சென்னை நகரின் நடுவினிலே,தெய்வக் கருணை பொழியுமடி!கந்தன் வடபழனி ஆண்டவனாய்,கவலை தீர்க்கும் வேலவனாய்!
திருமணம் தரும் திருத்தலமாய்,திருநீறு காக்கும் தெய்வமாய்!அழகு மயிலின் வாகனனாய்,அடியார் நெஞ்சில் வாழ்பவனாய்!
🚩அலைகடல் சூழ்ந்த செந்தூரினில்,அழகிய குமரவிடங்கர் எழுந்தருளினார்!தெய்வானையும் அருகில் நின்றாள்,திருமாலின் அம்சமாய் காட்சி தந்தாள்!
பச்சை நிறப் பட்டு உடுத்தி,பச்சை வண்ண மலர்கள் சூடி,துளசி மாலை கழுத்தில் அசைய,தெய்வீகக் கோலம் அழகு சேர்க்கிறது!
சதாசிவத் தன்மை பெறுவர்….!
சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன் சுத்தாசுத் தத்துடன் தோய்ந்துந்தோ யாதவர் முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச் சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே.
விளக்கம்:-
சித்தர்கள் சிவத்தை கண்டறிந்தவர்கள். சித்தர்கள் சுத்த மாயை, அசுத்த மாயைகளில் தோய்த்து இருந்த போதிலும், தாமரை இலைத் தண்ணீர் போல அவற்றுடன் ஒட்டாதவர்கள���. இவர்கள் முக்தர்கள். சாயுச்சிய முக்தியை பெற வல்லவர். மூலாதாரத்தில் விளங்கும் குண்டலினி சக்தியை வசப்படுத்தியர்கள். இவர்கள் சதாசிவன் ஆகும் தன்மை பெற்று, உருவத்தில் பொருந்தி இருந்தாலும் அருவமாக விளங்குபவர்.
#தினம்_ஒரு_திருமந்திரம்
#நோக்கம்சிவமயம்
#வீரசைவம்
எம்பெருமான் தரிசனத்துடன் எம் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கங்கள்🙏
சிவனுடன் ஒன்றாவதை உணரலாம்…!
நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை ஒன்றும் பொருள்கள் உரைப்பல ராகிலும் வென்றுஐம் புலனும் விரைந்து பிணக்கறுத்து ஒன்றாய் உணரும் ஒருவனும் ஆமே.
விளக்கம்:-
நிற்கும் போதும், அமரும் போதும், கிடக்கும்போதும், நின்மலனாகிய சிவனையே இடையறாது எண்ணுங்கள். நீங்கள் அவனுடன் ஒன்றும் வழிகளை உறைப்பவர் ஆயினும், ஐம் புலன்களையும் வென்று விடுங்கள���. பாசத் தளைகளை விரைந்து துணித்து விடுங்கள். அப்ப��து நீங்கள் அறிவின் செறிவாகிய சிவனுடன் பிரிவின்றி ஒன்றாவதை உணருவீர்.
#தினம்_ஒரு_திருமந்திரம்
#நோக்கம்சிவமயம்
#வீரசைவம்
எம்பெருமான் ஆர்த்தி தரிசனத்துடன் எம் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கங்கள்🙏
நம: பார்வதீ பதயே!
ஹர ஹர மஹாதேவ!
சிவநேயச் செல்வர்களின் மேலான கவனத்திற்கு,
திரு பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் முழுவதும் விளக்கவுரை��ுடன் அன்புத் தம்பி திரு ஆதிசிவன் என்பவர் தனது இனிய குரலில் யூடியூபில் பதிவேற்றம் செ��்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு அலங்காரத்தில் மனதை மயக்கும் மஞ்சள் நிறப் பட்டு உடுத்தி மங்களகரமாக காட்சி தருகிறாள் என் அன்னை #மேச்சேரி_ஶ்ரீபத்ரகாளி_அம்மன் 🙏🔱🙇♀️
பரம்பரம் என்னும் அருநிலம்...!
துரியம் அடங்கிய சொல்லறும் பாழை,
அரிய பரம்பரம் என்பர்கள் ஆதர்,
அரிய பரம்பரம் என்றே துதிக்கும்,
அருநிலம் என்பதை யார்அறி வாரே.
விளக்கம்:-
துரியம் கடந்த , சொல்வதற்கு அரிய, பாழினை அட���வது முடியாத செயல் என்று அறிவிலிகள் உரைப்பர். ஆனால் அறிவுடையோர் மேலான நிலை என்று கூறும் பரம்பரம் முப்பாழையும் கடந்த உயரிய நிலை என்பதை யார் அறிவார்...?
#தினம்_ஒரு_திருமந்திரம்
#நோக்கம்சிவமயம்
#வீரசைவம்
எம்பெருமான் தரிசனத்துடன் எம் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கங்கள்🙏