வாருங்கள் என் அன்புக்குரிய தமிழக மக்களே...
காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மாபெரும் சதியை நாம் முறியடித்தாக வேண்டியுள்ளது.
காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டால் சென்னை முதல் தூத்துக்குடி வரை குடிநீருக்கு பஞ்சம் ஏற்படும்.
மேகதாது அணை என்றால் என்ன? எதற்காக அதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்?
இணைப்பில் உள்ள காணொலியைக் காணுங்கள். காவிரியைக் காக்கும் முயற்சிக்கு கை கொடுங்கள்!
#காவேரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #CauveryRights #TamilNadu
கூட்டணி கட்சிகளை பொறுத்தவரை அவர்கள் சார்ந்த வாக்குகளை
அவர்கள் சார்ந்த கூட்டணி கட்சிகளுக்கு
சிந்தாமல் சிதறாமல் செலுத்தி,
கூட்டணி தர்மத்தை வெற்றிகரமாக நிலைநாட்டிய பெருமை பாமகவை சார��ம்
PMK votes were transferred without pilferage to their Alliance.
முதல் மற்றும் அமைச்சர்களுக்கு விழுந்த அடி...
மாற்றத்தை விரும்பிய மக்கள்... வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ஆட்சி அமைக்க இருக்கும் தமிழக வெற்றி கழக தலைவர் திரு விஜய் அவர்களுக்கு வாழ்���்துக்கள்... மக்கள் விரும்பிய மாற்றத்தை கொடுங்கள்..
@actorvijay @draramadoss @INCIndia
Notice how Japan and Germany are such huge manufacturing powers, with much smaller population than India and with vastly higher labour costs than India or even China. Switzerland and Netherlands also punch way above their weight in global manufacturing.
Their prowess comes from their mastery of capital goods: such as advanced and high precision machinery, advanced materials, sensors, mastery of highly intricate industrial processes (such as making specialty alloys, growing crystals, specialty chemicals), optical/imaging/medical equipment and so on.
All these areas have a very value addition and you can compete even with high wages. That is why high wage nations are such huge manufacturing powers. China has been catching up in these areas and as it does, it is becoming a high wage nation.
To be a truly great manufacturing nation and achieve high income for our people, India needs to master all these areas. We can do it.
தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள் குறித்து பேச வில்லை;
உறுதியளிக்கவில்லை என ஃபாக்ஸ்கான் மறுப்பு:
அரை நாளில் அம்பலமான திமுக அரசின் புளுகு!
தமிழ்நாட்டில் ரூ.15 ஆயிரம் கோடி புதிய முதலீடுகளைச் செய்ய தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளித்திருப்பதாகவும், அதன் மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தமிழக அரசு பெருமை பேசிக் கொண்டிருந்த நிலையில், அத்தகைய எந்த முதலீட்டையும் செய்வதாக உறுதியளிக்கவில்லை என்று ஃபால்ஸ்கான் நிறுவனம் விளக்கமளித்திரு���்கிறது. தொழில் முதலீடுகள் விவகாரத்தில் திமுக அரசு எத்தகைய மோசடிகளை செய்து வருகிறது என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு ஆகும்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதி ராபர்ட் வூ சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்து��் பேசினார். இந்த சந்திப்பின் போது ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15000 கோடி முதலீடு செய்ய ஒப்புக்கொண்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்தது.’’ரூ.15,000 கோடி முதலீடு மூலம் 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக மாற்றும் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. இராஜா தெரிவித்திருந்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் ஒரு படி சென்று,’’இதுதான் திராவிட மாடலின் செயல்பாடு. தமிழ்நாட்டைத் தேர்வு செய்தமைக்காகவும், எங்களுடன் இணைந்து எதிர்காலத்தை வடிவமைக்க முடிவெடுத்தமைக்காகவும் ஃபாக்ஸ்கானுக்கு நன்றி. தமிழ்நாட்டைத் தெற்காசியாவின் உற்பத்தி மற்றும் புதுமைக்கான மையமாக உயர்த்துவதற்கான நம் பயணத்தில் இது மற்றுமொரு மைல்கல்!” என்று தனக்குத் தானே பாராட்டிக் கொண்டிருந்தார்.
ஆனால், திமுக அரசு கட்டி எழுப்பிய இந்த பொய் பிம்பங்கள் அனைத்தும் அரை மணி நேரத்தில் நொறுங்கி விட்டன. இது தொடர்பாக ஃபாக்ஸ்கான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,’’ தமிழக முதலமைச்சர் அவர்களை ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பிரதிநிதி ராபர்ட் வூ சந்தித்து பேசியது உண்மை. ஆனால்ம் இந்த சந்திப்பின் போது எந்த புதிய ஒப்பந்தம் குறித்தும் பேசப்படவில்லை; உறுதியளிக்கப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்று சொல்வார்கள். ஆனால், திமுக அரசின் புளுகு அரை நாளில் அமபலமாகியிருக்கிறது.
