலுவலர்களுக்கு தனி தனி டார்கெட் வைத்து விடுகிறார்கள். அதற்கான மெகா இன்சென்டிவ் வேறு. அதை நோக்கி மட்டுமே வேலை செய்வதால் மற்ற வேலைகளை எடுத்துக் கொண்டு வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் எரிந்து விழுகிறார்கள் இவர்கள்.
2. நகை ஏலம்.. சொத்துக்கள் ஏலம் என எ��்லாமே E AUCTION முறை மட்டுமே என்பது பெயருக்கு தான். E auction வெப்சைட்டுகளில் போய் பாருங்கள். அவர்கள் கொடுத்திருக்கும் விபரங்களை வைத்து அந்த இடத்தின் அகல நீளத்தை கூட உங்களால் கணித்து விட முடியாது. வங்கி அதிகாரி தயவு நாடி கண்டிப்பாக போயே ஆக வேண்டும். அதிலும் நகை ஏலங்கள் எல்லாம் நடந்து முடிந்த பின்னால் தான் வெப்சைட்டுகளிலேயே ஏற்றப்படுகிறது. இதில் புரளும் பணம் மிகப்பெரிய உபரி வருமானம் அவர���களுக்கு.
3. கடன் வழங்கவும் தங்கள் உறவினர் பெயரிலேயே ஏஜென்��ி நடத்தி கமிஷன் பெறும் வங்கியாளர்கள் உண்டு.
4. இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.
இப்படி உபரி வேலை உபரி வருமானம் என்றிருப்பவர்களை போய் வாடிக்கையாளருக்கு RE KYC செய்து கொடு என சாதாரண வருமான பலனற்ற சேவைகளை செய்ய சொன்னால் அவர்கள் அதை எப்படி செய்வார்கள்..??..அலை கழிக்க தான் பார்ப்பார்கள்.
டெயில் பீஸ் : நகை ஏலம் எடுக்கும் முடிவில் இருப்பதாக பதிவின் துவக்கத்தில் சொன்னோமே.. அது என்னவாயிற்று ���ன ஞாபகம் வைத்து கேட்பவர்களுக்கு..
Yaavarii reply : நக்கிட்டு போயிருச்சி.. ஹேரா போச்சி..???
The Karur Vysya Bank The Karur Vysya, Bank Ltd. @the karur vysya bank tirupur main branch
@KarurVysyaBank_ 😇
நக்கிட்டு போயிருச்சி.. ஹேரா போச்சி... பாகம் - 1.
வ��்கிய��ல் ஏலம் விடப்படும் நகைகளை எடுக்கலாமா என்றொரு யோசனை. நமக்கு இரண்டு வங்கிகளில் கணக்குகள் உண்டு. இரண்டு பக்கமும் ஓரளவிற்கு மரியாதையான வரவு செலவு செய்திருக்கிறோம் என்பதால் வங்கியில் அந்தந்த குறிப்பிட்ட அதிகாரிகளிடம் ஏலம் நடக்கும் தேதி குறித்து நமக்கும் தகவல் தெரிவிக்குமாறு சொல்லி வைத்திருந்தோம்.
நம் கணக்கு இருக்கும் வங்கிகள் இரண்டுமே தேசியமயமாக்கப்பட்டவை. இரண்டிலுமே பொதுவான வாடிக்கையாளர்களை "ஊர்வன" போல் தான் மதிப்பார்கள். நாம் நீண்டகால வாடிக்கையாளர் என்பதால் அதில் சற்று ஸ்பெஷல் "ஊர்வன". அவ்வளவுதான். அதிலும் குறிப்பாக குமரன் ரோட்டில் இருக்கும் ஒரு வங்கியுடைய அதிகாரிகளின் "மக்கள் நல செயல்பாடுகள்" சார்ந்த இவ்விஷயத்தில் ஏகப்பிரசித்தம்.
நேற்று நம் டிசையருக்கு 'ஃபாஸ்ட் டாக்' (fast tag) RE KYC செய்யவேண்டும் என்றும் ப்ராப்பர் டாகுமென்ட்களோடு ப்ராஞ்சிற்கு நேரில் விசிட் செய்ய வேண்டும் என்றும் மெசேஜ் போட்டிருந்தார்கள். தேவையான டாகுமென்ட்களோடு காரை அவர்கள் கேட்டிருந்த நான்கைந்து கோணங்களில் போட்டோக்களும் எடுத்துக் கொண்டு வங்கிக்கு சென்றோம். முதலில் 6 ம் நம்ப��் கவுன்டரை அடைந்து ஏல நகை அதிகாரியை (நம்மை ஓரளவு நன்கு தெரிந்தவர்) சந்தித்து ஒரு "வணக்கத்தை" போட்டோம். அவர் 5 ம் கவுன்டரை பார்க்க சொன்னார். 5 ம் நம்பர் கவுன்டர்காரருக்கு நம்மை பார்த்த பார்வையில் "ஏன்யா நேரங்கெட்ட நேரத்துல வந்து உயிரை எடுக்குற.." என்கிற தொனி. "8ம் நம்பர் கவுன்டர் போங்க சார்.." என்றார்.
