கர்நாடகத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நினைக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், இத்திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தியும், பிலிகுண்டுவில் இருந்து பூம்புகார் வரை பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள் தலைமையில் நடைபெறும் நான்கு நாட்கள் விழிப்புணர்வு பரப்பரை பயணத்தை, காவிரி ஆறு தமிழ் நாட்டில் நுழையும் இடமான பிலிகுண்டுவில் தொடங்கியபோது.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #MekadatuRally #CauveryRights #TamilNadu #PMK
கர்நாடகத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நினைக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், இத்திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தியும், பிலிகுண்டுவில் இருந்து பூம்புகார் வரை நடைபெறும் நான்கு நாட்கள் விழிப்புணர்வு பரப்பரை பயணத்தை, காவிரி ஆறு தமிழ் நாட்டில் நுழையும் இடமான பிலிகுண்டுவில் தொடங்கியபோது.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினரும், பசுமைத் தாயகம் தலைவருமான முனைவர் சௌமியா அன்புமணி மற்றும் பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #MekadatuRally #CauveryRights #TamilNadu #PMK
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச்செயலாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தலைமையிலான நிர்வாகிகள், பாமக தலைவர் மருத்துவர் அன்புமணியை நேரில் சந்தித்து, கே. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் 2-ஆம் ஆண்டு நினைவேந்தல் சங்கம விழா அழைப்பிதழை வழங்கினர்.
#pmk#anbumaniramadoss#porkodiarmstrong#tnbsp
இதனால் திருமண வயது பெண்கள் ஆண்கள் பாதிக்கப்படுகின்றனர்
திருமணம் செய்யும் போது...
இதுதான் ஆக்கப்பூர்வமானது
அதுக்கு மக்கள் கிட்ட நேரடியாக பேசனும்..
வேண்டும் காவேரி உபரிநீர் திட்டம்
#Fluorosis
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் நடைபெற்ற, பாலக்கோடு ஒன்றிய துணைச் சேர்மன் பிரபாகரன் அவர்களின் ஸ்ரீ அக்ஷயா நகை அடகு கடையை திறந்து வைத்து வாழ்த்திய போது.!
இன்று, தருமபுரி நகராட்சி - சந்தைப்பேட்டையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில், போலியோ சொட்டு மருந்து முகாமினை துவக்கி வைத்து விழிப்புணர்வு செய்த போது.!
#polio#Dharmapuri#PMK
எதையும் சாதிக்கும் திறன் கொண்ட இளைய தலைமுறையினரே வணக்கம்!
கடந்த கால ஒப்பந்தங்கள் எதையும் மதிக்காமல் காவிரி மற்றும் துணை ஆறுகளின் குறுக்கே 4 அணைகளை கட்டிய கர்நாடகம், இப்போது நடுவர் மன்றத் தீர்ப்பை மதிக்காமல் மேகதாது அணையைக் கட்டத் துடிக்கிறது.
மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா வளமாக இருக்காது வறட்சியாக மாறும்.
வளமான டெல்டாவையும், 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரங்களையும் பாதுகாக்கவே ஜூலை 1 முதல் 4 வரை தமிழ்நாட்டில் காவிரி தொடங்கும் பிலிகுண்டுலு முதல் கடலில் கலக்கும் பூம்புகார் வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொள்கிறேன்.
மாற்றங்களை ஏற்படுத்தும் இளைஞர்களே....
இந்தப் பயணத்தில் என்னுடன் இணையுங்கள்,
தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காப்போம்!
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #CauveryRights #TamilNadu
தருமபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, நல்லம்பள்ளி வடமேற்கு ஒன்றியம், நடப்பனஅள்ளி கிராமத்தில் மாம்பழம் சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை வழங்கி, வெற்றி பெறச் செய்த பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, நன்றி தெரிவித்த போது.!
#Dharmapuri#PMK
பிரபல திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக விளங்கிய
திரு. K பாக்யராஜ் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தவர் மறைந்த திரு. பாக்யராஜ் அவர்கள். “அண்ணா நீ என் தெய்வம்” என்ற புரட்சித் தலைவர் அவர்களின் முடிவுறாத படத்தின் காட்சிகளை வைத்து, அதற்கேற்ப ஒரு புதிய திரைக்கதை அமைத்து, “அவசர போலீஸ் 100” என்ற படமாக எடுத்து அதில் வெற்றியும் கண்டார்.
மாண்புமிகு புரட்சித் தலைவர் அவர்களும் திரு. பாக்யராஜ் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தார்.
இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்குரிய அவர்தம் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பதாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial
இன்று, தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற, போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு (START RUN, STOP DRUGS) ஓட்டத்தை துவக்கி வைத்து, பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்த போது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப. அவர்கள், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு.S.சிவரஞ்சன் அவர்கள் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.!
#Marathon #Dharumapuri #PMK
வாருங்கள் என் அன்புக்குரிய தமிழக மக்களே...
காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மாபெரும் சதியை நாம் முறியடித்தாக வேண்டியுள்ளது.
காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டால் சென்னை முதல் தூத்துக்குடி வரை குடிநீருக்கு பஞ்சம் ஏற்படும்.
மேகதாது அணை என்றால் என்ன? எதற்காக அதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்?
இணைப்பில் உள்ள காணொலியைக் காணுங்கள். காவிரியைக் காக்கும் முயற்சிக்கு கை கொடுங்கள்!
#காவேரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #CauveryRights #TamilNadu