ஃபா��்ஸ்கான் நிறுவனத்தின் முதலீடு மட்டும் தான் என்று இல்லை. தொழில் முதலீடுகள் குறித்த திமுக அரசின் அறிவிப்புகளில் 90% அறிவிப்புகள் பொய் மூட்டைகள் தான். அதனால் தான் திமுக ஆட்சியில் பெறப்பட்ட தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதை செய்ய திமுக அரசு மறுக்கிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் ம��தங்களில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், கூகுள் நிறுவன உயரதிகாரிகளை சந்தித்துப் பேசியதாகவும், அதன் மூலம் கூகுள் நிறுவனத்தின் முதலீடுகள் தமிழ்நாட்டில் குவியப் போவதாகவும் தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், தமிழ்நாட்டை திரும்பிக் கூட பார்க்காத கூகுள் நிறுவனம் ரூ.1.20 லட்சம் கோடியில் செயற்கை அறிவுத்திறன் மையத்தை ஆந்தி��த்தின் விசாகப்பட்டினத்தில் அமைக்கப் போவதாக இன்று அறிவித்துள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் திமுகவின் லட்சனம் இது தான்.
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் தொடர்ந்து பொய்யான தகவல்களை வழங்கி மக்களை திமுக அரசு ஏமாற்றி வருவது கண்டிக்கத்தக்கது. திமுக அரசின் இத்தகைய மோசடிகளை ஆதாரங்களுடன் கூடிய ஆவணமாக பாட்டாளி மக்கள் கட்சி விரைவில் வெளியிட்டு அம்பலப்படுத்தும்.
@CMOTamilnadu
#Foxconn
பா.ம.க. நிர்வாகி இளந்தோப்பு வாசு கொலை: சட்டம் - ஒழுங்கு சீரழிவுக்கு எடுத்துக்காட்டு -
குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்!
செங்கல்பட்டு மாவட்டம் இளந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மத்திய மாவட்ட துணை செயலாளரும், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவருமான ஏ.வாசு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், அப்பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியினர் ��ள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இளந்தோப்பு பகுதியைச் சேர்ந்த வாசு அப்பகுதி மக்களின் செல்வாக்கைப் பெற்றவர். பட்ரவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராகவும், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராகவும் பனியாற்றியுள்ளார். இந்த அளவுக்கு செல்வாக்கு மிக்க ஒருவரை பட்டப்பகலில் ஒரு கும்பல் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடு���ிறது என்றால் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். ஏ.வாசுவின் படுகொலைக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
ஏ.வாசுவின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளை தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக கைது செய்து சட்டப்படி தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
@CMOTamilnadu @tnpoliceoffl
கொளத்தூர் தன்ராஜ் என்பவர் சென்னை கொளத்தூரில் பழைய கார் வாங்கும் விற்கும் தொழில் செய்பவர்.
திமுகவின் முன்னாள் இளைஞரணி நிர்வாகி மகேஷ் குமாரின் வலதுகரம். சென்னை மாநகராட்சி 6வது மண்டல திமுக சேர்மேன் மற்றும் 6வது வார்டு கவுன்சிலர் சரிதாவின் கணவர்தான் மகேஷ் குமார். மகேஷ்குமாருக்கு வேலை, ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வேலைகளை செய்வது. அமைச்சர் சேகர்பாபு கீழ் செயல்படும் ஒரு ரவுடி என்று சொல்லலாம்.
கடந்த 24 மார்ச் 2025 அன்று எனது வீட்டில் மலத்தை வீசி நடந்த தாக்குதலை அமைச்சர் சேகர்பாபு சொல்லி மகேஷ் குமார் தனது வலதுகரம் கொளத்தூர் தன்ராஜிடம் சொல்கிறார். தன்ராஜுக்கு பேசியபடி சேகர்பாபு பணம் கொடுக்கவில்லை.
இதனால், அமைச்சர் சேகர்பாபுவுக்கு தன்ராஜ் போன் செய்து, பேசியபோது அதை பதிவு செய்து வைக்கிறார். இந்த ஆடியோ பதிவு வாட்ஸப்பில் பரவுகிறது.
இதையடுத்து, சென்னை மாநகர காவல்துறையைச் சேர்ந்த 20 காவலர்கள் ரவுடி மகேஷ் குமார் தலைமையில் இவர் வீட்டுக்கு சென்று மிரட்டி போனை பறித்துள்ளனர். இப்போது கொளத்தூர் தன்ராஜ் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.
சேகர் பாபுவின் உத்தரவில், 20 காவலர்களை அனுப்பியது ஆணையர் அருண் என்பதை தனியாக சொல்ல வேண்டியதில்லை.
நான் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, துடைப்பம் மற்றும் செருப்புகளோடு பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்ததும் சேகர்பாபுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வப்பெருந்தகையும், சேகர்பாபுவும், ஆர்ம்ஸ்ட்ராங் என்ற புள்ளியில் இணைகிறார்கள்.
இப்போது கொளத்தூர் தன்ராஜின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. ஆடியோ வெளியே வந்தால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட��வாய் என சென்னை காவல்துறையால் மிரட்டப்பட்டுள்ளார்.
ஏன் இவ்வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். ஆளுங்கட்சியின் அமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சம்பந்தப்பட்டிருந்தால் சிபி சிஐடி மட்டும் எப்படி நடவடிக்கை எடுக்கும் ?