அங்கே சென்று பார்த்த போது அந்த கவுன்டரில் ஆளே இல்லை. அங்கே ஆள் இல்லை என 5ம் நம்பரிடம�� மீண்டும் வந்து சொன்னதற்கு "வெயிட் பண்ணுங்க சார். வருவாங்க.." என்றார். காத்திருந்தோம். யாரும் வந்தபாடில்லை. அருகிலிருந்த மற்றொரு கவுன்டர்காரர் நம்மை " ஏன் சார் ரொம்ப நேரமா நிற்கிறிங்க.." என கேட்க.. சூழலை சொன்னோம். " சார். இவர் இன்னிக்கி வர மாட்டாரே.. நீங்க 5ம் நம்பரையே போய் பாத்துருங்க.." என்றார் அவர். "5ம் நம்பர்காரருக்கு வேலை ஜாஸ்தி போல சார். நிமிர்ந்து பாக்கவே மாட்றாரு.." என்றோம் சிரித்து கொண்டே. அந்த அதிகாரி தானே சீட்டை விட்டு எழுந்து வந்து 5ம் நம்பர் கவுன்டர்காரரிடம் ஏதோ சொல்ல.. இப்போது 5ம் நம்பர்காரர் நம்மை அழைத்தார். "ஆதார் கார்ட்.. RC.. போட்டோஸ் எல்லாம் ஒரிஜினல் வித் டூப்ளிகேட் ஜெராக்ஸ் வேணுங்க. போய் எடுத்துட்டு வ���ங்க..." என்றார். தனக்கு வேலை கொடுக்கிறானே என்கிற அவருடைய நினைப்பு அப்பட்டமாக தெரிந்தது. பேச்சில் சுத்தமாக நட்புணர்வு இல்லை.
நாம் நம் பேகில் தயாராய் வைத்திருந்த அத்தனையையும் எடுத்து நீட்டினோம். அவர் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. "எல்லாத்தையும் போட்டோ எடுத்து மெயில் பண்ணுங்க.." என அவருடைய ஐடியை சொன்னார். அவர் சொல்ல சொல்லவே மெயில் பாக்சை ஓபன் செய்து அத்தனையையும் அட்டாச் செய்து அனுப்பி வைத்து விட்டோம். " மெயில் வந்துருக்கா னு செக் பண்ணி சொல்லுங்க சார்.." என்றதற்கு நிமிர்ந்து முறைத்தார். "நீங்க ஒன்னு பண்ணுங்க. எல்லாத்தையுமே வாட்சப் பண்ணிருங்க.. " என்றார். அதையும் செய்து முடித்தோம். வேறு வழியின்றி இப்போது அவருடைய வாட்சப்பை ஓபன் செய்து பார்த்தார்.
போட்டோக்களை பார்த்து விட்டு.. "கார் முன்னாடி பின்னாடி சரியா எடுத்துருக்கிங்க. சைட் வ்யூ சரியா வரல. அதை இன்னொர���க்க எடுத்துட்டு வந்துருங்க.. " என்றார். நாம் போட்டோவை ஓபன் செய்து பார்த்து "கரெக்ட்டா தான சார் இருக்கு" என்றோம். " இல்லிங்க. சைட் வ்யூல முன்ன பின்ன ரெண்டு சைடும் ஒரே அளவு தான் கேப் இருக்கனும்." என்றார். வங்கிக்கு வெளியே 200 மீட்டர் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு நடந்து சென்று அவர் கேட்டதை போலவே போட்டோ எடுத்து திரும்ப வங்கிக்கு வந்தோம். ( p.s: குறிப்பிட்ட வங்கியில் வண்டிகள் நிறுத்த போதிய வசதிகள் இல்லை.)
இப்போது போட்டோக்களை பார்த்து விட்டு.. " RC இதுல க்ளியரா இல்ல.. எதுக்கும் ஹார்ட் காப்பி ஒன்னு எடுத்துட்டு வந்துருங்க.." என்றார். "சார். நான் வேணும்னா மறுக்கா ஒரு தடவை ஒரிஜினல் RC ய க்ளியரா போட்டோ எடுத்து அனுப்பறேன். ஜெராக்ஸ் கடை பக்கத்துல எதுவும் இல்லை சார்." என லேசாக குரலுயர்த்தி சொன்னோம். கடுப்பானவர்.. " ஒரு கவரிங் லெட்டர் ��ேணுமே.. கொண்டு வந்திங்களா.." என கேட்டார்.
அடுத்த பாகத்தில் முடிவடையும். 😇
@KarurVysyaBank_ tirupur main branch.
Max (கன்னட டப்பிங்)
'கைதி' பாணி ஒரு நைட்ல நடக்கிற கதை. மொத்த சிட்டி கிரி��ினல்கள் Vs போலீஸ். ஆனா.. கம்ப்ளீட்டா வேற மாதிரியான ஸ்க்ரீன்ப்ளே.
ஆக்ஷன் படங்களின் கதைகள் ஜெயிக்க வேண்டுமெனில்.. ஹீரோ.. எல்லா பரபரப்புகிடையிலும் அவரிடம் திமிரான ஒரு அலட்சியமும்.. கெத்து கலந்த பொறுமையும் தெரியவேண்டும். சுதீப் இயல்பாகவே அத்தகைய மேன்லி கில்லி. கதையும் கேரக்டரும் வாகாக சிக்கியிருப்பதால் புகுந்து சூறையாட்டம் ஆடி இருக்கிறார்.
ஆடுகளம் நரேன்.. இளவரசு.. கன்னட கிஷோர்.. ப���குபலி பிரபாகர்.. சுனில் என பக்கா பான் இந்தியா செட் ப்ராப்பர்டிகளோடு ஆஜராகி இருக்கிறார்கள். 'கண்டென்ட்' பிஸ்து கிளப்பியிருப்பதால்.. வசூலை லாரி லாரியாக அள்ளி போகப் போகிறார்கள்.
