தமிழ்நாட்டில் எது நடந்தாலும், அது நாங்கள்தான் என்று சொல்லும் மாயப் பிரமையிலிருந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் வெளியே வர வேண்டும்.
இரண்டு படங்களில் நடித்தால் தலைவர், பத்து படங்களில் நடித்தால் அடுத்த எம்.ஜி.ஆர். என்ற சினிமா கலாச்சாரத்தைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்தது யார் என்பதைத் திமுக தலைவர் சுயபரிசோதனை செய்ய வேண்டும். எதை எடுத்தாலும் சினிமா, சினிமா வசனம், ரீல்ஸ், இன்ஃப்ளூயன்சர், சோசியல் மீடியா பாப்புலாரிட்டி. இதுதான் தமிழ்நாடா?
தமிழ்நாட்டிற்குப் புதிய அரசியல் தேவைப்படுகிறது. மக்களை மையப்படுத்திய, உண்மையான, நடுநிலையான, நேர்மையான அரசியலைத் தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காகவே We The Leaders அமைப்பின் மூலம் அடிப்படையிலிருந்து தலைவர்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
நாங்கள் எப்போதும் உண்மையையும் நியாயத்தையும் பேசுவோம். அது மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி, தவறுகளைச் சுட்டிக்காட்டத் தயங்க மாட்டோம்.
இந்தியாவில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,அதிகரித்து வரும் விலைவாசியைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.
அதேபோல், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவைத் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் தீபம் ஏற்ற வேண்டும்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைத் தமிழக அரசு நடுநிலையுடன் செயல்படுத்த வேண்டும், தேவையில்லாமல் இரண்டு மதத்தினரிடையே பிரச்சினையைத் தூண்டிவிட்டு, அதில் குளிர்காய வேண்டாம். ஒரு அடிப்படை உரிமையை உச்சநீதிமன்றம் மீட்டு கொடுத்துள்ளது.
தமிழகத்தில் ராகுல் காந்திக்கு இருக்கும் Travel Agent தான் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர்.
தமிழக மக்களுக்குத் தொந்தரவு கொடுக்கக்கூடிய கட்சி காங்கிரஸ். ராகுல் காந்தியின் Travel Agent, Tour Guide-ஆக வேலை பார்க்காமல், தமிழக மக்களின் நலனுக்காகவும், அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கவும் பணியாற்ற வேண்டும்.
சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான 48 கி.மீ. நீளமுள்ள தேனாற்றைத் தூய்மைப்படுத்தும் பணி, நமது முதன்மைச் சேவகர் திரு. அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தலின்படி, சீரும் சிறப்புமாகவும் தீவிரமாகவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இப்பணியின் தற்போதைய முன்னேற்றம், அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகை, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களுக்கு We The Leaders அமைப்பின் சார்பாக, இந்தத் திட்டத்தை முன்னெடுத்து நடத்தும் திரு. நாச்சியப்பன் அவர்கள் தகவல்களைப் பகிர்வார்.
நமது இயக்கத்தின் மற்ற தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இந்தத் திட்டப் பணிகள் குறித்து பொதுவெளியில் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அனைவரும் அவருக்குத் தகுந்த ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.
ஆண்டுக்கு 10% முதல் 12% மட்டுமே ஊதிய உயர்வு பெறும் நடுத்தரக் குடும்பங்கள், அத்தியாவசியப் பொருட்களின் இந்த விலைவாசி உயர்வை எப்படிச் சமாளிக்க முடியும்?
அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதில் முதலமைச்சர் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது, எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்பது கூடத் தெரியவில்லை.
முதலமைச்சர் விஜய் தவெக சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து, அவர்களுடைய அதிகாரங்கள் மற்றும் கடமைகள் குறித்து மீண்டும் ஒரு பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும்!
காவிரி விவகாரம் குழப்பமாக இருக்கிறது.
முதலமைச்சர் விஜய் இதில் தலையிட்டு, தமிழக விவசாயிகளின் உரிமையை நிலைநாட்டி, கர்நாடகாவில் இருந்து 11 டி.எம்.சி. நீர் பெற்று தர வேண்டும்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் தேர்தலுக்கு முன்பு எந்த நிலைப்பாட்டையும் தெரிவிக்காத தமிழக வெற்றிக் கழகம், ஆட்சிக்கு வந்த பிறகு எந்த அடிப்படையில் தீபம் ஏற்றுவதை எதிர்த்தது?
இந்த விவகாரத்தில் திமுக அரசுக்கும் தவெக அரசுக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.
