முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் பனையூர் பாபு அவர்கள் தனது ஆதரவாளர்கள், 1200 பேருடன் நமது தலைவர் @mkstalin அவர்களின் முன்னிலையில் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றபோது அதில் நாம் பங்கேற்றோம்.
கழகத்தில் இணைந்த தோழர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.
கொள்கை அரசியலை, கவர்ச்சி அரசியலை வைத்து வீழ்த்த நடக்கும் சூழ்ச்சிகளை முறியடிப்போம்.
ஒற்றுமையுடன் கரம் கோத்து தமிழ்நாட்டை மீண்டும் முன்னேற்றப் பாதையில் வீறுநடை போடச் செய்வோம்.
தி.மு.கழகத்தின் சார்பில் ஊடகப் பணிகளை, அண்ணன் @iparanthamen, அண்ணன் @DrHafeezDMKoffl ஆகியோரோடு இணைந்து ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியுள்ளார் தலைவர் அவர்கள்.
இனமான தலைவர் @mkstalin அவர்களுக்கும், இளம் தலைவர் @Udhaystalin அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தலைவர் அவர்களின் நம்பிக்கையை ஈடேற்ற ஒவ்வொரு நாளும் கடுமையாக பணியாற்றுவோம்.
ஆட்டம் கண்ட ஆதவ் அர்ஜூனா!!!...
பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் கேட்ட கேள்வி சாதாரண கேள்வி தான். ஆனால் பதில் சொல்ல வந்த ஆதவோ, தேர்வு ஹாலில் பாடம் படிக்காமல் வந்த சோம்பேறி மாணவன் போல உளறுகிறார்!
"உங்களது ஆட்சியில் இன்னன்ன தவறுகள் இருக்கின்றன?" என்ற கேள்விக்கு, "அது திமுக ஆட்சியில்..." என்று ஆரம்பித்து, "எங்கள் ஆட்சியில்..." என்று முடிக்க முடியாமல் திக்கி திணறி வார்த்தைகளைத் தேடி அலைந்த காட்சி பார்ப்போருக்கு நல்ல பொழுது போக்காக இருந்தது.
வாயில் வந்ததைப் பேசுவது எளிது; ஆனால் உண்மைகளை மறைக்காமல் பதில் சொல்வதுதான் சிரமம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டார் கூமுட்டை ஆதவ்..
அரசியல் மேடையில் வீரவசனம் பேசுவது வேறு, மக்களின் முன்பு கேள்விகளுக்கு நேர்மையாக பதில் சொல்வது வேறு என்பதை தமிழக மக்கள் நன்றாகப் புரிந்து கொண்டு வருகிறார்கள்.
இன்னும் எத்தனை எபிசோடுகள் வந்தாலும், இறுதியில் தீர்ப்பு வழங்கப் போவது மக்கள் தான்!!!
வெயிட் அண்ட் ஸீ...ப்ரோ...