வீக்கெண்டிற்கான பக்கா ஆக்ஷன் த்ரில்லர்...🔥
அன்பே பார்பி...❤ (பாகம் - 1)
ஹர்ஷத்தும் எவ்வளவோ முயன்று பார்த்து விட்டான். வர்ணிகாவிற்கு இப்போது நான்கரை வயது. ஓரளவிற்கு நன்றாகவே பேச துவங்கி விட்டாள். பங்களாவிலேயே தங்க வைக்கப்பட்டிருக்கும் ஒரு ஹோம் நர்ஸ் கம் கிண்டர் கார்டன் டீச்சர் தினமும் வந்து வர்ணிகாவை குறிப்பி���்ட சில மணி நேரங்கள் வரை தன்னுடன் வைத்து கொண்டு அவளை கவனித்து கொள்வாள். கற்று கொடுப்பாள். அவளுடன் விளையாடுவாள். பின் டீச்சர் தனது க்வார்ட்டர்சுக்கு திரும்பி விடுவாள். அவ்வளவுதான். அதற்கு பிறகு வாயை மூடிக்கொள்வாள் வர்ணிகா. சிலவே ��ில நேரங்களில் மட்டும் தனது இறக்குமதி செய்யப்பட்ட பொம்மையுடன் பேசிக்கொண்டிருப்பது காதில் கேட்கும்.
அந்த ரூமை விட்டு மட்டும் வெளியே வரமாட்டாள். ஹர்ஷத்தும் எவ்வளவோ முயன்று பார்த்து விட்டான். வர்ணிகா ஹர்ஷத்தின் அண்ணன் மகள். அண்ணன் அண்ணி இருவரும் ஒருசேர விபத்தொன்றில் போய் சேர்ந்த பிற்பாடு வர்ணிகாவை ஹர்ஷத் தான் பொறுப்பேற்று வளர்க்கிறான். விபத்தை பற்றி விவரிக்கும் முன் இங்கே ��ரு விஷயம் சொல்லியாக வேண்டும். அண்ணன் முகிலனும் அண்ணி ஸ்ரீதன்யாவும் காதலித்து மணம் புரிந்தவர்கள். அவர்கள் பெற்ற ஒரே செல்வம் இந்த வர்ணிகா. பங்களாவில் தம்பதிகள் எந்த அறையில் தங்கியிருந்தார்களோ.. அதே பெட்ரூமில் தற்போது வர்ணிகாவும் உள்ளிருந்து கொண்டு வெளியேறி வர அடம் செய்கிறாள்.
ஹர்ஷத்தை பொறுத்தவரை அண்ணன் அண்ணி மறைவுக்கு பிறகு ஒட்டுமொத்த பிசினஸ் சாம்ராஜ்யத்தையும் கவனித்து க��ள்ளவே நேரம் போதாமை. மேலும் கல்யாணம் குடும்பம் போன்றவற்றில் விருப்பம் இல்லாதவன். இருந்தாலும் தனக்கிருக்கும் ஒரே உறவு என்கிற விதத்தில் வர்ணிகாவை நல்லபடியாக வளர்க்கவே ஆசைப்பட்டான். ஆனால் வர்ணிகா இவனுடன் ஒட்டவே மறுக்கிறாள். அண்ணி ஸ்ரீதன்யா கூட வர்ணிகாவை போலவே தான். ஏனோ ஹர்ஷத்தின் மேல் ஒரு இனம்புரியாத வெறுப்புடனே வலம் வந்தாள். அந்த விபத்தின் போது கூட ஹர்ஷத் காரை ஓட்டிக்கொண்டு சென்றிருந்தான். முன்சீட்டில் முகிலனும் பின் சீட்டில் ஸ்ரீதன்யா குழந்தையுடனும் அமர்ந்திருந்தார்கள். பைபாஸ் நெடுஞ்சாலையின் வளைவொன்றில் சரேலென உட்புகுந்து விட்ட மொபட்காரனை தவிர்க்க வேண்டி லேசாக மிக லேசாக ஸ்டியரிங்கை ஹர்ஷத் வளைக்க.. பின்னால் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த டிப்பர் லாரிக்காரன் இதை எதிர்பார்க்காது இவர்களது பென்சை அதீத வேகத்துடனும் வேட்கையுடனும் முத்தமிட்டு விட்டான். ஒரு பின்ன நொடி இடைவெளியில் பென்ஸ் 6 தடவை விண்ணில் குட்டிக்கரணம் அடித்து உருண்டது. அடுத்த 10 நிமிடங்களுக்கு எந்த அரவமுமே எழவில்லை.
காரினுள் அடிபட்டு கிடந்தவர்களில் முதலில் கண்விழித்தது ஸ்ரீதன்யா.கைக்குழந்தை வர்ணி��ாவின் அழுகை ஒலி அவளை உசுப்பியிருந்தது. அவளுக்கென்ற பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த குழந்தைகள் குஷனில் பெல்ட் இணைப்புடன் படுத்திருந்ததால் நல்லவேளையாக வர்ணிகாவிற்கு எந்த ஆபத்த��ம் இல்லை. அதிர்ச்சியில் ஏற்பட்ட பயத்தில் கத்தி கொண்டிருந்தது குழந்தை. ஆனால் ஸ்ரீதன்யாவால் தன் உடலை இஞ்ச் அளவில் கூட நகர்த்த இயலவில்லை. நசுங்கியிருந்த சீட்கள் அவளது நெஞ்சுப்பகுதியை அழுத்தி கொண்டிருந்தன.
