தேனி மாவட்டம் கே.கே.பட்டியின் பெருமைமிக்க வீரனும், இந்திய இராணுவத்தின் வெற்றித் திலகமுமான உயர்திரு.லான்ஸ் நாயக் A.மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு இந்தியாவின் உயரிய அமைதிக்கால வீரதீர விருதுகளில் ஒன்றான “கீர்த்தி சக்ரா” விருது, மேதகு குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது மிகுந்த மன மகிழ்ச்சியளிக்கிறது.
2024-ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது, முகத்தில் குண்டடிபட்ட நிலையிலும் பின்வாங்காமல் எதிர்த்துப் போராடி, தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற அவரது இணையற்ற வீரமும் தன்னலமற்ற தியாக உணர்வும் நாட்டுப்பற்றும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அவரது சேவைக்கு கிடைத்த இந்த அங்கீகாரம், இளைஞர்களுக்கு ஊக்கமாக அமையும்.
தேனி மாவட்டத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கும் பெருமை சேர்த்து, வீரத்தின் மறுபெயராக திகழும் உயர்திரு.லான்ஸ் நாயக் A.மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
"நாட்டிற்காக தனது உயிரையும் துச்சமாக எண்ணி போராடும் வீரர்களே நாம் போற்றத்தக்க நம் தேசத்தின் உண்மையான ஹீரோக்கள்!"
ஜெய் ஹிந்த்!
இன்று (10.06.2026) தமிழ் திரையுலகிற்கு புதிய பரிமாணத்தையும், கிராமிய வாழ்வியலின் மணத்தையும் தனது படைப்புகள் மூலம் உலகறியச் செய்த தலைசிறந்த படைப்பாளரும், "தேனி மண்ணின் மைந்தன்" இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்கள் மறைவையொட்டி, சென்னை, நீலாங்கரையில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது பூவுடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மற்றும் திரையுலக நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டேன்.
எங்கள் தேனி மாவட்டத்தின் தங்கம், தமிழ் சினிமா வரலாற்றில் தனக்கென்று தனி சரித்திரத்தை உருவாக்கி, தமிழ் மண்ணையும் தமிழர்களையும் நேசித்த மகத்தான படைப்பாளி, இயக்குநர் இமயம் திரு.பாரதிராஜா அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
தமிழ் சினிமாவை கிராமங்களின் மண் வாசனையோடும், மனித உணர்வுகளின் ஆழத்தோடும் புதிய உயரத்திற்கு கொண்டு சென்றவர். அவரது திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்காக இல்லாமல், ஒரு தலைமுறையின் வாழ்க்கையையும் பண்பாட்டையும் பதிவு செய்த வரலாற்றுச் சுவடுகளாக விளங்குகின்றன.
தனது தனித்துவமான கதை சொல்லல் மூலம் எண்ணற்ற ரசிகர்களின் இதயங்களை வென்றதோடு, பல முன்னணி நடிகர்கள் மற்றும் கலைஞர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய பெருமையும் அவருக்கே உரியது.
"படைப்பாளிகள் மறைவதில்லை; அவர்கள் படைப்புகளாக வாழ்கிறார்கள்" என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்த இயக்குநர் இமயம் திரு.பாரதிராஜா அவர்களின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது படைப்புகள் தலைமுறைகளை கடந்தும் பேசப்படும்.
இயக்குநர் இமயம் திரு.பாரதிராஜா அவர்களை இழந்து வருந்தும் அவரது குடும்பத்தினருக்கும் திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!
இன்று (10.06.2026), தேனியின் மண் மணத்தையும், கிராமிய வாழ்வியலின் நுட்பங்களையும், மனித உணர்வுகளின் ஆழத்தையும் உலகறியச் செய்து, தமிழ் திரையுலகிற்கு புதிய இலக்கணத்தை வகுத்து, எண்ணற்ற கலைஞர்களை உருவாக்கி, தமிழர் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் மண்ணின் மகத்துவத்தை திரைமொழியாக வடித்த பெரும் படைப்பாளர், தமிழ் திரையுலகின் "இயக்குனர் இமயம்" திரு.பாரதி ராஜா அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தேனி மாவட்டத்தின் பெருமைமிகு மைந்தரான அவர், தனது படைப்புகளின் மூலம் தமிழ் மக்களின் இதயங்களில் அழியாத இடத்தைப் பெற்றுள்ளார். காலங்கள் கடந்தாலும் அவரது படைப்புகளும், புகழும், சாதனைகளும் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
மாண்புமிகு தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், செம்மொழித் தமிழின் பெருமையை உலகறியச் செய்த முத்தமிழறிஞருமான டாக்டர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்த நாளில், தமிழ் மொழி, சமூக நீதி, கல்வி, இலக்கியம் மற்றும் மக்கள் நலன் ஆகிய துறைகளில் அவர் ஆற்றிய மகத்தான பணிகளையும், தமிழர் அடையாளத்தை உலக அரங்கில் உயர்த்திய அவரது வரலாற்றுச் சாதனைகளையும் நினைவுகூர்ந்து, அவர்தம் புகழை போற்றி வணங்குகிறேன்.
இன்று (02.06.2026) தனது 83-வது பிறந்தநாளைக் கொண்டாடும், இணையற்ற இசைப் படைப்புகளால் பல தலைமுறைகளின் இதயங்களை இணைத்து இசைத்துறைக்கு புதிய பரிமாணங்களை வழங்கிய, மாண்புமிகு பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், தேனி மண்ணின் பெருமைமிகு மைந்தருமான, பத்ம விபூஷண் இசைஞானி திரு. இளையராஜா @ilaiyaraaja அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் அவர்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பல மகத்தான படைப்புகளை வழங்கி கலை உலகை வளப்படுத்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இன்று (30.05.2026) தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகரும், அன்பு சகோதரருமான திரு.அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி. மோகினி அவர்கள் வயது மூப்பு காரணமாக காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
அவரை இழந்து துயரத்தில் வாடும் திரு.அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
அன்பு, தியாகம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பகிர்ந்து வாழும் உயரிய பண்புகளை மனிதகுலத்திற்கு எடுத்துரைக்கும் இந்த புனித திருநாளில், உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது இதயம் கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
#EidMübarek
முன்னாள் முதலமைச்சர், அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், கட்சியிலும் சரி அரசாங்கத்திலும் சரி உச்சபச்ச பதவிகளை அலங்காரித்தவர், அதனை திறம்பட கையாண்டவர், நடத்து முடிந்த சட்டமன்ற பொதுதேர்தலில் தென்மாவட்டத்தில் தி மு கழகத்திற்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தவர்
#BREAKING | தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் சட்டமன்ற விதிகளை மீறியுள்ளார்!
- மூத்த வழக்கறிஞர் வில்சன்!
#Wilson | #Tvk | #Kalaignarseithigal