முதலமைச்சருக்குக் கோயிலுக்குச் சென்று வழிபடுவதற்கு இருக்கும் அதே ஆர்வமும் உரிமையும் முருக பக்தர்களுக்கும் உண்டு.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் வரும் நவம்பர் 24-ஆம் தேதி தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டைப் போலத் தடைகளையும் இடையூறுகளையும் ஏற்படுத்தாமல், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை முழுமையாகப் பின்பற்றி, முருகப்பெருமானின் பக்தர்களின் நீண்டகாலக் கோரிக்கையை தமிழக வெற்றிக் கழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்க வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் இருக்கிறது.
அரசுப் பணியைக் கனவாகக் கொண்டு பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் தரமான பயிற்சியை இலவசமாக வழங்க We The Leaders அமைப்பின் தலைமைச் சேவகர் திரு. K. அண்ணாமலை அவர்களால் ஏற்றம் அகாடமி தொடங்கப்பட்டுள்ளது.
பாடங்கள், நேரலைப் பயிற்சி வகுப்புகள், முந்தைய ஆண்டுத் தேர்வு வினாத்தாள்கள், மாதிரித் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இத்தளத்தில் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதன் மூலம் TNPSC தேர்வர்கள் எந்தத் தடையுமின்றித் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே தங்களது பயிற்சியைத் தொடரலாம்.
ஏற்றம் அகாடமியுடன் பயிற்சியைத் தொடங்குங்கள், வெற்றியை நோக்கி முன்னேறுங்கள்.
ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து, தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடி, தனது சொத்துகள் அனைத்தையும் இழந்து, சிறைக் கொடுமைகளையும் அனுபவித்த ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் நினைவு நாளில், தமிழகம் முழுவதும் We The Leaders சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சுதேசிக் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கி, சுயசார்புச் சிந்தனையையும் நாட்டுப்பற்றையும் மக்களின் மனதில் விதைத்த வ.உ.சி. அவர்களின் தியாகத்தையும், தேசத்திற்கான பங்களிப்பையும் என்றும் போற்றுவோம்!
அரசுத் தேர்வுக்குத் தயாராகும் அனைவருக்கும் தரமான பயிற்சி இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், We The Leaders அமைப்பின் தலைவர் திரு. K. அண்ணாமலை அவர்கள் ஏற்றம் அகாடமி என்ற இலவச ஆன்லைன் பயிற்சி இணையதளத்தை தொடங்கி வைத்துள்ளார்.
அரசுப் பணி கனவை நோக்கிய பயணத்தை ஏற்றம் அகாடமி இணையதளத்துடன் இன்றே தொடங்குங்கள். இந்த வாய்ப்பு அனைத்து TNPSC தேர்வர்களையும் சென்றடைய, அளவின்றிப் பகிர்வோம்.
மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு தேவை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி தேவையில்லாத வேலையைச் செய்கிறது.
எனவே, நமது உரிமையை மீட்டெடுப்பது தமிழ்நாடு முதலமைச்சரின் கடமை!
தமிழ்நாடு டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ் வரவேற்கத்தக்கது!
தவெக எம்.எல்.ஏ. – கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விவகாரத்தில் மர்மம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரை இதற்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.
நேற்று திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்போது, இந்து சமய அறநிலையத் துறைக் குழு உறுப்பினர், தமிழக முதலமைச்சருக்கு “அரோகரா”, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு “அரோகரா” என முழக்கமிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இதைச் சாதாரணமாக மன்னிப்புக் கேட்டு கடந்து சென்றுவிட முடியாது. முதலமைச்சர் இதைக் கண்டிக்க வேண்டும். மேலும், இதுபோன்று இனி நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
TNPSC Group 4, NMMS எனத் தொடங்கி, TNPSC Group 3, Group 2, Group 1, NEET என அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ஒரே தளத்தில் கொண்டு வருவோம்.
தொழில்நுட்பத்தின் மூலம் அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பை உருவாக்குவோம்!
இந்திய விடுதலைப் போராட்டத்தில் துணிச்சலுக்கும், தன்னலமற்ற தியாகத்திற்கும் அடையாளமாகத் திகழ்ந்தவர் கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள்.
அவரது நினைவு தினத்தை முன்னிட்டு, வருகின்ற நவம்பர் 18-ஆம் தேதி திருச்சியில் நமது We The Leaders அமைப்பின் சார்பில் நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற உள்ளது.
நமது அமைப்பைச் சார்ந்த திரு. ஸ்ரீகாந்த் கருணேஷ் அவர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்வில், ஐயா வ.உ.சி. அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தப்படும்.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் அழியாத தடம் பதித்த செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, வருகின்ற நவம்பர் 18-ஆம் தேதி, சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நமது We The Leaders அமைப்பின் சார்பில் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களது திருவுருவச் சிலைகளுக்கு மாலையணிவித்து மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தப்பட உள்ளது.
சென்னையில் நமது We The Leaders இயக்கத்தின் சார்பாக அமைப்புப் பொதுச் செயலாளர் திரு. கரு. நாகராஜன் அவர்கள், ஐயா அவர்களது திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்துவார்.