அந்த இருந்த நிலையிலேயே கைகளை நீட்டி வர்ணிகாவை தட்டிக்கொடுத்து ஆற்றுப்படுத்தினாள். இருளுக்கு சற்று பழகியவுடன் உடனடியாக அவளது கண்கள் தேடியது முகிலனைத்தான். முன்சீட்டில் ���றங்குபவன் போல் அப்படியே மல்லாந்திருந்தான். குரல் எழுப்பி அவனை அழைக்க எண்ணினாள். தொண்டை கமறிக்கொண்டு வார்த்தைகள் வெளிவரவில்லை. டிரைவர் சீட்டுக்கு பின்னாலேயே அமர்ந்திருந்ததால் தனது கைக்கெட்டும் தொலைவில் இருந்த ஹர்ஷத்தை தன்னால் முடிந்த மட்டும் பலங்கொண்டு கைகளால் தட்டி உலுப்பினாள். சிறிது நேர முயற்சியில் கண்விழித்து கொண்ட ஹர்ஷத் திரும்பி பார்த்து மலங்க மலங்க விழித்தான். அ��னுமே அதிர்ச்சியின் தாக்கத்தில் இருந்து விடுபட்டவனில்லை. ஸ்ரீதன்யா மிகுந்த பிரயாசையுடன் சைகை செய்து முகிலனை பார்க்க சொல்லி ஹர்ஷத்தை ஏவினாள். சட்டென்று பிரக்ஞைக்கு திரும்பினான் ஹர்ஷத். முகிலனை பார்த்த போது ஹர்ஷத்திற்கும் அவன் எந்த சலனமும் இன்றி உ��ங்குபவனாகவே தோன்றியது. கும்மிருட்டில் அவனது நெஞ்சுக்கூடு ஏறி இறங்குகிறதா இல்லையா என்பதில் குழம்பிய ஹர்ஷத் அண்ணன் நன்றாக தான் இருக்கிறான்.. லேசான மயக்கம் மட்டுமேயென எண்ணிக்கொண்டு தன்னிச்சை செயலாக வீரிட்டுக்கொண்டிருந்த குழந்தை வர்ணிகாவை கையிலேந்த தாவினான். இதில் முகிலனின் காதுமடல்களை சிவப்பாக்கி உறைந்திருந்த ரத்தத்தை கவனிக்க தவறி விட்டான்.
தொடரும்..😊
விடுதலை 2
கூலி உயர்வு போராட்டம்... முதலாளித்துவம் vs கம்யூனிச சிந்தனை.. என 80 களின் கனமான பிரச்னைகள். கடைநிலை அதிகாரிகள் வர்க்கம்.. நிகழும் ஒவ்வொரு பொது விவாகாரத்தையும் எப்படி தம்முடைய பிரமோஷனுக்கான சுயநலமாக மட்டுமே சாதகமாக்க துடிக்கிறது..??. ஒரு கட்டத்தில் உயர்மட்ட அதிகார வர்க்கமானது எப்படி ஆளும் அரசியல்வாதிகளையே கூட தமக்கான குரலாக ஒலிக்கச் செய்கிறது.. என இவை எல்லாம் கலந்த தீவிரமானதொரு கதைக்களம்.
அதிகாரிகளுக்கிடையேயான சிறு சிறு அரசியல் கூட பொதுமக்களை எப்படி மறைமுகமாக பாதிக்கிறது.. என பொட்டில் அடித்ததை போல் சொல்லியிருக்கிறார் வெற்றிமாறன்.
இவ்வளவு தீவிரமான கதையில் நம்மை கவர்பவர்கள் யாரென ஒரு வரிசையை போட்டு பார்த்தால்..
1. கருப்பனாக வரும் ஜ��னியர் கருணாஸ். (படத்தின் துவக்கத்தில் வெறும் 15 நிமிடம் மட்டுமே திரையில் வருகிறார். அதகளமான நடிப்பு)
2. மஞ்சு வாரியார். (கனத்த கதைக்களத்தில் ஜில்லிப்பான புன்னகையோடு வலம் வரும் ஒரு குளு குளு தென்றல். )
3. இளையராஜா (பின்னணி ராஜா.. அடிப்படையில் கம்யூனிச மேடைகளில் கச்சேரி வாசித்தவர் தானே. பக்காவாக இசைவழி உணர்வுகளை தொடுத்திருக்கிறார்.)
4. விசே (அவருடைய வாழ்நாள் கதாபாத்திரம் இந்த பெருமா��் வாத்தியார். பிளந்து கட்டியிருக்கிறார் )
5. ராஜீவ் மேனன் ( உயர் மட்ட அதிகாரிக்கான தோரணை.. பிரச்னைகளை ஜஸ்ட் லைக் தட் ஹாண்டில் செய்யும் லாவகம்..😍. கவுதம் வாசுதேவிற்கு பிறகு ஒரு அட்டகாசமான இயக்குனர் நடிகர் ரெடி.)
6. சேத்தன் : பேராண்மை படத்தில் 'கணபதிராம்' என்கிற குயுக்தி பிடித்த அதிகாரி கேரக்டரை காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர் ஜனநாதன். பொன்வண்ணன் அட்டகாசமாக உணர்ந்து உள்வாங்கி நடித்திருப்பார். சேத்தனின் ராகவேந்திரா கேரக்டர் கணபதிராமை தொட்டுப்பார்க்க முயல்கிறது. வெல்டன் சேத்தன்.
இந்த இரண்டாம் பாகத்தில் சூரிக்கு காட்சிகள் குறைவு தான் என்பதால் இவர்களுக்கு பிறகு தான் சூரியை குறிப்பிட முடியும்.
ஒரு விஷயம். விடுதலை 1 ல் இருந்த சிறிதளவு ஜனரஞ்சகத் தன்மை கூட இந்த விடுதலை2 வில் கிடையாது. முன்பு விசாரணை என்றொரு படம் எடுத்திருந்தாரே.. அதே போன்ற ராவான கதைசொல்லலை கையில் எடுத்திருக்கிறார் வெற்றிமாறன். வணிகரீதியில் பார்த்தால் சோசியல் மீடியாவில் வெகுவாக பாராட்டப்பட கூடும். விவாதங்களை கிளப்பக்கூடும். வசூல் கைகொடுக்குமா என்பது பெரும் கேள்விக்குறியே.
