இன்று மாலை, நமது @WTLFoundation சா���்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில், பெரும் திரளெனக் கூடியிருந்த சகோதர சகோதரிகளுடன் பங்கேற்றதில் பெரும் மகிழ்ச்சி. இந்தப் பேரணியில் பங்கேற்றுச் சிறப்பி��்த, சின்னக் கலைவாணர், அண்ணன் அமரர் விவேக் அவர்களின் மனைவி திருமதி. அருள்செல்வி அவர்களுக்கு, எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயற்கையைப் பாதுகாப்பது என்பது வெறும் மரங்களை நடுவது மட்டும் அல்ல. நமது நீர்வளம், கிராமப்புற வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத் தலைமுறையின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதும் தான். காவிரி நதி நீர் பிரச்சினை, மேகதாது அணைத் தி���்டம் போன்ற விவகாரங்களில் தமிழ்நாட்டின் நீர்வள உரிமைகளைப் பாதுகாப்பது அவசியம். அதேபோல், நமது கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், ஊரணிகள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளைப் பாதுகாத்து, மழைநீரை சேமிக்கும் வகையில் அவற்றை மேம்படுத்த வேண்டியதும் நமது கடமை.
கடந்த 16 நாட்களில் நமது @WTLFoundation சார்பில், 6,25,760 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதத்திற்கான நமது இலக்கு 20 லட்சம் மரங்கள். இன்னும் 15 நாட்களில் 14 லட்சம் மரங்களை நட்டு இந்த இலக்கை எட்ட வேண்டும். அண்ணன், சின்னக் கலைவாணர் அமரர் விவேக் அவர்களின் பசுமைப் பணியை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அவர் ஏற்கனவே 37 லட்சம் மரக்கன்றுகளை நட்டு உருவாக்கிய பசுமைப் பாதையை, வரும் மாதங்களில் மீதமுள்ள மரங்களை நட்டு, அவரது 1 கோடி மரங்கள் என்ற கனவை நிறைவேற்றும் பணியில் நாமும் பங்கெடுப்போம்.
தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்களிடம் ஒரு வேண்டுகோள். ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை வழங்க வேண்டும் என்ற உங்கள் நிலைப்பாட்டை வரவேற்கிறோம். ஆனால், உங்கள் அமைச்சரவையில் சிலர் லஞ்சம் பெறுவதாக வரும் குற்றச்சாட்டுகளை விசாரித்து, தவறு நடந்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் மீது மக்கள��� வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவது உங்கள் பொறுப்பு.
இன்றைய ��ளைஞர்களின் குரலை நாம் கேட்க வேண்டும். அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டு, அவர்களின் எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள வேண்டும். பிறர் குடும்பத்தைப் பற்றி தரக்குறைவாகப் பேசுவது, தனிப்பட்ட தாக்குதல்கள் செய்வது போன்ற, அநாகரிக அரசியலை, இன்றைய இளைஞர்கள் விரும்புவதில்லை. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் நல்லாட்சி குறித்து பேச��ம் புதிய அரசியலை நாம் முன்னெடுத்துச் செல்வோம்.
நீர்நிலைகளை காப்போம்; மரங்களை வளர்ப்போம்; அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவோம். கிராமங்களை முன்னேற்றுவோம். நம் குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக்குவோம்.
மாறுவோம், மாற்றுவோம்! (1/3)
வரும் ஆகஸ்ட் 15 அன்று, கிராம சபையில் நமது குரல் ஒலிக்கட்டும்.
கருத்துகளை முன்வைப்போம். தீர்வுகளை உருவாக்குவோம். கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்போம். நமது கிராமத்தின் வளர்ச்சிக்குப் பணியாற்றுவோம்.
நமது கிராமம், நமது பொறுப்பு!
மிகவும் சுகாதரமற்ற முறையில் இருந்த மயானத்தை சுத்தம் செய்த @WTLFoundation சகோதரர்கள்.😍
தூய்மை செய்யும் பணியில் ஆர்வமுடன் கலந்துகொண்ட தொண்ட��்கள்..!!🔥
#Annamalai
சிறந்த இயக்குநரும், நடிகரும், இந்திய அளவில் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவருமான, திரு. K. பாக்கியராஜ் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகுந்த அதிர���ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.
தன்னுடைய திரைப்படங்கள் மூலம், தமிழக ம���்களின் பேரன்பைப் பெற்றிருந்தவர். எளிய, பண்பான மனிதராகத் திகழ்ந்தவர்.
திரு. பாக்கியராஜ் அவர்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
நடிகரும், கார் பந்தய வீரருமான திரு. அஜித் குமார் அவர்களது ���ாயார், திருமதி. மோகினி அவர்கள், வயது மூப்பின் காரணமாக காலமான செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது.
இந்தத் துயரமான நேரத்தில், திரு. அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தாயார் ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
குடும்பத்திற்காகவும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் ஓய்வின்றி உழைத்து, அனைவரையும் அன்பால் இணைக்கும் மையப்புள்ளியாகத் திகழும் தாய்மார்கள் அனைவருக்கும், இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் வாழ்வின் முதல் ஆசிரியர்களாக இருந்து உலகை அறிமுகப்படுத்தி, எண்ணற்ற தியாகங்களால் நம்மை வடிவமைப்பது, நமது தாய்மார்களே. தாயின் அன்பும், தியாகமும், தன��னலமற்ற அர்ப்பணிப்பும் மனித வாழ்வின் மிகப் பெரிய வரங்களாகும்.
குடும்பங்களையும் சமூகத்தையும் உறுதியாக வடிவமைக்கும் அனைத்து தாய்மார்களின் பேரன்பும், பொறுமையும் என்றென்றும் போற்றுதலுக்கு��ியது.
இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்.
ஏலத்துக்கு போன அடகு நகையான தாலியை மீட்டு தரக்கோரி அண்ணாமலையிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த பெண்..! அடுத்த நாளே அதை விட அதிக எடையுடன் கூடிய புதிய தாலியை வாங்கி கொடுத்த அண்ணாமலை..!!
#Annamalai | #BJP | #Woman | #PolimerNews