வாழ்வு வலிக்காமலில்லை
ஆனாலும்
எவர் முன்னாலும்
தலை குனியவோ
ஏன்
இவ்வாழ்விடமே மண்டியிடவோ
முடியாதென்கிறேன்.
வலிக்க வலிக்க வாழ்ந்துவிட்டு
போவதற்கும்
ஒரு வீராப்பு வேண்டும்.
~ மயிலிறகு மனசு ~
என்னைப்பற்றிய
கடைசி நினைவு
இப்போது உனக்கு
என்னவாக இருக்கிறது?
அது இனியதாக இருந்தால்
நல்லது
நாம் மறுபடி சந்திக்க
வேண்டியதில்ல���
ஒருவேளை மோசமாக இருந்தால்
ஒரு நல்ல நினைவை
நான் உன்னிடம் விட்டுச்
செல்லும்பொருட்டு
நாம் ஒன்றை நிகழச் செய்வோம்
வா
-மனுஷ்ய புத்திரன்