#Viduthalai2 #VidudalaPart2 #VijaySethupathi #VetriMaaran #actorsoori
பாலா 25
'சேது' ஏற்கனவே பல ஹீரோக்கள் கேட்டு நடிக்க மறுத்த கதை. ஓரிருவர் நடிக்க தொடங்கி ஷுட்டிங் வரை சென்று பாதியோடு நின்ற கதை. புறக்கணிப்பின் வலியை முழுமையாக உணர்ந்த விக்ரமும் பாலாவும் இணைந்தனர். அல��லது இணைய வைத்தது இயற்கை / இறைவனின் செயல். புதைத்து வைத்திருந்த புதையல் வெளிப்பட்டதான பிரகாசம் சேதுவின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஜொலித்தது. விக்ரமின் திறனை அனைத்து விதத்திலும் வெளிகொணர்ந்த படமாக அமைந்தது சேது. காலேஜ் சீனியராக.. ஸ்டுடண்ட் லீடராக ராவடியான கதாபாத்திரம் முதல் பாதி விக்ரமிற்கு. பல படங்களில் டப்பிங் குரல் கொடுத்த அனுபவத்தை கூட சேதுவின் பல காட்சிகளில் மிக���்சிறப்பாக பயன்படுத்தினார் விக்ரம். அவ்வளவு பெர்பெக்டான வேலையை வாங்கியிருந்தார் பாலா.
உதாரணமாக தன்னுடைய அண்ணன் சிவக்குமார் மற்றும் மகளுடன் உணவு மேஜையில் விக்ரம் அமர்ந்திருக்க.. நீதிபதியான சிவக்குமார் சேதுவை ஏதோ வசைபாடி கொண்டிருப்பார். அதை காதிலேயே வாங்கி கொள்ளாது.. தன் பாட்டுக்கு.. "தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுக்குட்டி.." பாட்டை உச்சஸ்தாயியில் பாடி கொண்டிருப்பார் சேது. ஒரு கட்டத்தில் தாளம் போட்ட படி பாடி கொண்டிருந்த விக்ரம் திடிரென்று அமைதியாகி விட அதுவரை அவரை திட்டிக் கொண்டிருந்த அண்ணன் உட்பட்ட மொத்த குடும்பமும் அவரையே உற்று கவனிக்கும். சிவக்குமாரின் மனைவி,மகள்.. என அனைவரும் அமைதியாக கவனிக்கும் அந்த நொடி.. ஏதோ பலத்த சிந்தனையிருந்தவாறாக காட்சி தந்த விக்ரமின் வாயிலிருந்து வெடித்து கிளம்பும் பாடலின் அடுத்த வரிகள்... "சாராயத்தை ஊத்து.. ஜன்னல தா சா��்து.." அதுவரையில் மனதிற்குள் இந்த பாட்டை தான் ஹம்மிங் செய்து கொண்டிருந்திருக்கிறார் மனிதர் என்பதே நமக்கு அப்போது தான் தெரிய வரும்.
பார்க்க ஏதோ சாதாரண காமெடி சீனை போன்று கடந்து போய���ருந்தாலும்.. கூர்மையான அனுபவ நோக்கு இல்லாது யாராலும் இப்படி ஒரு காட்சியை யோசிக்கவும் முடியாது... அதை திரையில் அப்படியே நடிப்பில் கொண்டு வந்து விடவும் இயலாது. சேதுவில் மற்றொரு குறிப்பிட தக்க காட்சி அந்த விடுதியில் மாட்டி கொள்ளும் ஹீரோயினின் அக்காளை விக்ரம் மீட்டு கொண்டு வரும் சீன். மிக மிக இயல்பாக அந்த சூழலுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே காட்சிப்படுத்தியிருப்பார் பாலா.
சேது ப�� போராட்டங்களுக்கு பிறகு திரையை தொட்டது. ரிலீசாகி ஒரு வாரத்திற்கு பிறகு தியேட்டரிலிருந்து தூக்கப்பட்டு பின்னர் மக்களின் வாய்வழி பேச்சினாலும் விமர்சனங்களாலும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வெள்ளிவிழா கண்டது. திறமையையும் உழைப்பையும் கையிருப்பில் வைத்து கொண்ட தனக்கான அங்கீகாரக் கதவை தொடர்ந்து தட்டுபவனுக்கு குறுக்கே கடவுளே ஆனாலும் கூட எவ்வளவு நாட்கள் தாக்கு பிடித்து விட முடியும். அங்கே துவங்கியது பாலாவின் ராஜாங்கம்.
தொடர்ந்து நந்தா. முகம் வடிவாக இருந்தாலும் வெறும் ஏனோ தானோ படங்களில் நடித்து வலம் வந்து கொண்டிருந்த சூர்யாவை கதாநாயகனாக தேர்ந்தெடுத்திருந்தார் பாலா. சிவக்குமார் சூர்யாவை பாலாவிடம் ஒ��்படைத்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். உண்மையில் நந்தா வணிகரீதியாக ஒரு சராசரி வெற்றிப் படம். சூர்யாவின் இறுக்கமான தோற்றம் மற்றும் அவரது குணநலன்களாக ரசிகர்கள் நினைத்தவை அப்படியே திரையில் வந்திருந்த படியால் நந்தாவையும் சூர்யாவின் வழக்கமான படங்களில் ஒன்றாகவே ஆரம்பத்தில் பொதுஜனம் பார்த்தது தான் காரணம். தவிர சேதுவின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு பாலாவின் மேல் மக்களின் பெருத்த எதிர்பார்ப்புக்கான தீனியை நந்தா வழங்கவில்லை. என்றாலும் லைலாவுடனான காதல் காட்சிகளிலும் ராஜ்கிரணுடனான காட்சிகளிலும் சூர்யா வேறானவராக தெரிந்தார். நந்தா ஆவரேஜ் படமாக இருந்தாலும் சூர்யாவின் திரை வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது அந்த படமும் இயக்குனர் பாலாவும் தான் என்பதை சூர்யாவே பல மேடைகளில் சொல்லியிருக்கிறார். கதைத்தேர்வு முதல் கதாபாத்திர அணுகுமுறை வரை பாலா சூர்யாவிற்கு வழங்கியிருந்த பெரும் அனுபவ கொள்முதலுக்கு அதற்கு பின்னான சூர்யாவின் தொடர் வெற்றியே சாட்சி.
