அந்த அதிமுக அடிமை நாய்களோட சேர்ந்து பணி செய்ய சின்னம்மா நிச்சியம் ஒத்துக்கமாட்டாங்க அதனால் நம்ம கட்சியை பத்தி மட்டும் யோசிப்போம் மீடியா நிச்சியம் நமக்கு எதிராத்தான் இப்ப இணைப்பு அது இதுனு கிளப்புராங்க
“என்னை உருவாக்கிய இரண்டு பேர்கள். ஒருவர் என் தாய்; மற்றொருவர் என் குருநாதர் பாரதிராஜா அவர்கள். இந்த ஒரே ஆண்டில் அந்த இரண்டு தூண்களையும் நான் இழந்துவிட்டேன்.
இந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. சொல்ல வார்த்தைகள் வரவில்லை. மனம் கனத்திருக்கிறது.
என் வலியை உணர்ந்து, என்னுடன் நின்று, அன்பும் ஆதரவும் அளித்த ஒவ்வொருவருக்கும் நான் தலை வணங்குகிறேன்.
அவர்களின் நினைவுகளும், அவர்கள் எனக்குக் கற்றுக்கொடுத்த வாழ்க்கைப் பாடங்களும் என்னுடன் என்றும் பயணிக்கும்.”
இயக்குநர் இமயம் அன்பு சகோதரர் திரு.பாரதிராஜா அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அரை நூற்றாண்டாக தமிழ் சினிமா உலகில் தனித்துவத்தோடு பணியாற்றியவர். பத்மஶ்ரீ விருது, கலைமாமணி விருது, மூன்று முறை தமிழ் மாநில விருது மற்றும் ஆறு தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரரான திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு தமிழ் திரையுலகிற்கு யாராலும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர் திரு.பாரதிராஜா அவர்கள். எனது நலனுக்காக பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதையும் இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன்.
அன்பு சகோதரர், நம் பாசத்துக்குரிய திரு. பாரதிராஜா அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் திரை உலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.