காவிரியில் தமிழகத்திற்குச் சேர வேண்டிய நீரில் சுமார் 20 டி.எம்.சி அளவிற்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் ஏற்கனவே குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், தற்போது நடைபெற்று வரும் சம்பா சாகுபடியும் பாசன நீரின்றி பெரும் கேள்விக்குறியாகும் ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது.
செப்டம்பர் 25 முதல் 15 நாட்களுக்கு நாள்தோறும் வினாடிக்கு 4,000 கனஅடி வீதம் தமிழகத்திற்கு நீர் திறக்க வேண்டும் என்று CWRC பரிந்துரைத்து, அதனை காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் (CWMA) ஏற்று அதிகாரப்பூர்வ உத்தரவிட்டுள்ளது. இந்த 4,000 கனஅடி உத்தரவே கூட முந்தைய 6,000 கனஅடி உத்தரவை விட 2,000 கனஅடி குறைவானதுதான். இருப்பினும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் விகிதாச்சார விதிகளின்படியும் CWMA உத்தரவின்படியும் கிடைக்க வேண்டிய நீரையும் திறக்காமல், உச்சநீதிமன்றத்தில் சவால் செய்வோம் எனக் கர்நாடக ��ுதலமைச்சர் கூறி காலந்தாழ்த்துவது ஏற்கவே முடியாத அநீதியாகும்.
எனவே, சட்ட விதிகளையும் ஆணையத்தின் உத்தரவையும் மதித்து, 15 நாட்களுக்கு நாள்தோறும் வினாடிக்கு 4,000 கனஅடி நீர் திறப்பதோடு, நிலுவையில் உள்ள பற்றாக்குறையையும் உடனடியாக ஈடுசெய்து காவிரியில் தமிழகத்திற்கான உரிய பங்கை கர்நாடக அரசு உடனடியாகத் திறந்துவிட வேண்டும்!
#TNCongress #Cauvery
#காவிரி
#TamilnaduRight
இந்திய ஜனநாயகத்தின் முதுகெலும்பாக விளங்கும் முதன்முறை வாக்காளர்களான 18 வயது Gen-Z இளைஞர்களிடமிருந்து வாக்குரிமையை அப்பட்டமாகப் பறிக்கும் சதியில் அமித் ஷாவுடன் சேர்ந்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஈடுபட்டு வந்திருப்பது இப்போது வெட்டவெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 1958-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடைமுறையில் இருந்துவந்த வருடாந்திர சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை (SSR) 2024 ஜனவரிக்குப் பிறகு முடக்கி வைத்து, லட்சக்கணக்கான புதிய தலைமுறை இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் இணையவிடாமல் இ��ர் தடுத்து நிறுத்தி வந்திருப்பது ஆதாரங்களுடன் தற்போது அம்பலமாகியுள்ளது.
நமது தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை குறித்தும், நாட்டின் ஜனநாயக அமைப்புகள் ஆளும் பாஜகவின் பிடிக்குள் சிக்கிச் சீரழிக்கப்பட்டு வருவது குறித்தும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து எச்சரித்து வந்த உண்மை இப்போது ஒட்டுமொத்த நாட்டிற்கும் தெளிவாகப் புரிந்துவிட்டது. இளைஞர்களின் மாற்றத���திற்கான குரலையும், மோடி அரசின் அநீதிகளை எதிர்க்கும் இளைஞர் சக்தியையும் தேர்தல் களத்திற்கு வரவிடாமல் திட்டமிட்டுத் தடுக்கும் அற்ப அரசியலில் தலைமை ஆணையர் ஈடுபட்டு வந்தது இதன்மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஜனநாயகத்தின் அடித்தளத்தையே சிதைத்து, லட்சக்கணக்கான இளைஞர்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறிக்கும் துரோகத்தில் ஈடுபட்டு வந்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ��தற்கு முழுப் பொறுப்பேற்று உடனடியாகத் தனது பதவியை விட்டு வெளியேற வேண்டும்.
Gyanesh, it’s over agent .
#TNCongress #RahulGandhi
#Gnaneshkumar
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4x400m கலப்பு தொடர் ஓட்டப் பந்தயத்தில் (Mixed Relay) வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள நமது தமிழ்நாட்டு நட்சத்திரங்கள் விஷால் தென்னரசு மற்றும் வித்யா ராம்ராஜ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
தங்கள் அபாரமான திறமையாலும் கடின உழைப்பாலும் உலக அரங்கில் மூவர்ணக் கொட���யை உயரப் பறக்கச் செய்து, நம் இளைஞர்களுக்குப் பெரும் உத்வேகமாகத் திகழும் இந்திய அணியினர் அனைவருக்கும் பாராட்டுகள்.