பிதாமகன் பாலாவின் உச்சம் எனலாம். விக்ரம்.. சூர்யா.. லைலா.. சங்கீதா.. மிக முக்கியமாக இளையராஜா என அத்தனை பேரின் ஒட்டுமொத்த சிறப்புகளையும் நேர்த்தியாக வெளிக்கொண���்ந்த பாலாவின் லாவகம் இன்று வரையிலும் வெகு சில இயக்குனர்களுக்கு மட்டுமே சாத்தியப்பட்ட ஒன்று. உண்மையில் சொல்லப்போனால் கமர்ஷியல் படங்களுக்கான கலவையில் பாலா ஒரு கைதேர்ந்த இயக்குனர். அவருடைய முதல் மூன்று படங்களின் காதல் மற்றும் காமெடி காட்சிகளை அன்றைய காலங்களில் தியேட்டரில் பார்த்த அனுபவம் வாய்த்தவர்களுக்கு இது புரியும் என நம்புகிறேன். பாலா அதே ரூட்டில் பயணித்திருக்கலாம். ��ணர்வுப்பூர்வமான இன்னும் பல படங்கள் நம் தமிழ் ரசிகர்களுக்கு வாய்த்திருக்கும்.
தொடரட்டும் பாலாவின் பயணம்.
#Bala25Years #bala25
ARR விசிறி ஒருத்தர் எல்லா சிட்டுவேஷனுக்கும் ARR னு ஒரு லிஸ்ட் போட்டுருந்தார். கண்ணுல பட்டுச்சு. சரி. நம்ம��ால சும்மாருக்க முடியுமா. ராஜா பாடல்களை அதே சிட்டுவேஷன்களுக்கு மேட்ச் பண்ணி தந்திருக்கோம். சரியா வருதான்னு பாருங்க. வேற பாடல்கள�� சஜஷன்ஸ் இருந்தா சொல்லுங்க.. இனி கீழே..
ARR VS RAJA
அம்மா பாசத்துக்கு - ARR :தீயில் விழுந்த தேனா... RAJA : அம்மா என்றழைக்காத உயிரில்லையே.. நானாக நானில்லை தாயே.. சின்ன தாயவள்..
அப்பா பாசத்துக்கு - ARR: ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா.. RAJA: வானந்தொட்டு போனா...
மகள் பாசத்துக்கு - ARR: ஒரு தெய்வம் தந்த பூவே.. RAJA : எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே..
நண்பன் நட்புக்கு - ARR : முஸ்தபா முஸ்தபா.. RAJA : காட்டுக்குயிலு மனசுக்குள்ள..
ஊர் கெத்துக்கு - ARR: திருப்பாச்சி அருவாள.. RAJA : பொதுவாக எம்மனசு தங்கம்.. சொர்க்கமே என்றாலும்..
குடும்பத்துக்கு - ARR : பச்சை கிளிகள் தோளோடு RAJA: பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா.. தென்மதுரை வைகை நதி.
ஒரு தலை காதலுக்கு - ARR : என்னை காணவில்லையே RAJA : மலையோரம் வீசும் காற்று.. நான் பாடும் மௌனராகம்..
பெண் ஒரு தலை காதலுக்கு - ARR: கண்ணாலனே, RAJA : ஒரே முறை உன் தரிசனம்..
ஆண் ��ரு தலை காதலுக்கு - ARR : காட்டு சிறுக்கி, RAJA : பொட்டு வைத்த ஒரு வட்ட ��ிலா..
பிரிவுக்கு - ARR : உயிரே உயிரே வந்து என்னோடு.. RAJA : வானுயர்ந்த சோலையிலே..
காதல் சொல்வதற்கு - ARR: என்ன சொல்ல போகிறாய். RAJA: என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை..
இரு தலை காதலுக்கு - ARR: முன்பே வா என் அன்பே வா.. RAJA : காதல் கவிதைகள் படித்திடும் நேரம்..
ஆண் காதல் தோல்விக்கு - ARR: பூங்காற்றிலே உன் சுவாசத்தை.. RAJA : இதயமே இதயமே..
பெண் காதல் தோல்விக்கு - ARR: எங்கே எனது கவிதை, RAJA : நீ எங்கே என் அன்பே..
கல்யாண���்துக்கு - ARR : யாரோ யாரோடி RAJA : சீவி சிணுக்கெடுத்து பூவை முடிஞ்சி வந்த புது பொண்ணே...
Motivation க்கு - ARR : எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே. RAJA : புஞ்சை உண்டு நஞ்சை உண்டு.. ஆண்னென்ன பெண்னென்ன...
இயற்கைக்கு - ARR : நதியே நதியே RAJA : பொன்மாலைப்பொழுது, இளையநிலா பொழிகிறது, மலையாளக்கரையோரம் தமிழ் பாடும் குருவி..
அழகுக்கு - ARR : கண்ணுக்கு மை அழகு RAJA : அழகே அழகு தேவதை (ராஜப்பார்வை)
இன உணர்வு - ARR : விடை கொடு எங்கள் நாடு.. RAJA : யாரும் விளையாடும் தோட்டம்.
தனிமைக்கு - ARR : நியூயோர்க் நகரம் RAJA : பனி விழும் இரவு..
மழைக்கு - ARR : சின்ன சின்ன மழைத்துளிகள். RAJA : பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம். அம்மாடி ஆத்தாடி தேன்மொட்டு தான்..
மோகத்துக்கு - ARR : தங்கதாமரை மகளே.. RAJA : சிவராத்திரி.. தூக்கம் ஏது..
மற்ற இசையமைப்பாளர்களின் ரசிகர்களும் வந்து அடிச்சி காட்டலாம்...
