@tamilravi Tvk வெற்றி பெற்று 108 நாட்கள் முடியவில்லையே.. நீங்கள் அதற்குள் X பக்கம் வருவதற்கான் காரணம்.. lection ku முன்பு நீங்கள் போட்ட முக்கியமான பதிவின் reminder..
ஒரு பிராமணருக்கு கொடுத்து விட்டார்களே என்று கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அவருடைய செயல்பாடுகள், எண்ணங்கள் எதை சார்ந்து இருக்கிறது என்று பார்ப்பதே சாலச்சிறந்தது. அறிஞர் அண்ணா "ஒருவர் பிறப்பால் திராவிடராக இருந்தாலும், எண்ணத்தால் சமத்துவக் கோட்பாட்டை ஏற்காதவர், ஆரியராகவே கருதப்படுவார்; ஒருவர் பிறப்பால் ஆரியராக இருந்தாலும், எண்ணத்தால் சமத்துவக் கோட்பாடுகளை ஏற்பாரே ஆனால், அவரும் திராவிடரே " என்றார். எனில், அவருடைய கண்ணோட்டத்தில் பார்த்தால் இதில் என்ன தவறு என்றுதான் கேட்கத் தோன்றும்?
தமிழ்நாட்டின் முதல்வராகவே ஒரு பிராமணரை தமிழ்நாடு கண்டுவிட்டது. அதனால், இந்த நியமனத்தை வைத்து பாஜக - RSS என்று பேசுவது யதார்த்தமாக இருக்காது. ஆனால், இந்த நியமனத்தை அறிந்தவுடன் நமக்கெல்லாம் எழுந்த அச்சம் ஒரு சித்தாந்தத்தின் தொடர்ச்சி தான். அந்த அச்சம் தவறானது அல்ல. அது இயல்பான ஒன்று தான். காரணம், இதுவரை சந்திக்காத பல சூழல்களை நாம் சந்திக்க போகிறோம் ; சந்தித்து வருகிறோம். எனவே, அவருடைய செயல்பாடுகள் தமிழ் சார்ந்து, மொழிவளம் சார்ந்து, கருவறைக்குள் தமிழ் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் இருக்கிறதா என்பதையே நாம் பார்க்க வேண்டும். தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட சேகர்பாபு இந்த துறைக்கு அமைச்சராக இருந்தார். அதனாலேயே அவர் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்ற விமர்சனம் பரவலாக இருந்தது. அப்போது இன்று எதிர்ப்பவர்கள் எங்கே போனார்கள்? மேலும், அவருடைய செயல்பாடுகளும் தமிழுக்கு எதிராகவே இருந்தது. எனவே, காத்திருந்து செயல்பாடுகளை வைத்து விமர்சிப்பதே சரி.
கமல் ஹாசனை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியபோது இந்த திராவிட இயக்க ஆதரவாளர்களின் கருத்தும் , பாஜக பின்னால் இருக்கிறது என்ற விமர்சனமும் இல்லையே? ஏன், கமல் திராவிடரா?
@CMOTamilnadu@RameshOffcl
மகளிர் உரிமை தொகை - நிறைய பணக்கார பெண்கள் - கட்சியை காட்டி , உரிமை தொகையை வாங்கி கொண்டு இருக்கிறார்கள் .
சில பணக்கார வீடுகளில் இருக்கும் அத்தனை பெண்களுக்கும் அந்த தொகை வீணாய் சென்று கொண்டு இருக்கிறது !
யாருக்கு செல்கிறது என்பதை ஆராய்ந்து -
முதல் priority யாக ஏழை , கணவனை இழந்த , மற்றும் மாற்று திறனாளி பெண்களுக்கு தொகை சென்றடைய வழி வகை செய்ய வேண்டும் @CMOTamilnadu !
ஊடகங்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்
"கணிக்கத் தவறிவிட்டோம்" என்று கூறும் பல செய்தி ஆசிரியர்கள் மற்றும் சில பத்திரிகையாளர்கள் கூறுவதை பார்க்க முடிகிறது. இது தங்களை தற்காத்துக் கொள்ளப் பயன்படுத்தும் ஒரு மென்மையான கேடயம். ஆனால் உண்மை அதுவல்ல. நீங்கள் கணிக்கத் தவறவில்லை. கண்மூடித் தூங்கினீர்கள்.. ஒரு பத்திரிகையாளராக நீங்கள் தோல்வியடையவில்லை. ஒரு குடிமகனாக நீங்கள் உண்மையை எதிர்கொள்ள அஞ்சினீர்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் ஒலித்த சாமானிய மக்களின் அழுகுரல் உங்கள் காதுகளில் விழவில்லை.
ஊழல் என்பது ஒரு நிர்வாகப் பிழையாகவோ அல்லது ஒரு செய்தியாகவோ கூடப் பார்க்காமல், அதை ஒரு வாழ்வியல் முறையாக மாற்றி 'நார்மலைஸ்' (Normalise) செய்தீர்கள்.