@chennaipolice_
@tnpoliceoffl
@PKSekarbabu
@Chief_Secy_TN
@CMOTamilnadu
மருத்துவர் அய்யா அவர்களுக்கு
புகழ் சேர்க்கும் வகையில் பாமகவை தொடர்ந்து வழி நடத்திச் செல்வேன்!
பாட்டாளி சொந்தங��களுக்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை
(தலைமை நிலைய பதிவு)
பிற்படுத்தப்பட்டோர் இ��� ஒதுக்கீடு 43% ஆக உயர்வு: தெலுங்கானாவில் நடந்தது சமூகநீதிப் புரட்சி- தூங்குவது போல் நடிக்கும் தமிழக அரசு விழிப்பது எப்போது?
தெலுங்கானாவில் அண்மையில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு 29 விழுக்காட்டில் இருந்து 42 விழுக்காடாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல் பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டை 15% ஆகவும், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை 10% ஆக உயர்த்தி அம்மாநில சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தெலுங்கானா அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தெலுங்கானாவில் சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், சாதி கணக்கெடுப்பை நடத்திய அம்மாநில காங்கிரஸ் அரசு, அதனடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்து சட்டம் இயற்றியுள்ளது. அடுத்தக்கட்டமாக பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை மூன்றாக பிரித்து உள் இட ஒதுக்கீடு வழங்கவும் தெலுங்கானா அரசு திட்டமிட்டுள்ளது.
தெலுங்கானாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதும், அதனடிப்படையில் இ�� ஒதுக்கீடு உயர்த்தப்பட்டிருப்பதும் உண்மையாகவே சமூகநீதிப் புரட்சி தான். தெலுங்கானா அரசு இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள சட்டங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட பிறகு இந்த இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும். அதுவும் சாத்தியமானால் அது வரலாற்று சிறப்பாக அமையும்.
தமிழ்நாட்டிலும் ஓர் அரசு இருக்கிறது. சமூகநீதியைக் காப்பதற்க���கவே அவதாரம் எடுத்து வந்ததாக அடிக்கடிக் கூறிக் கொள்ளும்; அதற்கான விளம்பரங்களை வெளியிடும். ஆனால், சமூகநீதிக்காக ஒரு சிறு துரும்பைக் கூட அந்த அரசு கிள்ளிப்போடாது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினால் அதற்கான அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று கைகளை விரிக்கும். தமிழக ஆட்சியா��ர்களுக்குத் தெரிந்த சமூகநீதி இது தான்.
எந்த மாநிலத்திலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தலாம்; அதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் பலமுறை கூறியுள்ளன. பிகாரிலும், தெலுங்கானாவிலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான சட்டமும் இயற்றப்பட்டுள்ளது. இவையெல்லாம�� தமிழக அரசுக்கும் தெரியும்; சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் தங்களுக்கு இருப்பதையும் தமிழக ஆட்சியாளர்கள் அறிவார்கள். ஆனாலும், அவர்கள் அதை செய்ய மாட்டார்கள். காரணம்... அவர்கள் தூங்கவில்லை, தூங்குவதைப் போல நடிக்கிறார்கள்.
சிலரை சில காலம் ஏமாற்றலாம், பலரை பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது. இதை தமிழ்நாடு அரசு உணர வேண்டும். தமிழ்நாட்டிலும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தி சமூகநீதியைக் காக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழக ஆட்சியாளர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
@CMOTamilnadu
#SocialInjustice
நெல்லையில் முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வெட்டிக் கொலை: தமிழகத்தில் சட்டம் - ஒ��ுங்கு எங்கே இருக்கிறது?
நெல்லையில் காவல்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஜாகீர் உசேன் பிஜிலி என்பவர் இன்று காலை கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முந்தைய திமுக ஆட்சியில் கலைஞர் முதலமைச்சராக பணியாற்றிய போது, அவரது பாதுகாப்புப் பிரிவி��் பணியாற்றியவர் ஜாகிர் உசேன். அதன்பின் விருப்ப ஓய்வு பெற்று நெல்லையில் வாழ்ந்து வந்தார். முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக பணியாற்றியவரையே வெட்டிக் கொலை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது என்றால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாகியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஜாகிர் உசேனின் வீட்டிற்கு அருகில் உள்ள நிலத்தை ஆக்கிரமிக்க சிலர் முயற்சி செய்து வந்ததாகவும், அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் சிலருடன் ஏற்பட்ட பகை காரணமாகவே அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் தாம் எந்த நேரமும் படுகொலை செய்யப்படலாம் என்றும் காணொலி மூலம் அச்சம் தெரிவித்திருந்த ஜாகிர் உசேன் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவரது புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் தான் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களிலாவது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu @tnpoliceoffl
பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு 43% ஆக உயர்வு: தெலுங்கானாவில் நடந்தது சமூகநீதிப் புரட்சி- தூங்குவது போல் நடிக்கும் தமிழக அரசு விழிப்பது எப்போது?
மருத்துவர் அய்யா வினா