#ilayaraaja #ARRahman
நாம அவ்ளோ ��ன்னும் சாக்லேட் வெறியன்லாம் இல்ல பாத்துக்குங்க. வாரம் ஒருக்கா போற வார வழில இருக்கற டெய்லி ப்ரெஷ் கடைல ஜுஸ் குடிக்கறாப்ல நுழைவேன். வெளியவே ஜுஸ் போட்டுட்டு இருக்கற தம்பி கிட்ட ஆர்டர் பண்ணிட்டு அப்படியே உள்ற போய் காட்பரிஸ் ப்ரிட்ஜை திறந்தோம்னா... எல்லா புது கலெக்ஷனும் வகை வகையா அடுக்கி வச்சிருப்பாய்ங்க. வாரம் வாரம் புது டேஸ்ட் ஒன்னு வந்துட்டே இருக்கும்.
சின்ன வயசுல இருந்தே ப��க்கமாச்சுங்களா... காட்பரீஸ் கம்பெனி மேல இன்னமும் மிச்சம் இருக்கற அந்த சாஃப்ட் கார்னர்னால.. சரி... நாமளும் தான் ஒரு யாவாரம் குடுப்பமே னு அந்தந்த வாரத்து புது ஃப்ளேவரை பிக் பண்ணி பில் பண்ணிப்பேன். 45 வயசாகியும் கிரகம் அதை வெளியே வந்து பிரிக்கற பொறுமை மட்டும் இன்னும் வாய்ச்ச பாடில்ல. அந்த பில் பண்ற பொண்ணு வேற காலேஜ் படிக்கற பார்ட் டைமர் யூத்து. "ஏன்யா சாக்லேட் வாங்கவா இத்தன படியேறி கடைக்குள்ள வந்த நீயீ" ன்னு நினைச்சிட கூடாதே.. அதனால ரெண்டு ஜுஸு... கூட இந்த சாக்லேட்டு னு பில்லுக்கு நீட்டுவேன்.
இன்னிக்கும் அப்படி தான். "ஹேசில்நட்" னு ஒரு புது டேஸ்டு கண்ல பட்டு அதை பில் பண்ணி வாங்கிட்டு.. அவசர அவசரமா ஜூஸை கபகபனு குடிச்சிட்டு ஓடாத கொறையா படியிறங்கி அந்த கடை போர்டுக்கு கீழ இருந்த லேசான நிழல் இருட்டுல ரேப்பரை மட்டும் பிரிச்சி பாதியை அப்படியே உடைச்சேன் பாருங்க.. அந்�� உடைச்ச பாதி கீழே உருண்டு விழுந்து காருக்கு அடியால எங்கியோ ஓடிருச்சி..
அப்படியே ஒக்காந்து கைய விட்டு துழாவி எப்படியோ கண்டுபிடிச்சிட்டேன். சுத்தியிருந்த கோல்டன் ஃபாயிலை வாயால ஊதி ( மண்ணு கீது ஆயிருந்தா..🙄) சாக்லேட்டை வாயில கடிச்சேனோ இல்லியோ.. 2 வது படிக்கிறப்பலருந்து கிடைக்கிற அந்த இன்ஸ்டன்ட் சொர்க்கம் அப்படியே வாய்க்குள்ள கரைஞ்சிது. வழக்கமாவே இதெல்லாம் யாருக்கும் தெரியாமயே பண்றதுனால ஒரு ரிஃப்ளக்ஸ் உணர்ச்சி எப்பயும் கூடவே இருக்கும்.
இப்பயும் அந்த ரிஃப்ளக்ஸ் ஏனோ வெகுவா உந்த சுத்தி முத்தி பாத்தா.. கொஞ்சம் தள்ளி நின்னுட்டுருந்த கார்ல டிரைவர் சீட் பக்கத்தால ஒக்காந்து ஒரு பொண்ணு நம்மளைய சிரிச்சிகிட்டே பாத்துட்டுருந்துருக்கு... அந்த பொண்ணு கண்ணுல தெரிஞ்ச சிரிப்புல தொனிச்ச கேள்வி...
"இன்னுமாடா இதெல்லாம் தின்னுட்டுருக்கற"...
🤦🤦🤦
புஷ்பா 2
அல்லு அர்ஜுனின் தந்தை சிரஞ்சீவியின் மைத்துனர். அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்தின் சகோதரி சுரேகா சிரஞ்சீவியின் மனைவி. அல்லு அரவிந்த் பழம்பெரும் தெலுங்கு காமெடி நடிகர் அல்லு சீதாராமலிங்கையாவின் மகன். சிரஞ்சீவியை சூப்பர்ஸ்டாராக்கியதன் பின்னனியில் அல்லு அர���ிந்த்தின் மூளைக்கு பெரும் பங்கு உண்டு.
நன்றாக போய்க் கொண்டிருந்தவரை ஓக்கே. ஆனால் பெரிய குடும்பங்களில் அப்படியே கடைசி வரை விக்ரமன் பட "லாலாலா" க்கள் பாடப்பட்டு கொண்டிருக்க சாத்தியங்கள் இல்லையே. சிரஞ்சீவி சூப்பர்ஸ்டாரானார். பின் பவன் கல்யாண் நடிக்க வந்தார். அவர் கொஞ்சம் மேலே ஏற ஏற கொனிடேலா பேமிலியில் புகைச்சல் கிளம்பி பவனையே சிறிது ஒதுக்கி வைத்தார்கள். அடுத்து ராம்சரண்.. அல்லு அர்ஜுன��� வந்தார்கள். பனிப்போர் துவங்கியது. பவன் துணை முதல்வரானார். கொனிடேலா பேமிலி பவனை திரும்ப வாரி அணைத்துக் கொண்டது. இப்போது வில்லன் யாராவது வேண்டுமே. அந்த பாத்திரத்திற்கு அல்லு கோஷ்டியை போட்டு தள்ளியது 'பெரிய' குடும்பம்.