மக்கள் வீதியில் இறங்கிப் போராடியபோது, அவர்கள் மீதான அடக்குமுறைகளை நியாயப்படுத்த 'முட்டுக் கொடுத்த' உங்களின் விவாதங்கள் வரலாற்றில் அழியாத கறைகள். அதிகாரத்தின் நிழலில் அறம் மறந்த காலம்.
அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டிய பேனாக்கள், ஆளும் கட்சியின் நரேட்டிவ்களை (Narrative) எழுதும் தூரிகைகளாக மாறின. எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்பதற்கு முன்பே, செய்தி அறைகளில் அமர்ந்துகொண்டு நீங்களே ஆளும்கட்சிக்கு வக்காலத்து வாங்கினீர்கள்.
மக்கள் சந்தித்த விலைவாசி உயர்வு, நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் அன்றாடத் துயரங்கள் உங்கள் விவாத மேடைகளில் இடம்பிடிக்கவில்லை. அரசின் அடக்குமுறைகளுக்கு முட்டுக் கொடுப்பதிலும், எதிர் கருத்துக்களை ஒலிக்கவிடாமல் தடுப்பதிலுமே நீங்கள் கவனமாக இருந்தீர்கள். மக்களின் உண்மையான பிரச்சினைகள் 30 நொடித் துணுக்குகளாகக் கடந்து போகையில், அதிகாரத்தின் சாதனைகள் மணிநேர நேரலைகளாக (Live Coverage) ஆக்கிரமித்தன. செய்தியாளர்களாக அல்லாமல் ஆளுங்கட்சியின் செய்தித் தொடர்பாளர்களாக மாறி போனீர்கள்.
இன்று ஒரு சக பத்திரிகையாளர் வெளிப்படையாக ஒரு கசப்பான உண்மையை உடைக்கிறார்.
"அரசுக்கு எதிராக அவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டால், அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து PEN நிறுவனம் அவர் வேலை செய்யும் அலுவலகத்திற்கு அனுப்பி அதை நீக்குமாறு நிர்பந்திக்குமாம்."
PEN நிறுவனம் போன்ற அதிகார அமைப்புகள் உங்கள் அலுவலகங்களுக்கு அழுத்தம் கொடுத்தபோது, முதுகெலும்பை நிமிர்த்தி கேள்வி கேட்கத் துணிவின்றி மண்டியிட்டீர்கள்.
ஒரு பத்திரிகையாளனின் தனிப்பட்ட கருத்தைக் கூடக் கண்காணிக்கவும், அவன் வேலையைப் பறிக்கச் சூழ்ச்சி செய்யவும் ஒரு நிறுவனத்திற்கு அதிகாரம் கிடைக்கிறது என்றால், அதற்கு உங்கள் மௌனமே களம் அமைத்துக் கொடுத்தது. அவ்வளவு இடம் கொடுத்து வைத்திருந்தீர்கள்.
தனக்காக, தனது நிறுவனத்திற்காக வேலை செய்யும் சக பத்திரிகையாளர் தாக்கப்பட்ட போதும் கூட வெட்கமே இன்றி, அன்று இரவு தொலைக்காட்சியில் "கருத்துரிமை காக்கும் ஆளும்கட்சி" என்று நீங்கள் வாசித்த பாராட்டுப் பத்திரம், ஒரு பத்திரிகையாளனின் சாவுமணி.
அதிகார வர்க்கத்தின் வெற்றுக் கொண்டாட்டங்களை மணிக்கணக்கில் நேரலையாக ஒளிபரப்பிய நீங்கள், எளிய மக்களின் பக்கம் நின்று அதிகாரத்தை நோக்கிக் கேள்வி கேட்கத் தவறினீர்கள்.
சுயபரிசோதனை யாருக்கு?
தேர்தல் முடிவுகள் வந்த பிறகு "மக்களின் நாடித் துடிப்பை அறியத் தவறிவிட்டோம்" என்று சொல்வது ஒரு மோசமான நடிப்பு. நீங்கள் நாடித் துடிப்பைப் பார்க்கவில்லை, மாறாக அதிகாரத்தின் காலடியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தீர்கள்.
சுயபரிசோதனை செய்ய வேண்டியது அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, நடுநிலை என்ற போர்வையில் நயவஞ்சகம் செய்த நீங்களும்தான்.
இறுதியாக ஒன்று. மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்கிவிட்டார்கள். ஆனால் நீங்கள் இழந்த 'நம்பகத்தன்மையை' மீண்டும் பெறுவதற்கு ஒரு யுகமே தேவைப்படலாம். கணிக்கத் தவறியது உங்கள் புத்தி அல்ல, உங்கள் மனசாட்சி!
One of the main reasons: journalists who gave up anti-establishment spirit and defended DMK more vehemently than card-holding DMK members. The anger of the common man against pro-DMK journalists is REAL.