உங்கள் வெற்றிப் பயணம் மேலும் தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! 👏
#AsianGames2026 #TeamIndia #TNCongress
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னையில் நாளை 25 sep 2 pm ஆர்ப்பாட்டம்
#TNCongress#SaveDemocracy#RahulGandhi
मैं तीन साल से वोट चोरी का पर्दाफ़ाश करता आ रहा हूँ। अब चुनाव आयुक्त खुद इसे स्वीकार कर सच्चाई उजागर कर रहे हैं।
ज्ञानेश कुमार ने देशद्रोह किया है। वो अभी इस्��ीफ़ा दें और approver बन जाएं।
वोट चोरी की साज़िश में नरेंद्र मोदी और अमित शाह की पूरी जांच होगी।
जमशेदपुर में हुए हृदयविदारक सड़क हादसे में झारखंड सरकार में मंत्री और वरिष्ठ कांग्रेस नेता दीपिका पांडेय सिंह जी की बेटी त्रिशा के निधन की खबर अत्यंत दुखद है।
दीपिका जी से बात कर उन्हें व्यक्तिगत रूप से सांत्वना दी। इस अपूरणीय क्षति की घड़ी में मेरी संवेदनाएँ उनके और पूरे परिवार के साथ हैं।
The vote is the foundation of Indian democracy.
From the vote flows the power of our Constitution, the authority of our laws, and the legitimacy of our public institutions - this chain defines modern India.
Today this chain is broken, and this has never happened in India before. By destroying the vote, this government and the Election Commission have attacked the expression of every single Indian.
Everything this government has done on the strength of stolen votes is illegal. An MP elected through vote chori holds an illegitimate seat, and every law passed with that MP's support is an illegitimate law.
மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்கள் தொடர்ந்து முன்வைத்து வந்த "வாக்குத் திருட்டு" (Vote Chori) மற்றும் தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்ச செயல்பாடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மை என்பதை 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழின் அதிர்ச்சி தரும் புலனாய்வு ஆவணங்கள் உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளன.
தலைமைத் தேர்தல் ஆணையர் தவிர்த்து, தேர்தல் ஆணையத்தில் அங்கம் வகிக்கும் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் மட்டும் 14 முறை எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனைகளைப் பதிவு செய்துள்ளனர்.
ஆனால், அவர��களின் எதிர்ப்புகள் அனைத்தையும் அமித்ஷாவின் ஆணைக்கேற்ப தலைமைத் தேர்தல் ஆணையர் தன்னிச்சையாகப் புறந்தள்ளியுள்ளார்.
SIR (சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்) என்ற பெயரில் தேர்தல் விதிகளை மீறிப் புதிய வாக்காளர்களுக்கான Form-6 படிவத்தில் சட்டவிரோத மாற்றங்களைச் செய்து, லட்சக்கணக்கான இளம் வாக்காளர்களின் பெயர்களைப் பதிவு செய்யவிடாமல் அலைக்கழித்துள்ளனர்.
இது முற்றிலும் சட்டவிரோதமானது என இரண்டு ஆணையர்களும் எச்சரித்தபோதும், டெல்லியில் உள்ள தகவல் தொழில்நுட்பப் பிரிவு தன்னிச்சையாக மென்பொருளைக் கட்டுப்படுத்தி, கள அதிகாரிகளான ERO-க்களின் அதிகாரத்தைப் பறித்து ஒட்டுமொத்த வாக்காளர் பட்டியல் தரவுத்தளத்தையும் முறைகேடாகக் கையாள முற்பட்டுள்ளது.
இந்த அத்துமீறலைத் தட்டிக்கேட்க தேர்தல் ஆணையர்களே மத்திய அமைச்சரவைச் செயலாளரிடம் முறையிடும் அளவுக்கு நிலைமை சீரழிந்துள்ளது.
இந்த செயல்பாடுகள் RSS–BJP-யின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவதை உறுதி செய்வதோடு
“Vote chori is a crime against the Indian people and a direct attack on our Constitution.��
“The BJP, RSS and EC who organised it have committed an act of treason. Justice will be served.” என்ற தலைவர் ராகுல் காந்தி அவர்களின் உண்மையான நாட்டுப்பற்றையும் மீண்டும் உலகிற்கு நிரூபித்து உள்ளது.
வாக்குரிமை என்பது மக்களின் அரசியலமைப்புச் உரிமை.
அந்த உரிமையைப் பாதுகாப்பதே ஜனநாயகத்தின் முதல் கடமை.
அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 324 வழங்கிய ஜனநாயக வழிகாட்டுதல்களைத் தகர்த்து, சுதந்திரமான தேர்தல் ஆணையத்தையே பாஜக அரசு தனக்குச் சாதகம���க முடக்கியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கோடிக்கணக்கான இந்திய மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் இந்த பாசிச சதியைத் தோலுரித்து, ஜனநாயகத்தைக் காக்க திரு. ராகுல் காந்தி நடத்தும் மக்கள் சந்திப்புக்கள் முழு வீச்சில் தொடரும்!
#RahulGandhi #ElectionCommissionExposed #VoteChori #TNCongress