இது செம்மர கடத்தல் கதை அல்ல. அல்லு பேமிலிக்கும் கொனிடேலா (சிரஞ்சீவி) பேமிலிக்கும் நடந்து கொண்டிருக்கும் பனிப்போரின் பின்னணி. அது சார்ந்த வசனங்கள்.. காட்சிகள்.. தான் படம் நெடுக. அதனால் படம் முழுக்க வடக்கத்திய பணக்கார குடும்ப டிவி சீரியல் எபெக்ட்.
அல்லு அர்ஜுன் தொட்டால் பற்றிக் கொள்வார் போல பக்கா மாஸாக இருக்கிறார். ராஷ்மிகாவின் கவர்ச்சி வேறு. ஃபஹத்தும் அல்லுவும் மோதும் சில காட்சிகள் நிஜமாலுமே (Sukumar writings..😉) சுவாரசியமாக இருக்கின்றன. ஆனால்... ஒரு ஜொலிஜொலிப்பான டிவி நாடகத்தில் ஆக்ஷன் காட்சிகளை மிக்ஸ் செய்திருப்பதை எப்படித் தான் எவ்வளவு நேரம் த���ன் பொறுத்துக் கொள்வது.
பேசாமல் இயக்குனர் சுகுமாரை அவர் போக்கில் விட்டிருக்கலாம். செம்மர கடத்தல் கதையை செம���்தியான ஆக்ஷனுடன் பரிமாறி இருந்திருப்பார்.
இப்போது காசை கொடுத்து கொனிடேலா - அல்லு பேமிலி நாடகத்தை படு பிரமாண்டமான மேக்கிங்கில் பார்த்து விட்டு வந்திருக்கிறோம்.
#Pushpa2TheRule #Pushpa2TheRulereview #புஷ்பா2 ... 😇😇😇
எவ்ளோ சம்பாதிச்சி வச்சவி��்களா இருந்தாலும் நமக்கும் வாழ்க்கைல ஒரு ஆண்டணி வரமாட்டானான்ற ஏக்கத்தை பரவலா பாக்க முடியுது. ஆரம்ப படிக்கட்டுகள்ல இருக்கறவனுக்கு அடிப்படையே பிரச்னைன்னா.. வசதி படைச்சவனுக்கு தன்னுடைய "எக்ஸ்ட்ரா" செலவின பிரச்னை இருக்கும் போல.
லக்கி பாஸ்கர் விதைச்சிருக்கற ஆகச்சிறந்த தவறான எண்ணவோட்டமே இது தான். அந்த கடைசி கன்சைன்மென்ட்ல பாஸ்கருக்கு நல்லா செதுக்கி சீவின ஒரு ஆப்பை சொருகிட்டு ���மெரிக்கா பறந்துட்டான் ஆண்டணி. அதுலருந்து பாஸ்கர் மீ��்டது எப்படினு கதை பிடிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும் சேதி.
12 B படம் மாற தான். பஸ்ஸை பிடிச்சிருந்தா ஒரு கதை. பஸ்ஸை விட்டிருந்தா ஒரு கதை..
அப்படி ஆண்டணி ஏமாத்திட்டு போயிருந்தா.. அப்பயும் இந்த "ஆண்டணி வந்துருக்கேன்.." Quote அட்டகாசமாக தான் இருந்துருக்கும்.
என்ன ஒண்ணு.. படுபயங்கர 'திகில்' கிளப்பற வாசகமா அமைஞ்சிருக்கும்.
#ஆண்டணி_வந்துருக்கேன் ...😇
சிரஞ்சீவி
தலைவன் இங்க நம் ரஜினிக்கும் கமலுக்கும் எவ்விதத்திலும் சளைத்தவர் அல்ல. ஒரு காலகட்டத்தில் இந்தியாவின் அதிகபட்ச சம்பளத்தை தொட்ட முதல் ஹீரோ. 80 - 90 களில் பிரத்யேகமான (அப்கோர்ஸ் பிரபுதேவா) நடன அசைவுகள்.. மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்காகவே இந்திய அளவில் பெரும் ��சிகப்பட்டாளத்தை வைத்திருந்தவர்.
தன்னுடைய இரண்டாம் இன்னிங்சில் நல்லதொரு கதை அமைந்திடாது இன்னமும் திணறி வருகிறார். இங்கே ரஜினியையும் கமலையும் லாலையும் மம்முக்காவையும் அவர்களது உச்சங்களின் போது உருகி உருகி ரசித்த ஃபேன்பாய்களே அவர்களுக்கு டைரக்டராக சென்று அமர்ந்து விடுவதால் இந்த 2K தலைமுறை அலையிலும் கெத்தாக முன் நின்று கொண்டிருக்கிறார்கள்.
ஸ்ரீகாந்த் ஒடிலா. சிரஞ்சீவியின் அடுத்த பட இயக்குனர். இவருடைய தசரா பெர்சனலாக நம்மை பெரிதாக கவரவில்லை. ஆனால் நானி அறிமுகப்படுத்தியிருக்கும் ஃபர்ஸ்ட் லுக்கில் சிரஞ்சீவியின் மிகப்பெரும் ரசிகரே அவரை இயக்க வாய்த்திருக்கிறார் என ஸ்ரீகாந்த் ஒடிலாவை பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.
சிரஞ்சீவியின் அதிரடி சம்பவமாக அமையுமா ஸ்ரீகாந்த் ஒடிலாவுடன் இணையும் இந்த படம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
😇😇😇
Dear @OnePlus_IN i have register a complaint abt my brand new Tv.. a three week ago long. Still not getting any response. one should applaud this type of customer support ...warreh wahh.. Btw.. i have all my records regarding this. Issue no : IN02064TV221207005.