Many so called journalists are saying “விஜய் இந்த election-ல உழைக்கவே இல்ல அவர் உழைகாமலையே இந்த vote விழுது இது ரொம்ப ஆபத்தான முன் உதாரணம்”🙄🙄
டேய் நாங்க உழைச்ச உழைப்பு எங்களுக்கு தான் தெரியும் அதையும் மீறி நீங்க சொல்லுறது உண்மையா இருந்ததுனா அவர் உழைக்காம இவ்ளோ vote வருதுனாஅதுக்கு காரணம் இந்த ரெண்டு திராவிட கட்சிகள் ஆட்சி செஞ்ச லட்சணம் அப்படி people are totally fed up with them-னு அர்த்தம் 😅😅
இத பத்தி ஒருத்தனும் பேசாம நேரா விஜய கடிக்க வந்துருவானுங்க ‼️‼️
Many so called journalists are saying “விஜய் இந்த election-ல உழைக்கவே இல்ல அவர் உழைகாமலையே இந்த vote விழுது இது ரொம்ப ஆபத்தான முன் உதாரணம்”🙄🙄
டேய் நாங்க உழைச்ச உழைப்பு எங்களுக்கு தான் தெரியும் அதையும் மீறி நீங்க சொல்லுறது உண்மையா இருந்ததுனா அவர் உழைக்காம இவ்ளோ vote வருதுனாஅதுக்கு காரணம் இந்த ரெண்டு திராவிட கட்சிகள் ஆட்சி செஞ்ச லட்சணம் அப்படி people are totally fed up with them-னு அர்த்தம் 😅😅
இத பத்தி ஒருத்தனும் பேசாம நேரா விஜய கடிக்க வந்துருவானுங்க ‼️‼️
தமிழ்நாட்டில் anti-incumbency இருக்கின்றதா, இல்லையா என்பதில் குழப்பம் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் anti-journalist sentiment நீக்கமற நிலவுகிறது. திமுகவினரை விட திமுகவுக்கு ஆதரவாக இயங்கும் முன்னாள்/இன்னாள் பத்திரிகையாளர்களுக்காகவே திமுக தோற்க வேண்டும் என்று நினைக்கும் பொதுமக்கள் நிறைய இருக்கிறார்கள். #Elections2026
@tnrags கண்டிப்பாக உண்மை...அவர்கள் dmk ஆதரவாளர்கள் என்ற நிலையில் செயல்பட்டால் எவ்விதப் முரண்பாடும் இல்லை, பத்திரிக்கையாளர்கள் என்ற போர்வையில் இவ்வித செயல்பாடுகள் dmk க்கு எதிரான மனநிலையை உருவாக்குகிறது..
ஏன் தமிழ்நாட்டில் உள்ள மீடியாக்களையும் அதன் நெறியாளர்களையும் அடியோடு வெறுக்கிறோம் ?
நமக்கு பிடித்தமான கட்சியை நாம் உயர்த்திப் பேசுவதில் தவறே இல்லை. ஆனால், ஒரு பத்திரிகையாளராகவும் நெறியாளராகவும் இருப்பவர் ஒரு கட்சிக்குக் கண்மூடித்தனமாக ஆதரவு தெரிவித்தால், அவரால் எப்படி நடுநிலையான செய்திகளை மக்களுக்கு வழங்க முடியும்?
அவர் நடத்தும் விவாதங்களில் உண்மையான நேர்மையை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?
அரசியல் சார்பு கொண்ட ஒருவரால் ஒரு போதும் நடுநிலையான விவாதத்தை முன்னெடுக்க முடியாது என்பதே எதார்த்தம்.
“தமிழக மாநிலம் ஒரு முற்போக்கு மாநிலம் என்றும், சாதி பாகுபாட்டை கடந்து இங்குள்ள தலித்துகள் பிரதிநிதித்துவம் அடைந்து விட்டார்கள் என்று மற்றவர்களை நம்பவைக்க முயற்சிக்கும் முற்போக்கு பேசுபவர்களுக்கும்,... பார்ப்பன பனியா கூட்டத்துக்கும் தான் இங்கு நான் பேசுவது பிரச்சனையாக இருக்கிறது!”
- பா. இரஞ்சித் 💙🔥
முன்னாள் பத்திரிகையாளர்கள் & இன்னாள் பத்திரிகையாளர்கள் படையே திமுகவுக்கு தேர்தல் வேலை பார்த்து வருகிறது. பலர் தாங்கள் திமுகவுக்கு advisor/strategist வேலை பார்ப்பதை disclose செய்யாமல் பத்திரிகையாளர் போர்வையில் செய்வது அநியாயம். திமுக teamல இருக்கோம் என்று சொன்னால் credibility காலி. சொல்லவில்லை என்றால் சோறு போட்ட பத்திரிகைத் துறைக்கு துரோகம். முன்னதில் அறம் இருக்கிறது. அதிமுக school level headline management செய்யும்; திமுக PhD. #Thoughts